Jump to content

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?

Report us Vethu 9 hours ago

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது.

பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் 300 வாழைக் கன்றுகளை பயிரிட்டுள்ளார்.

முதன்முதலாக ஜேர்மனியில் வாழ்ந்த சின்னையா, பச்சைவீட்டு வேளாண்மைக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Coventry பகுதிக்கு சென்ற பிறகு, அவர் தனது பயிர்ச்செய்கை திறன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். வெப்பமண்டல தாவரங்களில் அவர் அக்கறை செலுத்தியுள்ளார்.

அதற்கமைய வாழை மரங்கள் மற்றும் பிற வெப்பமண்டல மலர்களை வளர்ப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அதற்கமைய கோடை காலமான ஒக்டோபரில் வாழை மரங்கள் வளர ஆரம்பித்துள்ளன.

சின்னையா செந்தில்செல்வனின் வாழை மரங்கள் தற்போது 3 மீற்றர் உயரமாக வளர்ந்துள்ளன. அந்த வாழைமரங்கள் நன்கு வளர்ந்த போதிலும், இன்னமும் வாழைப்பொத்தி வெளிவர ஆரம்பிக்கவில்லை. எதிர்வரும் வருடம் பாரிய அறுவடை ஒன்று காத்திருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குளிர்கால நெருங்குகையில் அதனை சூடாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சின்னையா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எனது பெற்றோர்களின் தோட்டத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வாழை மரங்கள் இருந்தன, அதனை நாங்கள் விற்பனை செய்தோம்.

சிலர் இங்குள்ள எனது வீட்டிற்கு வருகிறார்கள், அவர்கள் இலங்கையில் தாம் இருப்பதனை போன்று உணர்வதாக குறிப்பிட்டுள்ளனர். பெரிய வாழையிலைகளை நான் கோவிலுக்கு வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாழைப்பழ செய்கையின் ஊடாக குறித்த பகுதியில் தான் மிகவும் பிரபல்யமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/usa/01/194963?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில், வாழை  மரங்களை... குளிரிலிருந்து பாதுகாப்பது சிரமமான விடயம் என்றாலும்,
அவரின் புதிய முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா,சின்னையா,

கையோட கருவேற்பிலை வையுங்கோ... பணம் கொட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த செய்தியை இணைக்கமுடியவில்லை காரணம் அமெரிக்காவில் இப்படி என்று போட்டு பின்பு கொவேன்ரி லண்டன் என்றெல்லாம் போட்டு  இடக்குழப்பம் பண்ணி இருந்தார்கள் .

இங்கு வளரும் வாழையினம் பொத்தி தள்ளும்மட்டும் தான் அதன் பின் குலை வந்து பழம் வருவதுல்லாம் அதிசயம் ஆனால் ஒளி நாடாவில் பழம் சாப்பிட்டும் காட்டுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

பார்த்தால்....குயின்ஸ்லாந்துப் பழம் போல கிடக்குது!

5adcfdf0a42b5d07b33f2f6936fa08124975f996 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கலாம். பிரித்தானியாவில் பலரை அல்ல.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் இருக்கலாம் ஆனால் பலரும் பார்க்க பழம் பறித்து உண்டவர் நம்ம சின்னையாதானே.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

உந்த லண்டன் வாழைத்தோட்டத்தை பார்த்தால் எங்கடை பெரியம்மாவுக்கு இருப்புக்கொள்ளாதே!!!!!!

பியர்க்கள்ளன்  சங்கிலிக்கள்ளன்  வரிசையிலை வாழைப்பழக்கள்ளனும் வீடுதேடி வந்துடுவான் எண்ட பயத்திலை வேண்டாம் சோலி எண்டு  நினைச்சிட்டாங்க போலை....:grin:

à®à®³à¯à®³à®©à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பலர் இருக்கலாம் ஆனால் பலரும் பார்க்க பழம் பறித்து உண்டவர் நம்ம சின்னையாதானே.....!  ?

அந்த கானொளியில் அடுத்த வருடம் இப்படி பழம் சாப்பிட என்னால் முடியும் என்று சொல்கிறாரே தவிர தன்னுடைய தோட்டத்தில் விளைந்தது அல்ல எனும் உண்மையை சொல்ல மறந்து விட்டார் போல் உள்ளது அல்லது செய்தி எடுத்த செய்தி காரர் வெட்டி போட்டுனமாக்கும் .ஆனாலும் அவரின் முயற்ச்சி பாராட்டுக்குரியது .நாதமுனி சொல்வது போல் கறிவேப்பிலை வளர்த்தால் அவர் பல ஆயிரம் பவு ன்ஸ்க்கு சொந்தகாரர் ஆகியிருக்கலாம் இப்பவெல்லாம் ஊர் போய் வருகிறவர்கள் கையோடு 20 அல்லது 30கிலோ கொண்டு வருகிறார்கள் ரிக்கெட் காசை கவர் பண்ணுது என்கிறார்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 7:57 AM, புங்கையூரன் said:

பார்த்தால்....குயின்ஸ்லாந்துப் பழம் போல கிடக்குது!

5adcfdf0a42b5d07b33f2f6936fa08124975f996 

புங்கையூர் கதலிப் பழம் மாதியெல்லா இருக்குது...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 11:28 AM, Nathamuni said:

ஜயா,சின்னையா,

கையோட கருவேற்பிலை வையுங்கோ... பணம் கொட்டும்.

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உந்த லண்டன் வாழைத்தோட்டத்தை பார்த்தால் எங்கடை பெரியம்மாவுக்கு இருப்புக்கொள்ளாதே!!!!!!

அநேகமா இதுவரைக்கும்  ஸ்ரீ முருகனில் வேண்டி இருப்பா என்று நினைக்கிறன் .

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

ஐரோ முழுக்கவே தடைதான் 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் 

கண்ணாடி கூட்டுக்குள் வளர்த்தாலும் வளரமாட்டன் என்று அடம்பிடிக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் சொன்னால் அதை கண் மூடிக்கொண்டு நம்புவதும் ஒன்றை பொய்யாக்கப் பரப்புவதும் தமிழர் வேலையாகிவிட்ட்து. கொவென்றி லண்டனிலும் குளிர் கூடிய இடம். ஐந்து ஆண்டுகளாக நானும் வாழைகளும் குட்டிகளுக்கு வளர்த்தவள் தான். இங்கு மேயில் இருந்து நவம்பர் வரைதான் வாழை வளரும். அதன்பின் நாம் மேலே மூடி சாக்கினால் கட்டிவிட் டாலும் மூள் அழுகிப் பின் அடுத்த சித்திரைக்குத்தான் வெளியே வரும். ஒரு வாழைக் கன்று குலை போட கட்டாயம் மூன்று ஆண்டுகளாகும். ஆனால் நாம் பொத்தியை மட்டும் தான் வறுக்கலாம். வாழைக்காய் ஒன்றரை அங்குலத்துக்கு மேல் பெருக்காது. பின் தறுக்கணித்து உதிர்ந்த்துவிடும். அல்லது நல்ல வெப்பமூட்டி கண்ணாடிக்கு கூண்டில் வளர்த்தால்த்தான் பெருக்கும். என்வீட்டு வாழை பரவி இப்ப அயலட் டைகளில் எல்லாம் நிறைய வாழை மரங்கள் உள்ளன.ஆனால் என் வீட்டில் வந்ததுபோல் பெரிய வாழைப்பொத்தி  கூட வரவில்லை. காரணம் என்ன என்று இலங்கையில் வாளைத் தோட்டம் வைத்திருந்தவர்கள் வந்து எழுதுங்கள்.

படங்களை போட முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி பின் வளவுக்கு மணிக்கூடு பூட்டி இருகிறீர்கள் வேலை செய்கிறதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 8:00 AM, பெருமாள் said:

நல்லாத்தான் மனிசன் எல்லாரையும் விசாரராக்குது.வாழைக் காயைக் கூட உவர் கடித்தும் இருக்கேலாது. கள்ளப் பயல்

2 minutes ago, பெருமாள் said:

அதெல்லாம் சரி பின் வளவுக்கு மணிக்கூடு பூட்டி இருகிறீர்கள் வேலை செய்கிறதா ?

வேலை செய்யாமலே பூட்டி இருக்கிறம்.அதுக்கிடையில பார்த்தாச்சோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19423989_10208013395006282_3171334304811

என் வீட்டு வாழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

புங்கையூர் கதலிப் பழம் மாதியெல்லா இருக்குது...?

கதலி வகை தான்!

ஆனால் பெரிதாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேலை செய்யாமலே பூட்டி இருக்கிறம்.அதுக்கிடையில பார்த்தாச்சோ. 

ஊரிலை வேட்டைத்திருவிழா எப்படி நடக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

எல்லாரையும்... மட்டி, மடையனாக்கி விட்டது,  "தமிழ்வின்" இணையத்தளம்.
இவர் கையில்.... வைத்திருக்கும் வாழைப்பழத்தை பார்க்க.... 
தென் அமெரிக்காவில், விளைந்த   Chiquita எனப்படும் நிறுவனத்தால், 
உலகெங்கும் விற்பனையாகும் வாழைப்பழம், என்ற சந்தேகம் வந்த போதும்.... 
ஒரு தமிழனின், முயற்சியை...   கொச்சைப்  படுத்தக்  கூடாது என்பதற்காக.. பாராட்டி விட்டேன்.
இப்போ... அதனை, வாபஸ்  வாங்கி, 
இனி... இப்படி, எங்களை ஏமாத்த வேண்டாம் என்று, தமிழ்வின் இணையத் தளத்தை  கேட்டுக் கொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் :)

இஞ்சை பாரும் ராசன்!

என்னதான் உவையள் குத்தி முறிஞ்சாலும் அந்தந்த தாவரங்கள்  அங்கத்தையான் காலநிலைக்கு வளர்ந்தால் தான் அதின்ரை மணம் குணம் சுவை எல்லாம் இருக்கும் கண்டியளோ. ஐ மீன் வெய்யில் பட்டு வளருற மரங்களுக்கு வெக்கை 30பாகைக்கு மேலை  இருக்கவேணும்......இல்லையெண்டால் அது வடிவுக்கு வளருற மரம். இறைச்சி எண்டாலும் வெய்யில் பட்டு வளருற மிருகத்தின்ரை இறைச்சி வித்தியாசமான ரேஸ்ற் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அநேகமா இதுவரைக்கும்  ஸ்ரீ முருகனில் வேண்டி இருப்பா என்று நினைக்கிறன் .

ஐரோ முழுக்கவே தடைதான் 

கண்ணாடி கூட்டுக்குள் வளர்த்தாலும் வளரமாட்டன் என்று அடம்பிடிக்குது .

நன்றி தகவலுக்கு பெருமாள் அண்ண

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவர் சொன்னால் அதை கண் மூடிக்கொண்டு நம்புவதும் ஒன்றை பொய்யாக்கப் பரப்புவதும் தமிழர் வேலையாகிவிட்ட்து. கொவென்றி லண்டனிலும் குளிர் கூடிய இடம். ஐந்து ஆண்டுகளாக நானும் வாழைகளும் குட்டிகளுக்கு வளர்த்தவள் தான். இங்கு மேயில் இருந்து நவம்பர் வரைதான் வாழை வளரும். அதன்பின் நாம் மேலே மூடி சாக்கினால் கட்டிவிட் டாலும் மூள் அழுகிப் பின் அடுத்த சித்திரைக்குத்தான் வெளியே வரும். ஒரு வாழைக் கன்று குலை போட கட்டாயம் மூன்று ஆண்டுகளாகும். ஆனால் நாம் பொத்தியை மட்டும் தான் வறுக்கலாம். வாழைக்காய் ஒன்றரை அங்குலத்துக்கு மேல் பெருக்காது. பின் தறுக்கணித்து உதிர்ந்த்துவிடும். அல்லது நல்ல வெப்பமூட்டி கண்ணாடிக்கு கூண்டில் வளர்த்தால்த்தான் பெருக்கும். என்வீட்டு வாழை பரவி இப்ப அயலட் டைகளில் எல்லாம் நிறைய வாழை மரங்கள் உள்ளன.ஆனால் என் வீட்டில் வந்ததுபோல் பெரிய வாழைப்பொத்தி  கூட வரவில்லை. காரணம் என்ன என்று இலங்கையில் வாளைத் தோட்டம் வைத்திருந்தவர்கள் வந்து எழுதுங்கள்.

படங்களை போட முடியவில்லை

நான் உங்களின் வாழை மரத்தை நினைவில் வைத்தே மேல் உள்ள பதிவை எழுதினன் நட்டு கனகாலம் பொத்தி மட்டுள் தள்ளியிருந்தது காய்கள் வரவில்லை என்று சொன்ன ஞாபகம் பாருங்கள் 

7 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாரும் ராசன்!

என்னதான் உவையள் குத்தி முறிஞ்சாலும் அந்தந்த தாவரங்கள்  அங்கத்தையான் காலநிலைக்கு வளர்ந்தால் தான் அதின்ரை மணம் குணம் சுவை எல்லாம் இருக்கும் கண்டியளோ. ஐ மீன் வெய்யில் பட்டு வளருற மரங்களுக்கு வெக்கை 30பாகைக்கு மேலை  இருக்கவேணும்......இல்லையெண்டால் அது வடிவுக்கு வளருற மரம். இறைச்சி எண்டாலும் வெய்யில் பட்டு வளருற மிருகத்தின்ரை இறைச்சி வித்தியாசமான ரேஸ்ற் :cool:

ஊருக்கு வந்து விவசாயம் பாருங்கள் என்று சொன்னால் யாரும் கேட்கிறாங்கள் இல்லை சாமி ஊராவது செழிப்பா இருக்கும் காடு பிடிச்ச நிலம் கூட  வெட்டி வெளிசாக்கப்படும் 

ஓம் வெயில் பட்டு வளரும் காட்டுப்பன்றிகள் ,மான் , மரைகள் இறைச்சி செம ருசி  தான்  , அதுபோக இங்க ஊரில் இருக்கும் கறிவேப்பிலை மணம் என்பது ஐஞ்சு வீட்டுக்கு அங்கால மணக்கும் பாருங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவேற்பிலை தடைக்கு காரணம், நீண்டநாள், பிரஸ்ஸாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தவர்கள், அடித்த ஸ்பிரேயில் காணப்பட்ட ஆபததான இரசாயணம்.

பின்னர் இலங்கையில் இருந்து கீரைக்கு இடையே மறைந்ததாக ஒளிந்து வந்து, சப்பிளை குறைவாக இருந்து டிமாண்ட் அதிகமாக இருந்ததால் விலை கூடியது.

20 பவுணுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கினால், இலவசமாக தரப்பட்ட கறிவேற்பிலை இன்று 30 - 50 கிராம், £1 முதல் £1.50 இலண்டன் தமிழ் கடைகள் விலை. சில இந்திய கடைகள், frozen  பக்கட்டில் வித்தாலும், மணம், குணம் இல்லாத காரணத்தால வேலைக்காகாது.

இப்போது, இரசாயணம் இல்லாத காரணத்தால் தடை இல்லை. ஆனால், விலையை குறைக்க விரும்பாத வியாபார முதலைகள் ‘தடையிருப்பதாகவே’ கதை விடுகின்றனர். 

தடை இருந்தால், உடலுக்கு ஆபத்தான இரசாயணம் உள்ள , அரசால் தடைக்குள்ளான பொருளை வாங்கக் கூடாதே என்ற அறிவார்த்தம் நம்மிடையே இல்லை என்பது உண்மை .

அதேவேளை, எப்படி விற்க முடியும் என்று கேட்பதுடன், Food safety agency க்கு அடிச்சு சொல்லப் போகிறேன் என்று சொல்லிப்,  பாருங்கள், கடைக்காரர் முகம் போற கோக்கை.

பெருமாள், கருவேற்பிலை வளர்க்க, சரியான முறையினை, தமிழக அரச வேளாண் பல்கலைக்கழகங்களில் கேட்டறியலாம்.

Link to comment
Share on other sites

17 hours ago, தமிழ் சிறி said:

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

எல்லாரையும்... மட்டி, மடையனாக்கி விட்டது,  "தமிழ்வின்" இணையத்தளம்.
இவர் கையில்.... வைத்திருக்கும் வாழைப்பழத்தை பார்க்க.... 
தென் அமெரிக்காவில், விளைந்த   Chiquita எனப்படும் நிறுவனத்தால், 
உலகெங்கும் விற்பனையாகும் வாழைப்பழம், என்ற சந்தேகம் வந்த போதும்.... 
ஒரு தமிழனின், முயற்சியை...   கொச்சைப்  படுத்தக்  கூடாது என்பதற்காக.. பாராட்டி விட்டேன்.
இப்போ... அதனை, வாபஸ்  வாங்கி, 
இனி... இப்படி, எங்களை ஏமாத்த வேண்டாம் என்று, தமிழ்வின் இணையத் தளத்தை  கேட்டுக் கொள்கின்றேன். 

வீடியோவில் வாழை குலையை காட்டாமல் விட்டதால் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்துகின்றார்கள். கடையில் வாங்கிய வாழைப்பழத்தை காட்டி ஊரை உலகை ஏமாற்றப் பார்த்து இருக்கின்றார்.

3 hours ago, Nathamuni said:

கருவேற்பிலை தடைக்கு காரணம், நீண்டநாள், பிரஸ்ஸாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தவர்கள், அடித்த ஸ்பிரேயில் காணப்பட்ட ஆபததான இரசாயணம்.

பின்னர் இலங்கையில் இருந்து கீரைக்கு இடையே மறைந்ததாக ஒளிந்து வந்து, சப்பிளை குறைவாக இருந்து டிமாண்ட் அதிகமாக இருந்ததால் விலை கூடியது.

20 பவுணுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கினால், இலவசமாக தரப்பட்ட கறிவேற்பிலை இன்று 30 - 50 கிராம், £1 முதல் £1.50 இலண்டன் தமிழ் கடைகள் விலை. சில இந்திய கடைகள், frozen  பக்கட்டில் வித்தாலும், மணம், குணம் இல்லாத காரணத்தால வேலைக்காகாது.

இப்போது, இரசாயணம் இல்லாத காரணத்தால் தடை இல்லை. ஆனால், விலையை குறைக்க விரும்பாத வியாபார முதலைகள் ‘தடையிருப்பதாகவே’ கதை விடுகின்றனர். 

தடை இருந்தால், உடலுக்கு ஆபத்தான இரசாயணம் உள்ள , அரசால் தடைக்குள்ளான பொருளை வாங்கக் கூடாதே என்ற அறிவார்த்தம் நம்மிடையே இல்லை என்பது உண்மை .

அதேவேளை, எப்படி விற்க முடியும் என்று கேட்பதுடன், Food safety agency க்கு அடிச்சு சொல்லப் போகிறேன் என்று சொல்லிப்,  பாருங்கள், கடைக்காரர் முகம் போற கோக்கை.

பெருமாள், கருவேற்பிலை வளர்க்க, சரியான முறையினை, தமிழக அரச வேளாண் பல்கலைக்கழகங்களில் கேட்டறியலாம்.

இங்கு கனடாவில் எல்லா தமிழ் கடைகளிலும் ஒரு டொலர் ஐம்பது சதத்துக்கு விற்கின்றார்கள். நான் நினைக்கின்றேன், கரீபியன் தீவில் இருந்து கொண்டு வருகின்றார்கள் என்று. அடுத்த முறை விசாரித்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

வீடியோவில் வாழை குலையை காட்டாமல் விட்டதால் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்துகின்றார்கள். கடையில் வாங்கிய வாழைப்பழத்தை காட்டி ஊரை உலகை ஏமாற்றப் பார்த்து இருக்கின்றார்.

இங்கு கனடாவில் எல்லா தமிழ் கடைகளிலும் ஒரு டொலர் ஐம்பது சதத்துக்கு விற்கின்றார்கள். நான் நினைக்கின்றேன், கரீபியன் தீவில் இருந்து கொண்டு வருகின்றார்கள் என்று. அடுத்த முறை விசாரித்து பார்க்க வேண்டும்.

ஆம் உங்களுக்கு வருவது டொமினிக்கன் குடியரசுவில் இருந்து நல்ல கூலர் கப்பலில் 10 நாளில் அங்கு வந்து விடும் கொழும்பு கத்தரிக்காய் என்று நம்ம கடைக்காரர் சொல்வது டொமினிக்கன் கத்தரிக்காய் ,கறிவேப்பிலை போன்றவை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.