• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Snegethy

எனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II

Recommended Posts

போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன். சுமதிரூபனின் இயக்கத்தில் மேடையேறப் போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன். வழமையான தமிழ் நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ). அணங்கு அடையாளம் 1 தோற்ற மயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார். ஒளி சத்தியசீலன். ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி. மேடை உதவி ஈஸ்வரி.

நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அறிவிப்பாளர் ராதிகா சுதாகர் வாசித்தாரர். பக்கத்திலிருந்த சில இளையவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் முன்னாலிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி சத்தம் போடாமல் இருக்கச் சொல்ல இளையவர்களும் பேப்பரில இருக்கிறதைத் தானே அவா வாசிக்கிறா என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து கதைத்து முடித்தார்கள்.

முதலாவது நாடகமான அணங்கு ஆரம்பமானது. பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து குழந்தைகள் ஆரவாரப்படும் சத்தம். உடனே சிலர் அமைதியாகவிருங்கள் நாங்கள் மியுசியத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்... சத்தம் போட்டுக் கதைக்கக்கூடாதென்றார்கள். மியுசியத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ணகி சிலை சீதையின் சிலை மணிமேகலையின் சிலை போன்றன இருந்தன. அந்தச் சிலைகளைப் பற்றிக் கேட்ட குழந்தைகளுக்கு அழகாக ஆங்கிலத்தில் அவர்கள் மூவரைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது. கண்ணகியை அறிமுகப்படுத்தும் போது சிறீலங்காவில் சிங்களவர்கள் "பத்தினித்தெய்வ" என்று வழிபடுவார்கள் என்று தான் சொல்லப்பட்டது.

அடுத்த காட்சியில் இக்காலப் பெண்ணான சத்யா தன் கணவரான கோபியுடன் மனஸ்தாபப்பட்டு "கோபி என்னை விட்டுப் போகாதயுங்கோ" என்று கெஞ்சுவா பிறகு தனிமையில் என்ர பிரச்சனைகளிலிருந்து வெளியேற என்ன வழி என்று யோசனை செய்து கொண்டிருக்கும் போதே வேறொரு உலகமான கண்ணகி சீதை மணிமேகலை மூவரும் வசிக்கும் இடத்துக்கு வந்துவிடுவார்.

அங்கே கற்பில் சிறந்தது தான் தான் அதனால் தான் தன்னைப் பத்தினித்தெய்வமாக வழிபடுகிறார்கள் என வாதாடுவார் கண்ணகி சீதையோ நான்தான் பாக்கியம் செய்தவள் உலகமே ஏகபத்தினிவிரதன் என்று போற்றும் இராமனைக் கணவனாக அடைந்தவள் என்று கூறுவார். அதற்கு இக்காலப் பெண்ணான சத்யா இந்தக்காலத்தில எல்லா ஆண்களுமே இராவணன்தான் என்பார்."அப்பவும் என்ர மாமி சொன்னவா கணவனைச் சீலைத்தலைப்பில முடிஞ்சு வைக்கவேணும் என்று நான்தான் தப்பு பண்ணிட்டன் அதான் அவர் அவளிட்ட போயிட்டார் என்று கண்கலங்குவா" சத்யா.அதற்கு கண்ணகி எதற்கும் கவலைப்படாதே நீ போய் உன் கணவரோடு சந்தோசமாக வாழத்தொடங்கு என்று சொல்ல சீதையும் சேர்ந்துகொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பாய் என்று கூறுவார்.உடனே மணிமேகலையோ பற்றுக்களைத் துறந்துவிடு அதுதான் உண்மையான சந்தோசமான வாழ்க்கைக்கு அத்திவாரம் என்பார்.

சத்தியா மீண்டும் தன் கணவரின் சந்தேக புத்தியைச் சொல்லி அழ ஆரம்பிப்பா.நாங்கள் வாடகைக்கு இருக்கிற வீட்டுக்காரர் ஒருமுறை பேஸ்மன்றுக்கு ஏதோ திருத்தவென்று வந்தவர் தவறுதலாய் சிகரெட் பிடிச்சுப்போட்டு அடிக்கட்டையை கீழே போட்டிட்டு போட்;டார் அதுக்குக் கோபி யாரோட படுத்தனீ என்று என்னை அடிக்கிறார் என்று அழுவா.உடனே மணிமேகலை சத்யாவைத் துறவுபூணும்படி அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கு கண்ணகியும் சீதையும் சேர்ந்;து "நீ பரத்தவள் குலத்தில் வந்தவள் குலமகள் அல்ல" என்று உரக்கச் சொல்வார்கள்.மணிமேகலை அமைதியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேறொரு பெண்ணை நாடிச் சென்ற உன் கணவருக்காக காத்திருந்து அவன் மீண்டும் வரும்போதெல்லாம் உன் சொத்துக்களை வாரி வழங்கி பின்னர் அவனை ஏற்றுக்கொண்டவள் நீ.உன் கணவருக்குப் பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கும்போது நீதிதவறியதற்காக ஒரு மாநகரையே எரித்த சுயநலக்காரியான நீ குற்றமற்றவளா? நீ கற்புக்கரசியா?என்று கேக்க கண்ணகி கூனிக்குறுகி தன் தவறை ஒப்புக்கொண்டு தனக்கான தண்டனை என்ன என்று கேட்பார்.அதற்கு மணிமேகலை உனக்கான கோயில்கள் இடிக்கப்பட வேண்டும்.பட்டிமன்றங்களிலிரு

Share this post


Link to post
Share on other sites

உங்கள் நாடகங்களின் விமர்சனங்களைப் பார்க்க, அவற்றை நன்றாக ரசித்து, ஆழமாக அவற்றுடன் ஒன்றிப்போய் பார்த்திருக்கிறீங்கள் போல இருக்கின்றது.

நம்மட ஆட்களுக்கு எதற்கெடுத்தாலும் சீதையும், மணிமேகலையும், கண்ணகியும், மாதவியும் தானா? வேறு கதை கருக்கள் எடுக்க முடியாதா? தமிழீழ விடுதலைப் போரில் புதுயுகம் படைத்த எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்களின் வரலாறுகள் நாடகங்களில் பேசப்படமுடியாதா?

மேலும், அடையாளம் நாடகத்தில் கூறப்பட்டதுபோல் ஒரு சம்பவத்திற்கு கண், மூக்கு, வாய், காது வைத்து, அதைத் திரித்து வதந்திகள் பரப்புவதில் நம்ம சனம் சூப்பர் கில்லாடிகள். தாயகத்தில் இவ்வாறான பொறுப்பற்ற பேச்சுக்களாலும், வதந்திகளாலும் இந்திய குண்டர்கள், மற்றும் சீறி லங்கா காடையர் காலத்தில் தமிழ்ப்பெண்கள் மிகுந்த சிக்கல்களிலும், உளவியல் நெருக்கடிகளிலும் தள்ளப்பட்டு சிக்கித் தவித்துள்ளார்கள். பலர் இவ்வாறான வதந்திகள் காரணமாக ஊரைவிட்டு வெளிக்கிட்டு வெளிநாடுகள், வேறு இடங்களிற்கு செல்ல வேண்டிவந்தது.

நாடகங்கள் முடிந்தபின் பார்வையாளர்களின் சந்தேகங்களைப் போக்கும் கேள்வி நேரம் வைக்கப்பட்டது நல்ல விடயம், குறிப்பாக இளம் தலைமுறைக்கு பிரயோசனமாக இருக்கும்.

யூரியூப் போன்றவற்றில் நாடகத்தின் சில வீடியோக் காட்சிகளப் பார்ப்பதற்கு வழி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

உங்கள் தகவலுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

மாப்ஸ் வீடியோ எடுத்தாக்களிட்ட கேட்டுப்பார்ப்பம்....

இளம் தலைமுறையினர் பலர் வந்திருந்தார்கள்....என்னால் கேள்வி நேரம் முழுவதற்கும் நிக்கி முடியவில்லை அதனால் இளம் தலைமுறையினர் கேள்வி கேட்டது பற்றி கருத்து சொல்ல முடியாது ஆனால் கேள்வி நேரம் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியதுதான்.

Share this post


Link to post
Share on other sites