• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

putthan

சிட்னி கோசிப் 15

Recommended Posts

உண்மையை சொன்னால் என்ன நான் நம்பவில்லை இப்படி ஒரு காட்சி(கன்றாவி)நடக்கும் என்று இப்பொழுது உங்களுக்கு நடன பள்ளியின் மாணவிகள் இதோ வருகிறார்கள் என்று அறிவித்தார்கள். நானும் ஏதோ சிரிசுகள் வரும் என்று பார்த்து கொண்டு இருக்கையில் வந்ததோ 35- 45 வயசு கிழசுகள்(நான் 18 வயசு வாலிபன் தானே) ஏதோ கிப்கொப் டான்சாம் அத்துடன் பொலிவூட்டும் கலந்து மகிழ்விக்க வந்தவையலாம் என்று விளக்கமும் கொடுத்தார்கள்.

மனிசியிட்ட கேட்டன் என்ன கிழசுகள் எல்லாம் மேடையில் நிற்குது என்ன நடந்தது என்று கேட்டேன்,அது ஒன்றுமில்லையப்பா அவையள் உடம்பை சிலிம்மாக வைத்திருக கிப்கொப்பும்,பொலிவூட்டும் பழகீனம் உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு நொட்டை என்று திட்டினா.

எதையாவது பழகட்டும் சிலிம்மா வாரதிற்கு ஆனால் அதை ஏன் மேடையில் ஆடி எங்களையும் பார்க்க வைக்கிறார்கள்.மேடையில் ஆடினால் தான் சிலிம்மாக வரமுடியுமோ.

அவையின்ட உடம்பு அவர்களின் பணம் என்னவாது செய்யட்டும் அவர்களின் சுகந்திரம் ஆனால் அதை என்ட கண்ணல்லோ பார்க்க போகுது மேடையில் இவர்கள் ஆடினால்.இதை வாசித்து போட்டு என்ட மனிசியிட்ட சொல்லி போட வேண்டாம் பிறகு எனக்கு தான் சாப்பாடு கிடையாது.

கந்தப்பு அடுத்த கிப்கொப் நிகழ்ச்சிக்கு நீரும் வாரும் 2பேரும் போய் பார்ப்போம் கறுத்த கண்ணாடி போட்டு கொண்டு வாரும்.உம்மன்ட வயதுக்கு நீர் நல்லா ரசீப்பீர் அப்பா,குஞ்சாசி வந்தா பிறகு நாங்கள் ரசிக்க முடியாது சோ நீங்கள் தனிய வாங்கோ ஆனால் கெட்டப்பை மாத்திகொண்டு வாங்கோ(அங்கையும் வந்து குந்தி கொண்டு இருக்கிறதில்லை)

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா?- இன்று கங்குலிக்கு பிறந்தநாள்   கொல்கத்தாவின் இளவரசர் என்ற செல்லப்பெயருடன் இருந்து தற்போது இந்திய கிரிக்கெட்டின் “தாதா“வாக வலம் வரும் சவுரவ் கங்குலி இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்திய கிரிக்கெட்டின் மரபுகளை தயங்காமல் தகர்த்தவர். ஆஃப் சைடில் அசுரன், இமாலய சிக்ஸர்களின் எந்திரன். இந்திய அணியின் இயல்பை மாற்றியவர், இயல்பிலேயே ஆளுமை பண்பு நிறைந்தவர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்றோருடன் தனது 19-வது வயதில் ஆடிய அந்த போட்டியில் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அத்தொடரின்போது சீனியர் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டுசெல்ல மறுத்து, தான் கிரிக்கெட் ஆடத்தான் இங்கு வந்தேன் என கங்குலி கூறியதாக சொல்வது உண்டு. அத்தொடருடன் கழற்றிவிடப்பட்டு 4 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் வாய்ப்பு பெற்றார். லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அடித்த சதமும், அதன் பிறகு நடந்ததும் வரலாறு டெண்டுல்கர் தலைமையில் வென்ற டைடன் கோப்பை ஒருநாள் தொடரில் துவக்க வீரராக ஏற்றம் பெற்றார். உலகின் தலைசிறந்த துவக்க ஜோடியாக சச்சினுடன் இணைந்து 136 இன்னிங்ஸ்களில் 6609 ரன்கள் குவித்தது இன்றளவும் யாரும் நெருங்க முடியாத சாதனையாக உள்ளது. சஹாரா கோப்பையில் எடுத்த ஆல்ரவுண்டர் அவதாரமாகட்டும், ஸ்ரீநாத்துடன் இணைந்து பந்துவீச்சை துவக்கியதாகட்டும், 7 பீல்டர்களை நிறுத்தினாலும் ஆஃப் சைடுகளில் விளாசிய பவுண்டரிகளும், கிரீஸிலிருந்து இறங்கிவந்து தூக்கும் இமாலய சிக்ஸர்களும் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கிரிக்கெட் பார்த்த யாருடைய நினைவுகளிலிருந்தும் அகலாதவை. கேப்டனாக இருந்தபோது வழக்கமாக கடைபிடிக்கப்படும் மரபுகளை மாற்றி துணிச்சலான முடிவுகளை அமல்படுத்துவதில் அவர் காட்டிய உறுதி அனைவரும் அறிந்ததே. ஸ்பெஷலிஸ்ட் விக்கெட்கீப்பரான நயன் மோங்கியாவை நீக்கிவிட்டு சபாகரீம் போன்ற பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பர்களை பரிசோதித்து அம்முயற்சியில் வெற்றி கிடைக்காததால், பேட்டிங் மட்டும் செய்து கொண்டிருந்த டிராவிட்டை கீப்பிங் செய்ய வைத்தார். நிபுணர்கள் சேவாக்கின் கால்நகர்த்தல்களை குறைசொல்லி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுதியானவரல்ல என்று கூறிக்கொண்டிருந்தபோது, அவரை துவக்க வீரராக களமிறக்கி டெஸ்டுகளின் சுவாரஸ்யத்தை கூட்டினார். யுவராஜ்சிங்கையும் மற்றொரு தொடக்கவீரராக இறக்க அவர் திட்டமிட்டது மட்டும் நடந்திருந்தால் டெஸ்ட் போட்டிகளின் தோற்றம் மாறியிருக்கும். தோனியை ஒன் டவுனில் பேட்டிங் செய்ய வைத்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. டாஸ் போடும் அதிகாரம் மட்டும் இருந்த இந்திய கேப்டன்களுக்குரிய முகத்தை சர்வதேச அரங்கில் மாற்றியவர். ஸ்டீவ் வாக்கிற்கு இவர் கொடுத்த “ஷட்அப்” பதில் இங்கு நினைவு கூறத்தக்கது. 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் தோற்றவுடன் வீரர்களின் வீடுகளுக்கு கற்கள் பறந்தன, வீரர்கள் கட் அவுட்கள் சாய்க்கப்பட்டன, ரசிகர்கள் இந்திய அணியின் மீது கடும் கோபமும் அதிருப்தியும் கொண்டிருந்த காலம். ஆனால் அதன் பிறகு அந்த உலகக்கோப்பையில் கடைசியில் இறுதிப்போட்டியில் மீண்டும் ஆஸி.க்கு எதிராக இந்திய அணி தோற்றது, இடையில் இந்திய அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தியது. 2003 உலகக்கோப்பையை வென்றிருந்தால் ‘தாதா’ கேப்டன்சி திறமைக்கு சூட்டிய மகுடமாக அமைந்திருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாகவும், ஆஸ்திரேலியாவின் வலுவாலும் தோற்க நேரிட்டது. தோல்விகளை அவ்வளவு எளிதில் மறக்காதவர் என்பது மட்டுமல்ல அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் தவறாதவர். 2016-ல் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம்பெற்றபோது, ஏற்கனவே (2005-ல்) கிரேக்சேப்பலை பயிற்சாளர் பதவிக்கு தான் பரிந்துரை செய்ததை நினைவுகூர்ந்து (சேப்பல்தான் கங்குலியின் கேப்டன் பதவி பறிபோகவும், அணியிலிருந்து நீக்கப்படவும் காரணமாக இருந்தார்), பயிற்சியாளர் தேர்வில் மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்றார். அவருடன் இணைந்து சச்சினும், லக்ஷ்மணும் அப்போது தேர்வுசெய்த பயிற்சியாளர்தான் அனில் கும்ளே. மும்பையில் சட்டையை கழற்றிய பிளிண்டாப்புக்கு பதிலடியாக லார்ட்ஸில் சட்டையை கழற்றி சுழற்றியது இவரது அடையாளங்களில் ஒன்றானது. மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது பாரம்பரியமான ஈடன்கார்டன் மைதானத்தை நவீனப்படுத்தினார். நீதிமன்ற பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சேர்மனாக பதவியேற்றவுடன், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதில் இவர் காட்டிய வேகம் இந்திய கிரிக்கெட் மற்றுமொரு புதிய வெர்ஷனுக்குள் நுழைந்துள்ளதை உணர்த்துகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மனாகும் வாய்ப்பும் நெருங்கி வருகிறது. அது நடந்தால் உலக கிரிக்கெட்டிற்கும் ஒரு புத்துணர்ச்சியாக அமையும். “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை தனது கிட்பேக்கில் எழுதி வைத்திருப்பாராம் தாதா. https://www.hindutamil.in/news/sports/563271-dada-ganguly-birth-day-today-july-8th-1.html      
  • வெளியேறுகிறது அமெரிக்கா: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியது  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷிங்டன், கரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. கரோனா வைரஸை பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பை கடுமையாகச் சாடி வரும் அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து விரைவில் வெளியேறுவோம் என்று தெரிவித்திருந்தார். அதை இப்போது அதிகாரபூர்வமாகச் அமெரிக்கா செய்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் அந்நாட்டைவிட அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திய சேதம் மிகப்ெபரியது. இதில் அமெரிக்காவில் மட்டும் 30 லட்சம்பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர், 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வூஹான் சந்தையில் கரோனா வைரஸ் உருவாகவில்லை, அது ஆய்வகங்களில் உருவானது என்று அமெரிக்க நாளேடுகள் செய்தி வெளியிட்டன. இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப்பும், சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதுதான் கரோனா வைரஸ் அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். கரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானன் டெட்ராஸ் சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்தார் இதையடுத்து, உலக சுகாதாரஅமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைப்பதாகவும், விரைவில் அந்த அமைப்பிலிருந்து அமெரி்க்கா வெளியேறும் என அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். உலக சுகாதார அமைப்புக்கு அதிகபட்ச நிதியளித்து வரும் நாடாக அமெரிக்கா இருந்து வரும் நிதியுதவியை நிறுத்தியது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியாக மாறியது.ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக அமெரி்க்கா 45 டாலர்களை அளித்து வருகிறது. சீனா 4 கோடி டாலர்கள் மட்டுமே நிதியுதவி அளிக்கிறது இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பிலருந்து முறைப்படி வெளியேறுவதற்கான பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அதற்கான கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா அளித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளருக்கான செய்தித்தொடர்பாளர் ஸ்டானே துஜாரிக் கூறுகையில் “ உலக சுகதாார அமைப்பிலிருந்து அடுத்த ஓர் ஆண்டில் வெளியேறுகிறோம் என்பதற்கான முறைப்படியான கடிதத்தை அமெரி்க்கா ஜூலை 6, 2020-ல் வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு ஓர் ஆண்டில் அதாவது 2021-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி நடைமுறைக்கு வரும். உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான அனைத்து நடைமுறைகளும், விதிகளும் சரியாக இருக்கிறதா என்பதை பொதுச்செயலாளர் ஆய்வு செய்வார்” எனத் தெரிவித்தார். ஆனால், அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அறிவிக்கையில் “ வரும் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற அமெரிக்கா அளித்துள்ள நோட்டீஸை திரும்பப் பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது   https://www.hindutamil.in/news/world/563284-us-formally-notifies-un-of-decision-to-withdraw-from-who-2.html
  • உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு   உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவு: ஜூலை 08,  2020 06:24 AM ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே திணறி வருகிறது.  கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  தற்போதய நிலவரப்படி உலக அளவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,41,601 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 68,44,973 ஆக உள்ளது. கொரோனாவில் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 545,651- ஆக உள்ளது.   கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா (3,096,902 ), பிரேசில்  (1,674,655 ),  ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08062405/Corona-virus-world-wide-positive-case-raise-119-Crore.vpf
  • மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று   மராட்டிய மாநிலம் மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 08,  2020 07:59 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள்  வசிக்கும்  மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது. இதன்பலனமாக, கடந்த சில வாரங்களாக  தாராவியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், நிம்மதி அளிக்கும் வகையில் மும்பை தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,335 ஆக உள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08075917/Dharavi-A-Mumbai-Coronavirus-Cluster-Reports-Just.vpf