Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

முதல் வித்து 2ம் லெப். மாலதி


Recommended Posts

முதல் வித்து 2ம் லெப். மாலதி

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்;த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.

அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.

சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”

காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,

“என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”

எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். அவர் சொன்னபடியே ஆயுதம் பத்திரமாக கொண்டுவரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் தயாரானது.

இயல்விலே புத்துணர்வும் துடிப்பும் நிறைந்த மாலதி சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப்போனவர்.

அதனால் ஒவ்வொரு ஆயுதங்களின் பெறுமதியையும், வெற்றி நோக்கிய நகர்விலே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அதேபோல தாய் மண்ணிலே ஆழ்ந்த பற்றுக்கொண்டு உழைத்த மாலதியின் நினைவோடு இலட்சியத்தைச் சுமந்து நடக்கிறான போரணிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி வழிகாட்டிச்சென்ற பாதையில் அதே நேசிப்போடு எமது பயணம் தொடர்கிறது. அவர் தம் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்த தேசமும் அவரின் இந்த வரலாற்றைச் சுமந்திருக்க, மன்னார் மகளின் நாமத்தைத் தாங்கியே படையணியாய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

2ம் லெப். மாலதி படையணி
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

நன்றி: விழுதாகி வேருமாகி.

Image may contain: 1 person, text
 
 
Link to comment
Share on other sites

 • 2 years later...
 • கருத்துக்கள உறவுகள்

என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ முதல் வித்து 2ம் லெப். மாலதி.!

breaking

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி

 

அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.

சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”

காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,

“என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”

 

 

எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். அவர் சொன்னபடியே ஆயுதம் பத்திரமாக கொண்டுவரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் தயாரானது.

இயல்விலே புத்துணர்வும் துடிப்பும் நிறைந்த மாலதி சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப்போனவர்.

அதனால் ஒவ்வொரு ஆயுதங்களின் பெறுமதியையும், வெற்றி நோக்கிய நகர்விலே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அதேபோல தாய் மண்ணிலே ஆழ்ந்த பற்றுக்கொண்டு உழைத்த மாலதியின் நினைவோடு இலட்சியத்தைச் சுமந்து நடக்கிறான போரணிகள்.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி வழிகாட்டிச்சென்ற பாதையில் அதே நேசிப்போடு எமது பயணம் தொடர்கிறது. அவர் தம் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்த தேசமும் அவரின் இந்த வரலாற்றைச் சுமந்திருக்க, மன்னார் மகளின் நாமத்தைத் தாங்கியே படையணியாய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.

 

tklhj3esskOFSWGyC2Ig.jpg

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

-2ம் லெப். மாலதி படையணி 
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/news/3dcfeb8d-47c5-45bb-be95-75b9c4bda675

 

Link to comment
Share on other sites

 

மகளிர் படையணியின் வீர அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்ட நாள்.
தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்.
ஒக்டோபர் 10
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாலதி-ஈழப் போரரங்கின் துருவ நட்சத்திரம்

images.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் முதல் போராளி மாலதியின் நினைவு நாளையிட்டு, அவரின் தோழி ஒருவரின் நினைவு பதிவுகளை இலக்குடன் பகிர்ந்து கொண்டார். இப்பதிவின் முக்கிய பகுதிகள் இங்கே இலக்கின் வாசகர்களுக்காக பகிரப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு தாயகப்பகுதி எங்கும் சிறீலங்கா இராணுவம் மிக மோசமான தனது நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. அப்போது தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக  பல இயக்கங்கள் போராட ஆரம்பித்திருந்தன.

அந்நேரத்தில் நான் எனது சொந்த இடமான திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவுப் பகுதிக்கு எனது குடும்பத்தினருடன் வந்து அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். அந்தக் காலப்பகுதியில் இயக்கங்களில் பெண்களும் இணைய ஆரம்பித்திருந்தனர்.

1986ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பெண்களின் ஒரு குழுவினர் முதன்முதலாக கடல் வழியாக பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அக்குழுவில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். கடல் வழியாகச் சென்ற எங்கள் குழுவை தமிழகத்தில் உள்ள மதுரையில் தங்க வைத்தனர். தாயகத்தில் இருந்து  பயிற்சிக்காக வந்த மற்றொரு  குழுவில் மாலதி  வந்திருந்தாள்.

நாங்களனைவரும் மதுரையில் ஈழ ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். மாலதி  மிகச் சுறுசுறுப்பும்,   கலகலப்பும் மிக்கவள்.  அவள் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பின் ஒலியில் மூழ்கியிருக்கும். அவளுக்கு வயதானவர்கள், குழந்தைகள் என்றால் இன்னமும் குதுகலமாகி விடுவாள்.

சில நாட்களின் பின் நாங்கள்  பயிற்சிக்காக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  அது பெரிய காட்டுப்பகுதி.  அக்காட்டிற்குள் அமைந்துள்ள ஆற்றங்கரையின் அருகிலேயே எமது பயிற்சிக்கான இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.  இந்த  இடத்தில் பயிற்சி முகாமைத் தயார் செய்வதுதான் எமக்கான முதல் பணியாகவும், பயிற்சியாகவும் இருந்தது. அது மிக கடினமான பணியாகும்.  நாங்கள் பலதரப்பட்ட  மாவட்டங்களில் இருந்து வந்து ஒன்று சேர்ந்திருந்தோம். பயிற்சி முகாம் தயாராகிப் பின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு நாட்கள் மிக வேகமாக உருண்டுகொண்டிருந்தது.

1-2-1.jpg

ஒரு நாள்,  பயிற்சியின் போது ஆண்கள் இராணுவத்தினராகவும், பெண்கள் புலிப்படையாகவும் செயற்பட வேண்டும் என்ற கட்டளை எமக்கு வழங்கப்பட்டது. அந்த பயிற்சிக்கு எமக்கு தனித்தனியாகப் புள்ளிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஒவ்வொருவரும் சித்தியடைந்தே ஆகவேண்டும்.

அதில் ஆண் போராளிகள் இராணுவத்தினர் போன்று  முகாம் அமைத்து இருக்க வேண்டும்.  பெண் போராளிகள் ஒவ்வொருவரும் அந்த முகாமின் தகவல்களை சேகரிக்க வேண்டும். ஆனால் அந்த இராணுவத்தினரிடம் சிக்கி விடக்கூடாது. பிடிபட்டால் எமக்கு சிறந்த புள்ளிகள் கிடைக்காது.

அது சாதாரண பயிற்சி கிடையாது. உண்மையாகவே   ஒரு இராணுவ முகாமுக்குள் செல்வது போன்றே தோன்றியது. ஆண் போராளிகள் இராணுவம் போன்று மிகச் சிறப்பாக செயற்பட்டனர்.

இதில் மாலதிக்கு வேடுவர் வேடம். அவள் வேட்டைக்குச் செல்வது போல் சென்று அந்த இராணுவ முகாம் குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டும். நாம் அனைவரும் மறைமுகமாக அந்த முகாம் குறித்த தகவல்களை பெற்று வந்து விட்டோம்.

இதில் மாலதி முதல் முயற்சியில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு விட்டாள். அப்போது அவள், தான் வேட்டைக்குத்தான் வந்தேன் என்று கூறி ஒருவாறு சமாளித்துத் தப்பித்து வந்து விட்டாள். ஆனால் கட்டளைப்படி தகவல் எடுக்காமல் திரும்ப முடியாது.

எனவே அவள் மீண்டும் தன் வேடுவ அலங்காரத்தைப் பலப்படுத்திக்கொண்டு இராணுவ முகாமுக்குள் சென்று அந்த முகாமுக்குள் பெண்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கும் முக்கிய தகவலை எடுத்து வந்துவிட்டாள். ஆனால் எந்த இராணுவத்தினரும் அவளைக் காணவில்லை. அந்தளவுக்கு மிகச்சிறப்பாக அந்த பயிற்சியை முடித்திருந்தாள். அந்த பயிற்சியில் அவளுக்குத்தான் அதிக பாராட்டு.

மற்றொரு பயிற்சியில் பற்றைகளுக்குள் ஒரு குழு மறைந்திருக்க வேண்டும், மற்றொரு குழு மறைந்திருப்பவர்களைத்  தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால்  மாலதியால் இயல்பாகவே ஒரு இடத்திலேனும் அமைதியாக இருக்க முடியாது. ஏதோ ஒரு பகிடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே  இருப்பாள். இந்த பயிற்சியில் அவளின் வாய் சும்மாவே இருக்கவில்லை. அவள் பெருமூச்சு விடுவதே பெரிய சத்தமாக இருக்கும். அதை வைத்தே அவளுடைய குழு கண்டிபிடிக்கப்பட்டு விடும் என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்த பயிற்சியில் மாலதியுடன் பெண் போராளி ஒருவர் இணைந்திருந்தார்.

1-1-1.jpg

இருவரும் ஒரு புதருக்குள் மறைந்திருந்தனர். அவர்கள் மற்றொரு குழுவால் தேடப்பட்டுக் கொண்டிருந்தனர்.  இந்த நேரத்தில் மாலதியின் பகிடி வார்த்தைகளையும், அவளின் பெருமூச்சு சத்தத்தையும் அடக்க, அவருடன் பயிற்சியில் இருந்த அந்தப் பெண் போராளி, மாலதியின் காலில் தொடர்ந்து கிள்ளிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவர் கிள்ளியதில் கோபமும், வலியும் அடைந்த மாலதி, எந்த சத்தமும் போடாமல்   தேடுதல் வேட்டை முடியும் வரையில் அமைதியாக அந்தப் போராளியை முறைத்துக்கொண்டிருந்து பயிற்சியை வெற்றியுடன் நிறைவு செய்திருந்தாள்.

பயிற்சி முடிந்து முகாம் வந்த மாலதி, புதரின் மறைவில் இருக்கும் போது குறித்த அந்தப் போராளி தன்னை கிள்ளியதைக் காட்டினாள். உண்மையிலேயே பாவமாகத்தான் இருந்தது. ஏனெனில் தொடை, கால் பகுதிகள் அவர் கிள்ளியதில் வீங்கிப்போய் இருந்தது. ஆனால் அவள் அதற்கும் ஒரு பகிடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்து விட்டாள்.

பின்னொருநாள் எமது பயிற்சி முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கு ஆபத்து என்ற செய்தி, தலைமைக்கு கிடைத்திருந்தது.  அவர்கள் உடனடியாகச் செயற்பட்டு எம் அனைவரையும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தினர்.  பயிற்சி முகாம் முழுமையான பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டது. ஒரு பதுங்கு குழிக்குள் இருவர் என, பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டோம்.

சந்தேகத்திற்கு இடமாக எதுவும் தென்பட்டால் உடனே சுடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்முடன் ஆண் போராளிகளும் காவல் கடமையில் இருந்தனர். அப்போது, யாரோ ஓடுவது போல் தோன்ற,  ஒரு ஆண் போராளி அத்திசை நோக்கி சுட ஆரம்பிக்க, நாமும் எம் துப்பாக்கிகளில் இருந்த ரவைகள் தீரும் வரையில் சுட்டுத் தீர்த்தோம். மறுநாள் காலை –பாரதி மாஸ்ரர், பொன்னம்மான் ஆகியோர் வந்தனர்.

சிறுகச்சிறுக சேர்த்து பயிற்சிக்காக கொண்டுவரப்பட்ட ரவைகள் தீர்ந்து விட்டன. எம்மிடம் வீணாக ஒரு குண்டும்  துப்பாக்கியை விட்டு வெளிவரக்கூடாது என்று அறிவுறுத்தித்  தந்திருந்த ரவைகள் அத்தனையும்  காடு முழுவதும் சிதறிக்கிடந்தது. ஆனால் அப்போது  சந்தேகத்திடமாக எவரும் வரவில்லை. அது எம்முடைய தவறான கணிப்பினால் நடைபெற்ற சம்பவம். இதைக் கண்ட பொன்னம்மான் அதிர்ந்து போனார். அந்தக் காலப்பகுதியில் இயக்கம் ஆயுதங்கள் வாங்குவதற்கு  பெரும் சிரமப்பட்டு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வந்த காலம். எம் நடவடிக்கையினால் பொன்னம்மான்  மனமுடைந்து கொட்டிலுக்குச் சென்று படுத்துக்கொண்டார்.

வெளியில் வரவேயில்லை. நாம் அப்போதுதான் எம் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டோம். ஆனால் அது மன்னிக்கக் கூடிய தவறு கிடையாது. மாலதியும், அழுது கொண்டே இருந்தாள். எப்போதும் ஆயுதங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி கூறிக்கொண்டே இருப்பார் பொன்னம்மான்.  அவரால்தான் நாம் ஆயுதங்களை பாதுகாக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டோம். இதில் மாலதி, ஒரு குழந்தையைப்போல  துப்பாக்கியைப் பார்த்துக் கொள்வாள்.

பயிற்சி முடிந்தபின்  நாம் தாயகம் அழைத்து வரப்பட்டோம். அது மிகக் கடுமையான கடற்பயணம்.  மன்னாரில் வந்திறங்கினோம்.  நாட்டுக்கு வந்த பின் வலிந்து தாக்குதல், பதுங்கித் தாக்குதல் என்று அனைத்து தாக்குதல் நடவடிக்கையிலும்  பங்கு கொண்டோம். அவையனைத்தும் வெற்றிச் சண்டைகள்தான்.

இவ்வாறு தினந்தினம் சண்டைகள் நடந்து கொண்டேயிருக்கும். அதேநேரம்  தேசியத் தலைவரின் ஆலோசனைதான் எங்களை முன்நகர்த்தியிருந்தது. எங்களது சின்னச் சின்ன விஷயங்களில் தலைவர் மிகக் கவனம் எடுத்து நடந்து கொள்வார். மக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது, போராளிகளுக்கும் இழப்புக்கள் வரக்கூடாது என்பதில் தலைவர் கவனமாக  இருந்தார்.

இலங்கை இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் கரும்புலி மில்லர் அண்ணாவின்  கரும்புலித் தாக்குதலுக்கு பின்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வந்தது. அதனடிப்படையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக எமது தாயகப்பகுதிக்குள் நுழைந்தது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள், ஆயுதக்கையளிப்பு, திலீபனின் உண்ணாவிரதம், திலீபனின் சாவு என  நாட்கள் கடந்து இந்திய இராணுவத்துடனான சண்டை தொடங்கியது.

அப்போது தலைவர் அனைத்து போராளிகளுடனும் கலந்துரையாடினார். கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு போராளிகளுக்கும் சொல்லியிருந்தார். இந்த காலப்பகுதியில் மாலதியின் குழந்தைத்தனம் மாறி  அவள் ஒரு பொறுப்பான  போராளியாக மாறியிருந்தாள். அவள்  தினமும் துப்பாக்கியைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பாள். தாக்குதலுக்கு எந்த இடைஞ்சலும்  வரக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் பல இடங்களில் எதிர்பார்க்கப்பட்டது. இராணுவத்தினர் நாவற்குழியில் இருந்து – கோப்பாய் சந்திக்கு வருவார்களென எதிர்பார்த்து பெண் போராளிகளான நாங்கள்  மட்டும்  ஒரு அணியாக கோப்பாய்ச் சந்தியில் நிறுத்தப்பட்டோம்.

நாவற்குழியில் இருந்து கோப்பாய் வரும் பகுதியில் எங்களுடைய 30 பேர் கொண்ட அணி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. ஒரு அணியில் 15 பேர் என பிரிக்கப்பட்டு, காவற்கடமையில் ஈடுபட்டோம். மாலதி ஒரு அணியில் இருந்தாள். 100 மீட்டர் இடைவெளியில்  ஒரு காவல் பதுங்கு குழி என பதுங்குகுழிகள் வீதியின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்தது.

நாவற்குழியில் இருந்து கோப்பாய் நோக்கி சரக்கு லொறிகள் தினமும்  வரும். ஆனால் அன்று வழமைக்கு மாறாக அதிக அளவில் லொறிகள் வந்தது.  “இண்டைக்கு நிறைய லொறிகள் வருகிறதே” என கோப்பாய் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பொறுப்பாளரிடம் கேட்டபோது, அவர் “இந்த லொறிகளில் ஆமி மறைந்து வந்தாலும் வருவார்கள். அதனால்  ஒவ்வொரு லொறியாக செக் பண்ணி  அனுப்புங்கோ” என்று   கூறினார்.  இதனால்  காவலிலிருக்கும் போராளிகள் அந்த லொறிகளை  மறித்துச் சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது  அதிகாலை. கஸ்தூரியும், ரஞ்சினியும் காவற்கடமையிலிருந்து விலகும்  நேரம் வந்தது.  அவர்களை மாற்றிவிட தயாவும், மாலதியும் சென்றிருந்தனர். அந்நேரம் பார்த்து ஒரு  வாகனம் வந்தது, அதை கஸ்தூரியும், ரஞ்சியும்   மறித்து சோதனை செய்ய முற்படும் போது  அதில் இராணுவத்தினர் வந்திருந்தனர். சண்டை தொடங்கியது.  மாலதி உடனே பாதுகாப்பு நிலையை  எடுத்துக்கொண்டு தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தாள். அவளிலிருந்து  100 மீட்டர் இடைவெளியில்  நின்ற நாங்களும் தாக்குதலைத் தொடுக்கின்றோம்.

இதில் மாலதி கொஞ்சம் பின்னுக்கு ஓடி வந்து நிலையெடுத்து மீண்டும் தாக்கினாள். அது மிகப்பெரும் சண்டையாக இருந்தது. இராணுவம் பெரும் எடுப்பில்  தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது.  நாங்களும் எங்களுடைய முழுப்பலத்தையும், பிரயோகித்து தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தோம்.  அனைவரும் பெண் போராளிகள். முதன் முதலாக பெண் போராளிகள் மட்டும் தனித்து ஒரு பெரும் படைக்கு எதிராக செய்த சண்டை அது.  அப்போது நன்றாக விடிந்து விட்டது.  நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை.  காயப்பட்ட குரல்கள் எங்கள் தரப்பிலும் கேட்டுக்கொண்டிருந்தது, இராணுவத்தின் தரப்பிலும் கேட்டுக்கொண்டிருந்தது. இராணுவத்தில் சிலர்,  இறந்த தமது சகாக்களின் உடலையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு பின்னுக்கு போய்க்கொண்டிருந்தனர். இது அனைத்தையும் பார்த்துக்கொண்டே சண்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் மாலதி காயப்பட்டு விட்டாள். நான் நின்ற பக்கம் இராணுவம் பெரிதாக வரவில்லை. ஆனால் மாலதி நின்ற பக்கத்தால் நிறைய இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தனர். ஏனெனில் கோப்பாயைப் பிடிப்பதற்கு மாலதி நின்ற பக்கத்தால் முன்னேறுவது தான் இராணுவத்திற்கு இலகுவாக இருந்தது. அதனால் அந்த பகுதியில் கடுமையான தாக்குதலை அவன் தொடுத்துக் கொண்டிருந்தான்.

இதை அறிந்த நாங்கள், மாலதியின் பகுதிக்குச்  செல்லத்தொடங்கியிருந்தோம். அப்போது “நான் காயப்பட்டு விட்டேன்” என்று மாலதி கத்துவது கேட்டது.  காயப்பட்ட போராளிகளை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது என்பது தேசியத் தலைவரின் கட்டளையாகும். அப்போது நாங்கள் மாலதியை பின்னுக்கு கொண்டு வர முயற்சித்தோம்.

ஆனால் மாலதி “நான் குப்பி கடிக்கப்போகிறேன், என்னால் முடியாது. என்னை நீங்கள் கொண்டு போகமாட்டியள். என்னை விட்டுட்டு என்ர ஆயுதத்தைக்கொண்டு போய் அண்ணாட்ட கொடுங்கோ, என்ன விட்டுட்டு நீங்கள் சண்டைய பிடியுங்கோ” எனத்  திரும்பத் திரும்ப  உயிர் பிரியும் வரையில் கூறிக்கொண்டே இருந்தாள்.

அப்போது தலைவரின் கட்டளைப்படி, முன் களமுனைக்கு ஆண்போராளிகள் வந்தார்கள். சண்டை தொடர்ந்தது.  நாங்கள் பின்னரங்கிற்கு வந்தோம். ஆனால் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியவர்களைக் காணவில்லை என்பது எமக்கு அப்போதுதான் தெரிய வந்தது. இருந்தும் எமக்கு அவர்களின் உடல்களும் கிடைக்கவில்லை. காயப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை. அந்தநேரம் மாலதி வீரச்சாவைத் தழுவியிருந்தாள். அவளின் வித்துடல் மட்டும்தான் எம்மிடம் இருந்தது. இந்த சூழலில் அந்த மூவரும் ஒன்று காணாமல் போயிருக்கலாம், அல்லது இராணுவத்தினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தலைமையிடம் இருந்ததன் காரணத்தினாலும் வீரச்சாவை உறுதிப்படுத்தும் நிலையில் மாலதியின் வித்துடல் இருந்ததாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளில் முதன் முதலில் வீரச்சாவடைந்த போராளியாக 2ம் லெப்டினன் மாலதி மதிப்பளிக்கப்பட்டு வருகின்றாள்.  அதே நேரம் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியோர் மாவீரர் பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டனர். பின்னர் மாலதியின் பெயரில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியில் ஒரு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாலதி வீரமுடன் போரிட்டு மடிந்த இந்நாளை தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகவும் நினைவுகூரப்படுகின்றது.

இரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்.! - Eela Malar

தமிழர் வரலாற்றில் பெண்கள், போர்க்களத்திற்குச் சென்றதை புறநானூற்றில் பார்த்தோம். பிந்திய மன்னராட்சி காலங்களின்  போதும் பெண்கள்  போர்க்களம் சென்றிருந்தனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை எதிர்த்து, தடுத்து நிறுத்தி தமிழீழத்துப் பெண்கள் போரிட்டு களத்திலே வீழ்ந்து  உலக வரலாற்றின் போர்க்களப்பதிவின்   புதிய பக்கத்தைத் திறந்து வைத்தார்கள்.  ஈழ விடுதலைக்கு தன் உயிரை விதையாக்கிய 2ம் லெப்டினன் மாலதியின் நினைவாக மாலதி படையணி பெரும் பெண்கள் படையை தன்னகத்துள் கொண்டு உருவாக்கம் பெற்று எம் வரலாற்றில் பதிவாகியது.

இந்த நேரத்தில், மாலதியின்  விடுதலை வேட்கையை எண்ணத்தில் ஏந்தி,  தமிழீழப் போரரங்கில் களப்பலியான பல்லாயிரக்கணக்கான வீரப் பெண்மணிகளை மனதில் நிறுத்தி. இன்று  ஏற்பட்டுவரும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப   தகவமைத்து  எமது உரிமைகளை மீட்டெடுக்க  நாம் அனைவரும் அறிவியல் ரீதியில் தயாராக வேண்டும். அதுவே அந்த மாவீர்ர்களுக்கான அஞ்சலியும் கூட.

எழுத்து வடிவம் அருணா

https://www.ilakku.org/மாலதி-ஈழப்போரரங்கின்-த/

Link to comment
Share on other sites

 • 9 months later...
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

2ஆம் லெப். மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!

AdminOctober 10, 2021

247896_109429682481492_100002433837826_9
தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 34வது நினைவுநாள் இன்று!

தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியான முதல் பெண் மாவீரர்
2ம் லெப்.மாலதி அவர்களுக்கு வீரவணக்கம்.

தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப் போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆழப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது.

எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது M16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.

வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.malathi.jpg?resize=640%2C480

அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத் தொடங்கியது.

அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது.

சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”

காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூறிக் கொண்டிருந்தார்.

அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,

“என்ர ஆயுதம் பத்திரம்.என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.

 

http://www.errimalai.com/?p=24278

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நன்னிச் சோழன்
   "தோற்றிடேல், மீறி 
   தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
   -நன்னிச் சோழன்
    
   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
   (இது நான் ஏற்கனவே வெளியிட்ட ஒன்றுதான். ஆனால் இன்று சில புதிய தகவல்கள் கிடைத்ததால் பழையதை அழித்துவிட்டு புதிய பதிப்பாக புதிய சில தகவல்களோடு இதை வெளியிடுகிறேன்.)
    
   1982 முதல் 18.05.2009 நள்ளிரவு வரை களமாடி வீரச்சாவடைந்தோர்:- 25,500 - 26,500
    
   சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது.. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.)
    
   எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும்.
    

   'தினக்கதிர்: 20-6-2001'
    
    

   'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'
   (மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்)
   இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள் சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள் ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள்                 --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள்
   2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள்  
    
    27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38)
    

   'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'
    

   'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது'
    
    27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:-
    

   'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை'
    
    
   20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.)

   'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600'
    
   மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம்.
     இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே... நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம்.
   2009

    
    
    மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:-
    
    
   சரி இனி நாம் கணக்கெடுப்போம்.
   சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால்,
   செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு - புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை
   5953-2,239 = 3,714 2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714
   22,390+3,7149 = 26,104 சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக,
   26,104+358 = 26,462  
   ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்..
   (சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.)

    
    
   இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம்.  அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம்.
    
   இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி:  

    
   இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும்.  இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும்.
   இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. 
   இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. 
   அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம்.  மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது,
   முன்னிருந்து பின்னாக...
   முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160  (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை) இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276 மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால்.  கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை
   மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது.
   ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கினடிப்படையில், சனவரியில் இருந்து மே 5 வரை கணக்கிட்டால் 2,550 - 2,700 வரையிலான போராளிகள் மாவீரர்கள் ஆகியிருக்கின்றனர். மேற்கொண்டு (மே 10-18) சமர் உச்சியில் இருந்ததால் இந்த கணக்கு சரிப்பட்டு வராது. மேலும், எல்லா நாட்களிலும் மார்ச் 8 - ஏப்ரல் 20 வரை நடந்த சமர்கள் போன்ற சமர்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லைத்தான்.
   எனவே கடைசி ஐந்து மாதங்களிம் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய துணிபு. நான் கொடுத்த கணக்கோடு சற்று கூடக் குறையவும் வாய்ப்புண்டு என்பதையும் கவனிக்கவும்.
   அடுத்து 2008 டிசம்பர் மாதத்திற்கான மாவீரர் தொகையினைக் கணக்கெடுத்தால், நடந்த சமர்களின் அடிப்படையிலும் 2008 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின்(2,239) அடிப்படையிலும் பார்த்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 200 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்கும் தோராயமாக மொத்தம் 200 போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர். 
   எனவே மொத்தத்தில் தாழ்ந்த மாவீரர் எண்ணிக்கையாக,
   22,390 + 200 + 3,000 = 25,590 25,590 ஐ வரையறுக்கலாம்.
   ஆக, மொத்த மாவீரர் எண்ணிக்கையாக தமிழர் தரப்பினது கணக்கினை தாழ்ந்த கணக்காகவும் சிங்களத்தின் கணக்கினை உச்சக் கணக்காகவும் வைத்தால்,
    25,500 - 26,500
   என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இதனுள் சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.
    
    
   "எங்கள் தோழர்களின் புதைகுழியில் 
   மண்போட்டுச் செல்கின்றோம்
   இவர்கள் சிந்திய குருதி - தமிழ்
   ஈழம் மீட்பது உறுதி 😢"
   - மாவீரர் நாள் பாடல்
    
    
   உசாத்துணை:
   Tamilnet.com https://anyflip.com/zmfgt/pzff https://www.deseret.com/2000/6/6/19560902/censors-stifling-reports-on-war-in-sri-lanka https://www.defence.lk/index.php/Article/view_article/862 https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf https://tamilnation.org/ ஆக்கம் & வெளியீடு
   நன்னிச் சோழன்
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
    
    
   "இதுவரை ஈழத் 
   தமிழர்கள் எவரும் 
   சிரித்தது கிடையாது!
   நாம் அழுதிடும் பொழுது
   பெருகிய கண்ணீர்
   அளவுகள் கிடையாது!
   இனிமேல் அழுதிட விழியில்லை - படும்
   இழிவுகள் சொல்லிட மொழியில்லை!
   தனியே பிரிந்திட விடவில்லை - அட
   தமிழருக் கானதைத் தரவில்லை!"
                                                                              --> "விடுதலை எவரும் தருவதுமில்லை"  பாடலிலிருந்து...
    
    
    
   யாழ்:-

    

    
    
    
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
    
   "செத்தவர் என்றுமை செப்புவமோ - உமை
   சென்மத்தில் நினைந்திட தப்புவமோ🙏
   குத்துவிளக்கதும் நீரல்லாவோ - நாம்
   கும்பிடும் தெய்வங்கள்🔱 நீரல்லவோ"
   -->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து
    
    

    
    
   { ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது படிப்படியாக செய்து விடுகிறேன்.}
    
    
   துயிலுமில்லங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், அவற்றைப் பற்றி நானொரு ஆவணம் எழுதியுள்ளேன், வாசித்துப்பாருங்கள்:-
    
    
    
    
   கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் அவர்கள் 2005 மாவீரர் நாளுக்கு வெளியிட்ட கட்டுரை ஒன்றிலிருந்து,
    
   விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன.
   பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.
   இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.
   போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலுமில்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.
   புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது.
   முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன.
   1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
   இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.
   வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.
   தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன.
   அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.
   எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்)
   அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
   களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது. அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன. மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது. உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர். வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.  
   ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது. 1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு. 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும். அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும். மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும் - மொழியாகி எங்கள் மூச்சாகி - முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.  
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
    
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.