Jump to content

காரைநகரில் சிவன் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பிரதேச சபை – ஐந்து நட்சத்திர விடுதிக்கு அனுமதி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில் சிவன் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பிரதேச சபை – ஐந்து நட்சத்திர விடுதிக்கு அனுமதி :

October 1, 2018

FB_IMG_1538365184655.jpg?resize=552%2C31

காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது. காரை. புனித மண்ணில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் காவல்துறையினரினர் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவுக் கூட்டங்களுக்குள் சிறப்புவாய்ந்த காரைநகர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற ஈழத்துச் சிதம்பரம் என்ற சிவன் ஆலயத்துடன் ஏராளமான ஆலயங்களால் நிறைந்துள்ள பக்தித் தீவாக இது விளங்குகின்றது. காரைநகர் மக்கள் சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்தவர்கள், வளர்ப்பவர்கள்.

இந்நிலையில் காரைநகர் நுழைவாயிலில், நூற்றாண்டு பெருமை வாய்ந்த காரைநகர் சைவ மகா சபையால் சிவபெருமானின் பாரிய சிலை ஒன்றை அமைப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்று (30) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அங்கு சென்ற காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன், வேலைகளை நிறுத்துமாறும் இல்லையேல் காவல்துறையினருக்கு அறிவிக்கவேண்டி ஏற்படும் எனத் தெரிவித்தார் என அங்கு நின்ற சைவ மகா சபையின் உறுப்பினர் தெரிவித்தார். வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காவல்துறையினரை வரவழைத்து அவர்கள் மூலம் இந்த வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில், காரைநகர் நுழைவாயிலில், குறித்த சிவன் ஆலயம் அமையவுள்ள காணிக்கு எதிர்த் திசையில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு பிரதேச சபை தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரியவருகின்றது. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அனுமதி இன்றி இந்த விடுதி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆன்மிகப் பெருமை பேசும் காரைநகர் மண்ணில், ஐந்து நட்டத்திர விடுதி அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள பிரதேச சபை, சிவன் சிலை அமைப்பதற்கான பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளமை தொடர்பாக காரைநகர் மக்களில் பலர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சிவன் சிலை அமைப்பதை தடுத்தி நிறுத்திமைக்கு எதிராக காரைநகரைச் சேர்ந்த பலர் தமது முகப்புத்தங்களிலும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/97783/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து நட்சத்திர விடுதி வந்தால்..... குறைந்தது 500 பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கோவில்  வந்தால்.... சாமி தூக்குற வேலையையும்... சும்மா தான் செய்ய வேண்டி வரும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஐயர் ஒருவர் தொழில் வாய்ப்பை இழப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஐந்து நட்சத்திர விடுதி வந்தால்..... குறைந்தது 500 பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கோவில்  வந்தால்.... சாமி தூக்குற வேலையையும்... சும்மா தான் செய்ய வேண்டி வரும். :grin:

இத்தனை பெரிய விடுதிக்குரிய நீர் எங்கிருந்து பெறப்படப் போகின்றது?

ஏற்கனவே காரைநகருக்கு நன்நீர் யாழிலிருந்தே வழங்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

இத்தனை பெரிய விடுதிக்குரிய நீர் எங்கிருந்து பெறப்படப் போகின்றது?

ஏற்கனவே காரைநகருக்கு நன்நீர் யாழிலிருந்தே வழங்கப்படுகிறது. 

ஐந்து நட்சத்திர விடுதிக்கு, அரசும் வணங்கும் ஆண்டவனின் ஆதரவு இருக்குமானால்...! உங்களிடம் இந்தச் சந்தேகமே எழ வேண்டியதில்லை.!! பாலை வனத்திலேயே மரம்நாட்டிப் பூப்பறிக்கும் காலமிது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இத்தனை பெரிய விடுதிக்குரிய நீர் எங்கிருந்து பெறப்படப் போகின்றது?

ஏற்கனவே காரைநகருக்கு நன்நீர் யாழிலிருந்தே வழங்கப்படுகிறது. 

குடிக்கிறதுக்கு... போத்தல் தண்ணீரும், 
குளிக்கிறதுக்கு... கஸோறினா  பீச்சும், 
கழுவுவதற்கு...  ரொய்லட்  பேப்பரும் இருக்கும் போது  தண்ணி பிரச்சினையை சமாளித்து விடலாம்  மீரா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காரை நகரின் பழமை  வாய்ந்த ஈழத்துச் சிதம்பரத்தின் அண்மையில் தான் கசூரினா உல்லாசக் கடற்கரையும் அமைந்துள்ளது. அங்குதான் வெளி நாட்டு உள் நாட்டு மக்கள் உல்லாசமாகத் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.
ஐந்து நட்சத்திர விடுதியால் காரை நகரின் பெருமை அழிந்து விடும் என நினைப்பவர்களும் அதை எதிர்ப்பவர்களும் எதோ ஒரு அரசியல் உள் நோக்குடன் செயல்படுகின்றனர் என்பது தெரிகின்றது.

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

ஐந்து நட்சத்திர விடுதி வந்தால்..... குறைந்தது 500 பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கோவில்  வந்தால்.... சாமி தூக்குற வேலையையும்... சும்மா தான் செய்ய வேண்டி வரும். :grin:

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. ?????????????????

Link to comment
Share on other sites

3 hours ago, வாத்தியார் said:

 காரை நகரின் பழமை  வாய்ந்த ஈழத்துச் சிதம்பரத்தின் அண்மையில் தான் கசூரினா உல்லாசக் கடற்கரையும் அமைந்துள்ளது. அங்குதான் வெளி நாட்டு உள் நாட்டு மக்கள் உல்லாசமாகத் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.
ஐந்து நட்சத்திர விடுதியால் காரை நகரின் பெருமை அழிந்து விடும் என நினைப்பவர்களும் அதை எதிர்ப்பவர்களும் எதோ ஒரு அரசியல் உள் நோக்குடன் செயல்படுகின்றனர் என்பது தெரிகின்றது.

ஐந்து நட்சத்திர விடுதி உருவாதலில்  பெரும் பிரச்சனை தோன்றவில்லைப்போல் தெரிகிறது. அங்கு வரவேற்பு வாசலில் சிவன் சிலை அமைவதைத் தடுப்பதுதான் பிரச்சனையாகத் தோன்றியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்ற கோவில்களே போதும் பேந்து அதற்கு ஒரு குடி சாதி பிரச்சினையையும் எழுந்துவிடும் பல பேருக்கு தொழில் கிடைத்தால் பசி ஆறினால் அந்த கடவுளுக்கும் சந்தோஷம் வரும் என நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி 

எங்கள்  சிவனுக்கு அனுமதியளிக்காமல்??

(நாம   இப்படி  போவம்??:grin:)

Link to comment
Share on other sites

நாட்டில் இப்போது இருக்கும் கோவில்களே தேவையில்லாமல் மக்களின் பணத்ததை உறுஞ்சி மக்களை மேலும் வறுமைக் கோட்டுக்குள் தள்ளுகிறது. மக்களின் வறுமையை சிவனோ கர்ததரோ அல்லாவோ.புத்தரோ  தீரக்கப்போவதில்லை. மனிதன் தனது சுயஅறிவைப்  பாவித்து தங்கள் பொருளாதார வளரசிக்கு என்ன தேவையோ அதை உருவாக்குவதே சிறந்தது. அதுவே எமது எதிரகால சந்ததியன் சமூக பொருளாதார ஸதிர நிலையை உறுதிப்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது. காரை. புனித மண்ணில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் காவல்துறையினரினர் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவுக் கூட்டங்களுக்குள் சிறப்புவாய்ந்த காரைநகர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற ஈழத்துச் சிதம்பரம் என்ற சிவன் ஆலயத்துடன் ஏராளமான ஆலயங்களால் நிறைந்துள்ள பக்தித் தீவாக இது விளங்குகின்றது. காரைநகர் மக்கள் சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்தவர்கள், வளர்ப்பவர்கள்.

இந்நிலையில் காரைநகர் நுழைவாயிலில், நூற்றாண்டு பெருமை வாய்ந்த காரைநகர் சைவ மகா சபையால் சிவபெருமானின் பாரிய சிலை ஒன்றை அமைப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

காரைநகர் நுழைவாயிலில் சிவன் சிலை வைக்கத்தானே பிரச்சனை? புத்தர் சிலை வைக்கலாமா மாண்புமிகு மக்களே? :cool:

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

காரைநகர் நுழைவாயிலில் சிவன் சிலை வைக்கத்தானே பிரச்சனை? புத்தர் சிலை வைக்கலாமா மாண்புமிகு மக்களே? :cool:

இரண்டுமே தமிழரை அழிக்க துணை நின்ற ஆரியத்தின் அடையாளம் தான். பெளத்தமாவது தன்னை ஏற்றுக்கொண்டால் எம்மை அங்கீகரிக்கும் சிவன் ஏற்றுக்கொண்ட பின்பும் எம்மை அவமதிக்கும் அழிக்கவும் தயங்காது..உதாரணம்2009. (சிதம்பரம் சிவன் கோவிலில் தமிழில் தேவாரம்பாட அனுமதி இல்லை)

Link to comment
Share on other sites

பல்லாண்டு காலமாக காரைநகரில் வீற்றிருக்கும் சிவனாலோ அல்லது பல நூற்றுக்கணக்கான ஏனைய ஆலயங்களினாலோ காரைநகர் மண்ணுக்கு கிடைத்த நன்மைகள் என்று பார்தால் பெரிதாக ஒன்றுமில்லை. 

தண்ணீர் பிரச்சணையும் சாதிப் பிரச்சணையும் மிக கடுமையாக உள்ள இடங்களில் காரைநகர் முக்கியமானது. பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது மனித பண்பாட்டு வளர்ச்சிக்கோ இந்த கோவில்களின் பங்களிப்பு மிகவும் குறுகியது அல்லது பல சந்தர்ப்பங்களில் எதிர்மறையானது. 

இங்கு பலர் குறிப்பிட்டது போல முறையான ஒழுங்கு முறைகளுடன் தங்கு விடுதி அமைப்பது காரைநகருக்கு சிவன் சிலையை நாட்டுவதை விட நன்மை பயப்பனதாக அமையும். 

Link to comment
Share on other sites

On 10/1/2018 at 11:17 AM, தமிழ் சிறி said:

ஐந்து நட்சத்திர விடுதி வந்தால்..... குறைந்தது 500 பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கோவில்  வந்தால்.... சாமி தூக்குற வேலையையும்... சும்மா தான் செய்ய வேண்டி வரும். :grin:

காரைநகர் ஓட்டலில் 500 பேர் இல்லை 50 பேருக்கும் வேலை கிடைக்குமோ தெரியலை. அதுவும் சிங்களவனாகவும் இருக்கலாம்.

ஆனால், கோவில் வந்தால் ஏழை எளிய மக்களுக்கு கிழமைக்கு 2, 3 தடவை சுண்டல், பொங்கல், வடையும், வருஷத்துக்கு 20, 30 நாள் அன்னதானமும் ஆவது இலவசமா கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

காரைநகர் ஓட்டலில் 500 பேர் இல்லை 50 பேருக்கும் வேலை கிடைக்குமோ தெரியலை. அதுவும் சிங்களவனாகவும் இருக்கலாம்.

ஆனால், கோவில் வந்தால் ஏழை எளிய மக்களுக்கு கிழமைக்கு 2, 3 தடவை சுண்டல், பொங்கல், வடையும், வருஷத்துக்கு 20, 30 நாள் அன்னதானமும் ஆவது இலவசமா கிடைக்கும்.

Bildergebnis für தà¯à®°à¯ à®à®´à¯à®¤à¯à®¤.... à®à®°à®¾à®£à¯à®µà®¤à¯à®¤à®¿à®©à®°à¯

Bildergebnis für தà¯à®°à¯ à®à®´à¯à®¤à¯à®¤.... à®à®°à®¾à®£à¯à®µà®¤à¯à®¤à®¿à®©à®°à¯

Ãhnliches Foto

சுண்டல், பொங்கல், வடை, அன்னதானம்...  எல்லாம் இலவசமா சாப்பிட்ட பின்...
தேர் இழுக்க.... ஆமிக்காரனை தான், கூப்பிட வேண்டி வரும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் எனும் போது அவர் கோயிலிலோ இல்லாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ  இருந்திட்டுப் போகலாம்தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 பேருக்கு வேலை கிடைப்பது ஒரு புறம் இருக்க... போரினால் பாதிக்கப் பட்ட ஒரு சமூகத்ஜில் .. இப்ப்டியான ஹோட்டல் வருவது... கலாச்சாரச் சீரழிவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன்!

ஊர் இன்னும் இப்படியான செயல் திட்டங்களுக்கு இன்னும் தயாராகவில்லை!

ஈழத்துச் சிதம்பரம் என அழைக்க பட்ட ஒரு கோவில் அங்கு உள்ள்து தானே! ஊருக்கு ஒரு சிவன் காணும் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு இடைக்காலத் தடை

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய மன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்று புதன்கிழமை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் போது உல்லாச விடுதி அமைக்கப்படவுள்ள பிரதேசத்திற்கு மிக அண்மித்த பகுதியில் பாடசாலைகள் , ஆலயங்கள் உள்ளன எனவும் , குறித்த பகுதி நன்னீர் தேக்கமாக காணப்படும் இடம் என்பதனால் , குறித்த உல்லாச விடுதி நிர்மாணிக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் கட்டட நிர்மாண பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். குறித்த தடையுத்தரவு தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு அறிவிக்குமாறும் , கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தில் தடையுத்தரவு அறிவுறுத்தல் துண்டை ஒட்டுமாறும் கட்டளையிட்டார்.

http://globaltamilnews.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 10/2/2018 at 1:34 PM, தமிழ் சிறி said:

சுண்டல், பொங்கல், வடை, அன்னதானம்...  எல்லாம் இலவசமா சாப்பிட்ட பின்...
தேர் இழுக்க.... ஆமிக்காரனை தான், கூப்பிட வேண்டி வரும். ?

அண்ணை, எங்கோ எப்பவோ நடந்த சம்பவத்தை வைச்சு எல்லாத்தையும் முடிவுசெயலாது கண்டியளோ! ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.