• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

உத்தியோகம்: லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார்

Recommended Posts

அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார்.

கணவனுக்கு இருபது வயது என்றார்.

கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன்.

அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்`

லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது.

இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன்,
` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க, அவங்க அனுப்புவாங்க`

அவர் வெளிநாட்டுக்குப்போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார்.

கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக்கிடைக்கிறது.

ஒரு இருபது வயது ஆண் வாழ்க்கை பற்றி எந்தக் கவலையுமில்லாமல், ஒரு 17 வயதுப்பெண்ணைக் கர்ப்பமாக்கிவிட்டு , வீட்டிலே சும்மா இருந்துகொண்டு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் குடும்பம் நடத்துமளவுக்கு நம் இளைஞர் சமூகம் வந்துள்ளது.

இதற்கான மிகமுக்கிய காரணம் நம் புலம்பெயர் சொந்தங்கள் விடுகின்ற தவறுதான்.

நீங்கள் விடுகின்ற முதல் தவறு, வெளிநாட்டிலே நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தப் பணத்தை உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாமல் விடுவதுதான்.

வெளிநாட்டுக்குப்போனா ஈசியா உழைக்கலாம் அல்லது அகதிக்காசே சும்மா இருக்க பல லட்சம் வரும் என்ற மாயையிலே நம்முடைய இளம் சமூதாயம் உழைப்பின் வலிமை தெரியாமல் உருவாகிவிட்டது. 

நீங்களும் சொந்தங்கள் பாவம் என்று கேட்டதும் அனுப்புகின்ற பணம் அவர்களின் சோம்பேறித்தனத்தை இன்னும் அதிகரித்து விடுகின்றது.

இங்கே உழைப்பதற்கு வழிகளில்லாமல் இல்லை.
நான் அடிக்கடி செல்லும் ஒரு ஆட்டோக்கார ஐயா இருக்கிறார். 60 வயதுக்கும்மேல் இருக்கும்.அவரிடம் ஒருநாள் உங்கள் வருமானம் எவ்வளவு என்றேன்.

மாதம் 60 ஆயிரம் வரும் பெற்றோல் செலவு போக 45 ஆயிரம் மிஞ்சும் என்றார். 45 ஆயிரம் குடும்பம் நடத்தப்போதுமா ஐயா என்றேன். இது சும்மா பார்ட் டைம் வேலைதான் ஐயா, மெயினா நான் விவசாயம்தான் செய்கிறனான் என்றார்.

ஒரு 60 வயது தாண்டியவர் பார்ட் டைம் ஆட்டோ ஓட்டியே மாதம் 45 ஆயிரம் ( ஒரு பட்டதாரி ஆசிரியரைவிட அதிகமான சம்பளம்) உழைக்கும்போது, ஒரு 20 வயது அப்பாவாகப்போகும் இளைஞன் முழுநேரமாக ஆட்டோ ஓட்டினால் எவ்வளவு உழைக்கலாம்?

பருத்தித்துறையிலே ஒரு கடலை , வடை செய்து விற்கும் தள்ளுவண்டியை பருத்திதுறை பஸ் நிறுத்தத்திற்கு அண்மையில் காணலாம். புத்தளத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவும் மகனும் இங்கே தங்கியிருந்து இந்தத்தொழிலைச் செய்கிறார்கள். பின்னேரத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். மாதம் எப்படியும் லட்சமாவது உழைப்பார்கள். புத்தளத்தில் இருந்து ஒரு அப்பாவும் மகனும் தங்கியிருந்து இங்கேயே இவ்வளவு உழைக்கும்போது, இங்கே இருக்கும் ஒரு 20 வயது இளைஞனை ஓசிச்சோறு சாப்பிட வைத்தது எது?

எங்கட குடும்பம் ஆட்டோ ஓடுறதா? சுண்டல் விற்கிறதா என்ற வெத்துக் கெளரவம்தான் இதற்குக் காரணமாகிறது. 

20 வயதில வேலை வெட்டி இல்லாமல் ஓசிசோறு சாப்பிட்டுக்கொண்டு கல்யாணம் முடிக்கும் ஒருவன், லண்டன் வந்து எக்கவுன்டன் வேலை பார்க்கப்போறதில்லை. மேலே சொன்ன வேலைகள் போல ஒன்றைத்தான் செய்யப்போகிறான்.
அவன் லண்டன் வரும்வரையாவது( இப்போது திருட்டுத்தனமாக லண்டன் போவது அவ்வளவு ஈசியா என்று தெரியவில்லை) அவனுக்கு சும்மா காசு அனுப்பாமல், ஒரு 3 லட்சம் அனுப்பி , ஆட்டோ ஓடிக் குடும்பம் நடத்து, இனிக்காசு அனுப்பமாட்டோம் என்றால், அவனும் உழைக்கக்கற்றுக்கொள்வான், அவன் லண்டன் வந்தும் உழைத்து நல்ல நிலைக்கு வர உதவும்.

 

 

 • Like 2
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

வெளிநாட்டுக் காசில பொடி.... மோட்டர் சைக்கிள், கூலிங் கிளாஸ், அது, இது என்று விலாசம் காட்ட பெட்டை எடுபடுறது சகசமுங்கோ  :grin:

Share this post


Link to post
Share on other sites

அங்கு உழைக்க முடியாதவர்கள் இங்கு வந்து பிழைக்க முடியாது இப்படி கனபேர் மச்சான் மாரின் ,உறவினர்களின் காசை கரியாக்கி விட்டு கடைசியில் iom க்கு எழுதிகொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலர் ஒரு சிலர் இங்கு தாக்கு பிடித்தாலும் இப்போதைய சட்ட விதிகளின் படி விசா எடுப்பது குதிரை கொம்பு  .

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

அங்கு உழைக்க முடியாதவர்கள் இங்கு வந்து பிழைக்க முடியாது இப்படி கனபேர் மச்சான் மாரின் ,உறவினர்களின் காசை கரியாக்கி விட்டு கடைசியில் iom க்கு எழுதிகொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலர் ஒரு சிலர் இங்கு தாக்கு பிடித்தாலும் இப்போதைய சட்ட விதிகளின் படி விசா எடுப்பது குதிரை கொம்பு  .

ஆனால் கனபேருக்கு வெளிநாட்டு ஆசை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ஆண்களை விட தற்போதுள்ள பெண்களுக்கு அதிகம்  எனலாம் 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் கனபேருக்கு வெளிநாட்டு ஆசை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ஆண்களை விட தற்போதுள்ள பெண்களுக்கு அதிகம்  எனலாம் 

இஞ்சை காலுக்குமேலை கால்போட்டுக்கொண்டு ஜாலியாய் சுகபோக வாழ்க்கை வாழலாம் எண்டு நினைக்கினம் போலை.....:cool:

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, கிருபன் said:

அவனுக்கு சும்மா காசு அனுப்பாமல், ஒரு 3 லட்சம் அனுப்பி , ஆட்டோ ஓடிக் குடும்பம் நடத்து, இனிக்காசு அனுப்பமாட்டோம் என்றால், அவனும் உழைக்கக்கற்றுக்கொள்வான்,

உண்மைதான் சந்ததியை சோம்பேறி ஆக்காமல் வாழ வழிகாட்டுதலே சிறந்தது 

Share this post


Link to post
Share on other sites
On 10/28/2018 at 12:30 AM, குமாரசாமி said:

இஞ்சை காலுக்குமேலை கால்போட்டுக்கொண்டு ஜாலியாய் சுகபோக வாழ்க்கை வாழலாம் எண்டு நினைக்கினம் போலை.....:cool:

என்ன கஸ்ரப்பட்டாலும் முகநூல்லுக்கு நாலு படம் போடணும் ஸ்டைலா அதுதான் முக்கியம் அமைச்சரே:104_point_left:

Share this post


Link to post
Share on other sites
On 10/27/2018 at 4:25 PM, பெருமாள் said:

அங்கு உழைக்க முடியாதவர்கள் இங்கு வந்து பிழைக்க முடியாது இப்படி கனபேர் மச்சான் மாரின் ,உறவினர்களின் காசை கரியாக்கி விட்டு கடைசியில் iom க்கு எழுதிகொடுத்துவிட்டு ஊர் போய் சேர்ந்தவர்கள் பலர் ஒரு சிலர் இங்கு தாக்கு பிடித்தாலும் இப்போதைய சட்ட விதிகளின் படி விசா எடுப்பது குதிரை கொம்பு  .

அதுதான் பழமொழி ஒன்று உள்ளதே; நல்ல மாடானால், உள்ளூரில் விலைப்படும்.

போர்காலத்தில் வருவது வேறு, சமாதான காலத்தில் வருவது வேறு.

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன கஸ்ரப்பட்டாலும் முகநூல்லுக்கு நாலு படம் போடணும் ஸ்டைலா அதுதான் முக்கியம் அமைச்சரே:104_point_left:

இப்பவெல்லாம் இஞ்சை இருக்கிற ஆக்களை விட ஊரிலை இருக்கிறவைதான் அந்தமாதிரி பந்தா படமெல்லாம் போடீனம்......உதாரணத்துக்கு இரண்டு படம் போடவா? :grin:

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Nathamuni said:

அதுதான் பழமொழி ஒன்று உள்ளதே; நல்ல மாடானால், உள்ளூரில் விலைப்படும்.

போர்காலத்தில் வருவது வேறு, சமாதான காலத்தில் வருவது வேறு.

இன்னொன்றும்   உள்ளதே

உழுகிற  மாடு  எங்கும்  உழும்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை இருக்கிற ஆக்களை விட ஊரிலை இருக்கிறவைதான் அந்தமாதிரி பந்தா படமெல்லாம் போடீனம்......உதாரணத்துக்கு இரண்டு படம் போடவா? :grin:

போடாத்தானே தெரியும் .........

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, Maruthankerny said:

போடாத்தானே தெரியும் .........

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

Share this post


Link to post
Share on other sites

இதுக்கு போடாமலே இருந்து இருக்கலாம் .........
படம் அப்பிடி இருக்குமோ ... இப்பிடி இருக்குமோ 
என்ற கற்பனை பரவாய் இல்லாமல் இருந்து

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

தானியà®à¯à®à¯ மாறà¯à®±à¯ à®à®°à¯ à®à®²à¯à®²à¯.

இதுக்குப் போடாமலேயே இருந்திருக்கலாம் ?

Share this post


Link to post
Share on other sites

கூகிள் மப்பில் போய் பார்த்தால்.. ஊர் எல்லாம் நல்ல வளர்ச்சி. 3 மாடி வீடு தான்.. இப்ப குறைந்த தகுதி. அதுவும் சும்மா இல்ல.. எல்லா அதி நவீன வசதிகளோட.. பூந்தோட்டம்.. அதுஇதென்னு... நாங்க இங்க இருந்து குளிருக்க.. நடுங்க வேண்டியான். 

இங்கிலாந்தில்.. பல காலம் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த எங்கட தமிழ் ஆக்கள் பலரும்... இப்ப இரட்டைக்குடியுரிமை எடுத்து.. குடும்பமா ஊரில போய் இருக்கினம். அப்பப்ப இங்க வந்து போவினம்.. இங்க குடியுரிமையை பாதுக்காக்க. 

ஒரு சிலது.. ஊரில வித்திட்டு வரகுது. ஆனால்.. இங்கு உருப்படியான தொழிலற்றவர்களும்.. நல்லா உழைத்தவர்களும்.. ஊருக்குப் போவதையே சிந்தனையாகக் கொண்டிருக்கினம்.

இந்த நடுவில் உள்ளவை தான்.. அங்க உள்ளவைக்கும்.. வெளிநாட்டு ஆசை காட்டிறது.

ஒன்று.. ஊரில உழைக்க முடியாதது.. இங்க உழைச்சுக் கிழிக்கும் என்றில்லை. வேணும் என்றால்.. அரசாங்கக் காசில இருக்கும். அதுக்கும்.. உருப்படியான விசாக் கிடைக்கனுமே..!! 

ஆகவே உந்த.. 20 வயசில்.. கல்யாணம் கட்டின பெரிய மனுசன்.. லண்டன் போற தொழிலை சைட் பிஸ்னஸா வைச்சுக் கொண்டு.. ஊரில ஒரு நல்ல பிஸ்னஸ் தொடங்கிறது நல்லம். குடும்பத்துக்கு குட்டிகளுக்கு உதவும். ?

Share this post


Link to post
Share on other sites
On 10/30/2018 at 11:03 PM, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை இருக்கிற ஆக்களை விட ஊரிலை இருக்கிறவைதான் அந்தமாதிரி பந்தா படமெல்லாம் போடீனம்......உதாரணத்துக்கு இரண்டு படம் போடவா? :grin:

இதெல்லாம் சும்மா ஜீஜிபி இன்னும் பல இருக்கு தேடவும் கு. சாமியார் அண்ண

Share this post


Link to post
Share on other sites

உந்த பெடியனுக்கு தங்கட மகளை கட்டி வைத்த பெற்றோரை நடு ரோட்டில் நிக்க வைத்து செருப்பால அடிக்கோணும் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சந்தர்ப்பம் கொடுக்கும்போதுதான் தெரிகிறது  நாம் எல்லாம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவோம் என்று. இதில் உள்ள குப்பாடிக் கூட்டம்தான் எங்கள் தலைவர்களும் எதிர்காலத் தலைவர்களுமா ? . 😏 வெட்கக்கேடு. இவற்றையெல்லாம் இரசித்து கொண்டாடி மகிழ்கிறது வெளிநாடுகளில் நாகரீகமடைந்தவர்களாக தங்களைக் கூறிக்கொள்ளும் ஒரு பெரும் மக்கள் கூட்டம். 😏 எவ்வளவுதான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது என்று காரணமில்லாமலா கூறினார்கள் ☹️ எங்கள் அடுத்த தலைமுறைகளாவது தங்கள் குளத்தை ஆள அகலமாக வெட்டிப் பெருப்பிக்கட்டும்.  ☹️
  • (1) கங்கை அணிந்தவா!  கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா!  லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! . (2) தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா  (3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா  . (4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே (5) எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா    (6) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் (7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா  தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா  
  • என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே (x2) பன்னிருகை வேலவனே (x4) கன்னி வள்ளி மணவாளனே வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் ... வேல்   வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2) பார்வதியாள் பாலகனே (x4) பக்தர்களுக்கு அனுகூலனே வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் (x2) வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2) எட்டுக்குடி வேலவனே (x4) சுட்டப் பழம் தந்தவனே ... ஔவைக்கு ... சுட்டப் பழம் தந்தவனே வேல் வேல் வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2) கால்களில் பொற் சிலம்பு ... முருகன் ... கைகளில் பொற் சதங்கை (x2) கல் கல் கல் ... என வருவான் வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்.  
  • அது கெப்பர் அக்கா
  • (அஸ்ரப் ஏ சமத்)பாகிஸ்தான் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினைமுன்னிட்டு கொழும்பு உள்ள உயா்ஸ்தாணிகா் ஆலயத்தல்பதில் உயா் ஸ்தாணிகா் தன்வா் அகமட் தலைமையில் இன்று (14)  பாக்கிஸ்தான் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சுதந்திரம் கொண்டாடப்பட்டது.  இவ் வைபவத்தில் ஜனாதிபதி  ஆரிப் அலவி, பிரதம மந்திரி இ்ம்ரான் கான், ஆகியோா்களது சுதந்திர தின செய்திகள் வாசிக்க்பட்டது. இவ் வைபத்தில் இலங்கை வாழ் பாக்கிஸ்தானியா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.இங்கு உரையாற்றிய உயா் ஸ்தாணிகா்   - பாக்கிஸ்தான்னின் நிலமான காஸ்மீா் மாநிலத்தை இந்தியா பிஜே.பி அரசு  பலவந்தமாக ஆக்கிரமித்து்ளளது. . அந்த நிலங்களில் வாழ்  மக்கள்  அடக்கி ஆளப்படுகின்றனா்.அவா்களுக்கு  ஒரு  சமாதான சுதந்த்திரம் கிடைப்பதற்கு நாங்கள்  இறைவனைப் பிராத்திப்பாதாகவும் அவா் அங்கு     உரையாற்றினாா்..அத்துடன் இலங்கை இந்திய உறவு நீண்ட வரலாறு கொண்டது. அத்துடன்  பாக்கிஸ்தான் இலங்கை மக்களது பௌத்த மதத்துக்கு மதிப்பளித்து  சரித்திர வாய்ந்த  புத்தா் தந்தத்தினை இலங்கை மக்களுக்கு பாா்வையிடுவதாக பறிமாறியதாகவும் கூறினாா்.கடந்த கோரோ தொற்று நோயில் இருந்து இலங்கை போன்று பாக்கிஸ்தான் பல நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாத்தாதவும் கூறினாா். https://www.madawalaenews.com/2020/08/74.html