nunavilan 2,572 Report post Posted October 11, 2018 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி பள்ளிக்கூடம் செல்லஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 2014 தீபச்செல்வன் (எமது குழந்தைகள் சுதந்திரமாக வாழ்ந்த காலத்தை காட்டும் புகைப்படம். எமது குழந்தைகள் சிங்களப் படைகளின் கீழ் சபிக்கப்பட்ட காலத்தில் வாழ்வது குறித்த கவிதை) Theepachelvan Pratheepan 3 Comments 7 Shares 2 2 Share this post Link to post Share on other sites
suvy 5,117 Report post Posted October 12, 2018 கடுகு சிறிது காரம் பெரிது..... இந்தக் கவிதையும்......! 1 Share this post Link to post Share on other sites