Sign in to follow this  
கிருபன்

இனவெறி பேசி தமிழ் மக்களை பலியிட முனையும் சில தமிழ் ஊடகங்கள்

Recommended Posts

43274954177305.560933d08f2c1.jpg
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை அரசின் கொடுங்கோன்மை ஆட்சிகளால் இன்னும் சிறைகளில் வைக்கப்பட்டு தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பத்து அரசியல் கைதிகள்  அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு" மற்றும் "சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு" போன்ற அமைப்புக்கள் எல்லா இன மக்களையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுத்தன.
 
அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைப்பயணம் ஒன்றை தொடங்கினார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் "லங்கா சிறி" இணையத்தளம் "சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்; அதிரும் அனுராதபுரம்!" என்று செய்தி வெளியிட்டது. தமிழ் இனவெறி பேசி தமிழ் மக்களை இலங்கையின் மற்ற இன மக்களில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி இலங்கையின் கொலைகார அரசுகளின் கொலைக்களங்களில் பலியிட்டார்கள். இவ்வளவு இழப்புகளிற்குப் பின்பும் தமது பிழைப்புவாதங்களிற்காக அந்த அயோக்கியத்தனத்தை தொடர்கிறார்கள்.
 
இன்று அனுராதபுரத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் இரு சிங்கள இனவெறியர்கள் வாய்ச் சண்டைக்கு போன செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிகழ்வு சிங்கள, தமிழ் இனவெறியர்களை தூக்கி எறியாமல் இலங்கை மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு ஒன்றினை என்றுமே காண முடியாது என்ற யதார்த்தத்தை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி சொல்லியிருக்கிறது. இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள், ஏழை மக்கள் இணந்தால் மட்டுமே இனவெறியர்களையும், இலங்கை அரசையும் எதிர்த்து போரிட முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துக் காட்டி இருக்கிறது.
 
இந்த சிங்கள இனவெறியர்கள் குழப்பம் விளைவிக்க முயன்ற இதே அனுராதபுரம் நகரில்  "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு"  இலங்கையின் எல்லா இன மக்களையும் இணைத்துக் கொண்டு 05.10.2018 அன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. தமிழ், சிங்கள மொழிகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அந்தப் போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க எந்த ஒரு சிங்கள இனவெறியனும் முன் வரவில்லை. மக்கள் இணைந்தால் வாலாட்ட முடியாது என்பதை இனவெறியர்கள் அறிவார்கள்.
 
தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை எதிர்த்து "அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம்" போராட்டங்களை நடத்திய போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்களை நடத்தினர். அப்போராட்டங்களை அடுத்து இலங்கை அரசு உயர்கல்வியை தனியார் மயமாக்கும் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. அப்போராட்ட அனுபவங்களை இந்த நடைப்பயணத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். "அனைத்து பல்கலைக் கழக மாணவர் சங்கத்தையும்" இணைத்துக் கொண்டு இப்போராட்டங்களை முன்னெடுத்து இருந்தால் போராட்டம் பெரும் வீச்சுடன் பரவி இருக்கும். இன வெறியர்களும் இகழ்ந்து பேச முன் வந்திருக்க மாட்டார்கள்.
 
தமிழ் மக்களை பிடித்திருக்கும் கேடுகளான சமயங்களிற்கும், சோதிடர்களிற்கும், சாதியை கேட்கும் திருமண சேவைகளிற்கும் விளம்பரங்கள் செய்து கொண்டு "லங்காசிறி" போன்ற பிழைப்புவாத வலதுசாரி இணையங்கள் தமிழ்த் தேசிய தொண்டு செய்கிறார்களாம். தமிழ் சினிமாவின் மூன்றாந்தர வணிக குப்பை நடிக, நடிகையருக்கு தளங்கள் வைத்து நடத்திக் கொண்டு தமிழ்த் தேசியமும் பேசும் இந்த இணையத் தளத்தைப் போன்ற கேவலத்தை போல வேறு எவரும் தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்த முடியாது. "தினமலர்", "தினமணி" போன்ற பார்ப்பனிய, தமிழ் மக்கள் விரோத பத்திரிகைகளிற்கு தங்களது இணையத்தளத்தில் இணைப்புகள் கொடுத்துக் கொண்டே இவர்கள் தமிழ்த் தேசிய வியாபாரமும் செய்கிறார்கள்.
 
"சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்; அதிரும் அனுராதபுரம்!" என்று வீராவேசமாக செய்தி வெளியிடும்  "லங்காசிறி" இணையத் தளத்தினர் ஏன் தாங்கள் சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்து இலங்கை அரசை அதிர வைக்கக் கூடாது? இலங்கை அரசை அதிர விட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்வை இந்த வீரமறவர்கள் பெற்றுத் தரலாமே.  "சிறி லங்கா" என்ற சிங்கள மொழிச் சொல்லை "லங்கா சிறி" என்று மாற்றிப் போட்டுக் கொண்டு சிங்களவரை அதிர வைக்கிறோம், தமிழ்த் தேசியத்தை வளர்க்கிறோம் என்று பிழைப்பு நடத்துவது கொஞ்சம் கூட நியாயமில்லை அய்யாமாரே!!. செய்திகளும், கட்டுரைகளும் தான் போட்டோக்கொப்பி என்றால் இணையத்தளத்தின் பெயரையும் கொப்பி அடித்து வைப்பது கொஞ்சமும் சகிக்க முடியாமல் இருக்கிறது அய்யாமாரே!!
 
-விஜயகுமார்
14 Oct 2018
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா?  2019 இன் கடைசிப் பகுதியில் சீனாவின் வுஹானில் சில நூறு நபர்களைத் தொற்றியதன் மூலம் பரவ ஆரம்பித்த கொரனா வைரஸ் பலரையும் வைரஸ் நோய்களின் தடுப்பு முறைகள் பற்றித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சாதாரணமாக தடிமன் குளிர் காய்ச்சல் காலங்களில் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுவதன் மூலம் இந்த வகையான காய்ச்சல் தரும் வைரசுக் கிருமிகளைத் தடுக்கலாம் என்ற ஆலோசனை பல வருடங்களாக புளக்கத்தில் இருந்தாலும், அதிக உயிரிழப்பை உருவாக்கும் நவீன கொரனாவைரசு வரும் வரை, இந்தக் கை கழுவலின் முக்கியத்துவம் பலருக்குச் சரியாகப் பதியவில்லை என்றே சொல்லலாம். உலகம் முடங்கி இரண்டு மாதங்கள் கடந்த பின்னர், தொலைவு பேணுதல், கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல் என்பன மட்டுமே கட்டுப் பாட்டு முறைகளாகப் பேணப் படும் நிலையில் நாம் முழுவதுமாக வழமைக்குத் திரும்ப தடுப்பு மருந்துகள் தேவை என்ற நிலை உருவாகியிருக்கிறது.  தடுப்பு மருந்துகள் 1796 இன் கடைசிப் பகுதியில், மாட்டம்மை நோயினால் உருவான பொக்குளங்களை பசு மாட்டில் இருந்து  எடுத்து சிறுவன் ஒருவனுக்கு தடுப்பூசியாகப் போட்டதன் மூலம், அதிக உயிராபத்தை ஏற்படுத்திய சின்னம்மை நோயை தடுத்தார் எட்வர்ட் ஜென்னர். அந்த நிகழ்வே கொடிய தொற்று நோய்களாக அந்த நாட்களில் விளங்கிய அம்மை போன்ற நோய்களை தடுக்க தடுப்பூசிகள் சிறந்த வழிகள் என்ற கண்டு பிடிப்பின் ஆரம்பம். 1950 இல் வைரசுகளை எங்கள் உடலுக்கு வெளியே வளர்த்து, அவற்றின் நச்சுத் தன்மையைக் குறைத்து தடுப்பூசியாகப் பாவிக்கலாம் என்ற பாரிய முன்னேற்றத்தினால், 2014 இல் ஆட் கொல்லி நோயான போலியோ உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து ஒழிக்கப் பட்டது. தடுப்பூசிகளால் பயன் இல்லை என்று வாதிடும் பார்க்க மறுக்கும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக போலியோ இருக்கிறது. இன்று மில்லியன் கணக்கான குழந்தைகளை இறப்பில் இருந்தும் உடல் ஊனத்தில் இருந்தும் காப்பாற்றும் தடுப்பு மருந்தாக போலியோ தடுப்பூசி இருக்கிறது.  தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது? வைரசுகள் உடலினுள் புகும் போது உடல் உருவாக்கும் எதிர்ப்பு சக்தியை, தடுப்பூசி மூலம் ஏற்கனவே ஏற்படுத்தி விடுவது தான் தடுப்பூசிகள் நோயில் இருந்து பாதுகாக்கக் காரணம். ஆனால், அனைத்து வைரசுகளும் அல்லது நுண்ணுயிரிகளும்  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஒரே மாதிரித் தூண்டுவதில்லை. இதனால், எல்லா நுண்ணுயிர்களுக்கும் தடுப்பூசிகள் தயாரித்து விட முடியாது.சில சமயங்களில், ஒரு வைரசு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டினாலும், காலப் போக்கில் வைரசு தன் அமைப்பை மாற்றிக் கொள்வதால் அது தூண்டிய நோய் எதிர்ப்புச் சக்தி வைரசை எதிர்க்கத் தகுதியற்றதாய் மாறி விடுவதும் நடக்கிறது.உதாரணமாக, வருடா வருடம் பரவும் இன்புழுவன்சா குளிர் காய்ச்சல் வைரஸ் தன் அமைப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஒவ்வொரு வருடமும், புதிய தடுப்பு மருந்தை உருவாக்கி நாமும் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும் சில வைரசுகளுக்கு தடுப்பூசிகள் தயாரிப்பதே இயலாத அளவுக்கு அவை மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. எயிட்சை உருவாக்கும் எச்.ஐ.வி இந்த மாதிரியானது.  கொரனாவைரசு, நிலை என்ன? நவீன கொரனாவைரசு புதிதென்றாலும், அது மனிதருக்கு அறிமுகமான ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தின் உறுப்பினர். மாடு, பன்றி, நாய், பூனை போன்ற விலங்குகளில் ஏற்கனவே சில கொரனாவைரசுகள் இருக்கின்றன. மனிதரில், நவீன கொரனா வைரசு வருவதற்கு முதலே, குறைந்தது ஆறு வகையான கொரனா வைரசுகள் நோயை ஏற்படுத்தும் வைரசுகளாக இருக்கின்றன. இவற்றில் 2002 அளவில் வந்த சார்ஸ்(SARS), 2012 இல் வந்த மெர்ஸ் (MERS) வைரசுகள் தவிர்ந்த ஏனைய நாலும், வருடாந்தம் குளிர் காய்ச்சலோடு சேர்ந்து எம்மைத் தாக்கும் சாதாரண வைரசுகளாக இனங்காணப்பட்டிருக்கின்றன. அப்படியானால், வருடா வருடம் எம்மைத் தாக்கும் கொரனா வைரசுகள் எமக்கு நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடவில்லையா? ஏன் என்ற கேள்வி எழுகிறது. -ஜஸ்ரின் மூலங்கள்: பல்வேறு.  -தொடரும் 
    • தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும்.  1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை இந்திய இராணுவத்திற்கு எதிராக வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர். வைகோவின் உள்ளூர் அரசியலலின் சரி தவறுகளுக்கு அப்பால் அவர் எமது போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு மிக பெறுமதியானது.சீமானுக்கு  இன்று சொம்பு தூக்கும் ஈழதமிழர்கள் வைகோவின் கால் தூசிக்கு சம‍மானவகள்.   1999 ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது  கட்சி வேறுபாடுகளை கடந்து பலர் அந்த கைதிகளுக்கு உதவினர். இதற்காகவே ஒரு நிதியம் ஆரம்பிக்கபட்டு  மிக பிரபல்யமான வழக்கறிஞரான ராம் ஜெற்மலானி மூலம் அந்த வழக்கு  உச்ச நீதி மன்றத்திற்கு அப்பீல் செய்யபடுவதற்கு  தமிழத்தில் இருந்த பல ஈழதமிழரின் போராட்டத்தில் கரிசனை கொண்டிருந்த ஆர்வலர்கள்  காரணமாக இருந்தார்கள்.  இதற்காக அன்றைய தமிழ் வானொலிகளில் எத்தனை  தமிழக ஆர்வலர்கள் அடிக்கடி தமது ஆதரவுகருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் அந்த முயற்சியால்  அந்த 26 பேரில் 19 பேர் உச்ச நீதி மன்றதால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு   துணை நின்ற  அனைவைருமே இன்று  நன்றி கெட்ட புலம்பெயர் முன்னாள்களால் துரோகிகளாக பட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். ஒரே காரணம் இன்று அவர்கள் சீமானுடன் இல்லை என்பதற்காக.  1991 ன் பின்னரான  தடா /பொடா சட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஈழ ஆதரவு இறுக்கமாக தடை செய்யபட்ட காலத்தில் அதை மீறி  தமது உணர்வு காரணமாக ஈழத்திமிழருக்காக  போராட்டங்களை நடத்தி சிறை சென்ற  பலர் சீமான் என்ற ஒரு தனி நபருக்காக துரோகிபட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள்.  தமிழக அரசியல் என்பது அவர்களுக்கானது அவர்களுக்குள் ஆயிரம் முரண் இருக்கும்.அதில் சரி இருக்கும் தவறு இருக்கும்  அதில் தலையிட்டு துரோகிப ட்டம் கொடுப்பது எவ்வளவு அநாகரிகமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறு பட்டம் கொடுக்க சீமானை ஆதரிக்கும்(அவர்களின் பாசையில் சொம்பு தூக்கும்)ஈழத்தமிழருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.   யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து பல காலமாக எமக்கு ஆதரவளித்த உணர்வாளர்களுக்கும் அங்கு அவர்களது நாட்டு அரசியல் என்று உள்ளது.  அதில் அவர்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்கள. மாறுபடலாம். அவர்கள் நாட்டு அரசியலில்  திமுகவை ஆதரிக்கலாம் அல்லது அதிமுகவை ஆதரிக்கலாம். அல்லது ஏன் காங்கிரசை பாஜகவை கூட ஆதரிக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதறகாக அவர்கள் எமக்கு செயத பல  உதவிகளை மறந்து  துரோகிபட்டம் கொடுக்கும் இந்த நன்றி கெட்ட  கூட்டம் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு  எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.   நல்ல காலம் தாயகத்தில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளனர்.     
    • உலக ஊடகங்கள் ஒரு 6 நிறுவனக்களிடம் அகப்பட்டு சிதைந்து வருகிறது.  ஓரு நல்ல மக்களாட்சிக்கு தேவை சுதந்திர ஊடகங்கள்.  சுய சிந்தனை உள்ள சுதந்திர   பத்திரிகையாளரின் தொழில் ஆபத்தான தொழிலாக இந்த காலத்தில் உள்ளது.  மாற்று ஊடகங்கள் இருந்தாலும் மக்கள் விட்டில் பூச்சிகள் போல் பெரிய செட் போட்டு பின்னுக்கு குழந்தை விளையாட்டு கிராபிக்ஸ் போட்டால் தான் கவனிப்பார்கள். Even Vijay TV is owned by Fox!
    • என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் , போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு  இந்தியாவின்  சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும்