• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

தீபாவளி சிரிப்பு.

Recommended Posts

அடேய்..! அந்த கைல பத்த வச்ச பட்டாசு கிடக்கட்டும்.. முதல்ல இந்த கைல இருக்குற சீனா மொபைல தூக்கி கடாசுடா ..! வெடிச்சுட போகுது..😊

தீபாவளி பரிதாபங்கள்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவிகளா! என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க. நான் கூட கொஞ்ச நேரத்துல வேற என்னமோ செய்தினு நினைச்சுட்டேன்...🤣

Bild

  • Like 1
  • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஆயுள் தாண்டி வாழும் வித்தை: உடலுறுப்பு தானம் கடைசித் தருணங்கள்.. C/F/19: "முன் ஆசனத்தில் ஆசனப் பட்டி அணியாமல் இருந்திருக்கிறார். விபத்தில் தூக்கி வீசப் பட்டு தலைக் காயம், அனுமதிக்கப் பட்ட பின்னர் சடுதியான மூளை இறப்பு. இறந்த நேரம்...." B/M/45: "மயங்கிய நிலையில் வீட்டின் படுக்கையறையில் காணப்பட்டவரை, அவசர சேவையினர் உயிர்ப்பிக்க முயற்சித்தனர். இதயத் துடிப்பு மீண்டது, மருத்துவமனையில் மூளை இறப்பு உறுதி செய்யப் பட்டது. இறந்த நேரம்..." H/M/23: "GSW (gunshot wound). அனுமதிக்கப்பட்ட நேரம் 2.20; இறப்பு உறுதி செய்யப்பட்டது 07:20 ..." என்னுடைய ஆய்வுப் பணிகளின் முக்கியமான அங்கம், இறந்த மனிதர்களிடமிருந்து கிடைக்கும் சுவாசப் பைகளை உடலுக்கு வெளியே சிறிது நாட்கள் உயிருடன் வைத்து அதன் மூலம் சுவாச நோய்கள் தொடர்பான ஆய்வுகள் செய்வது. மேலே நீங்கள் காண்பது கடந்த ஆண்டில் நாம் கையாண்ட 3 சுவாசப் பைகளின் சொந்தக் காரர்களின் இறுதிக் கணத்தை விபரிக்கும் மருத்துவக் குறிப்புகள். இந்த நல்ல மனிதர்களின் இறுதிக் கணங்கள் பல்வேறு மாதிரியாக இருந்தாலும் ஒரு விடயத்தில் இவர்கள் ஒரே குடையின் கீழ் வருகிறார்கள்: உடல் உறுப்பு தானம் என்பதே அந்த மாபெரும் மனித நேயக் குடை! உட ல் உறுப்பு தானங்கள் உயிர் காக்கின்றன... உடல் உறுப்பு தானங்களால் உலகம் முழுவதும் பல மில்லியன் மக்களின் உயிர்கள் காக்கப் படுகின்றன. மேலே நான் குறிப்பிட்டிருப்பது போல, ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறு எண்ணிக்கையான சுவாசப் பைகள் வருகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 2000 வரையான சுவாசப் பைகள் பல்வேறு சுவாச நோய்களால் பாதிக்கப் பட்டோரில் உறுப்பு மாற்ற சிகிச்சை மூலம் பொருத்தப் படுகின்றன. வாழ்வதற்கு சில மாதங்களே வழங்க பட்ட நிலையில் இருக்கும் நோயாளிகள் நாடுகளின் உறுப்பு மாற்ற சேவையில் பதிந்து விட்டுக் காத்திருந்து இந்த உறுப்புகளைப் பெற்றுக் கொள்வர். இந்த உறுப்பு மாற்றங்கள் ஊழலுக்குட்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மேற்கு நாடுகளில் இந்த காத்திருப்புப் பட்டியல் கணிணி மயப் படுத்தப் பட்டிருக்கிறது. காத்திருக்கும் நோயாளியின் நோய்த் தீவிரம், வயது, போன்ற காரணிகளைக் கொண்டு கணிணியே தானம் கிடைத்த  உறுப்பை  யார் பெறுவர் என்று தீர்மானிக்கிறது. அதன் பிறகு மருத்துவர்களின் பணி ஆரம்பிக்கிறது.  இறந்த பின் செய்யும் உடலுறுப்புத் தானங்களுக்கு உங்கள் அனுமதியைக் கொடுப்பது இலகுவானது. பல நாடுகளில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் போதே இந்த முடிவை நீங்கள் எடுத்து அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். பல நாடுகளில் மரணமானவரின் உரிமையுடைய உறவினரே இந்த முடிவை இறப்பிற்குப் பிறகு எடுக்க முடியும்.  இவையெல்லாம் மரணத்தோடு தொடர்பு பட்ட somber ஆன விடயங்கள், முடிவுகள்! ஆனால், உறுப்பு மாற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒருவருக்கு அல்லது பலருக்கு உயிர் கொடுக்கும் வழியாக எம்மை உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்து கொள்வது சிறப்பான செயல்!  இறக்காமலே உயிர் காக்கும் தானங்கள் இதயம், சுவாசப்பைகள், ஈரல் , தோல், கருப்பை, .இப்படியான உறுப்புகள் இறந்த பின்னர் தானமாகக் கொடுக்கப் படுகின்றன. ஆனால் உயிரோடிருக்கும் போதே நாம் தானம் செய்யக் கூடிய எங்கள் உடற்கூறுகளும் இருக்கின்றன, அவையும் பல்லாயிரம் பேர்களின் உயிரை உடல் நலத்தை காக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன.  மிக இலகுவான தானம்..இரத்த தானம். அனேகமாகனோர் இலகுவாகச் செய்யக் கூடிய இரத்த தானம் உறுப்பு மாற்றம் எனக் கொள்ள முடியாவிட்டாலும் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு உடற்கூற்றுத் தானம். விபத்துக்குள்ளாகி இரத்த இழப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இரத்தத்தை ஈடு செய்ய  இரத்தம் பயன்படுவதை அனைவரும் அறிவோம். உண்மையில் தானமாகக் கிடைக்கும் இரத்தத்தில் இருந்து அதன் கூறுகளைப் பிரித்தெடுத்து பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் வழக்கப் படுகின்றன. உதாரணமாக குருதியுறைதலில் குறைபாடுடைய நோயுடையோரில் குருதிப் பெருக்கைக் கட்டுப் படுத்த, இரத்தத்தில் இருக்கும் குருதிச் சிறு தட்டுகளைப் (platelets) பிரித்தெடுத்து ஏற்றுவதன் மூலம் ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து உயிரோடு மீண்டு தம் குடும்பங்களுடன் சேர்கின்றனர். எனவே உங்கள் இரத்தக் கொடை என்பது ஒரு வலுவான உயிர்காப்பு மருந்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  என்பு மச்சை தானம் எங்கள் என்புகளின் நடுவே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு இழையம் என்பு மச்சை (bone marrow). மச்சையில் இருக்கும் பல்வேறு கலங்கள் எங்கள் இரத்தத்தின் முக்கிய கூறுகளை உருவாக்குவதால் உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாத பணியைச் செய்கிறது. 1986 இல், சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் அணு ஆலை வெடிப்பில், அதற்கு மிக அருகில் இருந்த பலர் இரண்டு மூன்று நாட்களில் இறந்து போனார்கள். அணுசக்திக் கதிர்வீச்சு, அவர்களில் என்பு மச்சையைத் தாக்கித் துடைத்தழித்து விட்டமையே அவர்களின் சடுதியான மரணத்திற்கு காரணம். மச்சையின் இன்றியமையாத தன்மையை எடுத்துக் காட்டும் உதாரணம் இது.  சில நோய் நிலைகளில் மச்சையின் தொழில்பாடு பாதிக்கப் படும் போது இரத்தப் புற்று நோய் வகைகளும், இரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். இத்தகைய நோயாளிகளின் உயிர்காக்க தானமாகக் கொடுக்கப் படும் மச்சை பயன்படுகிறது.  மச்சை தானம் செய்யும் நடைமுறை ஏனைய உறுப்புகளை விட வித்தியாசமானது. இதற்கென இருக்கும் ஒரு அமைப்பில் (registry) உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் பதிவாளர்களுக்கு டி.என்.ஏ யைப் பரிசோதிக்கும் வசதியை அந்த அமைப்பு செய்து கொடுக்கும். இந்த டி.என்.ஏ தகவலை வைத்துக் கொண்டு தேவையான நேரம் உங்களைத் தொடர்பு கொள்வர்.  பிறக்கும் போதே ஆரம்பிக்கும் தானம்: தொப்புள் கொடி தானம் சிசுவை தாயோடு இணைக்கும் தொப்புள் கொடி (umbilical cord) ஒரு அதிசயமான உறுப்பு. தொப்புள் கொடியினுள் காணப்படும் இரத்தம் (cord blood) உட்பட்ட இழையங்களில், என்பு மச்சைக்கு ஈடான வலுவுள்ள கலங்கள் காணப்படுகின்றன. கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் இந்த தொப்புள் கொடியை தானமாக வழங்கும் ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. சில இரத்தப் புற்று நோய்களில் நோயாளிகளின் இரத்த உற்பத்தியைப் புதுப்பிக்க இந்த தொப்புள் கொடி இரத்தத்தின் கலங்கள் பயன்படுத்த பட முடியும். தொப்புள் கொடி தானத்தின் இன்னுமொரு நன்மை, பிறக்கும் குழந்தைக்கு எதிர்காலத்தில் தேவையேற்படின், இவ்வாறு சேமிக்கப் பட்ட தொப்புள் கொடியின் இரத்தத்தையே சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். Autologous transplant எனப்படும் இத்தகைய உடற்கூறு மாற்றச் சிகிச்சையில் ஏனைய உறுப்பு மாற்றச் சிகிச்சைகளில் இருக்கும் பக்க விளைவுகள் இல்லை. உங்கள் மகப்பேற்று மருத்துவரிடம் தொப்புள் கொடி தானம், பிற்காலத் தேவைக்காக தொப்புள் கொடி இரத்தத்தைச் சேமித்தல் என்பன பற்றி அறிந்து கொள்ளலாம். தொடரும் கணங்கள்.. மேலேயுள்ள எந்த வகையான உடலுறுப்பு/உடற்கூறு தானமும் இன்னொரு உயிரின் ஆயுள் நீட்சிக்கு உதவுவதால், உங்கள் ஆயுளின் எல்லை கடந்து வாழும் ஒரு வழியாக இந்தத் தானங்கள் இருக்கின்றன. எனவே மரணம் முற்றுப் புள்ளி வைக்காத வாழ்வு உங்களுடையது!   -ஜஸ்ரின் 
    • தேர்தல் கொள்கை விளக்க உரை 1988    
    • கல்கத்தாவை சேர்ந்த ஒரு குயவர் சிலையால் கிராமம் முழுவதையும் உருவாக்கியுள்ளார். அவற்றிற்கு மூச்சு விட வைக்க மட்டும் மறந்துவிட்டார்.