Jump to content

ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன?

November 3, 2018
45318227_2340499245979998_79482886915484

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று கட்சி தாவி, அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டார். சமூக வலைத்தளம் முழுவதும் அவரது முடிவை கண்டித்து, விமர்சனங்களால் நிறைந்து போயிருக்கிறது.

வியாழேந்திரன் 48 கோடிக்கு விலை பேசப்பட்டார்… மஹிந்த ராஜபக்ச நேரடியாக பேசினார்… கனடாவில் 30 கோடி கைமாறியது என சமூக வலைத்தளங்கள் முழுவதும் வியாழேந்திரன்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

வியாழேந்திரன் எப்படி வளைத்தெடுக்கப்பட்டார், எப்படியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, யார் எல்லாம் இந்த டீலின் பின்னணியில் இருந்தார்கள் என்ற தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

எல்லாவற்றிற்கும் முன்னதாக ஒரு தகவல். வியாழேந்திரனுக்கும் கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாஹமவிற்குமிடையில் கடந்த ஐந்து மாதங்களாக நல்ல நெருக்கமிருந்தது. அடிக்கடி தனிப்பட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

நெருக்கம் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே கிழக்கு ஆளுனர் ஒரு கோரிக்கையை வியாழேந்திரனிடம் முன்வைத்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு (அவர் மைத்திரியை குறிப்பிட்டாரா அல்லது மஹிந்தவை குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை) ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார்.

இந்த சமயத்தில் கிழக்கில் வியாழேந்திரன் கவனிக்கப்படும் ஒருவராகியிருந்தார். நிப அபகரிப்பிற்கு எதிராக தொடர்ந்து பேச, மட்டக்களப்பின் பல இளைஞர்கள் அவருடன் இணைந்து வேலைசெய்தனர். அவர்களில் மிகமிக நெருக்கமான ஒரு சிலரிடம், ஆளுனரின் வேண்டுகோளை வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். அப்போதே அந்த தகவல் கிடைத்து, ஒரு கொசிப் செய்தியாக தமிழ் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.

அந்த சமயத்திலேயே அவரை ஆதரித்த இளைஞர்கள் அவரிடம் நிபந்தனையொன்றை வைத்திருந்தார்கள். நீங்கள் அமைச்சு பதவியெடுத்து அபிவிருத்தி செய்யப் போகிறேன் என கூறும் அரசியல் செய்ய போகிறீர்களா, அல்லது கொள்கைவழி செயற்பட போகிறீர்களா என. கொள்கைவழி அரசியலிலேயே ஈடுபட போகிறேன் என தனது ஆதரவாளர்களிடம் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சில மாதங்களின் முன்னர் மட்டக்களப்பிற்கு அடிக்கடி விசிற் அடித்தது உங்களிற்கு நினைவிருக்கலாம். தமது கூட்டணியில் இணையும்படி மனோ கணேசனும், வியாழேந்திரனிற்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பதையும் அப்போதே தமிழ்பக்கம் அறிந்திருந்தது. ஆனால் அதையும் வியாழேந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே கிழக்கு ஆளுனர் மூலம் வியாழேந்திரனின் சிபாரிசில் அபிவிருத்தி வேலைகள் நடந்தன. மட்டக்களப்பின் மற்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு அல்லாமல், வியாழேந்திரனுக்கு மாத்திரம் இந்த சலுகை வழங்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் ஆளுனர் தரப்பிற்கு நெருக்கமானவராக செயற்பட்டு வந்தார் வியாழேந்திரன்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். வியாழேந்திரன் விரைவாக ஆளுனரை நோக்கி தள்ளப்பட்டதற்கு, கூட்டமைப்பின் உட்கட்சி பிரச்சனையொன்றும் காரணம். கிழக்கில்- குறிப்பாக மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ சார்பில் எம்.பி மற்றும் பிரமுகர்களாக இருந்தவர்கள் எல்லோரையும் விட நன்றாக ஸ்கோர் செய்தவர் வியாழேந்திரன். வியாழேந்திரன் அரசியலில் இருக்கும் வரை தமக்கு சிக்கலென்று கருதிய முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மற்றும் பிரமுகர்கள் கூட்டமைப்பின் தலைவரிடம் தினமும் வியாழேந்திரனை பற்றி முறையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இது உச்சக்கட்டத்தை எட்டியதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கூட்டமைப்பின் தலைமைக்கும், வியாழேந்திரனுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. மத்திய அரசிடம் பெற்றுக்கொடுக்கும் அபிவிருத்தி நிதிகளிலும் வியாழேந்திரன் ஒதுக்கப்பட்டிருந்தார். இந்த வாய்ப்பை சு.க நன்றாகவே பயன்படுத்தியிருந்தது.

திருகோணமலையிலுள்ள சு.க முக்கியஸ்தர் ஒருவர் வியாழேந்திரனுக்கு நெருக்கமானவர். கனடாவிலும் சு.க முக்கியஸ்தர் ஒருவர் இருக்கிறார். திருகோணமலை முக்கியஸ்தரின் ஏற்பாட்டில், கனடாவில் முதற்கட்ட பேச்சுக்கள் நடந்து முடிந்துள்ளன.

நேற்று (02) விமானநிலையத்தில் வியாழேந்திரன் இறங்கியதும், மட்டக்களப்பை சேர்ந்த அங்கிலிக்கன் பாதிரியார் ஒருவர் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, கொழும்பிலுள்ள ஜெட்விங் ஹொட்டலில் தங்க வைத்தார். மாலைவரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, பேச்சு நடந்தது. ஆளுனரும் அங்கு நேரடியாக வந்திருந்தார் என்ற தகவல் நேற்றே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த பேச்சுக்களில் என்ன நடந்ததென்பதை, வியாழேந்திரனின் உதவியாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினோம். “ஒரு ஊடகவியலாளர், திருகோணமலை முக்கியஸ்தர், முக்கியமான சிலர் மாஸ்டருடன் பேசினார்கள். இடையில் நாங்களும் மாஸ்ரரும் பேசினோம். பேசி முடிந்ததும் நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு ஏற்றி சென்றார்கள்“ என்றார்.

அந்த ஹோட்டலில் இருந்து ஊடகவியலாளர் ஒருவரின் வாகனத்தில் “மின்னல்“ ஆக அவர்கள் பறந்து சென்றுள்ளனர். அதன் பின் பதவியேற்பு.

கட்சி தாவுவதற்காக வியாழேந்திரனிற்கு ஐந்து கோடி பணம் வழங்கப்பட்டது என செய்திகள் அடிபடுவது உண்மையா என கேட்டோம். “அதைப்பற்றி உறுதியாக நமக்கு தெரியாது. எங்களுடன் அதைப்பற்றி பேசவில்லை. அப்படியொரு செய்தியை நாங்களும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உறுதியாக எதுவும் தெரியாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் அண்ணனைத்தான் நிறுத்துவோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்“ என்றார்கள்.

amal-300x168.png ஜனாதிபதி, வியாழேந்திரனின் உதவியாளர்கள், திருகோணமலை சு.க அமைப்பாளர்

கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, பெயருக்கு முன்னால் ஒரு கௌரவமாக மட்டுமே அந்த அமைச்சு இருக்கும். அதற்கான அலுவலகமோ… ஆளணியோ எதுவுமே உருவாக்கப்படவில்லை.

வியாழேந்திரனின் உதவியாளர்கள்தான், அன்றைய தினமே மஹிந்த ராஜபக்ச, மைத்திரியுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

http://www.pagetamil.com/22087/

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

Link to comment
Share on other sites

கிழக்கின் நிலையை அவரிடம் ஒரு முறை பேசிய போது மிக கவலையாக குறிப்பிட்டார். கூட்டமைப்பின் மற்றையவர்கள் போல அல்லாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யும் ஒரே  கூட்டமைப்பு மனிதர். பணம் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் அமுல் படுத்த முடியாமல் இருப்பதாக சொன்னார்.பணம் சேர்ப்பதற்காக சில முறை கனடா வந்துள்ளார்.  கூட்டமைப்புடன் சேர்ந்து எந்த சேவையையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதால் தான் அரசுடனாவது இணைந்து ஏதாவது மக்களுக்கு செய்யலாம் என நினைக்கிறேன். யார் அவரை துரோகி என்றாலும் சுயேச்சையில் போட்டியிட்டாலும் வெல்ல கூடிய நிலையில் தான் வியாழேந்திரன் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கைச் சேர்ந்தவர்கள் டக்ளசையும் விஜயகலாவையும் அங்கயனையும் அவர்களாகவே தேர்தலில் வாக்களித்துப்பாராளுமன்றம் அனுப்புவார்கள் ஆனால் தனது பிரதேசத்துதின் நலனுக்காக கட்சிதாவுகிறேன் என இடம்மாறும் கிழக்கு அரசியல்வாதிகளுக்கு துரோகி முத்திரை குத்துவார்கள். தற்போதையதேவை தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் அரசுடன் சேர்ந்து கிழக்கில் முஸ்லீம்களது அடாவடியை ஒடுக்குவதுதான் கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் இதுபோல் நிலையெடுப்பது நல்லதே.

சம்மந்தர் மாவை சுமந்திரன் சுரேஸ் போன்றவர்கள் கடந்தகாலத்தில் அடிச்ச காசையும் இந்தியா கொடுத்த காசையும் வைச்சு வாழட்டும்.

என்னைப்பொறுத்தவரை யாழ் குடாநாட்டு அரசியல்வாதிகள் என நாடகமாடும் இவர்களைப்புறமொதிக்கி சிங்களத்தலைமைகளுடன் கிழக்கு இணைவதே அவர்கள் தங்கள் மண்ணையாயினும் காப்பதற்கு வாய்ப்பாயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை கும்பல்..கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரை வார்த்ததை விட இவர் ஒன்றும் பெரிய துரோகம் செய்ததாகத் தெரியவில்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எப்பவும் வடக்கு மக்களும் சரி அரசியல் வாதிகளும் சரி சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபாங்கு இன்னும் வளரவில்லை  இன்று வரைக்கும் துரோகியாக நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் கிழக்கு கிழக்கு மக்களை இதைப்பற்றி கவலை கொள்வதில்லை கிழக்கு மக்கள் ஏனென்றால் இதுவரை பெரிதாக வட மாகாண அரசியல் வாதிகள் கிழக்கினைப்பற்றி எங்கும் பெரிதாக கதைத்ததும் இல்லை 

1 hour ago, nunavilan said:

கிழக்கின் நிலையை அவரிடம் ஒரு முறை பேசிய போது மிக கவலையாக குறிப்பிட்டார். கூட்டமைப்பின் மற்றையவர்கள் போல அல்லாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யும் ஒரே  கூட்டமைப்பு மனிதர். பணம் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் அமுல் படுத்த முடியாமல் இருப்பதாக சொன்னார்.பணம் சேர்ப்பதற்காக சில முறை கனடா வந்துள்ளார்.  கூட்டமைப்புடன் சேர்ந்து எந்த சேவையையும் மக்களுக்கு செய்ய முடியாது என்பதால் தான் அரசுடனாவது இணைந்து ஏதாவது மக்களுக்கு செய்யலாம் என நினைக்கிறேன். யார் அவரை துரோகி என்றாலும் சுயேச்சையில் போட்டியிட்டாலும் வெல்ல கூடிய நிலையில் தான் வியாழேந்திரன் உள்ளார்.

ம்ம் உண்மைதான் இவர் கூட்டமைப்பில் இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை முட்டுக்கட்டை மட்டும் கூட்டமைப்பு 

53 minutes ago, Elugnajiru said:

வடக்கைச் சேர்ந்தவர்கள் டக்ளசையும் விஜயகலாவையும் அங்கயனையும் அவர்களாகவே தேர்தலில் வாக்களித்துப்பாராளுமன்றம் அனுப்புவார்கள் ஆனால் தனது பிரதேசத்துதின் நலனுக்காக கட்சிதாவுகிறேன் என இடம்மாறும் கிழக்கு அரசியல்வாதிகளுக்கு துரோகி முத்திரை குத்துவார்கள். தற்போதையதேவை தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் அரசுடன் சேர்ந்து கிழக்கில் முஸ்லீம்களது அடாவடியை ஒடுக்குவதுதான் கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் இதுபோல் நிலையெடுப்பது நல்லதே.

சம்மந்தர் மாவை சுமந்திரன் சுரேஸ் போன்றவர்கள் கடந்தகாலத்தில் அடிச்ச காசையும் இந்தியா கொடுத்த காசையும் வைச்சு வாழட்டும்.

என்னைப்பொறுத்தவரை யாழ் குடாநாட்டு அரசியல்வாதிகள் என நாடகமாடும் இவர்களைப்புறமொதிக்கி சிங்களத்தலைமைகளுடன் கிழக்கு இணைவதே அவர்கள் தங்கள் மண்ணையாயினும் காப்பதற்கு வாய்ப்பாயிருக்கும்.

பிரச்சினையை நன்றாக விளங்கிக்கொண்டீர்கள் நன்றி சகோ:90_wave:

51 minutes ago, nedukkalapoovan said:

சம் சும் மாவை கும்பல்..கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரை வார்த்ததை விட இவர் ஒன்றும் பெரிய துரோகம் செய்ததாகத் தெரியவில்லை. ?

அதேதான் நெடுக்கு முஸ்லீம்களுக்கு ஆள கொடுத்ததன் மூலம் இழந்தது அதிகம் இப்ப வாகரை வரைக்கும் சென்று விட்டார்கள் அவர்கள் நிலமாம் 

Link to comment
Share on other sites

தேர்தலுக்கு மாதிரம்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு   வென்ற பின் கட்சி தாவினால்  மக்களுக்காக. தேர்தலிலும்  சுயேட்சையாக நின்று  வென்று  மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே.  எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

இப்படி எழுதுவது வடக்கு கிழக்கு மக்களை பிரிக்கதான் உதவும். பத்திரிகைகாரர்கள் கதைக்கிறார்கள் என்றால், நீங்கள் அதையேன் இங்கு வந்து போடுகிறீர்கள். களமானது வடகிழக்குக்கு மக்கள் வந்து வாசிக்கும் ஒரு தளம். தமிழன் என்ற முறையில் பொறுப்பாக செய்திகளையும் கருத்துக்களையும  பகிரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புடன் சேர்ந்திருப்பதால் எவருக்குமே எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், இதுவரையில், சேர்ந்திருந்து சேர்ந்திருந்து கண்டது எதுவுமில்லை. இனியும் எதுவுமே நடக்கப்போவதில்லை. நண்பர் ஒருவர் சொன்னதுபோல, தமிழ்த்தேசிய அரசியல் இனி எடுபடாது. அது வேண்டுமென்றால், உங்கள் மனதிலும், உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டூவதொடும் நிற்கட்டும். அதைவைத்து அரசியல் செய்ய முடியாது.

கூட்டமைப்பினை தமிழ்த்தேசியத்தின்  ஒரு வடிவமாகப் பார்ப்பதால்த்தான், சிங்களவர்கள் எதையுமே தரமறுக்கிறார்கள். ஆனால், சிங்கள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் தேவை தமது அரசியலுக்கு. இவர்களின் தமிழ்த்தேசியத்தின்  வீரியத்தை நன்கே அறிந்துவைத்துள்ள அவர்கள், தேவைக்கேற்றவாறு இவர்களைப் பாவிக்கிறார்கள். ஆனால், இவர்கள் பிரதிநித்துவப்படுத்தும் மக்களுக்கு ஈற்றில் எதுவுமே கிடைக்கப்போவதில்லை, நல்லிணக்க அரசும் சம்மந்தனையும், சுமந்திரனையும் பாவித்து பதவிக்கு வந்தார்களே ஒழிய, தாம் தருவதாகச் சொன்ன எதையுமே தரவில்லை. மைத்திரி ஒருபடி மேலே சென்று நான் உயிரோடு இருக்கும்வரை சமஷ்ட்டி என்பதோ, வடக்குக் கிழக்கு இணைப்பென்பதோ நடக்க விடப்போவதில்லை என்று வேறு சூளுரைத்திருக்கிறார். நிலைமை இப்படியிருக்கிறது.

தமிழர்களிலிருந்து முஸ்லீம்கள் அந்நியப்பட்டதுபோல, வடக்குத் தமிழர்களும் கிழக்குத் தமிழர்களும் பிரிந்து இயங்குவதுதான் யதார்த்தம் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது. அவர்களது அரசியலை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். தமிழ்த் தேசியத்தில் நின்று இன்றுவரை சாதித்தவை எதுவுமேயில்லை என்றானபிறகு, தொடர்ந்தும் அங்கே நிற்பதிலும், ஏதோ ஒரு பெரும்பான்மை அரசியல்த் தலைவருக்கு அவ்வப்போது எடுபிடியாக பாவிக்கப்படுதலிலும் பார்க்க, அவர் தனித்தோ அல்லது நேரடியாகவோ சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுடன் இணைந்து, கூட்டமைப்பிலிருந்து செய்ய முடியாததை, இப்போது செய்யட்டும்.

ஆனால், இங்கே முன்வைக்கப்படும் காரணங்களில் என்னை ஒன்றே ஒன்று உருத்துகிறது. அதாவது முஸ்லீம்களின் அடாவடி காணிப்பறிப்பிற்கு முகம்கொடுக்கத்தான் மகிந்தவுடன் இணைகிறோம் என்பது. எம்மில் பலருக்கு உண்மையான எதிரியார்? உண்மையான நண்பன் யார் என்று பிரித்துப் பார்ப்பதில் எப்போதும் ஒரு பிரச்சினை இருக்கிறது. முஸ்லீம்கள் காணி பறிக்கிறார்கள் என்பதற்காக, சிங்களம் இன்றுவரை தமிழர்களுக்கெதிராக, அவர்கள் கிழக்காக இருந்தாலும் சரி, வடக்காக இருந்தாலும் சரி, செய்த அநியாயங்களும், அக்கிரமங்களும், இறுதியான 2009 முள்ளிவாய்க்கால் திட்டமிட்ட இனக்கொலையும் எமக்கு  மறந்ததுபோனது  எப்படி?

 இன்றும் முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய தமிழ் இடங்களில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வது யார்? அதைத் தடுக்க நாம் யாருடன் இணையப் போகிறோம்? அல்லது 50 களில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கின் தமிழரின் பாரம்பரிய நிலங்களை அபகரித்து கொழுத்திருக்கும் கல்லோயா தொடங்கலாக, அம்பாறை, பொத்துவில் என்று நீளும் பறிபோன தமிழ்க் கிராமங்களின் பட்டியலில் இருப்பவை யாரால் அபகரிக்கப்பட்டவை, முஸ்லீம்களாலா? இவற்றை மீட்பதற்கு யாருடன் கூட்டுச் சேர்வதாக உத்தேசம்? 

பெளத்த சின்னங்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் இன்னுமின்னும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களத்தால் காவுகொள்ளப்படவிருக்கும் தமிழரின் நிலங்கள் பற்றிப் புரிகிறதா உங்களுக்கு? இதைத் தடுக்க யாருடன் கூட்டுச் சேரப் போகிறீர்கள்? தமிழர்கள் முட்டாள்கள். ஆத்திரக் காரர்கள். அவசரக் காரர்கள். முஸ்லீம்கள் செய்வது பெரிதாகத் தெரியும் எமக்கு, அரசு செய்வது தெரியவில்லை. சிங்களம் எம்மீது நடத்தி முடித்த இனவழிப்புப் போருக்குப் பின்னரும் கூட எம்மில பலர், "சிங்களவோனோட சேர்ந்து வாழலாம், ஆனால் இந்தக் காக்காமாரோட சேர்ந்து வாழ ஏலாது" என்று வாய்கூசாமல்ச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்படி சிங்களம் செய்ததை விட இந்தக் காக்காமார் என்னதான் செய்துவிட்டார்கள் உங்களுக்கு ? நீங்கள் அவர்களுக்குச் செய்யாததை விடவா அவர்கள் செய்துவிட்டார்கள்? 

மகிந்த பதவியேற்றவுடன் அவரைச் சந்திக்கச் சென்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் கூட்டு அறிக்கையை யாராவது படித்தீர்களா? மகிந்த இனி என்ன செய்யவேண்டும் என்று வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பார்த்தீர்களா? கிளிநொச்சியில் ராணுவம் அமைத்த ஒரு செங்கல் மதிலை சிறிதரன் உடைத்தபோது, 3000 ஆண்டு புத்த சின்னத்தை உடைத்து தமிழின வெறியைக் காட்டுகிறது கூட்டமைப்பு என்று நாடகமாடிய சிங்களம், இன்று நாடுமுழுவதுமுள்ள பெளத்த சின்னங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் நடக்கவிருக்கும் அநியாயத்தின் அளவு புரிகிறதா உங்களுக்கு? அதேபோல வடக்குக் கிழக்கு இணைப்பென்பதும், சமஷ்ட்டி என்பதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை என்றும் கோரப்பட்டிருப்பது தெரியுமா யாருக்காவது?

உங்களின் சுயநலத்திற்கோ, அல்லது உங்களின் தோழர்களின் நலன்களுக்காகவோ அல்லது உங்களின் கிராம - பிரதேச நலன்களுக்காகவோ உண்மையாகவே உழைக்க வேண்டுமென்றால் தாராளமாகப் போய்ச் சேருங்கள், பணத்தை வாங்குங்கள், நீங்களும் அனுபவித்து மற்றவனுக்கும் கொடுங்கள். அதை விடுத்து முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பிற்கெதிராகத்தான் சிங்களத்துடன் கூட்டுச் சேர்கிறோம் என்று மட்டும் சொல்லாதீர்கள், ஏனென்றால, சிங்களமே மிகவும் மோசமான ஆக்கிரமிப்பாளன். அதேபோல முஸ்லீம் ஆக்கிரமிப்பென்பது சிங்களத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் நடைபெறுவதுமில்லை. பிரித்தாளும் தந்திரம் பற்றி ஆளாளுக்குப் பாடமெடுத்த நாங்களா இப்படிப் பேசுவது?

தன்னால் இயலாவிட்டாலும் கூட, இன்றுவரை தமிழ்த்தேசியம் எனும் பெயரைத் தாங்கிக்கொண்டு இன்றுவரை ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழும் திரு ஞானவரோதயம் சம்பந்தன் ஐய்யா அவர்களுக்காக உண்மையாகவே வேதனைப்படுகிறேன்.  ஆனால், தேசியம் தேசியம் என்று தான் வளர்த்தவர்கள் ஒருநாள் தன்னை விட்டுப் போவார்கள் என்று அவர் அறிந்தே வைத்திருப்பார். எல்லாத் தலைவர்களுக்கும் இது ஒரு கட்டத்தில் நடக்கும். இதுதான் தமிழர்களின் வரலாறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மற்றும் என் நண்பர்கள் சிலர் எல்லாம் வியாழேந்திரனின் கட்சி தாவலை / அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி மகிழ்ச்சியைத் தான் வெளிக்காட்டுகின்றார்கள். அங்குள்ள கள நிலவரத்தின் படி ஒரு அமைச்சு பதவியை கிழக்கு தமிழர் பெற்றுக் கொள்வது தான் முஸ்லிம்களின் அடாத்தை கட்டுப்படுத்தும் எனும் போக்கில் அவர்களின் எண்ணம் உள்ளது. இது எந்தளவுக்கு சரி வரும் என தெரியாது , ஆனால் வெறுமனே எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த பயனும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

வடக்கை சேர்ந்தவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு அடுத்த துரோகி என்று வியாழேந்திரனுக்கு முத்திரை குத்துகின்றனர். தம் படலையில் டக்கிளஸ், சித்தார்த்தன் என்று ஒரு பெரும் பட்டாளத்தை வைத்துக் கொண்டு...

நிழலி நீங்கள் ஏன் வடக்கு கிழக்கு என்று கொண்டுவருகின்றீர்கள்...வியாழேந்திரன் நல்லது செய்யத்தான் அமைச்சர் பதவி ஏற்றுகொண்டார் என்றால் அதை பாராட்டுவோம்....

துரோகம் என்று வரும் பொழுது வடக்கு ,கிழக்கு என்று பார்க்கமுடியாது .....தமிழ்தேசியகூட்டணியை விட பெரிய துரோகிகள் வேறு யாருமில்லை....

2 hours ago, நேசன் said:

தேர்தலுக்கு மாதிரம்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு   வென்ற பின் கட்சி தாவினால்  மக்களுக்காக. தேர்தலிலும்  சுயேட்சையாக நின்று  வென்று  மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே.  எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 
உண்மை நேசன் ,கிழக்கு மாகாண தமிழ் அரசியல் தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

வியாழேந்திரனோ இல்லை கருணாவோ மகிந்த அரசில் பதவி வகிப்பதால் இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தலாம் என்று பொருள் இல்லை. அதே போல் வடக்கில் உள்ள அரசியல் வாதிகள் இவர்கள் போல் முடிவெடுப்பதால் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கலாம் என்று பொருள் இல்லை.  இவைகள் பேச்சளவில்  இருக்கலாம் தவிர நடமுறையில் சாத்தியமில்லை. எப்போது ஒருவர் தனது ஊருக்கும் பிரதேசத்துக்கும் என்றளவில் தனது சிந்தனையை குறுக்குகின்றாரோ அப்போதே பேரினவாதம் எந்த முயற்சியும் இல்லாமல் வெற்றி பெறுகின்றது .என்னும் தூர நோக்கில் சிந்தித்தால் பேரினவாதத்தின அடுத்த கட்டம் இஸ்லாமியர்கள் பரவலை தடுப்பது. அதை அவர்கள் நேரடியாக செய்யப்போவதில்லை. தமிழர்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையிலான பகையை விருத்தி செய்வதே அவர்களின் தெரிவில் முதன்மையானதாக இருக்கும்.  அதற்கு எற்றாற் போல்தான் அனைத்து அணுகுமுறைகளும் மாற்றங்களும் தென்படுகின்றது.  கடந்த காலங்களைப் பார்த்து திருந்த மறுக்கும் எம்மவருக்கு எதிர்காலத்தில் மேலும் சில அழிவுகள் தவிர்க்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

தன்னால் இயலாவிட்டாலும் கூட, இன்றுவரை தமிழ்த்தேசியம் எனும் பெயரைத் தாங்கிக்கொண்டு இன்றுவரை ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழும் திரு ஞானவரோதயம் சம்பந்தன் ஐய்யா அவர்களுக்காக உண்மையாகவே வேதனைப்படுகிறேன்.  ஆனால், தேசியம் தேசியம் என்று தான் வளர்த்தவர்கள் ஒருநாள் தன்னை விட்டுப் போவார்கள் என்று அவர் அறிந்தே வைத்திருப்பார். எல்லாத் தலைவர்களுக்கும் இது ஒரு கட்டத்தில் நடக்கும். இதுதான் தமிழர்களின் வரலாறு. 

.ஒரு பழுத்த அரசியல்வாதி செய்யக்கூடிய செயலை அவர் செய்யவில்லை...கடந்த 10 வருடமாக அவர் செய்த அரசியல் என்பது  முட்டாள் தனமானது ...இப்படியான நிலை வரும் என்பது சாதாரண திண்ணை அரசியல் அலட்டல்மன்னர்களுக்கே தெரிந்த விடயம்...

இன்று கூட இவர் ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை காட்டி ஒரு சிறு சல‌ன‌த்தை செய்ய முடியும்....ஆனால் செய்யமாற்றார்...

கிழக்கு மாகாண அரசியலையும் ஒழுங்காக செய்யவில்லை,தமிழ்தேசிய அரசியலையும் செய்யவில்லை,சிறிலங்கா தேசிய அரசியலையும் ஒழுங்காக செய்யவில்லை

2 minutes ago, சண்டமாருதன் said:

தமிழர்களுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் இடையிலான பகையை விருத்தி செய்வதே அவர்களின் தெரிவில் முதன்மையானதாக இருக்கும்.  அதற்கு எற்றாற் போல்தான் அனைத்து அணுகுமுறைகளும் மாற்றங்களும் தென்படுகின்றது.  கடந்த காலங்களைப் பார்த்து திருந்த மறுக்கும் எம்மவருக்கு எதிர்காலத்தில் மேலும் சில அழிவுகள் தவிர்க்க முடியாதது. 

உலக அரசியலே அதுதானே....அடுத்த கட்டம் இராணுவம்,பொலிஸ் போன்றவற்றில் தமிழர்களை சேர்த்து கொள்வார்கள்....புலனாய்வுபிரிவினர்....

Link to comment
Share on other sites

On 11/3/2018 at 4:39 PM, நேசன் said:

தேர்தலுக்கு மாதிரம்  தமிழ்தேசியக்கூட்டமைப்பு   வென்ற பின் கட்சி தாவினால்  மக்களுக்காக. தேர்தலிலும்  சுயேட்சையாக நின்று  வென்று  மக்கள் சேவையை செய்ய வேண்டியது தானே.  எல்லாம் காசுக்காக விலை போகும் தமிழர்.
 
சுயேச்சையாக நின்று வெல்லக்கூடியவரை தான் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்தது. (புளட்). கூட்டமைப்புடன் நின்று எதுவும் செய்ய முடியாது என தெரிந்து விட்டது. அரசுடன் சேர்ந்தாவது மக்களுக்கு சேவை செய்யலாம் என கிழக்கின் நிலைமையில் இருந்து சிந்தித்து செயற்பட்டிருக்கலாம். அவரை போல கிழக்கில் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கிழக்கில் காட்ட மாட்டீர்கள். சுயேச்சையாக வெல்லாம். பணம் இல்லாமல் மக்களுக்கு எதை செய்வது??

Link to comment
Share on other sites

இப்ப எல்லாம் கிழிஞ்சு போச்சு 

அரசும் கலைச்சாச்சு.     சுஜேட்சையாய் நிற்க வேண்டியது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 4:29 PM, nunavilan said:

சுயேச்சையாக நின்று வெல்லக்கூடியவரை தான் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்தது. (புளட்). கூட்டமைப்புடன் நின்று எதுவும் செய்ய முடியாது என தெரிந்து விட்டது. அரசுடன் சேர்ந்தாவது மக்களுக்கு சேவை செய்யலாம் என கிழக்கின் நிலைமையில் இருந்து சிந்தித்து செயற்பட்டிருக்கலாம். அவரை போல கிழக்கில் மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை கிழக்கில் காட்ட மாட்டீர்கள். சுயேச்சையாக வெல்லாம். பணம் இல்லாமல் மக்களுக்கு எதை செய்வது??

உண்மை... அது தான். 
சம்பந்தன்... பழைய..  பத்திரிகை  படிக்கத்தான் லாயக்கு.

சுமந்திரனை....  ஒருக்கா, அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி...  
அடி   அரசியல் பால  பாடம் கற்றுக் கொள்ள, பயிற்சி கொடுக்க வேண்டும்.

மாவை... தானும்  ஒரு ஆள் (ரவுடி) என்று, வரப்  பார்ப்பார்... 
ஆளை...  மெல்லமாய்.. "காய் வெட்டி விட்டு",   வாருங்கள்.
மாவை... உள்ளூரில் உழுவது... தான், நாட்டுக்கு நல்லது. 

Link to comment
Share on other sites

8 hours ago, நேசன் said:

இப்ப எல்லாம் கிழிஞ்சு போச்சு 

அரசும் கலைச்சாச்சு.     சுஜேட்சையாய் நிற்க வேண்டியது தானே

நிண்டால் போச்சு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.