யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
கிருபன்

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!

Recommended Posts

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!

September 22, 2018

apple-iOS12-.jpgகோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த ஐ.ஓ.எஸ். மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் வழி தங்களின் கருவிகளின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புதிய பதிகையாக ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளை, ஆப்பிள் கடந்தத் திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ஆம் நாள், பொதுப் பயனீட்டிற்காக வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஐபோன் 5எஸ் போன்ற பழைய ஐபோன்களின் செயல்பாட்டையும் இந்த மென்பொருள் மேம்படுத்தும். செயல்திறன் மேம்பாட்டைக் கருவாகக் கொண்ட வெளியீடு என்றாலும், பல புதிய வசதிகளையும் ஐ.ஓ.எஸ். 12 தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

anjal-keyboard-apple.jpg அஞ்சல் விசைமுகம் – ஆப்பிள் கருவிகளில்…

அதன்படி, புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு முக்கியக் கூறு, இரண்டுக்கும் மேற்பட்டப் பயனர்கள் ஒரு குழுவாக, காணொளி வழி உரையாடும் வசதியாகும். ஐ.ஓ.எசின் 12.0 பதிகையில் இது விடுபட்டிருந்தாலும், அடுத்து வரும் 12.1 பதிகையில் இந்த வசதி இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழி பயனர்களுக்கு மகிழ்ச்சி தரும் மாறுதல்

ஐந்து ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த ஐ.ஓ.எசின் 7ஆம் பதிகை முதல், ஐபோன்களிலும் ஐபேட்களிலும் தமிழில் உள்ளிடுவதற்கான வசதியை ஆப்பிள் சேர்த்திருந்தது. அஞ்சல், தமிழ்99 என இரு விசைமுகங்கள் தமிழுக்காகச் சேர்க்கப்பட்டன. அதற்கும் முன்பாக, 2004ஆம் ஆண்டு முதல், மெக் கணினிகளிலும் இதே இரு விசைமுகங்கள் தமிழுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழில் உள்ளிடுவதற்குப் பலவகையான விசைமுக அமைப்புகள் இருந்த போதிலும், அதிகப் பயன்பாட்டினைக் கொண்டிருந்த காரணத்தினால், இந்த இரண்டு விசைமுகங்கள் மட்டுமே ஆப்பிள் இயங்குதளங்களில் சேர்க்கப்பட்டன.

Tamil-99-key-board-.png தமிழ் 99-விசைமுகம் – ஆப்பிள் கருவிகளில்…

ஆனால், கடந்த ஆண்டு வெளிவந்த ஐ.ஓ.எசின் 11ஆம் பதிகையில் இவற்றிற்கான பெயர்கள், வேறு பெயர்களாக மாற்றப்பட்டன. இந்தப் பெயர்மாற்றம் பல பயனர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. தாங்கள் விரும்பும் விசைமுகங்கள் அகற்றப்பட்டன எனவும், தமிழில் உள்ளிட ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் இனி வாய்ப்பில்லை எனவும், பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விசைமுகங்களுக்கானப் பெயர்கள் ஐ.ஓ.எசின் 12ஆம் பதிகையில் சரிசெய்யப்பட்டுள்ளன. இதே மாற்றம், இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் மெக் கணினிகளுக்கான மெக்.ஓ.எசின் புதிய பதிகையிலும் தென்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

apple-keyboard-layout.jpg ஆப்பிள் கருவிகளில் தமிழ் விசைமுகங்கள்

தமிழ் 99 தமிழ் நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் விசைமுக அமைப்பாகும். அஞ்சல் விசைமுகம் மலேசியா உள்ளிட்ட மற்ற பல நாடுகளில் புகழ்பெற்று விளங்கி வருகின்றது.

மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறன் (படம்), அஞ்சல் விசைமுகத்தை 1993-ஆம் ஆண்டில் உருவாக்கி, அதனை இணையம் வழி பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கினார். இந்த விசைமுகம் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பரவியது. கணினியிலும் இணையத்திலும் தமிழை எழுதவும், பதிவேற்றம் செய்யவும் பயனர்களுக்குப் பேருதவியாக அமைந்தது.

 

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைமுகம், நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்ய விரும்புபவர்களும், ஆங்கிலப் புழக்கம் அதிகம் இல்லாதவர்களும் வேகமாகத் தட்டெழுத உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விசைமுகங்களும் நாளடைவில் கணினி மற்றும் இணையம் வழியான தமிழ் பயன்பாட்டுக்கானத் தர நிர்ணயமாக உருவெடுத்தன. இவற்றின் பெயர்களும் தமிழ் பயனர்களிடையே நிலைபெற்றும் வருகின்றன. ஒரு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டிருக்கும் செல்லினம் உள்ளீட்டுச் செயலியிலும், இவ்விரண்டு விசைமுகங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தச் சூழல் காரணமாகத்தான், கடந்த ஆண்டு ஆப்பிள் இயங்கு தள மென்பொருளில் பெயர்மாறிச் சென்றத் தமிழ் விசைமுகங்கள் மிண்டும் அவற்றின் அசல் பெயர்களுக்கு மாறி வந்துள்ளன!

 

https://selliyal.com/archives/172691

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • அதேபோல் சியோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள  ஒரு ஐயரிடமும் கயிறு கட்டுங்கள் அம்மணி.. நீங்கள் விடும் கயிறு ரொம்ப நீளமாதான் இருக்கு.
    • கருணாவோட தொடங்கி வைத்தியர் மூர்த்தியில வந்து நிக்குது திரி? அதுசரி, என்ன பேச வெளிகிட்டோம்? ஆருக்குத் தெரியும்? ஆனாலும் கருணாவை ஆதரிச்சு, அவனை மகா யோக்கியன் லெவலுக்கு புகழ்ந்து, தலைவர் கருணா சொன்னதைக் கேட்டிருந்தால் தப்பியிருப்பார் என்கிற ரேஞ்சுக்கு நினைக்கிறார்கள் பாருங்கள், அங்கேதான் அவர்களின் விசுவாசம் தெரிகிறது. எமதினத்தைக் கருவறுத்து, துரோகத்தில் தன்னை மிஞ்ச எவருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு, தன்னை வளர்த்த தலைவனையும், தமிழருக்கான ஒரே நம்பிக்கையாக இருந்த விடுதலைப் போராட்டத்தையும் தனது சுயநலத்திற்காக காட்டிக்கொடுத்து, லட்சக்கணக்கில் எம்மக்கள் சாகக் காரணமான இனவழிப்பு போருக்கு அடிக்கல் நாட்டிவைத்த கரும் பாம்பிற்காய் வக்காலத்து வேண்டவும் சிலர் இன்னும் இருப்பது நாம் சபிக்கப்பட்ட சமூகம்தான் என்பதை பறைசாற்றவன்றி வேறில்லை. கருணா எனும் விநாயகமூர்த்தி முரளீதரன் - துரோகத்தின் புதியநிலையான வரைவிலக்கணம். இவன்போல் முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை!
    • இலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை  கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே.  4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.
    • கொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது