• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்!

Recommended Posts

வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்!

WhatsApp-messages-record-900674.jpg

வாட்ஸ் அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும்.

தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும். புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும்.

மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வேகெஷன் மோட் பயனுள்ளதாக இருக்கும். தற்சமயம் சோதனை செய்யப்படும் வேகெஷன் மோட் இதுவரை வழங்கப்படவில்லை.

இதேபோன்று, ஆன்டராய்டு தளத்துக்கான வாட்ஸ் அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட சாட்களுக்கு ஆப் பேட்ஜ்களை மறைக்க வழி செய்கிறது.

இதேபோன்று வாட்ஸ் அப் அக்கவுன்ட்டை வெளிப்புற சேவைகளுடன் இணைக்கக் கோரும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலிக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த அம்சம் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த அம்சம் அன்ட்ரோயிட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. லின்க்டு அக்கவுன்ட் ஆப்ஷன்கள் ப்ரோஃபைல் செட்டிங்களின் கீழ் வழங்கப்படுகிறது.

தற்சமயம் இன்ஸ்டாகிராம் மட்டுமே எக்ஸ்டெர்னல் சேவையாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாட்ஸ்அப் கணக்கில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை இணைக்க முடியும்.

லின்க்டு அக்கவுன்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மீட்க முடியும். இதை கொண்டு நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்ய முடியும். புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுவதால், இவை பயனர்களுக்கு வழங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

 

http://athavannews.com/வாட்ஸ்-அப்-செயலியில்-புத/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ருக்மணியம்மாவின் சிந்தனைக்குரிய பேச்சு.......!  👍
    • மார்ச் 3ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது   by : Dhackshala நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பாக இன்று அறிவித்தார். அரசாங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கான திருத்தங்கள் அனைத்தையும் விலக்கிக்கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர், வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு, உர கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்கமான தற்போதைய எதிர்க்கட்சியினர் பெற்றுக்கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கையின் தேவைக்காகவே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்போது குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல முதலாவது பிரேரணைக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவிப்பதாகவும் 2ஆவது பிரேரணையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். http://athavannews.com/மார்ச்-3ஆம்-திகதி-வரை-நாடா/
    • கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு   by : Dhackshala கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீப்பரவல் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் 18 மற்றும் 19 ஆம் கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், காட்டுத் தீ காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கட்டுநாயக்க-அதிவேக-நெடுஞ/  
    • இனிய பாரதிக்குத் தொடர் விளக்கமறியல்     எஸ்.ஜமால்டீன்   கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் “இனிய பாரதி” என அழைக்கப்படும் குமார சாமி புஸ்பகுமாரை, மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான முஹம்மது ஹனிபா முஹமட் ஹம்ஸா  உத்தரவிட்டார். சந்தேக நபர்,   நீதமன்றத்தில் இன்று  (20)  ஆஜர்படுத்தப்பட்டபோதே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரதேசத்தில் ஐவரும்  ,அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசததில் ஒருவருமாக  06 பேர், 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக  உறவினர்களால், பாதுகாப்பு அமைச்சு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகங்களில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, மேற்படி சந்தேக நபரான இனிய பாரதிக்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு வழக்குகளிலும் இன்று  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தொடர்ந்தும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிலரை ஆட்கடத்தலில் ஈடுபடுத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் குறித்த வழக்குகள், இனியபாரதிக்கு  எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/அம்பாறை/இனய-பரதககத-தடர-வளககமறயல/74-245823
    • பிரகீத் எக்னெலிகொட வழக்கு - சாட்சி விசாரணைகளை மார்ச் 11 ஆம் திகதி ஆரம்பிக்க உத்தரவு     ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (20) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளை மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்த நீதிபதிகள் குழாம் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றின் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கிரிதலை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லுதினன் கர்ணல் ஷம்மி குமாரரத்ன, டபில்யூ.டீ.உபசேன ( சுரேஷ்) ஆர்.எம்.பீ.கே.ராஜபக்ஷ (நாதன்) எஸ்.எம்.ரவிந்திர ரூபசிங்க (ரஞ்சி), சமிந்த குமார அபேரத்ன கனிஷ்க குணரத்ன, ஐய்யாசாமி பாலசுப்பரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் டீ.ஈ.ஆர். பீரிஸ் ஆகிய இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 2010 ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் கிரிதலை, ஹபரணை மற்றும் கொட்டாவை ஆகிய பிரதேசங்களில் பிரதிவாதிகள் மேலும் சில பெயர் தெரியாத நபர்களுடன் இணைந்து இரகசியமான முறையில் சிறைப்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125899