நிழலி

உப்பு நாய்கள்: என் பார்வை- நிழலி

Recommended Posts

முக்கிய குறிப்பு: நான் நூல் விமர்சகனோ அல்லது திறனாய்வாளனோ அல்ல. உப்பு நாய்கள் மீதான என் பார்வையை மட்டும் கீழே தருகின்றேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அண்மைக் காலங்களில் ஒரு நாவலை இந்தளவுக்கு மனம் அதிரவும், சற்று அருவருப்பு உணர்வு மேலிடவும், ஆத்திரம், இரக்கம், கோபம், அதிர்ச்சி போன்ற கலவையான உணர்வு பெருக்கு எழவும்  வாசித்திருக்கவில்லை. வாசிக்க கூடாத நாவலாகவும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவலாகவும் இருக்க கூடிய நாவல்களில் ஒன்றாக உப்பு நாய்கள் அமைந்திருக்கின்றது எனக்கு.

சென்னையின் பணச் செழிப்பு மிக்க பகுதிகளிலும், செழிப்பும் வறுமையும் பக்கம் பக்கமாக இருக்கும்  சிந்தாரிப்பேட்டை, பல்லாவாரம்,கிண்டி போன்ற இடங்களையும் அண்மையில் தான் சென்று பார்து விட்டு வந்திருக்கின்றேன். நான் பார்த்த சென்னையில் என்னால் எக்காலத்திலும் நெருங்க முடியாத ஒரு வாழ்க்கை சூழலுக்குள் அள்ளுப்பட்டு தவிக்கும் விளிம்பு மக்களை நான் அணுக கூடிய ஒரு சந்தர்ப்பம் அனேகமாக எனக்கு எழாமலே போய்விடும்.
இவ்வாறு வாழ்வாதாரத்துக்கான வழிகள் அனேகமானவை அடைக்கப்பட்டு தெரிவுகள் அதிகம் இல்லாத விளிம்பு நிலை மக்களை அணுக வாய்ப்பில்லாத என்னைப் போன்ற பல இலட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு லக்ஷ்மி சரவணகுமார் தன் உப்பு நாய்கள் மூலம் அறிமுகப்படுத்துகின்றார்.

ஆனால் அவர் அறிமுகப்படுத்தும் விதம் தான் கேள்விக்குரியதாக, ஏற்றுக்கொள்ள முடியாததாக தெரிகின்றது.

பொட்டலம் (போதைப் பொருள்) விற்க தொடங்கி சிறுமிகளை கடத்தி விற்பனை செய்ய கொடுத்து சம்பாதிக்கும் சம்பத், பிக்பாக்கெட் அடிப்பதில் தொடங்கி பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் பெண்ணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் செல்வி, தாயுடன் உடலுறவு கொள்ளும் நண்பன்,  நாய் இறைச்சியை விற்கும் கோபால், மகள் முன்னே ஆண் குறியை கடித்து துப்பும் ஆதம்மாவின் அம்மா, அருட் சகோதரிகளை கர்ப்பமாக்கும் பாதிரி, பொட்டலம் விற்பவனுடனும் திருடர்களுடனும் சல்லாபிக்கும் கன்னியாஸ்திரிகள், மனைவியை மகள் அருகில் இருக்கும் போது பாலியல் வல்லுறவு செய்ய நண்பனை அனுப்பும் ராஜி, பிச்சைக்காரிகளுடன் மட்டுமே உடலுறவு கொள்ளும் பாஸ்கர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் தன் பிட்டத்தை புணரக் கொடுக்கும் மூர்த்தி,  கணவனின் சுகம் கிடைக்காமையால் தியேட்டர் ஒன்றில் அறிமுகமான மகேஷ் உடன் கடற்கரையில் பொது இடத்தில் நிர்வாணமாக இருக்க சம்மதிக்கும் ஷிவானி, பெண்களுடன் உடலுறவு கொண்டு அதை வீடியோவாக விற்கும் மகேஷ், தாயை தெருவில் அம்மணமாக்கி விட்டு தாயை புணர்ந்தவனின் ஆண் குறையை வெட்டி எறியும் மகன்..... என தொடர்ச்சியாக விளிம்பு நிலை மக்கள் அனைவரும் குற்றங்களையும் முறையற்ற பாலியல் உறவுகளையும் கொண்டவர்களாகவே காட்டுகின்றார் லக்ஷ்மி சரவணகுமார்

ஒவ்வொரு மூன்று பக்கங்களுக்கும் ஒரு முறையற்ற பாலியல் சேர்க்கை, ஒரு குற்றம், ஒரு தவறு என அந்த மக்களின் முழு வாழ்க்கையுமே முறையற்ற போக்கில் கட்டமைத்து செல்கின்றது நாவல்.இவற்றுக்கும் அப்பால் சேட்டு என்று அழைக்கப்படும் மார்வாடி இனத்தை சேர்ந்த அனைவரையும் கூட குற்றவாளிகளாக சித்திகரிக்கின்றது நாவல்.

சட்டத்துக்கு புறம்பான தொழில்களை செய்கின்றவர்களின் வாழ்க்கையை நாவலாக எழுதுவது தவறு அல்ல. அது தேவையும் கூட. ஆனால் அப்படி செய்கின்றவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு புறம்பானவை என்று காட்டுவதும், அவர்களின் பாலியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் முறையற்ற பாலியல் முறைகள் என்று காட்டுவதும் வேண்டும் என்றே விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மீது சேறு பூசுவதற்காக எழுதப்பட்டவையாகவே தோன்றுகின்றது. இம் மக்களை இவ்வாறு முறையற்ற சட்டத்துக்கு புறம்பான தொழில்களை செய்ய தூண்டிய வர்க்க அரசியலை பற்றியோ அல்லது அதன் சூழலை பற்றியோ எந்த ஒரு சிறு குறிப்பு கூட இல்லை.

இவ் நாவலில் வரும் ஆதம்மா எனும் கட்டிடத் தொழிலாளியின் மகளுக்கும் செல்வ செழிப்பு மிக்க சூழலில் வாழ்ந்து வரும் ஆர்த்திக்குமான பாசமிக்க உறவு கூட செயற்கையானதாகவே இருக்கின்றது. விளிம்பு நிலை மக்களை குற்றவாளிகளாகவும் செல்வ செழிப்பில் வளர்கின்ற வர்க்கத்தை அன்பும் பாசமும் கொண்டவர்களாகவும் இதன் மூலம் லக்ஷ்மி சரவணன் காட்டுகின்றார்.

அண்மைக் காலங்களில் தமிழ் சினிமாவில் வட சென்னையை ஒரளவுக்கேனும் நல்லவிதமாக காட்ட முற்படும் வேளையில் அதை மறுத்து அவர்கள அனைவரையும் குற்றாவாளிகளாகவும் முறையற்ற அருவருப்பான பாலியல் உறவில் ஈடுபடுகின்றவர்களாகவும் காட்டும் இவ் நாவலை 'இருண்ட மக்களின் வாழ்வின் மீது வெளிச்சத்தை பாச்சும் காவியம்' என்ற ரீதியில் தலையில் வைச்சு போற்றவும் ஒரு குறூப் தமிழ் சூழலுக்குள் இருக்கு என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மும்பாயில் இருந்து டொரன்டோ வரும் 16 மணித்தியால விமானப் பயணத்தில் உப்பு நாய்களை வாசிக்க தொடங்கினேன். இடையிடை நித்திரை கொண்டு வாசித்து முக்கால்வாசி முடித்த பின் ரொரன்டோ வந்து இறுதி 10 பக்கங்களையும் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்த பின் ஒரு நல்ல நாவலை வாசித்த திருப்தி வரவில்லை, மாறாக உப்பு நாய்கள் மீது வெறுப்பும் அருவருப்புமே மேலிட்டது.

உப்பு நாய்களை எவருக்கும் பரிந்துரைக்கவும் மாட்டேன், வாசிக்க வேண்டாம் என்று சொல்லவும் மாட்டேன்.

20181005_103520.jpg

 • Thanks 3

Share this post


Link to post
Share on other sites

ஏற்கனவே கிண்டிலில் தரவிறக்கியுள்ளேன். ஆனால் வாசிக்கவேண்டுமா என்று யோசிக்கின்றேன். வெறும் விகாரமான எழுத்தாகத் தெரிகின்றதே!

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

ஏற்கனவே கிண்டிலில் தரவிறக்கியுள்ளேன். ஆனால் வாசிக்கவேண்டுமா என்று யோசிக்கின்றேன். வெறும் விகாரமான எழுத்தாகத் தெரிகின்றதே!

அது அவர் தனது பார்வையில் இருந்து விமர்சித்து இருக்கின்றார். அதுக்காக நீங்கள் தரவிறக்கியதை வாசிக்காமல் விட வேண்டும் என்ற கட்டாயமில்லை.அந்தப் புத்தகம் எனக்கு கிடைத்தால் நானும் வாசித்து விட்டுத்தான் அருவருப்பு அடைவேன். காரணம் டிஸ்கவரி பேலஸ்சும், லஷ்மி சரவணகுமாரும் தரம்தாழ்ந்தவர்கள் அல்ல. புத்தக விமர்சனத்துக்கு நன்றி நிழலி ....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, suvy said:

அந்தப் புத்தகம் எனக்கு கிடைத்தால் நானும் வாசித்து விட்டுத்தான் அருவருப்பு அடைவேன்.

 வாசிக்க முதலே அருவருப்பு அடையவேண்டாம் என்கின்றீர்கள் சுவி அண்ணா!  வாசித்தால் போச்சு!

இப்ப படிக்கின்ற (கிண்டிலில்தான்) தஞ்சை பிரகாஷின் கள்ளம் அலுப்பைத் தருகின்றது. கொடுத்த காசுக்கு ஊசிப்போன பலகாரம் என்றாலும் உள்ளே தள்ளுவது மாதிரி படிக்கின்றேன். நேரம் கிடைக்கும்போது படிப்போம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு சில சமூக/குடும்ப வாழ்க்கைகளை படம் பிடித்து புத்தகமாக தந்துள்ளார்கள். 
இதில் என்ன அருவருப்பும் ஓங்காளமும்?
கதை காவியங்கள் படிப்பவர்களுக்கு வேட்டை நாயும், உப்பு நாயும், தாடகை தாரிணியும் கதைகள் தானே! :cool:

Share this post


Link to post
Share on other sites

அமைதி அமைதி கு.சா.....!  நிழலி ஞானமார்க்கத்தில் இன்னும் முன்னேற வேண்டிக் கிடக்கு......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இறக்குவமோ என நினைத்து பின் விட்டு விட்டேன்.. ஜெயமோகனின் ஏழாம் உலகமும் இன்னொருபக்க விளிம்பு நிலை மக்களின் கதையே..

Share this post


Link to post
Share on other sites

உப்பு நாய்கள், கெட்ட நாய்கள் போல தெரியுதே? 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Nathamuni said:

உப்பு நாய்கள், கெட்ட நாய்கள் போல தெரியுதே? 

உப்பு நாய்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? 

Share this post


Link to post
Share on other sites

உப்பு நாய்கள் பெருநகரத்தின் ரகசியங்களை பேசுகின்றது. பெருநகரங்களில் வாழ்கின்ற மனிதர்களின் ரகசியங்களை பேசுகின்றது. கஞ்சா, திருட்டு, விபச்சாரம், தகாத உறவுகள் என்று பெருநகரங்களில் புதைந்துகிடக்கின்ற அனைத்தும் இந்த புத்தகத்தில் கதைப்பொருளாக.வருகின்றது  

இந்த புத்தகத்தினை வெறுக்க வேண்டும், இல்லாவிடின் ரசிக்க வேண்டும். முன்னுரையிலேயே எவ்வளவிற்கு எவ்வளவு பாராட்டுகள் வந்தனவோ, அதே அளவிற்கு மிரட்டல்களும் வந்தன என்று எழுதப்பட்டிருக்கின்றது. 

எழுத்தும், கதைப்பொருளும் நான் மிகவும் ரசித்தவைகளில் ஒன்று. 

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்போருக்கான புத்தகமல்ல இது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இரண்டு கொடிய வைரஸ்கள்   உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள்  இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம்.   இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும்  சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்...  இங்கே, சட்ட உலகம்  இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர  “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை.   மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இறுக்கப்பட்ட எங்கள் முகத்துக்கு எதிராக அவர்கள் கதவுகள் என்றும் மூடப்பட்டே இருக்கிறது. அவர்கள் சட்டத்தின் வரிகளில்  எங்களுக்காகவே வரையப்பட்ட வெறுப்பின் வரிகள் எங்களைப் பிடிக்கவென்றே வரையப்பட்ட வெள்ளை மேலாதிக்க விஷ வன்மங்கள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன.   நண்பர்களே மூச்சை அடக்க பயிற்சி செய்யுங்கள் எந்தவேளையிலும் உங்கள் குரல்வளைகள் நசுக்கப்படலாம். எங்கள் நேசிப்புக்குரிய நகரம் சிவப்பு பிழம்பாகத் தீப்பிடித்து எரிகிறது. வானத்தை நோக்கி கரும்புகை திரண்டு உரக்கச் சொல்கிறது எங்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று.   என்னைச் சுற்றி எல்லா இடங்களிலும் இனவெறி நிரம்பிப்போயுள்ளது. சருமத்தின் நிறம் கொண்டு முகஸ்துதி செய்யும் கருப்பு, வெள்ளை, பழுப்பு, மஞ்சள் பிரிப்புவாதம் வேண்டாம்.   சொற்கள் கத்திகள் போல் கூர்மையாய் - இன்னும் முட்கள் நிறைந்த ஊசிகளாய் வலியுடன் குத்தும். வெறுப்பை மட்டும் விதைக்கும் சொற்கள் இனவெறியின் இன்னொரு முகம்.   அமெரிக்காவின் காயங்கள் புதியவை அல்லவே ஆதிக்கம், இடைவெளி, இரத்தக்களரி அது போகாது. ஒரு மரணத்தால் சொர்க்கத்தை சம்பாதித்துக் கொண்டவர்களே! காயங்களைப் பற்றி எனக்குத் தெரியும்: அவை நீங்காது. இங்கு நியாயமான பயணம் என்பது  பொய்யான வார்த்தைகளால் நிரம்பிப் போயுள்ளது.   இன்னும் நம்புங்கள் உறவுகளே... மக்களை, மக்களால், மக்களுக்காக ஆளும் சமத்துவமும் மரியாதையும் வெல்ல இயலாத ஒரு போலி ஜனநாயக நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று.   -தியா-
  • ஐ.நா.சபையின்  பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்குமா?
  • We say aloud, “we are Americans” Two deadly viruses Killing Americans now! One is COVID 19, the other is RACISM.   All the guns are here, only to shot towards heaven. Wings cut off the blackbirds Crushing the human heads... Here, in the legal world!   There is nothing to speak in the depths of darkness Here - no one says "welcome" They only say "Go home" Never pronounced the word "justice"   Many without guilt They are filling heaven! Against our tightened face Their doors are closed forever.   They are on the lines of law The lines of hatred drawn for us White supremacist poisons Dumped everywhere Dear friends! Practice holding your breathing Because... Your voice can be crushed at any time.   Our beloved city The red fire burns in flames. The black clouds are covering the sky That our breath is strangled. Everywhere around me Racism... Racism... Racism... Flatter with the color of the skin Black, white, brown... Do not be sectarian.   Words are as sharp as blades - yet Thorns pierced with pain. Words that just sow hatred Another face of racism. Injuries in America are not new Dominance, space, and bloody it won't go away. Those who have earned heaven by death! We know about wounds: they don’t go away.   It is a fair journey here Overflowing with false words. Believe that relationships are ... Government... Of the people... By the people... For the people... Equality and respect cannot be won That we live in a pseudo-democratic country.   -Thiya-       2
  • நல்ல கவிதை, நல்ல வரிகள், அழகான காட்சிகள், சுகமான இசை ....பாராட்டுக்கள் உதயன்.....!  💐
  • வென்டிலேட்டர் அவ்வளவு மோசமா? ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார்.  அவருக்கு guillain-barré syndrome ஏற்பட்டிருந்தது. மருந்தாக immunoglobulin iv ஒரு நாளைக்கு 36g (எடை கூட) படி 5 நாட்கள் செலுத்தப்பட்டது. 3 நாட்களுக்கான மருந்திற்காக அண்ணளவாக 9 லட்சம் செலவாகியது. 2 நாட்களுக்கான மருந்தை யாழ் போதனா வைத்தியசாலை வழங்கியது. மிக ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர். தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.