Jump to content

ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றி – 25 தமிழர்கள் தோல்வி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றி – 25 தமிழர்கள் தோல்வி!

canada1.jpg

ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ள அதேவேளை ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

ரொறன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், 2006இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்பட மார்க்கம் 7ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்து பறிபோனது.

தற்போது கனடாவில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக 6 தமிழர்கள் உள்ளனர்.

இவர்களில் ஒரு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர், 2 மாநில உறுப்பினர்கள், 4 கல்விச்சபை உறுப்பினர்களாவர். இவர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்களாவர்.

York Region District School Board Trustee
Area 4 – Wards 7 & 8
(1) Juanita Nathan – 6,747
(2) Jenny Chen – 5,572
(5) Kavitha Senthil – 1,103

மார்க்கம் வட்டாரம் 7 நகரசபைப் பிரதிநிதித் தேர்தலில் 5 தமிழர்களிற்கிடையிலான போட்டியால் வெற்றி வாய்ப்பு இழக்கப்பட்டது.

Markham Councillor – Ward 7
(1) Khalid Usman – 3,308
(2) Kethika Logan Kanapathi – 2,635
(4) Killi Chelliah – 1,961
(5) Malar Varatharaja – 1,587
(7) Sothy Sella – 481
(9) Elaguppillai (Mike) Srinathan – 236

மூன்று தமிழர்கள் ரொறன்ரோ கல்விச் சபையில் வெற்றி

Toronto District School Board Ward 18
(1) Parthi Kandavel – 5053 (22.37%)
(2) Christina Blizzard – 4560 (20.47%)

Toronto District School Board Ward 21
(1) Yalini Rajakulasingam – 5014 (31.48%)
(2) Roy Hu – 4738 (29.74%)
(6) Kulasegarampillai, Ganesh – 617 (3.87%)

Toronto District School Board Ward 22
(1) Anu Sriskandarajah – 7747 (36.27%)
(2) Roxanne Wright – 3044 (14.25%)
(4) Akila Rudrasingam – 2145 (10.04%)
(6) Vijayapalan, Tharshigan – 998 (4.67%)

ஆகமொத்தத்தில் வெற்றிபெற்ற 4 பேரில் மூவர் பெண்கள் என்பது பெருமைக்குரிய விடயம். 9 பெண்கள் மொத்தமாக போட்டியிட்டனர். அதில் மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.

Toronto Councillor Ward 25 – Scarborough-Rouge Park
(1) Jennifer McKelvie – 11624 (40.21%)
(2) Neethan Shan – 11470 (39.68%)

போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஏனைய தமிழர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும் வருமாறு-

CITY OF TORONTO

Councillor – Ward 16 – Don Valley East
(5) Mathanalingam, Pushpalatha – 888 (11128)

Councillor – Ward 23 – Scarborough North
(4) Saba, Neethan – 2808 (5589)

Councillor – Ward 24 – Scarborough-Guildwood
(3) Nallaratnam, Priyanth – 1896 (15131)

TDSB, Trustee – Ward 16
(5) Kasilingam, Kuga – 1140 (11310)

CITY OF MARKHAM

Regional Councillor
(8) Niran Jeyanesan – 14,984 (29,037)

Councillor – Ward 4
(3) Shaarmina A. Rodrigo – 372 (8,190)

Councillor – Ward 5
(3) Sri Sivasubramaniam – 734 (1,266)
(12) Jeremiah Vijeyaratnam – 525

Councillor – Ward 8
(2) Joseph (Mohan) Remisiar – 2,599 (4,616)

York Region District School Board Trustee
Area 3 – Wards 4 & 5
(2) Rukshan Para – 3,565 (4,802)

CITY OF MISSISSAUGA
Trustee English Public
Ward 05
(8) Ponraj, Rajakumaran – 195 (2141)
Ward 06, 11
(9) Gnanakumar, Dharmarajah – 298 – (3,598)

CITY OF VAUGHAN
Regional Councillor
(11) Skanda Singarajah – 2845 (15962)

CITY OF AJAX
Durham District School Board – Trustee (Wards 1 & 2)
(4) Selladurai JEYAKUMARAN – 1512 (5722)

CITY OF OTTAWA
Ottawa-Carleton District School Board
Zone 3
(5) Alex Sivasambu – 921 (6300)

 

http://athavannews.com/நான்கு-தமிழர்-ரொறன்ரோ-மா/

Link to comment
Share on other sites

மார்க்கம் 7 ஆம் வட்டாரம் தமிழர் ஒருவரால் வெல்லப்பட்டு இருக்க வேண்டிய  தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று. ஆனால் ஒற்றுமை இல்லாமல், பலர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் 5 தமிழர்கள் ஒரே ஒரு சீட்டுக்காக போட்டியிட்டமையால் வாக்குகள் பிரிந்து ஈற்றில் தமிழர் அல்லாத ஒருவர் வென்று விட்டார். வென்றவர் பெற்ற வாக்குகள் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் அரைவாசி பங்கை விட குறைவு.

நீதன் வந்திருக்க வேண்டியவர். நல்ல மனுசன்.

இது தொடர்பாக என் முகனூலில் எழுதியது:

--------

ஒரு கதை சொல்லட்டா............?

ஒரே ஒரு பூமி பந்தில் கனடா என்று ஒரே ஒரு நாடு உள்ளதாம். அதில் ஒந்தாரியோ என்ற பெயரில் ஒரு மாகாணம் இருக்குதாம். அதில் மார்க்கம் என்ற ஒரு சிறு நகரமும் அதில் Ward 7 என்று ஒரு வட்டாரமும் அமைந்து உள்ளதாம்.

உந்த வட்டாரம் 7 இல் அதிகப்படியாக வாழ்வது கல், மண், புல், புடுக்கு எல்லாம் தோன்ற முன் தோன்றின என்று தன்னை தானே பெருமைப்படும் தமிழ் இனத்தை சார்ந்தவர்களாம்.

மார்க்கம் நகருக்கு உள்ளுராட்ச்சி தேர்தல் அறிவித்தவுடன் இந்த வட்டாரத்தில் அதிகப்படியாக தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்களில் இருந்து திறமையான ஒருவரை தெரிவு செய்து மாநகர சபைக்கு அனுப்ப 100 வீத வாய்ப்புகள் இருந்ததாம். ஆனால் அப்படி வெல்வதற்கு ஒரே ஒரு தமிழர் தான் போட்டியிட்டல் வேண்டும் என்றும் அப்படி இல்லாவிடின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாம்.

ஆனால் இதை நன்கு அறிந்தும் ஐந்து தமிழ் நண்டுகள் இந்த ஒரே ஒரு வட்டாரத்துக்காக போட்டியிட்டனவாம். விடயம் தெரிந்த பலர் பல வழிகளில் பலவாறு வேண்டுகோள் விடுத்தும் செவிமடுக்காமல் ஐந்து நண்டுகளும் ஒற்றை காலில் நின்று போட்டியிட்டனவாம். அதிலும் ஏற்கனவே மாகாண சபை தேர்தலில் வென்று உறுப்பினரான லோகன் எனும் கொழுத்த பெரிய நண்டு, தமிழக அரசியல்வாதிகள் போன்று தன் வாரிசையும் உடனடியாக அரசியலில் ஈடுபடுத்த வைக்க வேட்ப்பாளராக நிறுத்தியதாம். வாக்குகள் பிரிக்கப்பட்டு பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களில் இருந்து ஒரு திறமையானவர் கூட தெரிவு செய்யபட முடியாது என நன்கு தெரிந்தும் இந்த ஐந்து நண்டுகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டனவாம்.

ஈற்றில் எதிர்பார்த்த மாதிரி நேற்று நடந்த தேர்தலில் இந்த ஐந்து நண்டுகளில் இருந்து ஒன்றும் தெரிவு செய்யப்படாமல் இஸ்லாம் மார்க்கத்தை சார்ந்த ஒருவர் தெரிவு செயப்பட்டாராம். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 3308 என்றும் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 6900 என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறனவாம்.

தானும் வெல்லவில்லை தாம் நினைத்த மாதிரி மற்ற ஒரு தமிழ் வேட்ப்பாளரும் வெல்லவில்லை என்பதை அறிந்து அந்த ஐந்து நண்டுகளும் குதித்து கும்மாளம் இடுகின்றனராம்.

000000000000000000000000000000000000000000000000000
இந்த கதையை கேட்ட ஒரு எலி குஞ்சு சொல்லிச்சாம்: தான் வாழும் பிரதேசத்திலேயே ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய ஒற்றுமையில்லாத ஒரு புலம்பெயர் இனம், தமிழகத்தில் யார் வெல்வது, இலங்கையின் வடக்கு கிழக்கில் எந்த கட்சி வெல்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தன்னை இன்னும் நினைத்து கொண்டு இருக்கு ..ஐயோ பாவம் என்று.

-------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தானும் வெல்லவில்லை தாம் நினைத்த மாதிரி மற்ற ஒரு தமிழ் வேட்ப்பாளரும் வெல்லவில்லை என்பதை அறிந்து அந்த ஐந்து நண்டுகளும் குதித்து கும்மாளம் இடுகின்றனராம்.

சாட்டையடியான கருத்துக்கள் என்றாலும் கெடுரன் பிடி பந்தயம் என்பது போல் என்கடையதுகள் சில விடயங்களில் நிக்கும்கள் இனி வட கிழக்கில் நடைபெற போவதும் இதுதான் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

15 hours ago, பெருமாள் said:

சாட்டையடியான கருத்துக்கள் என்றாலும் கெடுரன் பிடி பந்தயம் என்பது போல் என்கடையதுகள் சில விடயங்களில் நிக்கும்கள் இனி வட கிழக்கில் நடைபெற போவதும் இதுதான் போல் உள்ளது .

நான் எழுதியது பரவலாக (ஆரம்பத்தில் இருந்த அனைத்து எழுத்து பிழைகளுடனும்) வட்ஸ் அப் குழுமங்களினூடக பரப்பப் பட்டுக் கொண்டு இருக்கு. 

ஆனால்  newtamils.com இதை ஏன் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டு  பிரசுரித்து இருக்கினம் என்று புரியவில்லை.

http://www.newtamils.com/news/349

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

நான் எழுதியது பரவலாக (ஆரம்பத்தில் இருந்த அனைத்து எழுத்து பிழைகளுடனும்) வட்ஸ் அப் குழுமங்களினூடக பரப்பப் பட்டுக் கொண்டு இருக்கு. 

ஆனால்  newtamils.com இதை ஏன் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டு  பிரசுரித்து இருக்கினம் என்று புரியவில்லை.

http://www.newtamils.com/news/349

நம்ம நிழலியன் பதிவு, வாற்அப்ஸ் வழியே வந்தது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழன் நாகரீகம் நாட்டுநடப்புகள் சீராக உள்ள நாடுகளுக்கு வந்தும்.......... திருந்தவில்லையெனில் அது தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

நான் எழுதியது பரவலாக (ஆரம்பத்தில் இருந்த அனைத்து எழுத்து பிழைகளுடனும்) வட்ஸ் அப் குழுமங்களினூடக பரப்பப் பட்டுக் கொண்டு இருக்கு. 

ஆனால்  newtamils.com இதை ஏன் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டு  பிரசுரித்து இருக்கினம் என்று புரியவில்லை.

http://www.newtamils.com/news/349

இன்றும் நிழலியின் நண்டுகதை திருப்ப திருப்ப ஆறு பேர் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து இருந்தனர் அவர்களில் மூன்று பேர் நண்டுகூட்டம் ஒழுங்கா x லில் நடந்த மாவீரர் நினைவேந்தலை குழப்பியவர்கள் வந்த கடுப்புக்கு உங்களுக்கும் சேர்த்துத்தான் ஆள் எழுதிஇருக்கு அந்த கதையை படித்து பார்த்து விட்டோ பகிர்தல் செய்தநீங்கள் என்று மறுமொழியிட இந்த நிமிடம் வரை பதிலை காணோம் .

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.