Jump to content

டிக் டொக்குடன் போட்டி போடும் ஃபேஸ்புக்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிக் டொக்குடன் போட்டி போடும் ஃபேஸ்புக்!

19.jpg

சமூக வலைதளங்களில் பிரபலமடைந்துவரும் டிக் டொக்குக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயலியை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகக் குறுகிய காலத்தில் பயனர்களிடையே பிரபலமடைந்த செயலிகளுள் ஒன்றான மியூசிக்கலி, தற்போது டிக் டொக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சினிமா பாடல்கள் அல்லது வசனங்களுக்கு வாயசைவு செய்யும் இந்தச் செயலி இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர்களும் பயன்படுத்தும் பொழுதுபோக்கு செயலியாக மாறிவிட்டது. தற்போது இந்தச் செயலிக்குப் போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் 'லாசோ' என்ற செயலியைக் களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது.

டிக் டொக்கைப் போலவே வாயசைவை மையமாகக் கொண்டு இயங்கும் லாசோ செயலியின் தயாரிப்பு பணிகளை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் தயாரிப்பு வடிவமைப்பாளரான பிராடி வாஸின் தலைமையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டெக் கிரன்ச் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டெக் கிரன்ச்சில் வெளியான செய்தியில், "லாசோ செயலியும் டிக் டொக் /முயூசிக்கலியைப் போன்றதுதான். முழுத் திரையில் இயங்கும் இந்தச் செயலி முழுக்க முழுக்க இளைஞர்களின் பொழுதுபோக்குக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக் டொக்கைப் போல 15 விநாடி வீடியோக்களை மட்டுமே உருவாக்க முடியும் போன்ற நிபந்தனைகள் லாசோவில் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது டிக் டொக் செயலியை உலகம் முழுதும் 10 கோடிக்கும் மேலான பயனாளர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/k/2018/10/28/19

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.