• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • வீட்டுக்குள்.. செத்த மான் கொம்பு... புலிப் பல்லு.. ஆனை முடி.. தந்தம்.. மான் தோல்.. மயிலிறகு.. சிப்பி.. சங்கு...இப்படி இஸ்தியாதி ஐட்டங்களை எல்லாம் வைத்து அழகு பார்க்கும்.. தாங்களா. பேய்க்குப் பயப்படுகிறீர்கள்..??!  அதென்ன.. மனிதன் இறந்தால் தான் அவன் ஆவி பேய் ஆகுமா.. ஏன் பிற உயிரினங்களை ஆயிரக்கணக்கில் கொன்று அதன் பிணத்தை தின்கிறமே.. அப்ப அவற்றின் பேய் பிடிக்காதா. அப்படிப் பார்த்தால்.. எத்தனை.. கோழிப் பேய்.. மாட்டுப் பேய்.. ஆட்டுப் பேய்.. பன்றிப் பேய்கள்.. மீன் பேய்.. நண்டுப் பேய்.. கணவாய் பேய்... இறால் பேய்.. கத்தரிக்காய் பேய்.. முருங்கைக்காய் பேய்.. உருளைக்கிழங்குப் பேய்...  இப்படி இன்னும் இன்னும்.. இந்த உலகில் அலைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மை பிடித்து தின்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை..??! ஆனால் இங்கு பாருங்கள் மனிதனின் சுத்த சுயநலத்தை.. கூட இருந்த ஓர் உறவின் உயிர் பிரிந்த உடலை பிணம்.. பேய்.. பிசாசு.. என்று தூரக் கிடத்தி தான் தப்ப நினைக்கிறான். அது அவனை ஈன்றவர்களாகக் கூட இருக்கலாம்.  பேய் என்ற ஒன்றிருந்தால்.. அது கோழியை கொன்று வெட்டி கொத்தி.. அதன் பிணத்தில்...  ப்ரியாணி போட்டு சுவைக்கும் போதே பேய் பிடித்திருக்க வேண்டும். அதுதானே யதார்த்தம். 😆 கொஞ்சம்.. நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.. எவ்வளவு முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள் மனிதனை மனிதன். 
    • சில புலம்பெயர் கோவில்களில்.. ஈழத்துப் பூசகர்களும்.. ஈழத்து மக்கள் சார் கோவில்களில் பணியாற்றும்.. சில தமிழக பூசகர்களும்.. தமிழில் மந்திரமோதி திருமணம் செய்து வைப்பதைக் கண்டிருக்கிறேன். அதில் இப்படி எந்த ஆபாசமும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.  மேலும்.. ஈழத்தவர் திருமணச்சடங்கில்.. ஆண்களுக்கு பூநூல் அணிவிப்பதில்லை. மாறாத தர்ப்பை மட்டும் கைவிரலில் போடப்படும்.  ஹிந்தியாவில்.. அந்தணர்களின் அட்டகாசம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால்.. ஈழத்தில்.. பூசகர்களின் நிலை ஹிந்தியா போல் அல்ல. 
    • ம்ம்.   பணம் பண்ணும் பாடு. சம்ஸ்கிருதம் ஒரு மொழி. (ஆங்கிலம் போலவே). வேதமும் வேதாந்தமும் நமக்கு எட்டா தொலைவில் உள்ளன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவன், எப்படி வைத்திய நூல்களை வாசித்து விளக்கம் கொடுப்பானோ அதே மதிரித்தான் இந்த மனிதர்களும். இவர்களுக்கு வேதம், வேதாந்தம் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உங்கள் கலை, கலாச்சாரம், சமூக கட்டமைப்பு என்பவற்றை குலைப்பதுதான் குறிக்கோள். வேதம் வகுத்த தர்மத்தின் படி வாழ்ந்து பாருங்கள். பல உண்மைகள் புரியும். இப்போது நிறையவே விஞ்ஞானிகள் மேற்கத்தைய விஞ்ஞாக கருத்துக்களை கைவிட்டு, பௌத்தம் கூறிய “நாகார்ஜுன சூத்ரம்”, வேதாந்த கருத்துக்களை ஊன்றி படிக்கிறார்கள். அதற்காக, தங்கள் வாழ்க்கை முறையினைக்கூட மாற்றி, ஒரு பரிசோதனை போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.    உங்களில் சிலபேர் அறிந்திருக்கக்கூடும். மனித இனம், அதன் பரிசோதனைக்களத்தில் தேவையற்ற பொருளாகிவிட்டது. அடுத்தது hybrid humans. இங்கு இருக்கும் பிரச்சனையே, எப்படி சடப்பொருட்களுக்கு அறிதிறனை (consciousness) கொடுப்பது என்பது தான். இதை தேடித்தான் இன்று கிழக்கு நோக்கி பயணிக்கிறார்கள். எமது மூதாதையர், தாம் கண்ட பேரறிவை ஏலுமான அளவு உபதேசங்களாகவும், சுவடிகளாகவும், பாட்டுக்களாகவும் விட்டு சென்றனர். இதெல்லாம் எமக்காக தான். சிறுபிள்ளை தனமாக, எதையும் நுண்ணறிவோடு நோக்காமல் தூக்கி வீசினால் குரங்காவது நாம் தான். தொப்பி யாரிடமோ போய்விடும். அன்புடன் - ஈழத்திருமகன் -
    • அதானே! எங்கள் துணையின்றிச் சர்வதேச அரங்கில் தான்தோன்றித்தனமாகச் செயற்பட முனைந்தால்  பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். ஆமா சொல்லிப்புட்டன்.