• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்       இடைக்கால அரசின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பதவியேற்றார். சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/192758/
    • நியூஸிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்து அணியுடன் இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு - 20 தொடரை இங்கிலாந்து அணி 2:3 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று 'Mount Maunganui' யில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஆரம்பானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 90 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களுடன் உள்ளது. ரோரி பேர்ன்ஸ் 52 ஓட்டத்துடனும், டொமினிக் சிப்லி 22 ஓட்டத்துடனும், ஜோ டென்லி 74 ஓட்டத்துடனும் அணித் தலைவர் ஜோ ரூட் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பென்ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்துடனும், ஒலி போப் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுக்களையும், நெல் வக்னர் மற்றும் டீம் சவுதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழத்தினர்.  நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும். https://www.virakesari.lk/article/69395
    • கண்ணீர் சிந்துவதை ஆண்கள் அவமானமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.  சர்வதேச ஆண்கள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் சக ஆண்களுக்காக உருக்கமான ஒரு மடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சில வேளைகளில் தோற்றுப்போவீர்கள். உடைந்து அழுதுவிட வேண்டும் எனத்தோன்றும். எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து விடலாம் எனத் துடிப்பீர்கள். ஆனால், கண்டிப்பாகக் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு உறுதிமிக்கவராக நடிப்பீர்கள். ஏனெனில், அதைத்தான் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆண்மகன் அழுதால் பலமிழந்து விடுவான் என நம்ப வைக்கப்படுகிறோம். நானும் இதை உளமார நம்பி வளர்ந்தேன். அத்தகைய நம்பிக்கை தவறென நான் உணர்ந்து கொண்டதாலே உனக்கு இம்மடலை எழுதுகிறேன். என் போராட்டங்கள், வலிகள்தான் நீங்கள் அறிந்த சச்சினை உருவாக்கின. அவையே என்னைச் செதுக்கின. 16/11/2013. நான் ஆடுகளத்தில் நின்ற அந்நாளை இன்னமும் மறக்கவில்லை. அதுகுறித்து நீண்ட காலமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்றாலும் எதுவும் பெவிலியன் நோக்கி கடைசியாக நடைபோடும் அக்கணத்திற்கு என்னை எதுவும் தயார்படுத்தவில்லை. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன். தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது . எல்லாம் முடியப்போகிறது எனும் அச்சவுணர்வு சூழ்ந்தது. மண்டையில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன. எதையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள இயலவில்லை. நான் அதைத்தடுக்கத் துளியும் போராடவில்லை. உலகத்தின் முன் உடைந்து அழுதேன். ஆச்சரியப்படும் வகையில், ஒரு வகையான அமைதியை உணர்ந்தேன். அப்படி என்னை வெளிக்காட்டியதால் இன்னமும் வலிமை கூடியவனாக, எனக்குக் கிடைத்தவற்றுக்கெல்லாம் நன்றியுடையவனாக உணர்ந்தேன். நான் போதுமான அளவு ஆணாக உணர்ந்தேன். கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் கசிந்தொழுகும் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள். உங்களின் வலியை, நீங்கள் காயப்பட்டிருப்பதை வெளிக்காட்ட அதீத தைரியம் வேண்டும். அன்றைய காலையைப் போல நீங்களும் தீரமிக்கவராக, மேம்பட்டவராக வெளிப்படுவீர்கள். ஆண்கள் இவற்றைச் செய்யலாம், செய்யக்கூடாது என விதிக்கப்பட்டிருப்பவற்றை, நம்புபவற்றைக் கடந்து வாருங்கள் என உங்களை அழைக்கிறேன். நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் இத்தகைய அச்சமின்மை உங்களுக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துகிறேன்  எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/69391
    • சர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ' தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ' என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.   அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை ஆயுத படைகளுக்கும் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவே பொறுப்பு கூறக் கூடிய இராணுவத்தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள். இதே போல் இலங்கை ஆயுத படைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பி.பி;.சி பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம்   (எம்.மனோசித்ரா) https://www.virakesari.lk/article/69447