Jump to content

மாவை சேனாதிராசாவை ஆதரிக்கிறேன்


Recommended Posts

மாவை சேனாதிராசாவை ஆதரிக்கிறேன்

இந்தியாவையும் அனைத்துலகத்தையும் கலந்தாலோசித்தே நவம்பர் 16இல் இலங்கை நாடாளுமன்றத்தில் இரணிலையா? இராசபட்சாவையா? யாரை ஆதரிப்பது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுக்கும் எனத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ளார்.
அவரது கருத்து இன்றைய சூழலில் முற்று முழுக்கச் சரியானது என்பதால் அவரது அக்கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
வரலாற்றைப் படித்தால் மாவையின் கருத்து ஏற்றது என்ற முடிவுக்கு வருவீர்கள்.

வரலாறு 1. குடியுரிமை
1939 மலையகத் தமிழரை நாடுகடத்த முயற்சி. இலங்கைக்கு நேரு வந்தார். இந்தியா அவர்களை ஏற்காது என்றார். இலங்கை இந்தியக் காங்கிரசு உருவானது. நேருவைக் காலிமுகத் திடலில் தாக்க முனைந்தனர். நாடுகடத்தல் முயற்சி தளர்ந்தது.

1948-1949 மலையகத் தமிழர் குடியுரிமை பறிப்பு.
1988இல் இந்திய அரசு வற்புறுத்தலில் சத்தியக் கடதாசி முடித்துக் கொடுத்தாலே இலங்கைக் குடியுரிமை.

வரலாறு 2. நிலவுரிமை 
1952 முதலாகக் கிழக்கிலங்கையில் அரசு ஆதரவு சிங்களக் குடியேற்றம்.
1987 இலங்கை இந்திய உடன்பாட்டின் தொடக்க வரிகளில் வரலாற்றினூடாக வடகிழக்கை இலங்கை தமிழரின் மரபு வழித் தாயகமாக இலங்கை ஏற்றது. இராசீவ் காந்தியைச் சிங்களச் சிப்பாய் தாக்க முயயற்சி.

வரலாறு 3. மொழியுரிமை
1956 சிங்களம் மட்டும் சட்டம்.
1987 இலங்கை இந்திய உடன்பாடு, 
1988 சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம உரிமை.

வரலாறு 4. ஆட்சியுரிமைப் பகிர்வு 
1948 கூட்டாட்சிக் கோரிக்கை
1958 பிரதேச சபை உடன்பாடு முறிந்தது.
1968 மாவட்ட சபை உடன்பாடு கனவாயது.
1980 மாவட்ட வளர்ச்சிச் சபை கலைந்தது.
1987 இடைக்கால சபை குலைந்தது.
1988 முதலாக 8 மாகாண சபைகள் 13ஆவது திருத்தத்துக்கு அமைய, இலங்கை இந்திய உடன்பாட்டின் விளைவு. பின்னர் வடக்கையும் கிழக்கையும் பிரித்தனர். 9 சபைகளாக்கினர்.

இவை தவிரத் தமிழர் கோரிக்கை எதைச் சிங்களத் தலைமை எற்றது. 1925 தொடக்கம் 17 உடன்பாடுகள். இரண்டு மட்டும் உயிருடன் உள.

1.அருணாசலம் மேற்கு மாகாண வேட்பாளராக்கும் 7 திசம்பர் 1918 கடிதம். தமிழர் என்பதால் 1921இல் அவரை நீக்கும் கடிதம்.

2. 28 சூன் 1925இல் யாழ்ப்பாணத்தில் எழுதிய மகேந்திரா உடன்பாடு. 1926இல் காலியில் முறிப்பு.

3, 1947 செப்தெம்பர் 24 சுந்தரலிங்கத்துடன் உடன்பாடு. விடுதலைக்குத் தமிழரும் ஒப்பினவராக்குதல். 1949 இந்திய பாகித்தானிய வதிவிடச் சட்டத்தை எதிர்த்தார். அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தனித் தமிழர் நாடு என முழங்கினார்.

4, இலங்கைக்கான விடுதலைச் சட்டத்தில் 1948இல் விதி 29 தமிழர் ஒப்புதல் அளித்த சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு. இலங்கை விடுதலை பெற்ற 285ஆவது நாள் (15.11.1948) தங்கள் குடியுரிமையை மலையகத் தமிழர் இழந்தனர். இந்திய பாகித்தானிய வதிவிடச் (குடியுரிமை) சட்டம் 05.08.1949. மலையகத் தமிழர் நாடற்றவராயினர்.

5. சிங்களவருக்கு ஒரு நாடு. தமிழருக்கு ஒரு நாடு. 1918இல் அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தில் சிங்களவர் ஒப்பிய கொள்கை. 1925 மகேந்திரா உடன்பாட்டில் வலியுறுத்திய கொள்கை. 1948இல் ஆங்கிலேயரிடம் கூறியன யாவும் ஒப்புதல் மொழிகள். 1952இல் தமிழர் நிலங்களில் தமிழர் ஒப்புதலின்றிச் சிங்களவரைக் குடியேற்றத் தொடங்கினர்.

6. 1943 சூன் 22இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்ட மூலத்தை, சே. ஆர். செயவர்த்தனா சட்டசபையில் முன்மொழிந்தார். சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகள் எனத் திருத்திய சட்டத்தைச் சட்ட சபை 1944இல் ஏற்றது. 1953இல் பண்டாரநாயக்கா 1954இல் யாழ்ப்பாணத்தில் பிரதமர் சேர் யோன் கொத்தலாவலை இருவரும் வாக்குறுதி சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகள் என. 1956இல் இருவரும் முறித்தனர், அதனால் சிங்களமே ஆட்சிமொழிச் சட்டம்.

7. 1957 சூலை 25ஆம் நாள் பண்டாரநாகயக்கா செல்வநாயகம் உயன்பாடு. 1958 ஏப்பிரல் 5ஆம் நாள் உடன்பாட்டை முறித்தவர் பண்டாரநாயக்கா.

8. 1948இல் விடுதலையாகும் பொழுது சிங்களவர் ஒப்புக்கொண்ட அரசியலமைப்பு விதிகளை மீறி எழுதியதே சிறீமாவோ - சாத்திரி உடன்பாடு.

9. 1965 மார்ச்சு 24இல் இடட்லியும் செல்வநாயகமும் உடன்பட்டதை 1969இன் தொடக்க காலத்தில் இடட்டலி முறித்தார்.

10. அரசியலமைப்பின் 29ஆம் பிரிவு எதற்கு? ஆங்கிலேயருக்குக் கொடுத்த வாக்குறுதி, சுந்தரலிங்கத்துக்குக் கொடுத்த நம்பிக்கை யாவற்றையும் 19 சூலை 1970இல் நவரங்கலாவில் கூடி உடைத்தனர்.

11. 1970 சூலை 19ஆம் நாள் நவரங்கலாவில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை, சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. ஆங்கிலேயருக்குக் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்தது.

12. மாவட்ட வளர்ச்சிச் சபைகளை அமைக்கும் சட்டம் 1980இல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 24 சபைகளும் இரண்டு ஆண்டுகள் கூடத் தொடரமுடியவில்லை. நீலன் திருச்செல்வத்தை ஏமாற்றினார் சே. ஆர். செயவர்த்தனா.

13. இந்திரா காந்தியின் பணிப்புரையில் பார்த்தசாரதி. 1984 சனவரி 3 தொடக்கம் கொழும்புக்கு வந்தார். பலமுறை வந்தார். 1984 ஆகத்து 26ஆம் நாள் இலங்கையின் அனைத்துக் கட்சி மாநாடு இணக்கக் கருத்துரைகளைத் தந்தது. அவற்றை அப்படியே மண்ணுக்குள் புதைத்தவர் சே. ஆர். செயவர்த்தனா

14. 1987 சூலை 29ஆம் நாள் இராசீவர் – செயவர்த்தனா உடன்பாடு கொழும்பில் ஒப்பமாகியது. அதிலும் பலவற்றை நடைமுறைக்குக் கொண்டுவராவிட்டாலும் உயிரோடு உள்ள உடன்பாடாகத் தொடர்கிறது.

15. 1995 சனவரி 5ஆம் நாள், போர் இடைநிறுத்த உடன்பாட்டில் பிரபாகரன், யாழ்ப்பாணத்திலிருந்தும் சந்திரிகா கொழும்பில் இருந்தும் ஒரே நேரத்தில் கையொப்பமிட்டு, அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழி ஆவணங்களைக் கொடுத்து வாங்கினர். 1995 ஏப்பிரல் 18ஆம் நாள் உடன்பாட்டிலிருந்து ஒருதலைப்பட்சமாகப் பிரபாகரன் விலகினார். முதன் முறையகத் தமிழர் தரப்பில் சிங்கள - தமிழ் உடன்பாட்டை முறித்த நிகழ்ச்சி.

16. 2002 பெப்ருவரி 22ஆம் நாள் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடும் போர் நிறுத்த உடன்பாடும் நோர்வே அரசின் துணையுடன், உத்தரவாதத்துடன் அமைந்தன. 2008 சனவரி 8ஆம் நாள் சிங்கள – தமிழ்ப் புரிந்துணர்வு உடன்பாட்டைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபக்சா ஒரு தலைப் பட்சமாக முறித்தார்.

17. 2015 அக்தோபர் முதலாம் நாள், 47 உறுப்புரிமை நாடுகளோடு சேர்ந்து செனீவாவில் ஐநா மனித உரிமை ஆணையத்தில் உடன்பட்டவர் மைத்திரிபாலா சிறிசேனா.

1987 இலங்கை இந்திய உடன்பாடு, 2015 செனிவாத் தீர்மானம். ஏனைய அனைத்தையும் ஒன்றைத் தவிர (1995) ஒரு தலைப் பட்சமாக முறித்தவர் சிங்களவர்.

இந்தியாவும் அனைத்துலகும் இல்லாவிடில் 1 குடியுரிமை 2 நிலவுரிமை 3 மொழியுரிமை 4 ஆட்சிப் பகிர்வு நோக்கிய நகர்வு என நான்கும் நடந்திருக்குமா? வேறு எதற்குச் சிங்களவர் உடன்பட்டனர்?

இப்படிப் பேசினால் என்னை இந்திய உளவுத் துறையின் கைக்கூலி எனக் கூறுவர்.

தமிழர் உதவி இல்லாமலே ஆட்சி அமைப்பர் இராசபக்சா. சுதந்திரக் கட்சியின் வரலாறே அவ்வாறு தான் 1956, 1960, 1971 எனத் தொடர்ச்சியாக. ஒரு சில தமிழர் ஆதரவு தருவர்.

தமிழ்த் தேசியத்தார் ஆதரவைச் சுதந்திரக் கட்சியினர் கோரார். அப்படிக் கோரினால் பெற்றால், அத் தேசியத்தையும் பூண்டோடு அழிக்க அடித்தளம் இடுவதாகப் பொருள்.

இதனாலன்றோ மாவை சேனாதிராசா தெரிவித்த கருத்து, சமகால அரசியலுக்கு ஏற்ற கருத்து எனக் கருதி ஆதரிக்கிறேன். இக்கருத்தை மாவை தொடர்ந்து வலியுறுத்துவாராக.

Image may contain: 1 person, sitting and indoor
 

ஐப்பசி 12, 2049 திங்கள் (29.10.2018)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 தொடக்கம் இந்தியாவை கேக்கினம்....கேக்கினம்  கேட்டுக்கொண்டேயிருக்கினம். ஆனால் சிங்களம் தான் நினைச்சதை செய்து கொண்டுதான் இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.