Jump to content

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

Zimbabwe-720x450.jpg

சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்,

சிட்டங்கொங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பிரெண்டன் டெய்லர் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் சய்பூடின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 247 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 44.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, இம்ரூள் கெய்ஸ் 90 ஓட்டங்களையும், லிடன் தாஸ் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சிகான்டர் ரஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணி சார்பில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் சய்பூடின் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளை சிட்டங்கொங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

http://athavannews.com/சிம்பாப்வே-அணிக்கெதிரா-10/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.