யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தமிழ் சிறி

தீபாவளி சிரிப்பு.

Recommended Posts

கமல் தீபாவளி ..☺️

சரக்கு உள்ள இருக்கு .. நீங்க ஆரம்பிங்க ..தோ வந்துடுறன் .. ?

Share this post


Link to post
Share on other sites

தீபாவளி சரக்கு ஓவராகி .. மட்டையாகி போட்டால் வீட்டில் கொண்டு வந்து விடுவர்களா ☺️ அல்லது அங்கேயே ரூம் போட்டு தங்க வைப்பார்களா ? ஒரே டமாஸ்தான் ?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

தீபாவளிக்கு அப்புறம்.. ?

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • அரசியல்வாதிகளின் அபிவிருத்தி அரசியல்: பறிபோகும் தமிழர் நிலங்கள் Editorial / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 -க. அகரன் ‘காற்று இடைவெளிகளை நிரப்பும்; தேசம் தன் தலைவர்களை உருவாக்கும்’ என்பது அறிஞர் அண்ணாவின் வாக்காக காணப்பட்டிருந்தது. இவ் வார்த்தை, சொல்வதற்கு உணர்வுபூர்வமானதாகவும் தத்துவார்த்தமானதாக இருந்தாலும் கூட, அதன் உள்ளார்ந்தக் கருத்தை நுட்பமாகப் பார்த்தல் காலத்தின் தேவையாகும்.   வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு அல்லது சிறுபான்மை இனங்களைக் கொண்ட தேசங்களுக்கு, மேற்குறிப்பிட்ட வாக்கு, வலுவான கருத்தைப் போதிப்பதாகவே இருக்கின்றது.   வளர்ச்சி அடையும் நாடொன்றில், தற்போதைய விஞ்ஞானத் தொழில்நுட்ப,  நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, தனது பொருளாதார வளர்ச்சிச் சுட்டெண்ணை உயர்த்த முடியாத தலைவராக இனம் காணப்பட்டவர், தொடர்ந்தும் அப்பதவியில் இருந்து, தானாகவோ அல்லது மக்களாலோ விலத்தப்பட வேண்டியவராகவே இருக்கின்றார்.   அதுபோலவே, சிறுபான்மை இனங்கள் வாழும் தேசத்தில், அந்த இனக்குழுமத்தின் உரிமைகளையும் அதன் பொருளாதார மற்றும் மரபுரிமைகளையும் பேணிப்பாதுகாக்க முடியாத அந்தச் சிறுபான்மையினத்தின் தலைமைகள், தொடர்ந்தும் அந்தத் தலைமையை தக்கவைத்துச் செயற்படுவதானது, அந்தச் சமூகத்தாலேயே புறக்கணிக்கும் நிலையை உருவாக்கும்.   வெறும் பசப்பு வார்த்தைகளால், நீண்ட கால அரசியல் செயற்பாட்டைக் கொண்டு செல்ல முடியும் என்ற தோற்றப்பாட்டுடனான முன்னகர்வுகள், அந்த அரசியல் செயற்பாட்டாளர்களை மக்கள் தமது வாக்கு எனும் பலமான ஆயுதத்தின் ஊடாக, விரட்டியடிப்பார்கள் என்பதும் யதார்த்தமானதுதான்.   இந்த வகையிலேயே, இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் தலைமைகளும் அவர்களது செயற்பாடுகளும் தொடர்பான சுயபரிசோதனையை, மேற்கொள்ளவேண்டிய கடப்பாட்டுக்குள்  அவர்கள் செல்ல கட்டாயமாக்கப்பட்டுள்ளனர்.   ஏனெனில், இலங்கையில் வாழும் இரு பிரதான சிறுபான்மையினரான முஸ்லிம்,  தமிழர் என்ற இரு தரப்பு அரசியல் தலைமைகளையும் பார்க்கும் போது, முஸ்லிம்களுக்குத் தமது அரசியல் தலைமையை, எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்ற அரசியல் தெளிவு, ஏற்பட்டிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது.   வன்னிப்பிரதேசத்தைப் பார்க்கின்ற போது, அவர்களது ஆரம்பத் தெரிவு, ஒரு தமிழரான சுந்தரமூர்த்தி என்ற ஆசிரியரை அபூபக்கராக்கி, அவரைத் தமது நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அழகு பார்த்திருந்தார்கள்.  அது மாத்திரமின்றி, அபூபக்கராகிய சுந்திரமூர்த்தி அமைச்சராக, முஸ்லிம் சமூகத்துக்காகப் பல்வேறு வரப்பிரசாதங்களை, அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்திருந்தமையை மறந்து விட முடியாது.   அதன் பின்னரான காலத்தில், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நூர்டீன் மசூரைத் தமது பிரதிநிதியாக்கி, அவரையும் மீள்குடியேற்ற அமைச்சராக அரியணையில் ஏற்றி, தமது தேவைகளைப் பெற்றிருந்தார்கள்.   அக்காலப்பகுதியிலேயே, நூர்டீன் மசூரின் சேவைக்கு ஓய்வு கொடுத்து, அவரால் முஸ்லிம் காங்கிரஸுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீனை, நூர்டீன் மசூருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அவரை அமைச்சராக்கியும் தமது சமூகத்தின் மேன்மைக்கும் வாழ்வியலுக்கும் உரமூட்டிக்கொண்டனர்.   இக்காலப்பகுதியிலேயே, தமது சமூகத்தின் வளர்ச்சிக்கு, இருவரை வேறு வேறு கட்சிகளின் ஊடாக உருவாக்கினால் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டியில், மேலும் தமது சமூகத்தின் வளர்சிக்கு உறுதுணையாகும் என்ற எண்ணப்பாட்டில், சுதந்திரக்கட்சியின் சார்பில் கே. கே. மஸ்தானையும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, வன்னித்தேர்தல் தொகுதியில் தமக்கான இரு பிரதிநிதிகளை முஸ்லிம் சமூகம் உருவாக்கி கொண்டது. இதுவே அவர்களின் அரசியல் ஞானம் என்பது.   எனினும், இவ்வாறான அரசியல் ஞானம், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதா என்றால், 50 சதவீதம் கூட உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.  தொடர்ந்தும் ஒரு சின்னம் என்ற கோட்பாட்டுக்குள் சுழன்றடிப்பது மாத்திரமன்றி, ஒரே முகத்தைத் தொடர்ந்தும் தெரிவு செய்வதும் அதனூடாக எந்தவித வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியமும் தமிழ் சமூகத்திலேயே உள்ளது.   முஸ்லிம் சமூகம், எவ்வாறு வன்னித் தேர்தல் களத்தில், மாற்றி மாற்றித் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருந்தபோதிலும், கடந்த 20 வருடங்களாக தமிழர் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரே முகங்களையே தெரிவு செய்திருப்பதும், மாற்று அணியையோ வேறு தெரிவுகளை விரும்பாமையும் அரசியல் தெளிவுத் தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இச்சூழலில், தமிழர்களுக்கான தீர்வையும் உரிமையையும் தம்மால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பெற்றுத்தருவார்கள் என்றால், அது சாதகமான நிலையன்று.   சிறுபான்மைச் சமூகமொன்று, தமது இருப்புக்காக, முதலில் தான் வாழும்  நிலத்தைக் காக்க வல்லமையுள்ளதாக இருத்தல் வேண்டும். அதன் பிற்பாடு, தமது மரபுசார் உரிமைகளைப் பாதுகாத்திருத்தல் வேண்டும். எனினும், அவை தொடர்ந்து வரும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளால், பேணி பாதுகாக்கப்படாமையால் இன்று அவை நிலைகுலைந்துபோயுள்ளன.   தமிழர் மரபுரிமைப் பேரவையின் தலைவர் வீ. நவநீதனின் கருத்தின் பிரகாரம், 1891 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் நான்கு சதவீதமாக இருந்த சிங்கள மக்கள், 2012 ஆம் ஆண்டு 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.   இது எவ்வாறு சாத்தியமானது. தமிழ்ப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் தமிழர்களின் நிலங்களில், இலங்கை அரசாங்கத்தால் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டபோது, கண்டும் காணாதது போல் இருந்ததையும் தமிழர் குடியேற்றங்களைச் செயற்படுத்த முனைப்புக் காட்டாமையும் பெரும் தாக்கமாக இருந்துள்ளது.   இவற்றுக்குமப்பால் நவநீதனின் கருத்தின் பிரகாரம், போர் முடிந்த கையோடு, ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய, ஒன்பது கிராமங்களைக் கொண்ட வெலிஓயா என்கின்ற தனியொரு பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்டு, அது முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.  பதிவுகளின்படி 7,017 சிங்களவர்கள் அப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒரு பிரதேச செயலகப் பிரிவு, போருக்கு பின்னால் உருவாகியிருக்கின்றது.   வவுனியா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக்கூடிய 14,028 சிங்களவர்களுக்கு மேலதிகமாக, வவுனியா தமிழ்ப் பிரதேச செயலகத்தோடு கள்ளிகுளம் என்ற கிராம சேவையாளர் பிரிவோடு, மகாவலித் திட்டத்தினூடாக மூன்று கிராமங்கள் புதிதாக அண்மையில் இணைக்கப்பட்டிருக்கிறது. ‘நாமல்கம’, ‘நந்தமித்ரகம’, ‘சங்கமித்தகம’ என்று புதிய கிராமங்கள் இணைக்கப்பட்டு, 1,200 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, வவுனியா தமிழ்ப் பிரதேச செயலகப்பிரிவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.   இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்கள் தற்போதும் நடந்தேறி வருவது தொடர்பில், தமிழ் பிரதிநிதிகள் மௌனம் காப்பது, ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்காது இருப்பதானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஆபத்தான சூழலை, இன்னும் 10 வருடங்களுக்குள் உருவாக்கும் என்பது மறுப்பதற்கில்லை.   வெறுமனே ‘கம்பெரலிய’வால் வரும் நிதியினூடாக மாத்திரம், தமிழர்களின் மனங்களை வென்றுவிடலாம் என்கின்ற எண்ணப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த அபிவிருத்திகளை அனுபவிப்பதற்கான காலச்சூழல், இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்களுக்கு இல்லாமல் போய்விடுமோ என்கின்ற ஐயப்பாடு காணப்பட்டு வரும் நிலையில், சிறு ஒழுங்கைகளையும் கோவில்களையும் பொது நோக்கு மண்டபங்களையும் கட்டிவிடுவதால் தமிழர்களின் உரிமைகளை வெல்லவோ, தமிழர்களின் நிலங்களைப் பாதுகாக்கவோ முடியாது.  வடக்கு, கிழக்கில் எல்லையோரங்களில் இருக்கும் நிலங்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய தேவை, தமிழ்த் தலைமைகளுக்கு உருவாகியுள்ளது.   யுத்த காலத்தில், வவுனியா மாவட்டத்தின் எல்லையோரத்தில் ‘புளொட்’ அமைப்பினர் எவ்வாறு தமிழர் குடியேற்றங்களை நிறுவி, வவுனியாவின் நிலத்தைத் தம்மால் முடிந்தளவுக்குக் காத்துக்கொண்டார்களோ, அதையும் விடப் பாரியளவிலான வேலைத்திட்டத்தை முன்னகர்த்தவேண்டிய தேவை, தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகின்றது.   வெறுமனே, முஸ்லிம் பிரதிநிதிகள் வரக்கூடாது என்ற கோசங்களை எழுப்பி, தமிழர்களை ஒன்றுபடவும் வாக்குப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள் என அறைகூவல் விடுக்கும் ‘சிறிடெலோ’ போன்ற தேசியக்கட்சிகளின் செல்லப்பிள்ளைகள், இதுவரை காலமும் தமது பிரதிநிதிகளூடாக, முல்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கவே வழிவகை செய்திருந்தனர்.  எனினும், தற்போது தம்மைத் தேசியவாதிகளாகக் காட்டிக்கொண்டு மக்களை உசுப்பேற்றும் அடுத்த அரசியல் கட்சியாக உருவெடுக்க முனைப்பைக்  காட்டுகின்றது.   எனவே, தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உசுப்பேற்றும் அரசியலையும் மத்திய அரசாங்கத்தின் நிதியில் அபிவிருத்தி மோகத்தையும் காட்டி, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பை மறைக்க, தமிழ்க் கட்சிகளே முன்னிற்பதானது, காலக்கிரமத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன் தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சிறந்த பாடத்தையும் புகட்டி நிற்கும் என்பது, மறுப்பதற்கில்லை.   இந்நிலையிலேயே, தமிழர்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள, ஆக்கபூர்வமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காகத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆவல் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.  ஏக பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்வாறான விடயங்களுக்கு என்ன பதிலைக் கூறி, அடுத்து வரப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, தமது மக்கள் முன் செல்லப்போகின்றனர் என்ற ஐயப்பாடு நிறைந்துள்ளது.   ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் “இரண்டு வருடங்களுக்குள் தீர்வு” என்றபோது, மௌனம் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், குறித்த விடயத்தை ஊடகங்கள் தொடர்ந்து வந்த நாள்களில் பாரிய அளவில் சுட்டிக்காட்டியபோது, அதற்கான வியாக்கியானங்களை முன்வைக்கவும் அக்கருத்தை மறுதலிக்கவும் கங்கணங்கட்டிக் கொண்டது.   இது வெறும் பசப்புக்காகவேயன்றி, தமிழ் மக்கள் மீதான நம்பிக்கையின்பால் உருவான கருத்துகளா என்பதை ஆராயவேண்டும். ஆகவே, அரசாங்கத்துக்கான  தொடர்ச்சியான அரசாங்கத்துக்கான ஆதரவுத் தளத்தில் இருந்து, எதையும் சாதிக்க முடியாத நிலையில், தமிழர்களின் நிலங்களையும் காப்பாற்றிககொள்ளமுடியாத கையாலாகாத்தனம் என்பது, தமிழர்களை எந்தத் தளத்தில் கொண்டு சென்று விடும் என்பது தொடர்பில், சிவில் சமூக பிரதிநிதிகளின் வேகமான செயற்பாட்டின் மூலமே, வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.   அப்போதேனும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தலைமைத்துவங்களில் மாற்றம் ஏற்பட்டு, தமிழர்களுக்காகப் புதிய தலைமைகள் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே, காலங்கள் நகரத்தொடங்கும்.     ‘ஒன்றாக இணையுங்கள்’ எம். கே. சிவாஜிலிங்கம் வவுனியாவில் நடைபெற்ற ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ என்ற கருத்தாடல் நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், “தமிழ் கட்சிகளை ஒன்றாக இணையுங்கள் என்றால், அது தமிழ்த் தேசியத்தின்பால் இருப்பவர்களையே குறிப்பதாகும். ஆனால், தமிழ்க் கட்சிகள் என்றால், ‘நாசமகிப்போன’ கட்சிகளும் இருக்கின்றன. ஆகவே, தமிழ்த் தேசியத்துக்குள் வர முடியாத கட்சிகள் எது என்பதை மக்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.  எனவே, அவரின் கூற்றின் பிரகாரம், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள், ஒற்றுமைப்படுவது என்பது, சாத்தியமற்றுப்போயிருப்பது மாத்திரமல்ல, அவ்வாறான முயற்சிகளில் எவரும் இறங்கிப் பயன் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் எனலாம்.   இந்நிலையில், தமிழ் மக்களின் தேசியத்தின்பால் நிற்கும் கட்சிகள் ஒன்றாகச் சேருவது, 100 சதவீதம் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியபோது கூட, 100 சதவீத ஒற்றுமை இருக்கவில்லை. ஆனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஒற்றுமை இருந்தது. தேர்தல் அரசியலுக்காக ஒன்றுமையை கட்டியெழுப்புவதில் பல இடர்பாடுகள் இருக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே!   சாதாரணமாகத் தமிழ் இனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான நில அபகரிப்பு, பறிக்கப்பட்ட காணிகளை மீட்க முடியாமை, காணாமல் செய்யப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற  பிரச்சினைகளுக்கே ஒன்றுபட்டுப் பேச முடியவில்லை என்றால், அதில் கோளாறு இருக்கிறது எனவும்  சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவித்திருந்தார்.  சிவசக்தி ஆனந்தன் “ஆட்சியில் இருக்க கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேருடனேயே இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நாட்டில் அரசியல் குழப்பம் வரும்போது, எமது அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் இரவு பகலாக நீதிமன்றத்தில் போராடி தற்போதுள்ள பிரதமரின் பதவியை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர்.  இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கொழும்பில் உள்ள அத்தனை இராஜதந்திரிகளையும் அழைத்து, நான்கரை வருடங்களாக நாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய போதிலும் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வில் இருந்து அத்தனை விடயங்களிலும் எம்மை ஏமாற்றியிருக்கின்றது. இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்குப்போக இருக்கின்றார்கள். இந்நிலையில் நாங்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாது இருக்கிறது. எனவே ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்காது விட்டால், நாம் எமது ஆதரவை நீக்கிக்கொள்ளவுள்ளோம் என்கின்ற செய்தியை சொல்ல வேண்டும். இந்நிலையில் அவர்களுக்கும் அடுத்த ஜனாதிபதியாக யாரைக்கொண்டு வருவது என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அது தற்போதைய ரணிலா அல்லது மஹிந்த தரப்பில் உள்ள ஒருவரைக் கொண்டு வருவதா என்ற நிலை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது.  ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கே தீர்மானிக்கும் சக்கி என்பதால் சர்வதேசமும் தமக்குத் தேவையாக உள்ள தற்போதைய அரசைத் தக்க வைக்க வேண்டும் என்பதால் இந்த அரசாங்கத்தை வைத்துத் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் . இன்று தொல்லியல் திணைக்களம் வடக்கு, கிழக்கில் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை இடங்களையும் சின்னங்களையும் அபகரிக்கின்றது.  இந்தத் திணைக்களத்தின் அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்துக்குக்  கீழ்தான் உள்ளார். இவ்வாறு இருக்கையில், இற்றைவரை இந்த அமைச்சரை இவ்வாறான விடயங்களில் தலையிடுவதை நிறுத்த முடியாமல்தான் உள்ளது.  ஆகவே, தற்போதுள்ள ஒரு சந்தர்ப்பம், சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வழங்கிச் செய்யக்கூடிய விடயங்களை செயற்படுத்த வேண்டும்” என்றார் http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்வாதிகளின்-அபிவிருத்தி-அரசியல்-பறிபோகும்-தமிழர்-நிலங்கள்/91-235738
  • வரலாற்றின் திருப்புமுனையில் வரலாறு படைப்போம் காரை துர்க்கா / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:51 Comments - 0 ஈழத்தமிழர் வரலாற்றில் ஜூலை மாதம், கறைகள் படிந்த கறுப்பு மாதமாகவே, கடந்து செல்கின்றது. இவ்வருட ஜூலை மாதமும் இரத்தக்களரியை நோக்கிச் செல்கின்றதா என்ற பயமும் பதற்றமும் தமிழர் மனங்களில் குடிகொண்டு உள்ளது.    தமிழர் தேசம் மீது, இரண்டு வகையான போர்கள், பேரினவாத அரசாங்கங்களால் ஏககாலத்தில் தொடுக்கப்பட்டு உள்ளன. முதலாவது, சிங்கள - தமிழ் இனப்பிணக்குத் தொடர்பான தீர்வுத் திட்டங்களைத் திட்டமிட்டவாறு, நொண்டிச் சாட்டுகளைக் கொண்டு காலம் கடத்திச் செல்வது.    அதேநேரம், அக்காலப் பகுதியில் வடக்குக் கிழக்கின் தமிழர் இனப்பரம்பலை விரைவாக மாற்றி, அவர்களைப் பலம் குன்றச் செய்து, பௌத்த சிங்கள மயப்படுத்தி, மதமேலாதிக்கத்தை நிலைநாட்டுவதாகும்.  இதன் தொடராக, தீர்வுத் திட்டத்தையே நீர்த்துப் போகச் செய்வது. ‘ஒரே நாடு ஒரே தேசம்’ என வெற்றுக் கோசமிடுவது போன்ற திட்டமிடப்பட்ட சங்கிலித் தொடரான நடவடிக்கைகள் ஆகும்.   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் கொண்டு வரப்பட்ட (1956) தனிச்சிங்களச் சட்டமே, தமிழ் மக்களுக்கு தமிழ் (தாய்) மொழி மீதான பற்றை மேலும் அதிகரித்தது.  ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதையை தலைவர் டி.எஸ் சேனநாயக்காவின் (1948) தமிழ் மண் பறிக்கும் திட்டங்களே, தமிழ் மக்களிடையே தமிழ் (தாய்) மண் காக்க வேண்டிய தேவைப்பாட்டைக் கூட்டியது. இதுவே, தமிழர் தாயகம், தமிழர் மரபு வழித்தாயகம், தாயகக் கோட்பாடு என்ற எண்ணக் கருக்களைத் தமிழர் மனங்களில் ஆழ விதைத்தது.    தமிழ், தமிழர், தமிழர் தேசம் என்ற மூன்று அம்சங்களிலும் அடிப்படையிலேயே, தமிழ் மக்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்; தக்க வைக்க முடியும். ஆகவே, இவற்றைச் சிதைப்பதும் இல்லாமல் செய்வதுமே, அன்று தொட்டு, இன்று வரை பேரினவாதிகளது மந்திர உச்சாடனமாக உள்ளது. அதுவே, காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.    தமிழர், சிங்களவர் இனப்பிணக்கைத் தீர்க்கும் முகமாகக் கொண்டு வரப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தம், 1958 ஏப்ரல் எட்டாம் திகதி, பௌத்த தேரர்களது அழுத்தம் காரணமாக, கிழித்து எறியப்பட்டது. அதையடுத்து, மே மாதம் ஐந்தாம் திகதி, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வவுனியாவில் நடைபெற்றது.    அந்த மாநாட்டின் தலைவராக, திருமலை இராஜவரோதயம் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் உரையாற்றும்போது, “தமிழ் மக்களை இன்று (1958) ஒருவித சஞ்சலம் பிடித்திருக்கின்றது. அரசாங்கம், தங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக இல்லை என்ற உணர்ச்சி, அவர்தம் உள்ளங்களில் அலை மோதுகின்றது” எனத் தெரிவித்திருந்தார்.  இதே நிலைவரமே, இந்த நாட்டில் தமிழர்கள் விடயத்தில், 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் உள்ளது.    இவற்றை எதிர்த்து, காலம்காலமாகக் குரல் எழுப்பிய தமிழ்த் தலைவர்களது கோரிக்கைகள் முற்றிலும் அசட்டை செய்யப்பட்டன; கண்டு கொள்ளப்படவே இல்லை. இவையே, மொழியையும் மண்ணையும் காப்பதற்காகத் தமிழ் இளைஞர்களை, ஆயுதம் தூக்க வேண்டிய நிலைக்குள் வலிந்து தள்ளின.    தமிழ் மக்களது இருப்புக்கான விடுதலைப் போராட்டம், பேரினவாத அரசாங்கங்களால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இல்லாமல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சிங்களப் பௌத்த பேரினவாத அடாவடித்தனங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன. இவற்றால் தமிழ் மக்கள் கவலைகளாலும் மனச்சோர்வாலும் துவண்டு போய் இருக்கின்றார்கள்.    அன்று, சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டமும் தோற்றது. அடுத்து, ஆயுதப் போராட்டமும் தோற்கடிப்புச் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் மக்கள் இனி என்ன செய்வது, யாரிடம் முறையிடுவது,  முறையிட்டும் என்ன பயன் கிடைத்தது,  என்ன கிடைக்கப் போகின்றது? எனச் சஞ்சலமான நிலையிலேயே உள்ளனர்.    தற்போது, பல கமெராக்கள் சுற்றிவரப் படமெடுக்கும் வேளையிலேயே, பேரினவாதம் தமிழர்களையும் அவர்தம் மதகுருக்களையும் கேவலமாக இழிவு படுத்துகின்றது. எச்சில் சுடுதேநீரை அவர்கள் தலையில் கொட்டுகின்றது; அதனை இரசிக்கின்றது. அவற்றை பொலிஸாரும் வேடிக்கை பார்க்கின்றனர். இதேநிலை, இன்று ஒரு பௌத்த மதகுருவுக்கு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிறமதங்களை மதிக்கும் பண்பை, கன்னியாவில் கண்ணியம் இல்லாது செய்து விட்டார்கள்.    இந்நிலையில், மூடிய பிரதேசத்தில் அன்று நடைபெற்ற இறுதி யுத்தத்தில், பேரினவாதம் எப்படியெல்லாம் கரு அறுத்திருக்கும் என, ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.    “பேரினவாதம் எங்களை மேலும் துன்புறுத்தத் துன்புறுத்த, வேதனைப்படுத்த, எங்கள் மண் மீதான காதல், எங்களுக்கு அதிகரிக்கின்றது” என ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் உணர ஆரம்பித்துள்ளார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கும் தம் தேசம் மீதான நே(பா)சம் அதிகரிக்கின்றது. சொந்த மண்ணில் பல கொடுமைகளை அனுபவித்துப் புலம்பெயாந்தவர்கள், தங்கள் இரத்தங்கள் இன்னமும் கொடுமைக்குள் வாழ்வது தொடர்பில் விரக்தி கொண்டுள்ளனர்.    இலங்கையில் பேரினவாதம், உண்மையான சமாதானத்தின் ஊடாக மாற்றத்தைக் கொண்டு வர, ஒருபோதும் தயாரில்லை. ஏன், அது தொடர்பில் சிந்திக்கவே இல்லை. உக்கிப் போன சிந்தனைகளையும் காலாவதியான யோசனைகளையும் கொண்டு, தனது வழமையான பாதையிலேயே பயணிக்கின்றது.    ஆகவே, இந்நிலையில் எங்கள் நிலமும் புலமும் ஒன்று சேர்ந்து கூட்டுஅறிவை ஆயுதமாக்க (இராஜதந்திரப் போர்) வேண்டியதே இன்றைய அவசர தேவை ஆகும். தமிழ் மக்கள் அறிவார்ந்த ரீதியில் புதுவகையான, புதுமையான அரசியலை ஆரம்பிக்க வேண்டும். சர்வதேசம், தமிழ் மக்களது விடுதலைப் போரை ஸ்தம்பிக்கச் செய்ய, இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது.    அதே சர்வதேசத்தை, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்கக் கூடிய காரியங்களை ஆரம்பிக்க வேண்டும். எங்கள் நாட்டில், எங்கள் இனம் (தமிழ்) மீது 70 ஆண்டு காலமாக, ஆட்சியாளர்களால் அவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டூழியங்கள் வெளிநாடுகளினது கதவு(இதயங்)களைத் தட்ட வேண்டும்.    இன்று உலகம், உள்ளங்கைக்குள் வந்து விட்டது. அதனூடாக அனைத்து மொழிகளிலும் ஈழத்தமிழர் அவலங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். இலங்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒரு வரையறைக்குள் மாத்திரமே செயற்பட முடியும். ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாது, சுயாதீனமாகப் புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்கள் செயற்படலாம்.    இன்று, தமிழ் மக்கள் சர்வதேசம் எங்கும் பரவி வாழ்கின்றனர். 1983இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது, வெறும் 150 தமிழர்களே கனடாவில் வசித்தார்கள். இன்று நாங்கள் அறிவுப் போராட்டத்தை ஆரம்பிக்கும் வேளையில் சுமார் நான்கு இலட்சம் தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றார்கள். இது போலவே, ஐரோப்பிய நாடுகளிலும் கணிசமான அளவில் தமிழ் மக்கள் வசிக்கின்றார்கள்.    அசாதாரண நெருக்கீடுகள் ஏற்படும் வேளைகளில், அசாத்தியமான துணிவு வரும். அந்த அசாத்தியமான துணிவே பல முனைகளிலும் முறைகளிலும் தமிழர் இருப்பைக் கடந்த காலங்களில் காப்பாற்றியது. இந்தத் தீர்க்கமான நேரத்தில், எங்கள் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என அனைவரும் தங்களுக்குள் வினா எழுப்ப வேண்டும்.    நிலத்தில், தமிழர் இருப்பைத் தக்கவைக்க இளைஞர்கள் இணைந்து உள்ளார்கள். முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் பெரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில், 1,008 பானைகளில் பொங்கல் படைத்து, தமிழர் மரபைப் தொடர்ந்து பேணுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டு உள்ளார்கள். அதன் தொடராக, கன்னியா எனக் களங்கள் வரிவடைகின்றன. இதில் இந்து, கிறிஸ்தவ வேறுபாடுகள் கடந்து தமிழர்களாகத் தமிழ் இனமாக, மக்கள் அணி திரண்டு உள்ளனர்.    ‘பெரிய பிசாசு வந்தால் சிக்கல்; சின்னப் பிசாசு இருந்தால் ஓரளவு பரவாயில்லை’ என்ற இக்கட்டு நிலையே, தமிழ் மக்களிடம் உள்ளது. ஒவ்வொரு தடவையும் தமிழ் மக்களை, வாக்குப் போடும் இயந்திரமாகப் பார்க்கும் போக்கை மாற்றிக் காட்ட வேண்டும். அவர்கள் ஏவிவிடும் எமக்கான சவால்கள் அனைத்தையும் எமக்கான வாய்ப்பாக மாற்ற வேண்டும்.    எம்மிடையே காணப்படுகின்ற பிரிவினைகளையும் மாறுபட்ட அம்சங்களையும் விலத்தி, எம்மை ஒன்றிணைக்கும் அம்சங்களில் பொதுமைப்பட வேண்டும். நிலத்திலும் புலத்திலும் இளைஞர் அமைப்புகள் ஒன்று கூட வேண்டும். 70 ஆண்டு காலமாகப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய சங்கதிகள், எங்கள் அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். எம் சமூகத்திடம் உள்ள வலி(மை)யையும் வெளிப்படுத்த வேண்டும்.    இவை சொல்வதற்குச் சுலபமானவை; செய்வதற்குக் கடினமானவை. இவற்றை இடைவிடாது ஆற்ற, ஒழுங்கமைக்க ஆற்றலுள்ள மாற்றம் காணாத தலைமை வேண்டும். ஆதனாலேயே கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலங்களில், தமிழ் மக்களது சர்வதேச விடயங்களைக் கையாளுவதற்கென உபகுழு ஒன்று உருவாக்கப்பட்டது.    ஆகவே, எங்களுக்கிடையிலான அற்ப பகைமை எண்ணங்களை அடியோடு அறுத்தெறிவோம். அச்சத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே அகப்பட்டுள்ள தமிழர் வாழ்வில் ஒளியேற்ற ஒன்றிணைவோம். ஏனெனில், நாம் கூடியிருந்து குதூகலிக்க, எங்களின் தாய்(மடி) மண் எமக்கு வேண்டும்.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாற்றின்-திருப்புமுனையில்-வரலாறு-படைப்போம்/91-235736  
  • தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவு J.A. George / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:09    மெகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார். தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் கடந்த சில தினங்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவிந்தன் கோடிஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று அவரை சந்தித்தனர்.     http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தேவதாசனின்-உண்ணாவிரதம்-நிறைவு/150-235737
  • ஒரு அறிவிலியைப் பார்த்துத் தலைக்குள் ஒரு மண்ணும் இல்லையே என்று ஆன்றோர் கூறுவது எதனால்.......??????🤔
  • சிறுபான்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பான்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா ?   -எம்.ரீ. ஹைதர் அலி -சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாராஎன்ற சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ.வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது என்கின்ற ஆதாரமற்ற மிகப்பெரும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ.வீ. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாத்த்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதாரபூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர் நீதியரசர் என்கின்ற பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபாண்மை மீது இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.21/4 தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான அபாண்டமான கருத்துக்கள் முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப் பார்வையை மேலும் அதிகரிக்கும் விதமாக மாறியுள்ளது.நாட்டில் பேரினவாதம் சிறுபாண்மைகளை ஓரம்கட்டி தனிச் சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஒரு பன்சலையினூடாக ஒரு ஆயிரம் வாக்கு என்ற முன்னெடுப்புக்களை முன்னெடுத்து 7,000,000 பேரின் வாக்கினால் நாட்டினுடைய தலைவரை தேர்வு செய்ய முயற்சிக்கும் மிக ஆபத்தான சூழலில் சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை சீ.வீ. வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து வெளியேற்றப்படும் அந்தநாளில் புரிந்துகொள்வார்.ஆக மொத்தத்தில் சீ.வீ. அவர்கள் இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இன நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்ற நல்ல சிந்தனையுடன் எதிர்காலத்தில் பயணிக்க சிறுபான்மை சமூகம் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2019/07/scv.html