Sign in to follow this  
பிழம்பு

``காதல் கல்யாணம், 7 பேரப் புள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கேன்!" மூத்த திருநங்கை மோகனா

Recommended Posts

``என் 57 வயசு வரை பெண்ணாகத்தான் வாழ்ந்தேன்'' என வியக்கவைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த திருநங்கை மோகனா அம்மா. தற்போது 75 வயது. திருநங்கைகள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கு எவ்வளவு போராடவேண்டியிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. இப்போதே இப்படி என்றால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்?

மூத்த திருநங்கை மோகனா

``என் சொந்த ஊர் ஆர்.எஸ்.மாத்தூர். அப்பா, அம்மா கூலிக்காரங்க. எனக்கு 4 அண்ணன், 3 அக்கா. 8 வது மகனாப் பிறந்தேன். 5 வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. என் அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. சின்ன வயசிலிருந்தே பொம்பளை புள்ளைக விளையாட்டுன்னா ஆர்வம் அதிகம். பொம்பளை புள்ளை மாதிரிதான் நடந்துப்பேன். அதுக்குப் பெயர் `திருநங்கை'ன் எல்லாம் தெரியாது. 10 வயசுல வீட்டைவிட்டு வெளியேறினேன். லோக்கல் வண்டியைப் பிடிச்சு திருச்சிக்கு ஓடினேன். அங்கே ஒரு ரிக்‌ஷாகாரர்கிட்ட, `அலிங்க எங்க வாழுவாங்க'னு கேட்டேன். அப்போவெல்லாம் திருநங்கைன்னு சொல்ல மாட்டாங்கம்மா. அவர்தான் என் ஞானகுருவான (பாட்டி) சாந்திகிட்ட என்னைச் சேர்த்தார். அவர்கிட்ட நடனம் கத்துக்கிட்டேன். அவங்களோடு சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் ஆடப் போனேன். அவங்கதான் எனக்கு மோகனா என்கிற பெயரை வெச்சாங்க. அதுக்கு முனாடி என் பெயர் ஏகாந்தம். 15 வயசுல பாம்பேக்குப் போனேன். அங்கேயும் கலை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினேன். 17 வயசுல அறுவை சிகிச்சை செய்துக்கிட்டு முழு பொம்பளையா மாறினேன். 19 வயசுல திரும்ப திருச்சிக்கு வந்தேன்'' என்கிற மோகனா அம்மா அந்நாட்களின் நினைவுகளை கண்களுக்குள்கொண்டுவருகிறார்.

 

 

``என் அத்தை மகன் பெயர், பெரியசாமி. சின்ன வயசிலிருந்தே அவனை எனக்குப் பிடிக்கும். அவனும் என்னை மாதிரி சின்ன வயசுலேயே ஊரைவிட்டு ஓடிப்போய், ஹோட்டலில் வேலை செஞ்சான். அவனை திருச்சியில் பார்த்தேன். ரெண்டு பேரும் நிறைய பேசினோம்; காதலிச்சோம். அப்புறம் எங்க வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனார். நான் பார்க்கிறதுக்கு அசல் பொம்பளை மாதிரியே இருப்பேன். எங்க வீட்டுல உள்ளவங்களுக்கே என்னை அடையாளம் தெரியலை. அவருக்கு மட்டும்தான் நான் யாருங்கிற உண்மை தெரியும். வீட்டுல உள்ளவங்க எல்லோரும் சேர்ந்து என் 19 வயசுல அவருக்குக் கட்டிக்கொடுத்தாங்க. 5 வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம். என்னால் அவருக்குக் குழந்தையைப் பெத்துக் கொடுக்க முடியலையே என்கிற குறை மனசுல உறுத்திட்டே இருந்துச்சு. கணவருக்குச் சொந்தத்தில் ஒரு பொண்ணைப் பார்த்து ரெண்டாவது கல்யாணம் கட்டிவெச்சேன்.

அவங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் பிறந்துச்சு. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துட்டிருந்தோம். எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு தோணுச்சு. மும்பையில் மலர்கொடின்னு ஒரு பொண்ணைத் தத்து எடுத்து வளர்த்து கட்டிக் கொடுத்தேன். அந்தப் புள்ளைக்கு ரெண்டு பசங்க. என் பேரனுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. என் கணவருக்குப் பொறந்த புள்ளைகளுக்கும் கல்யாணமாகி பேர பசங்க இருக்காங்க. என் 57 வயசு வரைக்கும் பொண்ணாகத்தான் இருந்தேன். 2001-ம் வருஷம், இப்படிக் குடும்பத்துக்குள்ளே 4 பேருக்கு மட்டுமே வாழ்ந்தா போதுமா ஒரு கேள்வி தோணுச்சு. திருநங்கைகளுக்கு உதவி செய்யணும்னு குடும்பத்தைவிட்டு வெளியில் வந்தேன். அதுக்கு அப்புறம்தான் நானும் ஒரு திருநங்கைன்னு உலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சது. திருநங்கைகளுக்கு ஓட்டுரிமை வேணும்னு முதன்முதலா போராடினவங்களில் நானும் ஒருத்தி. கொஞ்சம் கொஞ்ச எம் மக்களுக்காகப் போராட ஆரம்பிச்சேன். போராடிப் போராடி ஒவ்வொரு உரிமையையும் வாங்கிக்கொடுக்கிறேன். திருநங்கைகளுக்கான அமைப்புகளில் தலைவியாகவும் இருந்திருக்கேன். 

இப்போ, என் குடும்பத்தில் எல்லோருமே என்னை ஏத்துக்கிட்டாங்க. திருநங்கைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க தொடர்ந்து பயணிச்சுட்டிருக்கேன். 5 வருஷத்துக்கு முன்னாடி கணவர் இறந்துட்டார். எங்க காதலைச் சொல்ல வார்த்தைகள் போதாதும்மா. அவர் என் மனசு முழுக்க காதலை விதைச்சுட்டுப் போயிருக்கார். இப்பவும் அவரை நான் ரொம்ப லவ் பண்றேன்'' என வெட்கப் புன்னகை சிந்துகிறார் மோகனா அம்மா.

 

https://www.vikatan.com/news/tamilnadu/138670-mine-is-a-love-marriage-now-happy-with-seven-grandchildren-transgender-mohana.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this