Jump to content

’என் உடலின் விருப்பமும், உணர்வும் நீங்கள் விரும்புகிற மாதிரி ஏன் இருக்க வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.

உங்கள் கைகளில் ரத்தம் படிந்த கத்தியும், அரிவாளும் இருப்பதை அறிந்துகொண்டே, இந்த நொடி நான் உங்கள் முன் நிற்கிறேன். எந்தவித சலனமும் இல்லாமல் உங்களை உற்றுப் பார்க்கிறேன். சில கேள்விகளை முன்வைக்கிறேன். 'நான்' மாலினி ஜீவரத்தினம். இயக்குநர், மனித உரிமை செயற்பாட்டாளர்.

ஒரு ஆண் பெண்ணை நேசிப்பதைப்போல், ஒரு பெண்ணாய் சக பெண்ணை காதலிக்கும் ஒரு பாலின ஈர்ப்பாளர்.

நானும், நாமும்

நான் என்பது சுயநலமான சொல் என்றே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'நான்' என்பது சுயநலமான சொல் அல்ல. மிகவும் சுய மரியாதையான சொல்.

பிறரை ஒருபோதும் ஒடுக்காத 'நான்' எனும் சொல், கர்வமானதல்ல, அது கம்பீரமானது. பிறரை எல்லாச் சூழலிலும் ஒடுக்கும் குறிப்பிட்ட சமூகத்தின் "நாம்" என்ற சொல் பொதுநலமல்ல. ஒடுக்குமுறைக்கு அணிதிரட்டும் சொல்.

உங்கள் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் நான் அமர நீங்கள் முகம் சுளிக்கலாம். நான் உணவருந்தும் மேசையில் உங்கள் நண்பன் அமர்ந்தால் அவனின் நட்பை அன்றோடு நீங்கள் துண்டிக்கலாம். உங்கள் வாடகை வீட்டில் எனக்கு மட்டும் இடம் மறுக்கப்படலாம். என் அடையாளம் தெரிந்தபின் ஒரே அறையில் என்னுடன் விளையாடும் என் தங்கையை நீங்கள் எச்சரிக்கலாம். எப்பவும்போல் அதே அன்புடன் நான் உறங்கும் என் அம்மாவுடனான இரவை நீங்கள் சந்தேகிக்கலாம். என் சக தோழியுடன் தெருவில் நடக்கும் போது என் மீது நீங்கள் கல்லெறிந்து வசை மொழி பாடலாம். பொது சபையில் நான் நேசிக்கும் பெண்ணின் காதலை இன்னும் சத்தமாக சொன்னால் நீங்கள் என்னை கொடூரமாக வெட்டி கொல்லவும் செய்யலாம்.

விடுதலைக் காற்று

157 வருடங்களாக மறைக்கப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகி இறந்த அத்தனை பேரின் விடுதலைக் குரல்களின் மிச்சமாய் எம் சமூகம் இன்று விடுதலையை சுவாசிக்க தொடங்கி இருக்கிறது.

புறக்கணிப்பு, நிராகரிப்பு, வெறுப்பு இது அத்தனையும் கடந்துகொண்டே மெல்லச் சிரிக்கிறேன் நான்.

என் சிரிப்பு உங்களுக்கு கோபத்தை உண்டாக்கலாம் எதிர்மறையாக உங்கள் கோபம் எனக்கு வாழ்க்கையை நேசிக்கவே கற்றுக் கொடுக்கிறது.

நீங்கள் என்னை ஒவ்வொருமுறை நிராகரிக்கும்போதும் நான் இரட்டிப்பாய் உயிர்பெறுகிறேன்.

சிரி... இப்போது சிரி

எனக்கு 8 வயது இருக்கும். உடல் ரீதியான மோசமான தாக்குதல் எனக்கு தொடுக்கப்பட்டது. கரண்டி கருப்பாகும் மட்டும் இறுக சூடு வச்சு என் தொடையில் அழுத்தின அந்த நொடி. "சிரி...இப்போ சிரி... இப்போ நீ மட்டும் சிரிக்கலேனா இந்த சூட்டை எடுக்க மாட்டேன். இன்னம் 2 மடங்கு அது உன் தொடையை பொசுக்கும். இப்போ சிரிக்கிறியா இல்ல சூடு வைக்கவானு என் சிறு உடல் வலியோடு சிரிக்க நிர்பந்திக்கப்பட்ட அந்த நொடி, வெடித்து அழ ஆசைப்பட்ட அந்த நிமிடம், திணறி திணறி தடுமாறி வலியோடு சிரிக்க பழகிய அந்த பொழுது, கண்களில் கண்ணீரும் கோபமும் மட்டுமல்ல, குடும்ப வன்முறைக்கு எதிரான அடக்குமுறைக்கெதிரான உரிமைச் சிரிப்பும் எனக்குள் பிறந்தது.

பதினைந்து வயதாகியும் வயதுக்கு வராத ஒரே காரணத்தால் கூட பிறந்தவங்களே இவ `9 டி`... இன்னும் வயசுக்கு வரல பாத்தியானு கிண்டல் செய்த தருணத்தில்தான் ’9’ என்கிற சொல்லின் அரசியல் அர்த்தம் தேட ஆரம்பித்தேன். இன்னைக்கு என்னை நீங்க ’9’ னு சொன்னா பெருமை தான் படுவேன், கோபப்படமாட்டேன்.

பெற்ற மகளை ஆணவக் கொலை செய்து சிரிக்கிற, குழந்தைகளை எந்த தயக்கமும் இல்லாமல் வன்புணர்வு செய்கிற, "ஆமாம் பொண்ணுன்னா வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்கணும். இரவுல ஆண் நண்பரோட வந்தா அப்படிதான் பாலியல் வல்லுறவு செய்வோம்" என்கிற எண்ணற்ற மனிதர்கள் இருக்கும் இந்நாட்டில் '9' என்ற எண்ணாக அடையாளப்படுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இன்னும் சில வலிகளை உண்மைகளை எழுத 'மரத்து' 'மறுத்து' போனாலும் DOMESTIC VIOLENCE, ABUSE, UNTOUCHABILITY என என் வாழ்வில் எத்தனை துயர்களை நான் கடப்பினும், தனிமையில் தவிப்பினும், உணர்வற்று இருப்பினும், உயிரற்று வாழ்வினும், உரிமையற்று இறக்க மறுப்பேன்.

பெண் என் நேசத்திற்குரியவள். அவளை காதலிப்பதும் அந்த காதலை வழிபடுவதும் என் விருப்பம் சார்ந்தது என் உணர்வு சார்ந்தது அதுவே இயற்கை சார்ந்தது என்றே நான் கருதுகிறேன்.

என் உடலை அழிக்கலாம்...உரிமையை அழிக்க முடியாது

இயற்கையிலேயே மனித உடலோட விருப்பத்தேர்வு ஒருவருக்கு இருப்பது போல இன்னொருத்தருக்கு இருப்பது இல்லை. இது அறிவியல் சான்று. என் உடலின் விருப்பம், என் உணர்வின் விருப்பம், உங்களை போல இல்லை என்பதற்காக என்ன அடிச்சு கொல்வீர்களா இல்லை அன்போட புரிந்து கொள்வீர்களா. என்னை போல் ஒரு பிள்ளை உங்கள் வீட்டில் இருந்தால் அந்தப் பிள்ளையை உயிரோட எரித்து விடுவீர்களா? மழுப்பல் பதில் எதுவும் வேண்டாம்.

வரலாறு நெடுகிலும் தன்பால் ஈர்ப்பாளர்கள் மீது வன்முறையைத்தான் ஏவி இருக்கிறீர்கள்.

எரித்து இருக்கிறீர்கள். மண்ணோட மண்ணாக பொதைத்து இருக்கிறீர்கள். ஆவணமே இல்லாமல் அழித்து இருக்கிறீர்கள். இதை கேள்வி கேட்கும் நான் இந்த சமூகத்தில் மனநோயாளியாக அறிமுகப்படுத்தப்படுகிறேன்.

   

நான் நானாக இருப்பதால் இந்த சமூகம் என்னை மனநோயாளி என்கிறது. நான் நானாக இருப்பதால் இந்த சமூகம் என்னை எய்ட்ஸ் வந்தவர் என்கிறது. நான் நானாக இருப்பதால் இந்த சமூகம் உன் தாயுடனும் உறவு வைத்துக்கொள் அது மட்டுமே நீ என்கிறது. நான் நானாக இருப்பதால் நான் ஆணா? பெண்ணா? என கேள்வி கேட்கிறது. அப்பேற்பட்ட நான் யார்? இந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பாலீர்ப்பை சேர்ந்த ஒடுக்க முடியாத ஒரு குரல்.

எனக்கெதிராக வசை பாடுபவர்கள், ஆசிட் அடிப்பதாக மிரட்டுபவர்கள், வன்புணர்வு செய்ய காத்திருப்பவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே பதில், "என் உடலை அழிக்கலாம்! என் உரிமைக்கான உணர்வை ஒடுக்குமுறைக்கெதிரான குரலை ஒடுக்க முடியாது".

உடல். அதன் அடிப்படை அறிவியல். அது பேசும் அரசியல். உங்கள் மதத்தை கேள்விக்குள்ளாக்குகிறதா? உங்கள் ஜாதியை உடைத்தெறிகிறதா? உங்கள் நிற பேதத்தை நிர்வாணமாக்குகிறதா? உங்கள் வர்க்கத்தை வதம் செய்கிறதா அப்படியென்றால் உங்கள் அத்தனை கொள்கைப்பிடிப்பினையும், ஆண்ட அதிகாரத்தையும் சந்தேகப்படுங்கள். மாறாக எது இயற்கையென, இயற்கையைச் சந்தேகிப்பது உங்கள் அறிவை நீங்களே கேள்விக்குட்படுத்துவதற்குச் சமம்.

பொது புத்தியின் படி உங்கள் கடவுளையோ உங்கள் மதத்தையோ நீங்கள் கேள்விகேட்காமல் இருப்பது தான் சரி என்று உங்கள் மதமும் கடவுளும் கலாசாரமும் சொல்கிறதென்றால் நீங்கள் உங்கள் கடவுளை நிராகரிப்பதில் தவறில்லை என்றே நான் கூறுவேன்.

https://www.bbc.com/tamil/india-45698108

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.