• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
tulpen

குரு பெயர்ச்சி எனும் சோதிட முட்டாள்தனங்கள்

Recommended Posts

On 10/5/2018 at 10:03 AM, tulpen said:

இவற்றை எல்லாம்விட குமட்டிக் கொண்டுவரும் ஒரு சேதி உண்டு. ராகு, கேது என்கிற கிரகங்களே கிடையாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி நவக்கிரகப் பட்டியல் என்னும் பந்தியில் ‘சப்பனம்’ போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளன.

ராகுவும் கேதுவும் நட்சத்திரமோ கிரகங்களோ (celestial bodies) இல்லை. அவை கிரகணங்கள். ராகு சூரிய கிரகணம், கேது சந்திர கிரகணம்.  இங்கு இரண்டும் பாம்புகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இன்னும் விரிவாக சொல்லபோனால் அவை அண்டவெளியில் இரண்டு முனைகள்.  சந்திர  வட முனை சந்திர தென் முனை. இந்து ஜோதிடம்  நவக்கிரக தாக்கத்தால்  பூமிக்கான பலாபலன்களை கணித்து சொல்வதற்கானதால் அதில் பூமி இடம்பெறவில்லை. இதன் பின்னணியில் முன்னோர்களின் மிக நுணுக்கமான வானவெளி கவனிப்புகளும் கோள்களின் சஞ்சார கணிப்புகளும் உள்ளன. அண்டவெளியில் கோள்களின் சஞ்சாரத்தின் பின்னணியில் புரியாத பல அறிவியல் உண்மைகள் உள்ளன. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, சண்டமாருதன் said:

கடவுள் இல்லை  கடவுளை நம்பிக்கை மூட நம்பிக்கை என்ற வாதத்திற்காக ஆயிரமாயிரம் வருடம் பழமையான கோயில்களை இடிக்க முடியாது ஏனெனில் அவைகள் வரலாற்று அடயாளமாக நிற்கின்றது. அதேபோல் தேவராம் திருமுறை திருவாசகங்களை அழிக்கவும் முடியாது அவை தமிழையும் இலக்கியங்களையும் தாங்கி நிற்கின்றது. 

வானியல் சோதிடம் பல்லாயிரம் வருடங்களாக மானுடத்துடன் பயணிக்கின்றது.  உண்மை பொய் முட்டாள்த்தனம் என்ற வாதங்களுடன் அது  தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும். 

இது சரி இது பிழை, இது முட்டாள்தனம் இது புத்திசாலித்தனம் என்ற வரைவிலக்கணங்களுக்குள் நாம் அணுகும் பல விசயங்கள் வராது.  அதில் வானியல் சோதிடமும் அடங்கும். 

வரலாற்றறு அடையாளங்கள் என்றும் பாதுகாக்கபடவேண்டியவை.  அவற்றை அழிக்குமாறு எவரும் இங்கு கூறவும் இல்லை. அப்படி செய்வது பாரிய குற்றம்.  அவ்வாறான அடையாளங்கள் நிச்சயமாக தேவையானவை.  ஆனால் துரதிஷ்ரவசமாக இங்கு விவாதப்பொருள் அதுவல்ல. மூடப்பழக்கங்களுக்கு எதிராக கருத்து வைப்பதே குற்றம் என்பது போல் சித்தரிப்பது எப்போதும் வழமையாகிவிட்டது. 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, vanangaamudi said:

ராகுவும் கேதுவும் நட்சத்திரமோ கிரகங்களோ (celestial bodies) இல்லை. அவை கிரகணங்கள். ராகு சூரிய கிரகணம், கேது சந்திர கிரகணம்.  இங்கு இரண்டும் பாம்புகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இன்னும் விரிவாக சொல்லபோனால் அவை அண்டவெளியில் இரண்டு முனைகள்.  சந்திர  வட முனை சந்திர தென் முனை. 

சந்திர சூரிய கிரகணங்கள் ஒரு நிகழ்வே தவிர பெயர் சொற்கள் அல்ல. நல்ல காலம் அறிவியல் மேதைகள் மிக துல்லியமாக இவற்றை கண்டு பிடித்திருக்காவிட்டால் இன்றும் ராகு கேது என்ற அறியாமையை மக்கள் மீது திணித்திருப்பார்கள்.  அமாவாசையை அபிராமி அருளால் பெளர்ணமி ஆக்கிய அபிராமி பட்டரின் கதையை அறிவியல் வளர்ந்த நூற்றாண்டிலும் நம்ப வேண்டும் என்று விரும்பும் எல்லோரும் தமது வாழ்க்கைக்கும் வசதிக்கும் அறிவியல் கண்டுபிடித்த பொருட்களை தான் உபயோகிக்கிறார்கள்.  

இந்து ஜோதிடம்  நவக்கிரக தாக்கத்தால்  பூமிக்கான பலாபலன்களை கணித்து சொல்வதற்கானதால் அதில் பூமி இடம்பெறவில்லை. இதன் பின்னணியில் முன்னோர்களின் மிக நுணுக்கமான வானவெளி கவனிப்புகளும் கோள்களின் சஞ்சார கணிப்புகளும் உள்ளன. அண்டவெளியில் கோள்களின் சஞ்சாரத்தின் பின்னணியில் புரியாத பல அறிவியல் உண்மைகள் உள்ளன. 

இவ்வாறான அறிவியல் உண்மைகள் உண்டு என்பதை தான் அறிவியல் மேதைகள் நியூட்டன் தொடங்கி ஸரீவன் ஹக்கிங் வரை  தமது ஆராய்சிகளின் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்கள். அவர்களுடன் அறிவியல் கண்டு பிடிப்புகள் முடிந்து விட வில்லை என்பதே அறிவியல் உண்மை. அதற்காக எமது முன்னோர்கள் எல்லாம் சரியாக கண்டு பிடித்து விட்டார்கள் என்று வீண்பெருமை பேசிக்கொண்டு அதில் மாற்றங்களை செய்யக்கூடாது என்று வாதிடுவது அபத்தமானது. 

Share this post

Link to post
Share on other sites

இந்த திரியில் இணைக்கபட்ட கட்டுரைக்கு எதிராக எவரும் கருத்து சொல்லவில்லை.  ஜோதிட புரட்டுக்களுக்கு எதிராக கட்டுரையில் வைக்கபட்ட வாதங்களை எதிர் கொண்டு அதற்கு பதில் கூறும் நிலையில் யாரும் இல்லை.  வியாழன் கிரகத்தின் மனைவியை சந்திரன் கற்பழித்தான் அதனால் ஏற்பட்ட சாபத்தினால் தான் வளர்பிறை , தேய்பிறை உருவாகிறது என்ற எள்ளி நகையாடக்கூடிய த‍த்துவங்களை கொண்ட  ஜோதிட புரட்டுக்களுக்கு எவரும் பதிலளிக்க முயற்சிக்க கூட இல்லை. ஏனென்றால் எல்லோருக்கும் மனதளவில் இவை எல்லாம் புரட்டுக்கள் என்று தெளிவாக தெரியும். இருந்தாலும் "மயிர செத்தான் சிங்கன்"  என்பதை போல  வரட்டு பிடிவாத‍த்தால் அதை நியாயபடுத்த ஆதாரங்கள் இல்லாத நிலையில்  தெளிவான கேள்விகளுக்கு சுத்தி வளைத்து பதில் கூற முற்படுகின்றனர் என்பதே எனது வாதம். ஆரிய பிராமணர்களால் எமது மக்கள் மத்தியில் திணிக்கபட்ட  திணிப்புக்களுக்கு அறிவியல்  ஆதாரம் தேடுவது எமது பணி அல்ல. 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites

முதல் பதிவில் கிரகணம், சந்திர  முனைகள் போன்ற சில விடயங்களை பற்றி குறிப்பிட்டிருந்தேன். சூரிய சந்திரர்கள் உட்பட  பூமியை சூழவுள்ள கோள்கள் பூமியின் மீது தமது ஆகஷ்ண சக்தியால் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் பூமியில் உள்ள ஜீவராசிகள், காலநிலை சூழல் என்பனவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோள்களின் இந்த ஈர்ப்பு சக்தி பூமியில் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்தும். அண்டவெளியில் வலம்வரும் விண்துகள்கள், வால்நட்ச்சத்திரங்கள் போன்றவற்றிக்கும் இது பொருந்தும்.

பூமி  (சந்திரனுடன் சேர்ந்து ) சூரியனை சுற்றிவர ஒரு வருடமும் சந்திரன் பூமியை சுற்றிவர ஒரு மாதமும் ஆகும். பூமி செல்லும் (நீள்)வட்ட பாதையை பயன்படுத்தி ஒரு தளத்தை (orbital plane)  கற்பனை செய்துகொண்டால் இந்த தளத்தில் தான் சூரியனும் பூமியும் எப்போதும் நிலைகொண்டு இருக்கும். சந்திரனின் பாதை இந்த தளத்தில் இருந்து ஏற தாள 5 பாகையளவில் சரிந்து இருப்பதால் சந்திரன் பூமியின் தளத்தை மாதத்தில் ஒரு முறை கீழிருந்து மேல் (பூமியின் வடக்கு) நோக்கியும் மறுமுறை மேலிருந்து கீழ் (பூமியின் தெற்கு) நோக்கியும் ஊடறுத்து செல்லும்.

இந்த வெட்டு புள்ளிகளை சந்திர முனைகள் (Lunar Nodes) என்று அழைப்போம். மேல்நோக்கி செல்லும்போது சந்திர  வடமுனை, கீழ் நோக்கி செல்லும்போது சந்திர தென்முனை. இந்த முனைகளில் சந்திரன் நிற்கும்போதுதான்  சந்திர சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன. அமாவசைச் சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள கோட்டில் வரும்போது சூரியகிரகணமும் பூமியானது  சூரியனுக்கும் பௌர்ணமி சந்திரனுக்கும் இடையில் வரும்போது சந்திர கிரகணமும் நிகழும்.

இந்த கிரகணங்களின்போது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வருவதால் அவற்றின் ஈர்ப்பு விசைகள்  ஒரே கோட்டில் குவிக்கப்படும். சூரிய கிரகணத்தின்போது  ஒரே திசையில் நிற்கும்  சூரிய சந்திரரின் ஒட்டுமொத்த  ஈர்ப்பு விசையும் சந்திர கிரகணத்தின்போது பூமிக்கு எதிர் எதிர் திசையில் நிற்கும் சூரியசந்திரர் எதிர்மறையான ஈர்ப்பு விசையையும் பூமியில் செலுத்தப்படும். இந்த ஈர்ப்பு விசைகள் சில நிமிடங்களே நீடிக்கும். இந்த நிகழ்வின்போது பூமிக்கு அருகில் வழமைபோல வெவ்வேறு கோணங்களில்  சஞ்சரிக்கும் சூரிய சந்திரர்கள் மறைந்து வேறு ஒரு புதிய அளவிலான ஈர்ப்பு விசை உருவாகும் இந்த தற்காலிக தோற்றம்  ஈர்ப்பு விசையின்  மையப்புள்ளியில்  வேறு  ஒரு கோள் புதிதாக  தோன்றியதற்கு ஒப்பானது. இந்த கோள்கள் தான் இராகுவும்(சூரிய கிரகணம்) கேதுவும்(சந்திர கிரகணம்). இதில் இராகுவின் சக்தி அதிகம் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை.

சந்திரனின் சுற்று பாதை பூரணமான வட்டமாகவும் அது பூமியின் சுற்று பாதையின் தளத்திலேயே  அமைந்திருகிறது என கற்பனையாக எடுத்துக்கொண்டால்  நாங்கள் ஒவ்வொரு மாதமும் சூரிய சந்திர கிரகணங்களை பார்க்க முடிந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் கிரகணங்கள் தோன்றாவிட்டலும் அதற்கு
அண்ணளவில் சமமான நிகழ்வுகள் வான்வெளியில் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, vanangaamudi said:

நீங்கள் சொல்லும் வானியல் நிகழ்வுகள் உண்மையாக இருக்கின்றன! ஆனால், அதில் இருந்து ஒருவரின் பிறந்த நட்சத்திரம், சாஸ்திரம் பார்ப்பதெல்லாம் புராணங்களில் இருந்து எழுந்த கட்டுக் கதைகள் அல்லவா? இப்படி விஞ்ஞானத்தை துணைக்கழைத்துக் கட்டுக் கதைகளை வளர்ப்பது தவறென்று நினைக்கிறேன்! 

Share this post

Link to post
Share on other sites

சந்திரன் தன் ஈர்ப்பு விசையால் பூமியின் சமுத்திரங்களை ஈர்த்து சமுத்திர மட்டங்களை மாற்றுவது உண்மை. மனிதனின் உடல் பெரும்பாலும் நீரினால் ஆனதால், அதுவும் ஈர்க்கப் படுகிறது என்ற அடிப்படையில் மனிதன் சந்திரன் உட்பட்ட வான் உடலங்களால் பாதிக்கப் படுகிறான் என்று பல காலமாக நம்பிக்கை உண்டு!

இது சாத்தியமா என்று விவாதிக்கும் அறிவியல் பி.பி.சி கட்டுரை கீழே:

http://www.bbc.com/future/story/20190731-is-the-moon-impacting-your-mood-and-wellbeing

இப்போதைக்கு சந்திர ஒளி (நேரடியாக நீங்கள் பார்க்கா விட்டாலும்!) மனிதனின் தூக்கத்தை மாற்றுவதால் மட்டுமே அவனது நடத்தையை மாற்றுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்! அப்படியானால் செல்போனின் பாவனையும், மின் விளக்குகளும், சந்திரனும் ஒன்று தான் என்றாகிறது!

பி.கு: சந்திரனின் ஈர்ப்பு விசையால் மனநோயாளிகளின் நோய் அதிகரிப்பது, பிள்ளைப் பேறுகள் அதிகரிப்பது, இவையெல்லாம் உண்மையில்லை என்று ஏற்கனவே நிரூபித்த்திருக்கிறார்கள்!

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, vanangaamudi said:

முதல் பதிவில் கிரகணம், சந்திர  முனைகள் போன்ற சில விடயங்களை பற்றி குறிப்பிட்டிருந்தேன். சூரிய சந்திரர்கள் உட்பட  பூமியை சூழவுள்ள கோள்கள் பூமியின் மீது தமது ஆகஷ்ண சக்தியால் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் பூமியில் உள்ள ஜீவராசிகள், காலநிலை சூழல் என்பனவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோள்களின் இந்த ஈர்ப்பு சக்தி பூமியில் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்தும். அண்டவெளியில் வலம்வரும் விண்துகள்கள், வால்நட்ச்சத்திரங்கள் போன்றவற்றிக்கும் இது பொருந்தும்.

பூமி  (சந்திரனுடன் சேர்ந்து ) சூரியனை சுற்றிவர ஒரு வருடமும் சந்திரன் பூமியை சுற்றிவர ஒரு மாதமும் ஆகும். பூமி செல்லும் (நீள்)வட்ட பாதையை பயன்படுத்தி ஒரு தளத்தை (orbital plane)  கற்பனை செய்துகொண்டால் இந்த தளத்தில் தான் சூரியனும் பூமியும் எப்போதும் நிலைகொண்டு இருக்கும். சந்திரனின் பாதை இந்த தளத்தில் இருந்து ஏற தாள 5 பாகையளவில் சரிந்து இருப்பதால் சந்திரன் பூமியின் தளத்தை மாதத்தில் ஒரு முறை கீழிருந்து மேல் (பூமியின் வடக்கு) நோக்கியும் மறுமுறை மேலிருந்து கீழ் (பூமியின் தெற்கு) நோக்கியும் ஊடறுத்து செல்லும்.

இந்த வெட்டு புள்ளிகளை சந்திர முனைகள் (Lunar Nodes) என்று அழைப்போம். மேல்நோக்கி செல்லும்போது சந்திர  வடமுனை, கீழ் நோக்கி செல்லும்போது சந்திர தென்முனை. இந்த முனைகளில் சந்திரன் நிற்கும்போதுதான்  சந்திர சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன. அமாவசைச் சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள கோட்டில் வரும்போது சூரியகிரகணமும் பூமியானது  சூரியனுக்கும் பௌர்ணமி சந்திரனுக்கும் இடையில் வரும்போது சந்திர கிரகணமும் நிகழும்.

இந்த கிரகணங்களின்போது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே கோட்டில் வருவதால் அவற்றின் ஈர்ப்பு விசைகள்  ஒரே கோட்டில் குவிக்கப்படும். சூரிய கிரகணத்தின்போது  ஒரே திசையில் நிற்கும்  சூரிய சந்திரரின் ஒட்டுமொத்த  ஈர்ப்பு விசையும் சந்திர கிரகணத்தின்போது பூமிக்கு எதிர் எதிர் திசையில் நிற்கும் சூரியசந்திரர் எதிர்மறையான ஈர்ப்பு விசையையும் பூமியில் செலுத்தப்படும். இந்த ஈர்ப்பு விசைகள் சில நிமிடங்களே நீடிக்கும். இந்த நிகழ்வின்போது பூமிக்கு அருகில் வழமைபோல வெவ்வேறு கோணங்களில்  சஞ்சரிக்கும் சூரிய சந்திரர்கள் மறைந்து வேறு ஒரு புதிய அளவிலான ஈர்ப்பு விசை உருவாகும் இந்த தற்காலிக தோற்றம்  ஈர்ப்பு விசையின்  மையப்புள்ளியில்  வேறு  ஒரு கோள் புதிதாக  தோன்றியதற்கு ஒப்பானது. இந்த கோள்கள் தான் இராகுவும்(சூரிய கிரகணம்) கேதுவும்(சந்திர கிரகணம்). இதில் இராகுவின் சக்தி அதிகம் என்பதை சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை.

சந்திரனின் சுற்று பாதை பூரணமான வட்டமாகவும் அது பூமியின் சுற்று பாதையின் தளத்திலேயே  அமைந்திருகிறது என கற்பனையாக எடுத்துக்கொண்டால்  நாங்கள் ஒவ்வொரு மாதமும் சூரிய சந்திர கிரகணங்களை பார்க்க முடிந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் கிரகணங்கள் தோன்றாவிட்டலும் அதற்கு
அண்ணளவில் சமமான நிகழ்வுகள் வான்வெளியில் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

மிக்க நன்றி வணங்காமுடி. மிக விளக்கமாக வானியலை கற்றுள்ளீர்கள். 👍 ஆனால் அனைத்தும் வானியல் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு . எதுவுமே சோதிட கண்டு பிடிப்பு அல்ல. பூமி உருண்டையானது என்பதையே இந்து புராணங்கள் அறிந்திருக்கவில்லை என்பதற்கு சான்று சிவனின் திருமணத்தை  காண மக்கள் கைலாயத்தில்  திரண்டதால் உலகம் சமநிலை தவறி சரிந்து விழ அகத்திய முனிவர் தனியே உலகத்தின் மறுமுனை சென்று உலகத்தை சம நிலைக்கு கொண்டுவந்தார் என்ற புராண புனைவு. இந்நிலையில் விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை ஜோதிட புரட்டுகளுக்கு உபயோகிப்பது தவறு. ஆனால்  உங்கள் வானியல் அறிவை உண்மையில் மகிழ்வுடன் பாராட்டுகிறேன். நன்றி. 

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, tulpen said:

மூடப்பழக்ககள் அனைத்தும் மனித முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை. அறிவுக்கு ஒவ்வாதன என்பது எனது கருத்து. நீங்கள் அதை மறுக்கவில்லை.  ஆனால் அதற்கு ஆதரவாக வாதாடுகின்றீர்கள்.  நேரடியான விவாத்த‍த்தை தவிர்த்து திசை மாற்றுகின்றீர்கள். மூட நம்பிக்கைகள் அறிவு பூர்வமானவை என்று நீங்கள் கருதிதனால் அதறக்கான விளங்கங்களை தரலாம்.  Jupitar   பூகோளத்தில் வாழும் பில்லியன் கணக்கான மக்களை தவிர்த்து சிறிய புள்ளியாக உள்ள  இலங்கை இந்தியாவில் உள்ள மக்களை மட்டும் பாதிப்பதன் விளக்க‍த்தை தர முடியுமா? இந்த விளக்கத்தையாவது தெளிவாக தந்தால் விவாதம் பயனுள்ளதாக இருக்கும்.  

வணக்கம் துல்பன்,

உலகம் முழுவதும் வெளிவரும் இலவச, சந்தா கட்டும்; நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகளில் சோதிடம் பற்றி வருகின்றது. 

கனடாவின் அதிகளவில் வாசிக்கும் பத்திரிக்கை இது. இதிலும் வருகின்றது சோதிடம் பற்றி. https://www.thestar.com/life/horoscope.html  நீங்கள் வாழும் நாட்டிலும் இப்படியான பத்திரிகைகள் இருக்கும்  

உங்களிடம் இரண்டு கேள்விகள்: 

1. நீங்கள் சோதிடம் மூடநம்பிக்கை என நம்புகிறீர்கள். சரியா தவறா? 

2. சரியெனில், இவ்வாறன சுதந்திர நாட்டில் சுதந்திர ஊடகங்களை அந்த பத்திரிகையை தினமும் வாசிக்கும் வாசகர்களை நீங்கள் அறிவிலிகள் என்று கூறுவீர்கள், சரியா?  

நான் எனது பதிலையும் பதிவிடுகின்றேன்: 

1. இந்த கேள்விற்கு எனது பதில் - ஆம் மூட நம்பிக்கையே 
2. ஆனால், அவரவருக்கு உள்ள தனிமனித சுதந்திரத்தை நான் வரவேற்கிறவன்

ஆகவே, சோதிடத்தை நம்புகின்றவர்கள் உள்ள நாடும் முன்னேறுகின்றது. சோதிடத்தை நம்புவதால் அவர்கள் மொத்தமாக அறிவிலிகள் ஆகிவிடமாட்டார்கள். 

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ampanai said:

உங்கள் பதிலே எனதும் சோதிடம் மூட நம்பிக்கையே

2. சரியெனில், இவ்வாறன சுதந்திர நாட்டில் சுதந்திர ஊடகங்களை அந்த பத்திரிகையை தினமும் வாசிக்கும் வாசகர்களை நீங்கள் அறிவிலிகள் என்று கூறுவீர்கள், சரியா?  

இதனை வாசிக்கும் வாசகர்களை நானும் அறிவேன். பெரும்பாலானவர்கள் பொழுது போக்காக பழக்க தோசத்தில் அதை வாசிக்கிறார்கள். அதை முழுமையாக நம்புவர்கள் மிக குறைந்தவர்களே. அதை வாசித்தவர்கள் அடுத்த நிமிடமே தமது அறிவுக்கு ஏற்பவே தமது தனிப்பட்ட முடிவுகளை எடுக்கிறார்கள். அப்படி சோதிடத்தை முழுமையாக நம்பி தனது வாழ்க்கை முடிவுகளை மேற்கொண்டால் அது அவர்களின் அறிவீனம் அல்லது பலவீனம் என்று என்னால் வரையறுக்க முடியும். மனிதன் பலவீனம் உடையவன். அதனால் அவர்களது பலவீனம் அறிவை மறைக்கிறது. எங்கு மனித பலவீனம் அதிகம் உள்ளதோ அங்கு சோதிடத்தை நம்புவத அதிகமாக இருக்கும். மனித பலவீனம் குறைந்து செல்லும் போது அறிவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விடுவர். இங்கு தனிமனித சுதந்திரம் என்ற உங்கள் வார்த்தை பிரயோகம் தேவையற்றது. நான் எவரையும் அதை பார்க்க கூடாது என்று தனிப்பட்ட முறையில் தடுக்கவில்லை. ஒரு விடயத்தை பற்றி பொது வெளியில் பேசுவதே கூடாது என்று சொல்வது தான் தனிமனித உரிமையை மீறும் செயல். 

நான் எனது பதிலையும் பதிவிடுகின்றேன்: 

1. இந்த கேள்விற்கு எனது பதில் - ஆம் மூட நம்பிக்கையே 
2. ஆனால், அவரவருக்கு உள்ள தனிமனித சுதந்திரத்தை நான் வரவேற்கிறவன்

ஆகவே, சோதிடத்தை நம்புகின்றவர்கள் உள்ள நாடும் முன்னேறுகின்றது. சோதிடத்தை நம்புவதால் அவர்கள் மொத்தமாக அறிவிலிகள் ஆகிவிடமாட்டார்கள். 

Share this post

Link to post
Share on other sites

இவற்றை எல்லாம்விட குமட்டிக் கொண்டுவரும் ஒரு சேதி உண்டு. ராகு, கேது என்கிற கிரகங்களே கிடையாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி நவக்கிரகப் பட்டியல் என்னும் பந்தியில் ‘சப்பனம்’ போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளன. என்ற உங்கள் கேள்விக்கு மட்டுமே நான் பதில் தர முயற்சித்தேன்.

எமது முன்னோர்கள் அறிவிலிகள் மூடநம்பிகையில் வாழ்ந்தார்கள் என்றோ அவர்கள் எதையுமே வாழ்வியலில் கண்டுபிடிக்கவில்லை, எதுக்கோ பிறந்தார்கள், எதுக்கோ வாழ்ந்தார்கள் பின் இறந்தார்கள் என்ற வாதம் ஏற்றுகொள்ளகூடியதல்ல. வெவ்வேறு இனமக்கள், சமுதாயங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு முன்னேற்றங்களுடன் வாழ்ந்து வந்தார்கள். சிலவற்றை கண்டறிந்தார்கள் தங்களால் புரிந்து கொள்ள முடியாத இன்னும் சிலவற்றிற்கு கற்பனையான  ஒருவழியில் விளக்கம் கொடுத்து புரிந்துகொள்ள முயற்சித்தார்கள்.

கிரகணங்கள் நிகழும் போது சூரியனுக்கு முன்னால் நிற்கும் ஒரு கோளின் நிழல் மிக நீண்ட தொலைவில் உள்ள இன்னும் ஒரு கோளை மறைக்கிறது என்பது உண்மை. இந்த நிழலின் நீளம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தொலைவுக்கு சமமானது. இதனால் தானோ என்னவோ திடீர் என்று மறைந்து விடும் கோள்களை பாம்பு விழுங்கிவிட்டதாக நினைத்து அதற்கு இராகு கேது என்ற இரு பாம்புகளாக முன்னோர்கள் பெயரிட்டார்கள். அதிலும் முக்கியமாக இந்த கிரகணங்கள் எப்போது நிகழும் எங்கெங்கு பார்வைக்கு தெரியும் அதன் பலாபலன்கள் என்ன என்பதையும் துல்லியமாக கணித்தறியும் ஆற்றல் கொண்டிருந்தார்கள் என்பது மிகவும் மெச்சகூடியது. நான் வாழும் புலம்பெயர் நாட்டிலும் மூடநம்பிகையுடன் எழுதப்பட்ட பல பழைய கதைகள் உண்டு. இன்றும் அதை நம்புபவர்கள் இருக்கிறார்கள்.

நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அப்போதிருந்த கண்டுபிடிப்புகளை பார்த்து தாங்கள் விஞ்ஞானத்தின் உச்சியையே தொட்டுவிட்டதாக எண்ணியிருப்பார்கள். ஏனெனில் அடுத்து வரும் காலத்தில் மனிதன்  என்ன என்ன புதிய கண்டுபிடிப்புகளை செய்யப்போகிறான் என்பது அந்த காலகட்டத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது நூறு வருடங்கள் கழிந்தபின் பின்னோக்கி பார்த்தால் அன்று வாழ்ந்தவர்கள் எவ்வளவு எழிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை அறிகிறோம். இந்த நூற்றாண்டில் கண்டுபிடித்தவற்றை  கடந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்க தவறியமைக்காக அன்று வாழ்ந்த மக்களை மூடர்கள் அறிவிலிகள் என்று சொல்லமுடியுமா. அதுபோலதான் எமது முன்னோர்களும் இருந்திருப்பார்கள். மூட நம்பிக்கை என்று தெரிந்தால் முதலில் தான் மாறிக்கொண்டு பின்னர் மற்றவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால் அங்கும் சிக்களை சந்திக்கத்தான் வேண்டும். எமது மக்கள் அவ்வளவு இலகுவாக நம்பிக்கைகளை கைவிட்டு தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சாத்தியமானவரைதான் நாங்களும் முயற்சிக்கலாம்.

உதாரணமாக கடந்த தலைமுறையில் பல பெற்றோர்கள் ஜாதகம் பார்த்து திருமணம் முடித்தார்கள். ஜாதகம் பார்ப்பது மூட நம்பிக்கை என்று இந்த தலைமுறையில் பலர் அப்படி மணமுடிப்பதை ஏற்பதில்லை. ஜாதகம் பார்த்து மணம்முடித்த பெற்றோரின் பிள்ளை ஜாதகம் பார்த்து மணம் முடிப்பது மூட நம்பிக்கை என்பதை உணர்ந்து அதை ஏற்காமல் விடலாம் ஆனால் ஏற்கனவே ஜாதகம் பார்த்து மணம் முடித்த பெற்றோரின் திருமணத்தை ஏற்காமல் விடலாமா?

நன்றி வணங்கா முடி நீங்கள் கூறிய விடயங்கள் எல்லாம் அறிவியல். அறிவியல் எப்போதுமே தன்னை ஒரு இடத்தில் நிறுத்தி கொள்வதில்லை. தொடர்ந்து ஆராய்சிகளை மேற்கொண்டு தன்னை மேம்படுத்தியே வந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் பழைய கண்டு பிடிப்புகளை பொய்யாக்கும் போது அதை ஏற்றுக்கொள்வதில் அறிவியல் என்றுமே தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் சோதிடம் மதங்கள் அப்படியல்ல என்றது இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு தெரியாத‍தல்ல. தான் கூறியதை மாற்ற திராணி இல்லாத பழமை வாத சோதிடத்தையும் மத‍த்தையும் கணக்கில் எடுக்காமல் அறிவியல் பால் செல்வதே முறையானது.  இவற்றை வேண்டுமானால் சம்பிரதாய பொழுது போக்கிற்காக வைத்திருக்கலாம். சீரியசாக இவற்றை நம்புவது அறிவீனம். 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites

இங்கு பதியப் படும் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன!

ஒரு காலத்தில் மிகவும் உன்னத நிலையிலிருந்த அறிவியல்...பின்னர் தவறானவர்களின் கைகளுக்குள் போய் விட்டதால்...அவை மூட நம்பிக்கைகளுக்கும்...சமூக உயர்வு தாழ்வுகளுக்கும் உட்பட்டுப் போய் இருக்கக் கூடும்!

வெகு சில தசாப்தங்கள் மட்டுமே வளர்ந்த விஞ்ஞானத்தைக் கொண்டு....பல ஆயிரம் வருடங்களாக இருந்த நம்பிக்களைச் மூடத் தனங்கள் என வர்ணிப்பது உகந்தது போலத் தெரியவில்லை! மரணம் என்பதைப் பற்றியோ...மரணத்தின் பின்னான உயிரின் நிலை என்பது பற்றியோ....உயிர் வாழ்வதின் நோக்கம் பற்றியோ...எந்த விதமான புரிதலுமின்றி... அவை பற்றி...விஞ்ஞானிகள் கருத்துக் கூறுவது...இப்போதைய அறிவியல் இருப்புக்குச் சரியாகத் தோன்றினாலும்....அறிவியல் மேலும் வளரும் போது...அவை சரியானதாக உறுதிப்படுத்தப் படலாம்! உதாரணமாக...நெருப்பில் நடப்பதை..எல்லாராலும் செய்ய முடியும் என்று கோவூர் அவர்கள் நிறுவிய போது...அது முட்டாள் தனமென்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு...அத்துடன் எல்லோரும் அதை விட்டு விட்டார்கள்! எனினும்....நெருப்பில் நடப்பதானது ...அந்தக் காலத்து வாழ்வின் சவால்களை எதிர் கொள்ளக் கூடிய மனவுறுதியை...ஒருவனுக்கு வழங்கியது என்பதை...மறந்து விடுகின்றார்கள்! அநேகமான நம்பிக்கைகள்....மனவியலுடன் தொடர்பு பட்டவை! உயிர்களின் பரிணாம வளர்ச்சி கூட மனவியலுடன் தொடர்பு பட்டதே! நிலத்தில் குந்தியிருக்கும் ஒரு உயிரினமானது...வானத்தை அண்ணார்ந்து பார்த்துப்...பறக்கலாமா என நினைக்கின்றது..! அதனது நினைவின் பரிணாமமே...இறக்கைகளாக வளர்கின்றன! சிலவற்றை முட்டாள் தனங்கள் என விமரிசித்து...எம்மை அறிவாளிகள் என எமது முதுகில் தட்டிக் கொள்வதிலும் பார்க்க...அந்த நம்பிக்கைகளை...எடு கோள்களாக வைத்திருந்து....ஒரு காலத்தில்...எமது அறிவியல் வளர்ச்சி...அவற்றுக்கான விளக்கங்களைக் கண்டு பிடிக்கும் என நம்புவோமே...!

சமுத்திரங்களில்...சகல வசதிகளுடனும் வாழும் சாலமன் மீன்கள்....எதற்காக...கனடாவின் நதிகளில்...வாய்களை அகலத் திறந்திருக்கும்.. கரடிகளுக்கு இரையாகின்றன?

தென்னமரிக்காவின்...வண்ணத்துப் பூச்சிகள்....ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்....ஒன்று கூடுகின்றன?

கிறிஸ்துமஸ் தீவின்...சிவப்பு நண்டுகள்...இவ்வளவு இடர்களுக்கும் மத்தியில்....தீவின் குறுக்கே பயணம் செய்து..ஒரு இடத்தை அடைய எத்தனிக்கின்றன?

ஒரு இடத்தில் பிறந்த ஆமைக் குஞ்சுகள்....அதே இடத்துக்கு...நாற்பது வருடங்களின் பின்னர் எப்படி....மீண்டும் அதே இடத்துக்குத்  வருகின்றன?

மனித அறிவியலால்...இன்னும் விளக்க முடியாத..பல விடயங்கள் இன்னும் உள்ளனவே! வெறும் காந்த மணடலத்தை மட்டும் காரணமாகக் காட்டிவிட்டு....விஞ்ஞானம் விலகி விடுகின்றதே?

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, tulpen said:

இந்த திரியில் இணைக்கபட்ட கட்டுரைக்கு எதிராக எவரும் கருத்து சொல்லவில்லை.  ஜோதிட புரட்டுக்களுக்கு எதிராக கட்டுரையில் வைக்கபட்ட வாதங்களை எதிர் கொண்டு அதற்கு பதில் கூறும் நிலையில் யாரும் இல்லை.  வியாழன் கிரகத்தின் மனைவியை சந்திரன் கற்பழித்தான் அதனால் ஏற்பட்ட சாபத்தினால் தான் வளர்பிறை , தேய்பிறை உருவாகிறது என்ற எள்ளி நகையாடக்கூடிய த‍த்துவங்களை கொண்ட  ஜோதிட புரட்டுக்களுக்கு எவரும் பதிலளிக்க முயற்சிக்க கூட இல்லை. ஏனென்றால் எல்லோருக்கும் மனதளவில் இவை எல்லாம் புரட்டுக்கள் என்று தெளிவாக தெரியும். இருந்தாலும் "மயிர செத்தான் சிங்கன்"  என்பதை போல  வரட்டு பிடிவாத‍த்தால் அதை நியாயபடுத்த ஆதாரங்கள் இல்லாத நிலையில்  தெளிவான கேள்விகளுக்கு சுத்தி வளைத்து பதில் கூற முற்படுகின்றனர் என்பதே எனது வாதம். ஆரிய பிராமணர்களால் எமது மக்கள் மத்தியில் திணிக்கபட்ட  திணிப்புக்களுக்கு அறிவியல்  ஆதாரம் தேடுவது எமது பணி அல்ல. 

இப்படியான புராணக்கதைகள் பெருங் கதைகள் இருந்தும் சிலதை சுட்டிக்காட்டுகின்றேன்

- குருவின் அதாவது வியாழனின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும்  விரும்பி ஏற்பட்ட உறவில் பிறந்த கிரகமே புதன் 

- அதற்கு முற்பட்ட கதையில் குருவின் மனைவி சந்திரன், சந்திரனுக்கும் புதனுக்கும் ஏற்பட்ட கள்ள உறவால் குருவால் புதன் கிரகம் ஆணும் பெண்ணுமற்ற அலியாகக் கடவது என்று சபிக்கப்பட்டது. 

இந்த இரண்டு கதையாலும் ஏற்படும் குழுப்பங்கள் சில

இந்திய சோதிடத்தில் குருவும் சந்திரனும் இணையும் இடங்கள் பார்கும் இடங்களால் யோகம் ஏற்படுகின்றது. அதே போல் சந்திரனின் கடக வீட்டில் குரு  உச்ச பலம் பெறுகின்றார் இதனால் நல்ல பலன்கள் ஏற்படும் என்னும் போது புராண கதைகள் அடிப்படையில் குருவின் மனைவிக்கும் சந்திரனுக்கும் இருந்த கள்ளக் காதலால் குருவும் சந்திரனும் இணையும் இடங்கள் பார்க்கும் இடங்களால் தீமை ஏற்படும். 

புதன் தனித்து நிற்கும் போது சுபக்கிரகமாக நல்லதை செய்வதாகவும் என்னுமொரு கிரகத்துடன் றிக்கும் போது அவை பாவக் கிரகம் என்றால புதனும் பாவக்கிரகம் நல்ல கிரகம் என்றால் புதனும் நல்ல கிரகம் என்ற சோதிடம் சார்ந்த விதி சாபம் வாங்கிய புதனுக்கானது.  புதன் தவறேதும் செய்யாத போது சாபம் சாத்தியமற்றுப் போகின்றது. சோதிடத்தில் அதற்கான தன்மை மாறுபடுகின்றது. 

இவற்றை எல்லாம் கிண்டினால் பல நூறு பக்கங்கள் தாண்டி இக்காலத்துக்கு உதவாமல் சென்றுகொண்டே இருக்கும் . ஆனால் அக்காலத்தில் இந்த புராணக் கதைகள் மிகப்பெரிய ஆயுதம். இன்றய இந்தியாவில் ஆழும் அதிகார வரக்கம் மக்கள் தொகையில் இரண்டு மூன்று வீதமான பிராமணரக்கள் கையில் இருப்பதற்கு வழி வகுத்ததே இந்த புராணங்ள் தான். 

எப்படி கடவுளின் நெற்றியில் இருந்து பிறந்தவன் உயர் சாதி படிப்படியாக தாழ்ந்து பாதத்தில் இருந்து பிறந்தவன் கீழ் சாதி என்று கடவுள் நம்பிக்கையை முதலீடாக்கி தனது ஆதிக்கத்தை உருவாக்கினானோ அதே போல் சோதிடத்தையும் விட்டுவைக்கவில்லை. 

சூரியன் செவ்வாய் – சத்திரிய ஜாதி
குரு சுக்கிரன் – பிரமாண ஜாதி
சந்திரன் புதன் – வைசிய ஜாதி
சனி – சூத்திர ஜாதி
ராகு கேது – சங்கிரம ஜாதி

இப்படியான பல புராணங்கள் கதைகள் எல்லாம் இன்று முட்டாள்தனங்கள் நேற்று மக்களை அடிமைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற பயன்பட்ட உளவியல் ஆயுதங்கள்.  

ஒரு கோயிலை கைப்பற்ற வேண்டுமானால் அதற்கு முதல் முயற்சி  கடவுள்  சம்மந்தப்பட்ட புராணங்கள் தான். கோயிலுக்கான புரணம் உருவாக்கப்பட்ட பிறகு இரண்டு தலமுறை கடந்து அந்த புரணத்துக்கு ஏற்ப கோயில் மாறிவிடும்.  கந்தன் ஸ்கந்தனனது திருக்காளகத்தி  ஶ்ரீ காள கஸ்திரியானது போன்ற ஆயிரமாயிரம் நிகழ்வுகள்.

இந்த புராணங்களுக்கு எதிரான போர் பல நூற்றாண்டுகளாக நடக்கின்றது. திருவண்ணாமலையில் அடிமுடி தேடிய புராணத்துக்கு எதிரான சூளை சோமசுந்தர நாயக்கரின் எதிர்வினை வெள்ளைக் காரன் ஆட்சியில் பெரிய  நீதிமன்ற வழக்கு. நாயக்கரின் சீடரான மறைமலை அடிகள் தனித் தமிழ் இயக்கம் வட மொழி எதிர்பு என அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார் அதே காலத்தில் இராமலிங்க வள்ளலார் சாதி மறுப்பு ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் என கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக என ஒரு தனிப் பாதையை அமைத்தார். இக்காலங்களின் முடிவில் தான் கடவுள் மறுப்பு என பெரியர் உருவாகின்றர். அதன் நீட்சியிலேயே இந்த திரியும் செல்கின்றது. 

எம்மிடம் இருக்கும் மூடப் பழக்கங்கள் நம்பிக்கைகள் அகற்ப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் மூள் மேல் விழுந்த சீலை போல அகற்ப்படவேண்டும் என்பதே நோக்கு தவிர வேறொன்றும் இல்லை

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

12 இல் கேது இருந்தால் மோட்சம் என்று அடித்து சொல்லினம் .. ஆரவது இறந்த பிறவு தான் இந்த நிலையில் இங்குட்டு இருக்கிறன் என்டு ஓரே ஒருக்கால் வந்து சொன்னால் உண்டு . கனவு எண்டது கொமுனிகேசன் மீடியம் என்கிறார்கள் அதிலாவது வரலாம்..

வருவதும் தெரியல.. அடுத்து போக போற இடமும் தெரியல .. 😢

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

12 இல் கேது இருந்தால் மோட்சம் என்று அடித்து சொல்லினம் .. ஆரவது இறந்த பிறவு தான் இந்த நிலையில் இங்குட்டு இருக்கிறன் என்டு ஓரே ஒருக்கால் வந்து சொன்னால் உண்டு . கனவு எண்டது கொமுனிகேசன் மீடியம் என்கிறார்கள் அதிலாவது வரலாம்..

வருவதும் தெரியல.. அடுத்து போக போற இடமும் தெரியல .. 😢

கேது 12 இல் இல்லாவிட்டாலும் இன்னொரு வழி இருக்கு. முஸ்லீமாமாறி ஜிகாத்தில் இறந்தாலும் சொர்க்கம் கரண்டியாம். கொசுறாக 7 கன்னிகள் வேறு - ஸ்பெசல் ஆபர்.

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, goshan_che said:

கேது 12 இல் இல்லாவிட்டாலும் இன்னொரு வழி இருக்கு. முஸ்லீமாமாறி ஜிகாத்தில் இறந்தாலும் சொர்க்கம் கரண்டியாம். கொசுறாக 7 கன்னிகள் வேறு - ஸ்பெசல் ஆபர்.

istock-513298210.jpg

☺️.. தோழர் சொர்க்கம் வேறு.. மோட்சம் வேறு.. புண்ணியம் தீரும் மட்டும் வசிப்பது சொர்க்கம் .. தீர்ந்த பின் மீண்டும் பிறவி எடுக்க வேண்டுமாம் .. உதாரணமாக இத்திரிய ஒட்டி..  குரு திசை இறுதி வருடத்தில்  ஒரு குழந்தை பிறந்தால் குரு திசை இருப்பு 1 வருடம் இத்தனை நாள்  என்டு குறிப்பார்கள். ஆக குரு திசை மொத்தம் 16 வருடம்.. (16 - 1) = 15 ஆக மிகுதி 15 வருடம் அந்த ஆன்மா சொர்க்கமோ அல்லது நரகமோ அல்லது வேறு எங்கோ வாழ்ந்து இந்த பிறவியை எடுத்துள்ளது என்டு பொருள் .. 

மீண்டும் பிறவா நிலையே மோட்சம்.(?). என்கிறார்கள்.!

டிஸ்கி :

இவ்வளவு பெரிய பால் வெளியில் நாம்  இறந்த பிறகு ஏதாவது ஒரு வடிவத்தில் சுயத்தை இழந்து தொடர்ந்து இருப்போம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது..👍

Share this post

Link to post
Share on other sites

சோதிடம்  சார்ந்த  நம்பிக்கை  எனக்குமில்லை

ஆனால் அதை  நம்பபவர்களை  முட்டாள்  என்று  சொல்லும்  அளவுக்கு நான் எல்லாம் தெரிந்தவனில்லை

தமிழர்களிடம்  மட்டுமல்ல ஐரோப்பியர்களிடம் கூட  இந்த  நம்பிக்கை  மிக  மிக  அதிகம்

பிரான்சில் வெளிவரும்  அனைத்து பத்திரிகைகளிலும் இதற்காக  ஒரு  பக்கத்தை  ஒதுக்குகிறார்கள்

இது  பற்றி  படிக்க  நிறைய  இருக்கிறது

படிக்கணும்

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

istock-513298210.jpg

☺️.. தோழர் சொர்க்கம் வேறு.. மோட்சம் வேறு.. புண்ணியம் தீரும் மட்டும் வசிப்பது சொர்க்கம் .. தீர்ந்த பின் மீண்டும் பிறவி எடுக்க வேண்டுமாம் .. உதாரணமாக இத்திரிய ஒட்டி..  குரு திசை இறுதி வருடத்தில்  ஒரு குழந்தை பிறந்தால் குரு திசை இருப்பு 1 வருடம் இத்தனை நாள்  என்டு குறிப்பார்கள். ஆக குரு திசை மொத்தம் 16 வருடம்.. (16 - 1) = 15 ஆக மிகுதி 15 வருடம் அந்த ஆன்மா சொர்க்கமோ அல்லது நரகமோ அல்லது வேறு எங்கோ வாழ்ந்து இந்த பிறவியை எடுத்துள்ளது என்டு பொருள் .. 

மீண்டும் பிறவா நிலையே மோட்சம்.(?). என்கிறார்கள்.!

டிஸ்கி :

இவ்வளவு பெரிய பால் வெளியில் நாம்  இறந்த பிறகு ஏதாவது ஒரு வடிவத்தில் சுயத்தை இழந்து தொடர்ந்து இருப்போம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது..👍

இந்த பால்வெளியில் மட்டுமில்லை, இப்படி இருக்கும் பற்பல பால்வெளிகளையும் சேர்த்து நாம் மட்டுமே இருக்கிறோமா? தெரியவில்லை.

ஆனால் வேறு எங்கேயும் கூட “உயிர்” இருக்ககூடும் என்பதை ஒரு எடுகோளாக கொள்வதில் எனக்கும் உடன்பாடுதான்.

மோட்சமும் சொர்க்கமும் , macro level இல் ஒன்றுதான். அவர்களுக்கு இறுதிதீர்ப்பின் பின் இறையுடன் கலப்பது சொர்க்கம். எமக்கு பிறவிக்கடலை நீந்திக் கடந்து “அதுவாவது” (தத்துவமசி) மோட்சம். 

நாம் எப்படி இங்கே வந்தோம்? இனி எங்கே போவோம்? இவையிரெண்டும் நாம் சிந்திக்க தொடங்கியது முதலே எம்மை துரத்தும் கேள்விகள்.

இதுதான். இப்படித்தான் என யாராலும், விஞ்ஞானத்தாலும் அறுதி கூற முடியாக்கேள்விகள்.

இவற்றுக்கு கொடுக்கப்படும் விளக்கம் எல்லாமே, ஒன்றில்

1. கடவுளே நேரே சொல்லியதாக இருக்க வேண்டும் - இதை நான் நம்பவில்லை

2. யாராவது எழுதிய உய்த்தறிவாக (speculation) இருக்க வேண்டும்.

2வது எனும் போது, அது ஒருவரின் கருத்து, பார்வை என்பதற்கு மேலாக அந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போகிறது.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

மூடநம்பிக்கை—முறியடிக்க முடியாதது ஏன்?

கறுப்பு பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று சொல்கிறவர்களை, சாத்தி வைத்திருக்கும் ஏணிக்கு அடியில் நுழைந்து போக பயப்படுகிறவர்களை இன்றைய நவீன உலகத்திலும் காண்கிறோம். பலர், 13-⁠ம் தேதி, வெள்ளிக்கிழமையை துரதிர்ஷ்ட நாள் என்கிறார்கள். 13-வது மாடியில் குடியிருந்தால் ஆபத்து என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற மூடநம்பிக்கைகள் பகுத்தறிவாளர்களையும் விட்டுவைக்கவில்லை.

இதை கொஞ்சம் யோசித்துபாருங்கள்: எதற்கு கரடி முடியை உள்ளே வைத்து, தாயத்தை கட்டுகிறார்கள்? எதற்கு நரி பல்லை டாலராக கழுத்தில் அணிகிறார்கள்? நினைத்தப்படி ஏதாவது நடக்க வேண்டுமென்றால் ஏதாவது மர சாமானை தொட்டு அல்லது தட்டி சொல்கிறார்களே, ஏன்? (நம்மூரில், நல்ல விஷயம் பேசும் போது, பல்லி சத்தம் போட்டால், சொன்னதெல்லாம் பலிக்கும் என்கிறார்களே ஏன்?) எந்தவித ஆதாரம் இல்லாமலா மக்கள் இப்படி செய்கிறார்கள் அல்லது நம்புகிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். மூடநம்பிக்கையின் அகராதி என்ற ஆங்கில புத்தகம் தரும் விளக்கத்தை கவனியுங்கள்: “குறிப்பிட்ட பொருட்கள், இடங்கள், விலங்குகள், ஒருசில செயல்கள் தனக்கு அதிர்ஷ்டத்தை (நல்ல சகுனத்தை அல்லது செல்வத்தை) கொண்டுவரும் என்றும், மற்றவை தனக்கு துரதிர்ஷ்டத்தை (கெட்ட சகுனத்தை அல்லது தரித்திரத்தை) கொண்டுவரும் என்றும் மூடநம்பிக்கையில் மூழ்கிவிட்ட ஒருவர் நம்புகிறார்.” இந்த விளக்கத்தை பார்க்கும்போது மூடநம்பிக்கைக்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.—⁠கலாத்தியர் 5:19, 20-ஐக் காண்க.

சீனாவில் மூடநம்பிக்கையை முறியடிக்கும் படலம்

மூடநம்பிக்கையை முறியடிக்க என்னதான் நவீன உத்திகளை கையாண்டாலும், அது எப்படியோ நழுவிவிடுகிறது. உதாரணத்திற்கு, ஒருகாலத்தில் ஏதோ தெரியாமல் செய்து வந்த குருட்டு பழக்கத்தை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சீன அரசு முடிவு செய்தது. மூடநம்பிக்கைக்கு தடைவிதித்து, 1995-⁠ல் ஷான்காயில் மக்கள் காங்கிரஸ் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. “இந்தப் பத்தாம்பசலி மூடநம்பிக்கையை ஒழித்து, இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளை மாற்றி, நாகரிகம் மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்பது அந்த அரசு ஆணையின் லட்சியம். ஆனால் அந்த லட்சியம் நிறைவேறியதா?

அதுதான் இல்லை. ஷான்காய் மக்கள் எப்போதும்போல் மூடபழக்க வழக்கங்களை உண்மையுடன் செய்துகொண்டிருந்தார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவித்தது. இறந்துபோன உறவினர்களின் கல்லறைக்கு முன் போலி ரூபாய் நோட்டை கொளுத்தும் மூடபழக்கத்துக்கு அரசு ஆணை தடைவிதித்தது. ஆனால் அதை கொஞ்சமும் சட்டைசெய்யாத ஒருவர் இவ்வாறு கூறினாராம்: “நாங்கள் கல்லறைக்கு முன், 1,900 கோடி யென் பெருமானமுள்ள போலி ரூபாய் நோட்டுகளை கொளுத்தினோம். இப்படி செய்வது எங்களுடைய பாரம்பரியம். அதோடு தெய்வங்களும் சாந்தியடையும்.”

மூடபழக்க வழக்கங்களுக்கு தடைவிதித்த அரசு ஆணையால் எந்தவித பலனும் இல்லை என்று சீனாவின் பிரபல செய்தித்தாள் குவாங்மிங் டெய்லி குறிப்பிடுகிறது. ஏனென்றால் எக்கச்சக்கமாக ஜோதிடர்கள் பெருகியுள்ளார்கள். “சீனாவில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒருகோடி நிபுணர்களே உள்ளனர். ஆனால் தொழில் ஜோதிடர்களோ 50 லட்சம் உள்ளனர். அதோடு ஜோதிடர்கள் எண்ணிக்கை மேலும் பெருக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இவர்கள் பக்கமே சாதக காற்று பலமாக வீசுகிறது.”

மூடநம்பிக்கையை முறியடிப்பதில் தோல்வியே மிஞ்சுகிறது. இதற்கு தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா, சர்வதேச பதிப்பு தரும் விளக்கம்: “எந்தக் கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டாலும், சில பழக்கவழக்கங்கள் காலம் காலமாக வருவதால் மாத்திரம் [மக்கள்] பின்பற்றுவதில்லை. ஆனால் அவற்றிற்கு வெவ்வேறு விளக்கங்கள் தந்து, புது புது அர்த்தங்களையும் கற்பிப்பதால் [மக்கள்] பின்பற்றுகிறார்கள்.” சமீபத்தில் வெளிவந்த த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: “இந்த நவீன காலத்திலும், கண்ணால் காண்பது மட்டும் மெய் என்று வாயார புகழ்ந்துதள்ளும் நாளிலும், கேட்கிற விதத்தில் கேட்டால், பகுத்தறிவுக்கு ஒத்துவராத நம்பிக்கைகள் அல்லது மூடபழக்கங்கள் சிலவற்றையாவது ரகசியமாக பின்பற்றுவதை பலர் ஒத்துக்கொள்வார்கள்.”

இரட்டை வாழ்க்கை

மூடநம்பிக்கையை பொருத்தவரை பலர் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் மறைமுகமாக மூடநம்பிக்கையில் ஊறிக்கிடப்பார்கள். ஆனால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கே மற்றவர்கள் தங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டிவிடுவார்களோ என்று பயந்து இவர்கள் உண்மையை மறைப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறுகிறார். மூடநம்பிக்கை என்று சொன்னால்தானே வெட்கம். இதையே பாரம்பரியம், சம்பிரதாயம், காலங்காலமாக செய்துவரும் பழக்க வழக்கம் என்று சொல்லி தப்பிக்க நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஓட்டப்பந்தைய (தடகள) வீரர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு, (ராசியான சட்டையை துவைக்காமல் அணிவது) விளையாட்டில் எப்போதும் செய்துவரும் பழக்கம் என்று விளக்கம் கொடுப்பார்கள்.

சங்கிலித்தொடர் லெட்டரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஊர் பேர் தெரியாத யாரோ ஒருவரிடமிருந்து கடிதம் வரும். அந்தக் கடிதத்தை நாம் பல காப்பிகள் எடுத்து பலருக்கு அனுப்பும்படி அதில் குறிப்பிட்டிருக்கும். அப்படி அனுப்பினால் அதிர்ஷ்டம் வரும் என்று பிராமிஸ் செய்திருப்பார்கள். ஆனால், யாராவது சங்கிலி தொடரை அறுத்துவிட்டால், அதாவது கடிதத்தை காப்பியெடுத்து மற்றவர்களுக்கு அனுப்பாவிட்டால் விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்று பயமுறுத்துவார்கள். இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகை நிருபர் கேலிசெய்தார். ஆனால் அவருக்கே கடிதம் வந்தபோது, இவ்வாறு கூறினார்: “ஏதோ மூடநம்பிக்கையால் நான் கடிதங்களை காப்பி எடுத்து அனுப்புவதாக நினைத்துவிடாதீர்கள். எந்தவித துரதிர்ஷ்டமும் வந்துவிடக்கூடாது பாருங்க! அதை தவிர்க்கத்தான்.”

மனித வரலாற்றையும், மனித மரபுகளையும் ஆராயும் நிபுணர்கள், “மூடநம்பிக்கை” என்ற வார்த்தை மக்களை புண்படுத்தும் என்று நினைப்பதால் ஒருசில பழக்க வழக்கங்களுக்கு மூடநம்பிக்கைகள் என்று முத்திரை குத்த தயங்குகிறார்கள். ஆகவே பலரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், “மக்களின் கலாச்சாரம், நம்பிக்கை,” “மரபு,” “நம்பிக்கைகளின் தொகுப்பு” போன்ற “விரிவான அர்த்தம் தரும்” தொடர்களை உபயோகிக்கவே நிபுணர்கள் விரும்புகிறார்கள். துரதிர்ஷ்டம் உங்களை அணுகாதிருப்பதாக—⁠அரசன் முதல் ஆண்டிவரை நம்பும் மூடப்பழக்கம் என்ற ஆங்கில புத்தகத்தில் டிக் ஹய்மேன் ஒளிவுமறைவின்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பாவத்தையும் ஜலதோஷத்தையும் யாரும் விரும்புவதில்லை. ஆனாலும் நிறையப்பேர் பாவம் செய்கிறார்கள். அதேபோல் மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். ஆனால் அதில் ஈடுபடுவோர் ஏராளம்.”

என்னதான் பெயரை மாற்றி அழைத்தாலும் மூடநம்பிக்கை இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. தொழில் நுட்பத்திலும், அறிவியலிலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துவிட்ட இந்தக் காலத்திலுமா மூடநம்பிக்கையை ஒழிக்க முடியவில்லை?

ஒழியாதிருக்க காரணம்

மூடநம்பிக்கைகளை நம்புவது மனித இயல்பு என்று சொல்லும் மக்களும் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை ஒருவருடைய இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என்று விவாதம் செய்வோரும் உண்டு. இத்தகைய நம்பிக்கை மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அவனுடைய இரத்தத்தில் ஊறிக்கிடப்பதுமில்லை என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் உண்மையென்னவென்றால், மற்றவர்கள் சொல்லிக்கொடுப்பதால் மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை பிறக்கிறது.

இதற்கு பேராசிரியர் ஸ்ட்ராட் ஏ வைஸ் தரும் விளக்கம்: “எந்த ஒரு பழக்கத்தையும் ஒருவர் காலப்போக்கில் கற்றுக்கொள்கிறார். அதைப்போல்தான் மூடநம்பிக்கையும். மரத்தை தட்டிவிட்டு ஒன்றை சொல்லவேண்டும் என்ற பழக்கத்தோடு [மூடநம்பிக்கையோடு] நாம் பிறக்கவில்லை. ஆனால் இதை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.” சிறுவயதில், மாயாஜால வித்தைகளில் நம்பிக்கை வைக்கும் பிள்ளைகள், வளர்ந்தபிறகு, “பெரியவர்களுக்கு உரிய தன்மைகள் வந்தபோதிலும்” மூடநம்பிக்கைகளில் ஆர்வத்தோடு இருப்பார்களாம். சரி, எங்கிருந்து மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொள்கிறார்கள்?

மூடபழக்கங்கள் பல மனதுக்கு பிடித்தமான மதபழக்கங்களோடு ஒட்டி, உறவாடி வருகின்றன. எடுத்துக்காட்டாக, இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்கு குடிவரும் முன், அங்கிருந்த மக்களின் மதமும் மூடப்பழக்கமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் இருந்தன. குறிகேட்பது, மாயாஜாலம் செய்வது, சகுனம் பார்ப்பது, சூனியம் செய்வது, மற்றவர்களை வசியம் செய்வது, பேய், பிடாசோடு தொடர்பு கொள்வது, ஜோதிடம் சொல்வது, செத்தவர்களிடம் குறிகேட்பது ஆகிய இவை அனைத்தும் கானானியர்களின் வழக்கம் என்று பைபிள் கூறுகிறது.—⁠உபாகமம் 18:9-12.

பண்டைய கிரேக்கர்களும் மூடப்பழக்கங்களில் மூழ்கி திளைத்தவர்களே. அவர்களுடைய மூடப்பழக்கங்களும் மதத்தோடு பின்னிப்பிணைந்திருந்தன. கானானியர்களைப் போலவே கிரேக்கர்களும், அமானுஷ்ய சக்திகளிடம் குறிகேட்பதில், ஜோதிடத்தில், மாயமந்திரத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். பாபிலோனியர்கள், விலங்கின் ஈரலில் குறிபார்ப்பார்களாம். ஒரு செயலில் இறங்கலாமா வேண்டாமா என்பதை ஈரல் காட்டிக்கொடுக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. (எசேக்கியேல் 21:21) பாபிலோனியர்கள் சூதாட்டத்திற்கு பேர்போனவர்கள். சூதாட்டத்தில், ‘காத் [இதற்கு எபிரெய மொழியில் அதிர்ஷ்ட தெய்வம் என்று பொருள்] என்னும் தெய்வம்’ தங்கள் மீது கடைக்கண் பார்வை வீசவேண்டும் என்று ஏங்கி நிற்பார்களாம். (ஏசாயா 65:11) இன்றைக்கும் சூதாடிகள் மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.

சூதாட்டத்திற்கு பல சர்ச்சுகள் ஊக்கம் தருவது உங்களுக்கு தெரியுமா? இதற்கு உதாரணம், கத்தோலிக்க சர்ச், பிங்கோ (bingo) சூதாட்டத்தை ஆதரிக்கிறது. இது உண்மையென்று ஒரு சூதாடி கூறினார்: சூதாடிகள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்பது “கத்தோலிக்க சர்ச்சுக்கு நன்றாக தெரியும். இதை நான் அடித்துக் கூறுவேன். ரேஸ் நடக்கும் இடத்தில் காணிக்கை தட்டுகளுடன் கன்னியாஸ்திரிகள் நிற்பார்கள். கத்தோலிக்கரான நாங்கள் காணிக்கை தட்டோடு நிற்கும் ‘சிஸ்டருக்கு’ எதுவும் போடாமல் போனால், பந்தையத்தில் ஜெயிப்போம் என்று எதிர்பார்க்க முடியுமா? ஆகவே, கண்டிப்பாக காணிக்கை போடுவோம். அன்று மாத்திரம் நாங்கள் ஜெயித்துவிட்டால், நன்கொடையை வாரி வழங்குவோம். வேற ஒண்ணுமில்லை, மறுபடியும் ஜெயிக்கணும் என்ற ஒரு நப்பாசைதான்.”

கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கொண்டாடிவரும் பண்டிகை கிறிஸ்மஸ். இப்பண்டிகையின்போது செய்யப்படும் சில பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கை மதத்தோடு கலந்திருக்கிறது என்பதற்கு சாட்சி. கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி எத்தனையோ மூடநம்பிக்கைகள் உண்டு. இப்பண்டிகையின்போது, மிஸ்லெட்டொ என்ற செடியின் கீழ் முத்தமிட்டால், திருமணத்தில் முடியும் என்ற மூடநம்பிக்கை உண்டு.

“எதிர்காலத்தை அறிந்துகொள்ள” முயற்சி செய்யும்போது இந்த மூடநம்பிக்கையும் படிப்படியாக வளர்ந்திருக்கும் என்கிறது துரதிர்ஷ்டம் உங்களை அணுகாதிருப்பதாக என்ற புத்தகம். எதிர்காலத்தை அறியும் ஆவல், இன்று நேற்று அல்ல, என்றென்றும் உள்ளது என்ற உண்மை வரலாற்றின் ஏடுகளை புரட்டினால் தெரியும். இந்த ஆவல் பாமர மக்களுக்கும் உண்டு. மாபெரும் உலக தலைவர்களுக்கும் உண்டு. இந்த ஆவலே இவர்களை ஜோதிடர்களிடமும் மந்திரவாதிகளிடமும் விரட்டுகிறது. “தெரிந்த, தெரியாத விஷயங்களைப் பற்றி மக்கள் பயப்படும்போது, அதிலிருந்து மீள அவர்களுக்கு வடிகால் தேவை. அதற்காக அவர்கள் சொக்கு பொடியையும் நம்புவார்கள், தாயத்தையும் நம்புவார்கள்” என்று கூறுகிறது காலை உணவுக்கு முன் கானம் பாடாதே, நிலா வெளிச்சத்தில் தூங்காதே என்ற ஆங்கில புத்தகம்.

ஆக, மக்களின் பயத்தை நீக்க மூடநம்பிக்கை முயன்றிருப்பது தெரிகிறது. விரல்களை கிராஸ் செய்யவும், தொப்பியில் துப்பவும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “[மக்கள்] இத்தனை காலம் எந்தக் காரணத்திற்காக மூடபழக்கங்களை நம்பினார்களோ, அதே காரணத்திற்காக இப்போதும் நம்புகிறார்கள். [அவர்களால்] சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் வரும்போது, மூடநம்பிக்கை, அதாவது ‘அதிர்ஷ்டம்’ அல்லது ‘எதிர்பாராத நிகழ்ச்சி’ ஒருவித பாதுகாப்பு உணர்வை [அவர்களுக்கு] வழங்குகிறது.”

கம்ப்யூட்டர் உலகை கைக்குள் வைத்துக்கொண்டு புது புது சாதனைகளை ஒருபுறம் குவிக்கும் மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. மக்களின் இந்தப் பாதுகாப்பற்ற உணர்வு மேலும் அதிகரிக்க அறிவியலின் குளறுபடிகளே காரணம். பேராசிரியர் வைஸ் இவ்வாறு கூறுகிறார்: “எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அநிச்சயம் [பயம்] அதிகரிக்க இன்றைய உலகமே காரணம். . . . அதனால்தான் மூடநம்பிக்கையும், அமானுஷ்ய சக்திகளில் நம்பிக்கையும் நம் பல்வேறு கலாச்சாரங்களோடு கலந்துவிட்டன.” இதைப் பற்றி முடிவாக தி உவர்ல்டு புக் ஆஃப் என்ஸைக்ளோப்பீடியா கூறியதாவது: “எதிர்காலத்தைப் பற்றி அநிச்சியமாக இருக்கும்வரை மூடநம்பிக்கையும் மக்களை விட்டு விலகாது என்றே தெரிகிறது.”

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், மக்களுடைய பொதுவான பயங்களில் மூடநம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன. அதனால்தான் அவற்றை அகற்ற முடியவில்லை. அதோடு மூடநம்பிக்கைகளுக்கு பக்க பலமாய் மதநம்பிக்கைகளும் நிற்கின்றன. அப்படியென்றால், மூடநம்பிக்கைகள் எதிர்காலத்தைப் பற்றிய மக்களுடைய பயத்தை நீக்க உறுதுணையாக உள்ளன, அவற்றால் நன்மையே என்று விட்டுவிடலாமா? அவற்றால் எந்த ஆபத்தும் கிடையாதா? அவற்றில் ஆபத்து இருப்பதால் தவிர்க்க வேண்டுமா?

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101999762

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் எனக்கு தெரிந்தவர்களுக்கும் சாத்திரத்தில் சொன்னதின் படியே நடக்கின்றது. அப்படியென்றால் நான் அதை நம்பித்தானே ஆகவேண்டும்.tw_glasses:
எங்களை விட மேற்கத்தையவர்கள் சாத்திரம் எண்சோதிடம் பார்ப்பது அதிகம்.

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

எனக்கும் எனக்கு தெரிந்தவர்களுக்கும் சாத்திரத்தில் சொன்னதின் படியே நடக்கின்றது. அப்படியென்றால் நான் அதை நம்பித்தானே ஆகவேண்டும்.tw_glasses:
எங்களை விட மேற்கத்தையவர்கள் சாத்திரம் எண்சோதிடம் பார்ப்பது அதிகம்.

யாரண்ணை அந்தச் சாத்திரி? ஹம் கோயில் பக்கமோ? 

பகிடிக்கில்லை உண்மையாகவே கேட்கிறன்.

நான் சாத்திரம் எல்லாம் பாக்கிறனான். காண்டமும் கேட்டனான். 90% பிழை. 

இதை நான் நம்புவதில்லை ஆனால் சாத்திரம் கேட்க பிடிக்கும்.

இவர்களிடம் போய் எதிர்காலத்தை பற்றி கேட்பது எனக்கு கிட்டத்தட்ட படம் பார்ப்பது போலான ஒரு சுகானுபவம்.

சாத்திரிட டீட்டெய்ல, தனிமடலில் அனுபுங்கோ.

பிகு: நீங்கள் சொன்ன சாத்திரி எனக்கும் சரியா சொன்னால்- அண்டைலேந்து நான்தான் உங்கள் போர்வாள்.

இரெண்டுபேரும் சேர்ந்து துல்பென்னை மாறு கை, மாறு கால் வாங்கலாம் 😂.

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, goshan_che said:

யாரண்ணை அந்தச் சாத்திரி? ஹம் கோயில் பக்கமோ? 

பகிடிக்கில்லை உண்மையாகவே கேட்கிறன்.

நான் சாத்திரம் எல்லாம் பாக்கிறனான். காண்டமும் கேட்டனான். 90% பிழை. 

இதை நான் நம்புவதில்லை ஆனால் சாத்திரம் கேட்க பிடிக்கும்.

இவர்களிடம் போய் எதிர்காலத்தை பற்றி கேட்பது எனக்கு கிட்டத்தட்ட படம் பார்ப்பது போலான ஒரு சுகானுபவம்.

சாத்திரிட டீட்டெய்ல, தனிமடலில் அனுபுங்கோ.

அதெல்லாம் ஊரிலை. இப்ப இருக்கிற சாத்திரியளை நான் நம்பிறேல்லை. யாழ்ப்பாணம் நியூமாக்கற்றிலை இருந்த மார்க்கண்டு எண்ட சாத்திரியும் பரவாயில்லை. நானும் ஒருகாலத்திலை சாத்திரத்தை நம்புறேல்லை. எனக்குள் நடந்த ஒரு களவு விடயத்தை மை போட்டு பார்த்தார்கள். அப்படியே ஒரு பிசகு விடாமல் அப்படியே சொன்னார்கள்.

நான் இப்போது யாழ்களத்தில் நாத்தீகவாதியாக மாறிவிட்டேன்.இனி ஆன்மீகம்  மீது நம்பிக்கையில்லை.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für கருப்பு சட்டை

கறுப்பு சட்டை... குரூப்பிலை, சேர்ந்திட்டிங்களா அண்ணை?     😎 :grin:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
On 10/4/2019 at 4:21 PM, vanangaamudi said:

இவற்றை எல்லாம்விட குமட்டிக் கொண்டுவரும் ஒரு சேதி உண்டு. ராகு, கேது என்கிற கிரகங்களே கிடையாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி நவக்கிரகப் பட்டியல் என்னும் பந்தியில் ‘சப்பனம்’ போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளன. என்ற உங்கள் கேள்விக்கு மட்டுமே நான் பதில் தர முயற்சித்தேன்.

எமது முன்னோர்கள் அறிவிலிகள் மூடநம்பிகையில் வாழ்ந்தார்கள் என்றோ அவர்கள் எதையுமே வாழ்வியலில் கண்டுபிடிக்கவில்லை, எதுக்கோ பிறந்தார்கள், எதுக்கோ வாழ்ந்தார்கள் பின் இறந்தார்கள் என்ற வாதம் ஏற்றுகொள்ளகூடியதல்ல. வெவ்வேறு இனமக்கள், சமுதாயங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு முன்னேற்றங்களுடன் வாழ்ந்து வந்தார்கள். சிலவற்றை கண்டறிந்தார்கள் தங்களால் புரிந்து கொள்ள முடியாத இன்னும் சிலவற்றிற்கு கற்பனையான  ஒருவழியில் விளக்கம் கொடுத்து புரிந்துகொள்ள முயற்சித்தார்கள்.

கிரகணங்கள் நிகழும் போது சூரியனுக்கு முன்னால் நிற்கும் ஒரு கோளின் நிழல் மிக நீண்ட தொலைவில் உள்ள இன்னும் ஒரு கோளை மறைக்கிறது என்பது உண்மை. இந்த நிழலின் நீளம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தொலைவுக்கு சமமானது. இதனால் தானோ என்னவோ திடீர் என்று மறைந்து விடும் கோள்களை பாம்பு விழுங்கிவிட்டதாக நினைத்து அதற்கு இராகு கேது என்ற இரு பாம்புகளாக முன்னோர்கள் பெயரிட்டார்கள். அதிலும் முக்கியமாக இந்த கிரகணங்கள் எப்போது நிகழும் எங்கெங்கு பார்வைக்கு தெரியும் அதன் பலாபலன்கள் என்ன என்பதையும் துல்லியமாக கணித்தறியும் ஆற்றல் கொண்டிருந்தார்கள் என்பது மிகவும் மெச்சகூடியது. நான் வாழும் புலம்பெயர் நாட்டிலும் மூடநம்பிகையுடன் எழுதப்பட்ட பல பழைய கதைகள் உண்டு. இன்றும் அதை நம்புபவர்கள் இருக்கிறார்கள்.

நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அப்போதிருந்த கண்டுபிடிப்புகளை பார்த்து தாங்கள் விஞ்ஞானத்தின் உச்சியையே தொட்டுவிட்டதாக எண்ணியிருப்பார்கள். ஏனெனில் அடுத்து வரும் காலத்தில் மனிதன்  என்ன என்ன புதிய கண்டுபிடிப்புகளை செய்யப்போகிறான் என்பது அந்த காலகட்டத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது நூறு வருடங்கள் கழிந்தபின் பின்னோக்கி பார்த்தால் அன்று வாழ்ந்தவர்கள் எவ்வளவு எழிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை அறிகிறோம். இந்த நூற்றாண்டில் கண்டுபிடித்தவற்றை  கடந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்க தவறியமைக்காக அன்று வாழ்ந்த மக்களை மூடர்கள் அறிவிலிகள் என்று சொல்லமுடியுமா. அதுபோலதான் எமது முன்னோர்களும் இருந்திருப்பார்கள். மூட நம்பிக்கை என்று தெரிந்தால் முதலில் தான் மாறிக்கொண்டு பின்னர் மற்றவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால் அங்கும் சிக்களை சந்திக்கத்தான் வேண்டும். எமது மக்கள் அவ்வளவு இலகுவாக நம்பிக்கைகளை கைவிட்டு தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சாத்தியமானவரைதான் நாங்களும் முயற்சிக்கலாம்.

உதாரணமாக கடந்த தலைமுறையில் பல பெற்றோர்கள் ஜாதகம் பார்த்து திருமணம் முடித்தார்கள். ஜாதகம் பார்ப்பது மூட நம்பிக்கை என்று இந்த தலைமுறையில் பலர் அப்படி மணமுடிப்பதை ஏற்பதில்லை. ஜாதகம் பார்த்து மணம்முடித்த பெற்றோரின் பிள்ளை ஜாதகம் பார்த்து மணம் முடிப்பது மூட நம்பிக்கை என்பதை உணர்ந்து அதை ஏற்காமல் விடலாம் ஆனால் ஏற்கனவே ஜாதகம் பார்த்து மணம் முடித்த பெற்றோரின் திருமணத்தை ஏற்காமல் விடலாமா?

அவர்கள் கண்டு பிடிக்கவில்லை என்று யார் சொன்னார்கள்?
ஜோதிடம் என்பதே  ஜோதி பற்றிய அறிவை திருடி வந்ததுதான் 
முன்னோர்கள் இரவு பகலாக பார்த்து ஒவொரு வெள்ளியின் நகர்வையும் வைத்து 
இன்னது இன்னது என்று கணித்தார்கள் ..
அதை திருடி மக்களை ஏய்த்து பணம் பார்க்க தாம் உயந்தவர்கள் 
என்ற கட்டு கதையை பரப்பி பிராமணர்கள் வந்ததுபோல்  ... ஜோதிடர் எனும் ஒரு 
ஏமாற்று பேர்வழியும் வந்தது என்பதுதான் உண்மை.

இப்போதும் சாயிபாபா நித்தியானந்தா என்று பல ஏமாற்று சாமிகள் வருகிறார்கள் 
இவர்கள் ஆண்மீக சிந்தனைகளை திருடி தமது திருட்டு வேலைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் 
ஆண்மிக சிந்தனை என்பது வேறு 
இங்கிருக்கும் விவாதம் சாயிபாபா ... நிதித்யானந்தா போன்ற திருடர்களாலும் அவர்களை பின் தொடரும் 
அவலங்களாலும் வரும் சமூக சீரழிவும்   பின்தங்கிய நிலையும் ஆகும்.  

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this