Jump to content

முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து, வாழைக் காய் ஏற்றுமதி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

banana-export-to-europe-720x450.jpg

முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து வாழைக் காய் ஏற்றுமதி!

இந்தியாவில் வாழைக்காய் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பழமையான முறையில் விவசாயம் மேற்கொண்டு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே ஈட்டப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் முயற்சியினால் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தப்பட்டன.

இதன்படி, திசு வளர்ப்பு கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், சிப்பம் கட்டும் மையம் ஆகியவற்றை அமைத்து, தேனி மாவட்ட விவசாயிகள் வாழை விவசாயத்தை அறிவியல் ரீதியில் செய்ததோடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர்.

இதனால், விவசாயிகளின் நிகர லாபம் படிப்படியாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து 6 மடங்காக 3 லட்சம் ரூபாய்களுக்கும் மேல் உயர்ந்தது.

இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக, ஜரோப்பிய நாடுகளுக்கு முதன் முறையாக தமிழ்நாட்டின் வாழைக் காய்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை உருவாக்கும் நோக்கில் இத்தாலியை சேர்ந்த பொருளாளர்களின் சபையின் நிதியுதவியுடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணைந்து கம்பிவட கடத்தி என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேனியில் விளைந்த கிராண்டநைன் வாழை அறுவடைக்கு பிந்திய மேலாண்மை நெறிமுறைகளுடன் அறுவடை செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த தரத்தில் பொதி செய்யப்பட்டு முறையாக கொள்கலன்களில் நிரப்பப்பட்டது.

இந்தியாவிலிருந்து முதன் முறையாக ஐரோப்பாவிற்கு கொச்சின் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக, நேற்று (வியாழக்கிழமை) ஏற்றுமதி செய்யப்பட்டு, 24 நாட்களில் இத்தாலிய துறைமுகம் திரிஸ்ட்ஸ்யை அடையும் வகையில் அனுப்புவைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/முதன்முறையாக-ஐரோப்பிய-நா/

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேரளாக்காரர்கள் ஐரோப்பிய சந்தைகளை நிரப்பி நிற்பதை தமிழகம்... மற்றும் தமிழீழம்... பிரதியீடு செய்ய வேண்டும். இது தமிழக.. தமிழீழ மக்களின் பொருளாத நிலையை மேம்படுத்த உதவும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

கேரளாக்காரர்கள் ஐரோப்பிய சந்தைகளை நிரப்பி நிற்பதை தமிழகம்... மற்றும் தமிழீழம்... பிரதியீடு செய்ய வேண்டும். இது தமிழக.. தமிழீழ மக்களின் பொருளாத நிலையை மேம்படுத்த உதவும். ?

இதையெல்லாம் நடைமுறைப்படுத்த,மக்களை ஊக்குவிக்க நல்ல அரசு வேண்டும். தனிமனிதர்களால் சாத்தியமாகுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

கேரளாக்காரர்கள் ஐரோப்பிய சந்தைகளை நிரப்பி நிற்பதை தமிழகம்... மற்றும் தமிழீழம்... பிரதியீடு செய்ய வேண்டும். இது தமிழக.. தமிழீழ மக்களின் பொருளாத நிலையை மேம்படுத்த உதவும். ?

கேரளாக்காரர்கள் பெரிதாக ஒன்றும் விளைவிப்பதில்லை அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள் புலம்பெயர்க்கு தேவையான காய்கறிகள் அனைத்துமே தமிழ்நாடு மதுரை பக்கம்களில் இருந்தே பெறப்படுகின்றது கேரளாவின் விமான நிலையம்கள் சென்னையை விட குறைந்த விமானம்கள் வந்து போனாலும் கார்கோ சுங்கம் 24மணி நேரம் திறந்து இருக்கும் சென்னை ,மதுரை ,திருச்சி போன்றவை குறைந்தளவு நேரமே சேவை புரிவது மல்லுகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கை டெல்லி மூலம் இதை சாதிக்கிறார்கள் . அத்துடன் தமிழ்நாட்டில் விளையும் பொருளுக்கு கிலோவுக்கு விவசாயி 10ரூபா லாபம் பெறுவதே அதிசயம் ஆனால் சும்மா உட்கார்ந்துகொண்டு IATA சர்வதேச விமான கார்கோ  கொம்பனிகள் மூலமாக அதே காய்கறி கிலோவுக்கு சுமார் நேர் மறை யாக 50 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் மலையாளிகள் வாரம் ஒன்றுக்கு 100டன் காய்கறிக்கு மேல் ஏற்றுமதியாகின்றது (வளைகுடா நாடுகளும் அடங்கும் ) அந்நிய செலவாணி அப்படி இப்படி என்று தமிழனின் முதுகில் மலையாளிகள் ஆட்டம் . இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கேரளாக்காரர்கள் பெரிதாக ஒன்றும் விளைவிப்பதில்லை அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள் புலம்பெயர்க்கு தேவையான காய்கறிகள் அனைத்துமே தமழ்நாடு மதுரை பக்கம்களில் இருந்தே பெறப்படுகின்றது கேரளாவின் விமான நிலையம்கள் சென்னையை விட குறைந்த விமானம்கள் வந்து போனாலும் கார்கோ சுங்கம் 24மணி நேரம் துறந்து இருக்கும் சென்னை ,மதுரை ,திருச்சி போன்றவை குறைந்தளவு நேரமே சேவை புரிவது மல்லுகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கை டெல்லி மூலம் இதை சாதிக்கிறார்கள் . அத்துடன் தமிழ்நாட்டில் விளையும் பொருளுக்கு கிலோவுக்கு விவசாயி 10ரூபா லாபம் பெறுவதே அதிசயம் ஆனால் சும்மா உட்கார்ந்துகொண்டு IATA சர்வதேச விமான கார்கோ  கொம்பனிகள் மூலமாக அதே காய்கறி கிலோவுக்கு சுமார் நேர் மறை யாக 50 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் மலையாளிகள் வாரம் ஒன்றுக்கு 100டன் காய்கறிக்கு மேல் ஏற்றுமதியாகின்றது (வளைகுடா நாடுகளும் அடங்கும் ) அந்நிய செலவாணி அப்படி இப்படி என்று தமிழனின் முதுகில் மலையாளிகள் ஆட்டம் . இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

எல்லா விசயமும் கையில வைத்து ஆச்சரியப்பட வைக்கிறீர்கள், தலை!?

அங்கே படித்த மண்ணின் மைந்தர்கள் ஆள இங்கே, மழைக்கும் பள்ளிக்குடம் ஒதுங்காத டீ ஆத்தினவர், சக்கரை ஆலை வைத்திருந்தவர்,  இறைச்சிக் கடை வைத்து இருந்தவர் என்று, முட்டாள்கள் ஆள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

எல்லா விசயமும் கையில வைத்து ஆச்சரியப்பட வைக்கிறீர்கள், தலை!?

அங்கே படித்த மண்ணின் மைந்தர்ள் ஆள இங்கே, மழைக்கும் பள்ளிக்குடம் ஒதுங்காத டீ ஆத்தினவர், சக்கரை ஆலை வைத்திருந்தவர்,  இறைச்சிக் கடை வைத்து இருந்தவர் என்று, முட்டாள்கள் ஆள்கிறார்கள்.

எந்த விடயத்திலும் திருப்தி அடையாத மனசு தாங்க காரணமாய் இருக்கலாம் . நானும் உங்களை போலத்தான்  இங்கு உள்ள மல்லுகள் தான் கடின உழைப்பாளிகள் என்று நம்பி அவர்களை கூர்ந்து கவனிக்க தொடங்கியதன் விளைவு வந்த உண்மைகள் இரு மாநிலத்துக்கும் பிரச்சனை என்றால் தமிழ்நாடு கையில் எடுக்கும் இறுதி ஆயுதம் லாரி ஸ்டிரைக் அதோடை திருவானந்தபுரம் தக்காளி விலை கிலோ 200க்கு போயிடும் அதன்பிறகே மல்லுகள் அடங்குவதை காணலாம் .

Link to comment
Share on other sites

12 minutes ago, Nathamuni said:

எல்லா விசயமும் கையில வைத்து ஆச்சரியப்பட வைக்கிறீர்கள், தலை!?

அங்கே படித்த மண்ணின் மைந்தர்கள் ஆள இங்கே, மழைக்கும் பள்ளிக்குடம் ஒதுங்காத டீ ஆத்தினவர், சக்கரை ஆலை வைத்திருந்தவர்,  இறைச்சிக் கடை வைத்து இருந்தவர் என்று, முட்டாள்கள் ஆள்கிறார்கள்.

நல்ல விடயம் வாழ்த்துக்கள் 

இதே ஏர்போர்ட்டில் sept 9 நான் இறங்கியிருந்தேன் + 5 கிழமை கேரளாவில்தான் இருந்தேன். 

பெருமாள் தான் எழுதியதற்குரிய மூலத்தை இங்கு பதிய வேண்டும்.

வெறுமனே பிதற்றல்கள் வேண்டாம்.

அங்கே படித்த மண்ணின் மைந்தர்கள் ஆள இங்கே, மழைக்கும் பள்ளிக்குடம் ஒதுங்காத டீ ஆத்தினவர், சக்கரை ஆலை வைத்திருந்தவர்,  இறைச்சிக் கடை வைத்து இருந்தவர் என்று, முட்டாள்கள் ஆள்கிறார்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இதே ஏர்போர்ட்டில் sept 9 நான் இறங்கியிருந்தேன் + 5 கிழமை கேரளாவில்தான் இருந்தேன். 

எந்த விமான நிலையத்தில் செப் 9 இறங்கிநீர்கள் ?

Link to comment
Share on other sites

Just now, பெருமாள் said:

எந்த விமான நிலையத்தில் செப் 9 இறங்கிநீர்கள் ?

நீங்கள் எழுதிய விமான நிலையமே ஞாபகத்தில் இல்லாதபோது எப்படி உங்கள் செய்தி மூலம் ஞாபகத்துக்கு வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

நீங்கள் எழுதிய விமான நிலையமே ஞாபகத்தில் இல்லாதபோது எப்படி உங்கள் செய்தி மூலம் ஞாபகத்துக்கு வரும் 

நான் கேள்வி கேட்டது உங்களை பதில் சொல்ல தெரியாவிட்டால் என்னை வைத்து கடிக்க வேண்டாம் .எனக்கு பதில் தெரியும் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

கேரளாக்காரர்கள் பெரிதாக ஒன்றும் விளைவிப்பதில்லை அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள் புலம்பெயர்க்கு தேவையான காய்கறிகள் அனைத்துமே தமிழ்நாடு மதுரை பக்கம்களில் இருந்தே பெறப்படுகின்றது கேரளாவின் விமான நிலையம்கள் சென்னையை விட குறைந்த விமானம்கள் வந்து போனாலும் கார்கோ சுங்கம் 24மணி நேரம் திறந்து இருக்கும் சென்னை ,மதுரை ,திருச்சி போன்றவை குறைந்தளவு நேரமே சேவை புரிவது மல்லுகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கை டெல்லி மூலம் இதை சாதிக்கிறார்கள் . அத்துடன் தமிழ்நாட்டில் விளையும் பொருளுக்கு கிலோவுக்கு விவசாயி 10ரூபா லாபம் பெறுவதே அதிசயம் ஆனால் சும்மா உட்கார்ந்துகொண்டு IATA சர்வதேச விமான கார்கோ  கொம்பனிகள் மூலமாக அதே காய்கறி கிலோவுக்கு சுமார் நேர் மறை யாக 50 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் மலையாளிகள் வாரம் ஒன்றுக்கு 100டன் காய்கறிக்கு மேல் ஏற்றுமதியாகின்றது (வளைகுடா நாடுகளும் அடங்கும் ) அந்நிய செலவாணி அப்படி இப்படி என்று தமிழனின் முதுகில் மலையாளிகள் ஆட்டம் . இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

Edited 6 minutes ago by பெருமாள்

இது ஒரு கற்பனை என்றால் அதற்கு யாழில் வேறு இடங்கள் இருக்கின்றன - பதிவதற்கு.

இல்லை என்றால் இந்த செய்திக்கு மூலம் எதுவென்று பதியுங்கள். 

அதுவரை நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிவரி பிள்ளைகள் போல் என்னிடம் சண்டை போடாதீர்கள் 

3 hours ago, ஜீவன் சிவா said:

இது ஒரு கற்பனை என்றால் அதற்கு யாழில் வேறு இடங்கள் இருக்கின்றன - பதிவதற்கு.

இல்லை என்றால் இந்த செய்திக்கு மூலம் எதுவென்று பதியுங்கள். 

அதுவரை நன்றி 

நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை ஜீவன் சிவா 

நீங்கள் சின்ன பிள்ளை போல் என்னிடம் கொள்ளுபடுவது வேடிக்கையாக உள்ளது ஜீவன் சிவா பதிலை சொல்லுங்கள் .

SEP9 ல் எந்த விமான நிலையத்தில் இறங்கிநீர்கள் ?

***

Link to comment
Share on other sites

இது எனது விமானப்பதிவு 

சொந்தப்பெயரில் எழுதுவதால் எனது பெயரை மறைக்க தேவை இல்லை 

இப்பவாவது உங்கள் பதிவு வெறும் பொய் என்று ஒத்துக்கொள்ளுங்கள் இல்லை மூலம் என்ன என்பதை தாருங்கள்.

Document 603-2110371199: Colombo - Colombo Sivagnanam Jeevakumaran
  your flight selection
 
Colombo to Kochi
     
Flight 1 Sunday, September 09, 2018
 confirmed
Departure: 09:00 Colombo, Sri Lanka - Bandaranaike International
Arrival: 10:15 Kochi, India - Kochi International, terminal 3
 
Airline SriLankan Airlines UL 165
Duration 1:15
Aircraft: Airbus Industrie A330-200
   
Fare type: ECO VALUE
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.thanthitv.com/News/India/2018/08/15132546/1005920/Kerala-Flood-idukki-dam-overflows-Kochi-Airport-Closed.vpf

விமான ஓடுதளத்திற்குள் புகுந்த வெள்ளம் : கொச்சி விமான நிலையம் மூடல்
பதிவு : ஆகஸ்ட் 15, 2018, 01:25 PM
 
கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
201808151325458827_Kerala-Flood-idukki-dam-overflows-Kochi-Airport-Closed_SECVPF.gif
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் முழு கொள்ளளவை எட்டிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இடமலையார் மற்றும் இடுக்கி செருதோனி அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பெரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. இதை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

அடங்கியாச்சா ..............

நீங்கள் என்ன அவதூறு அடிச்சாலும் நான் திரும்பி ஓடும் ஆள் அல்ல .

Link to comment
Share on other sites

13 minutes ago, பெருமாள் said:

https://www.thanthitv.com/News/India/2018/08/15132546/1005920/Kerala-Flood-idukki-dam-overflows-Kochi-Airport-Closed.vpf

விமான ஓடுதளத்திற்குள் புகுந்த வெள்ளம் : கொச்சி விமான நிலையம் மூடல்
பதிவு : ஆகஸ்ட் 15, 2018, 01:25 PM
 
கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
201808151325458827_Kerala-Flood-idukki-dam-overflows-Kochi-Airport-Closed_SECVPF.gif
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் முழு கொள்ளளவை எட்டிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இடமலையார் மற்றும் இடுக்கி செருதோனி அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பெரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. இதை தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

கேரளாவில் வெள்ளம் என்று தெரியாமலா நான் போனேன். இல்லை கொச்சின் விமானநிலையம் மூடப்பட்டதும் தெரியாமல் இருந்திருக்குமா.

ஆனால் அன்று நான் இறங்கினதும் கொச்சினில்தான்.

அன்பரே நான் மூலம் கேட்டது கீழுள்ள உங்கள் வரிகளுக்குத்தான்.

2 hours ago, பெருமாள் said:

இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

தெரியாவிட்டா பொய் என்று ஒத்துக் கொள்ளுங்கள் - இல்லை மூலம் எது என்று தாருங்கள் 

விதண்டாவாதம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

கேரளாவில் வெள்ளம் என்று தெரியாமலா நான் போனேன். இல்லை கொச்சின் விமானநிலையம் மூடப்பட்டதும் தெரியாமல் இருந்திருக்குமா.

அன்பரே நான் மூலம் கேட்டது கீழுள்ள உங்கள் வரிகளுக்குத்தான்.

தெரியாவிட்டா பொய் என்று ஒத்துக் கொள்ளுங்கள் - இல்லை மூலம் எது என்று தாருங்கள் 

விதண்டாவாதம் வேண்டாம்.

***

3 hours ago, ஜீவன் சிவா said:

இதே ஏர்போர்ட்டில் sept 9 நான் இறங்கியிருந்தேன் + 5 கிழமை கேரளாவில்தான் இருந்தேன். 

பெருமாள் தான் எழுதியதற்குரிய மூலத்தை இங்கு பதிய வேண்டும்.

வெறுமனே பிதற்றல்கள் வேண்டாம்.

உங்களுக்குரிய பதில் தரபட்டு விட்டது ஆதாரத்துடன் இனி நீங்கள் கேட்க்கும் அடுத்த கேள்விகளுக்கு இன்றைய விடுமுறை நாளை அந்த பழைய செய்திகளை  தேடி பலியிட முடியாது நிர்வாகம் ஒருவேளை கேட்டால் மினகெட்டு எடுத்துகொடுக்க தயாராய் உள்ளன் உங்களுக்கு ஒன்றை சொன்னால் அடுத்த கேள்விகள் அன்று விமானிக்கு காய்ச்சல்  இருந்ததா இல்லையா என்றும் கேட்க்க கூடிய ஆள் உங்களுக்கு நான் எழுதுவது பிதற்றல்கள் போல் இருந்தால் நான் கவலைப்பட போவதில்லை .

அநேகமான என்னுடைய பதில் திரிகள் எல்லாவற்றிலும் உங்களுக்கு பதில் தந்தும் கடைசியாக AR ரகுமானின் ஆரம்ப பாட்டுக்களில் கடைசியாக அருவருப்பான முகம் ஒன்று வந்து போவது போல் உன்கடை கடைசி எழுத்து இருக்கும் இந்த திரியிலும் அதை எதிர் பார்க்கிறன் .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஜீவன் சிவா said:

கேரளாவில் வெள்ளம் என்று தெரியாமலா நான் போனேன். இல்லை கொச்சின் விமானநிலையம் மூடப்பட்டதும் தெரியாமல் இருந்திருக்குமா.

கொச்சின் வழமை போலவே இயங்கியது இரவு ஒருமணிக்கே வெள்ளவரத்து அதிகரிப்பின் காரணமாக மூடபட்டது திகதி நினைவில் இல்லை . மற்றும்படி திருவானந்தபுரம் வழமை போல் இயங்கியது அவர்களின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் கோழிக்கோட் மட்டுபடுத்த விமானகளுடன் இயங்கியது . நீங்கள் சென்றது வெள்ள பிரச்சனை பெரிதாகும்முன் இங்கு பிலிம் காட்டுவதுக்கு டிக்கெட்டை பொதுவெளியில் போட்டு உள்ளீர்கள் அப்படி செய்வது யாழ் அனுமதி இல்லை என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

***

ஆனால் இதுவரை மூலம் வரவில்லையே 

ஆனாலும் இதுக்குள்ள உங்கட பொய்யா நம்பி இன்னொருவர் புளுகினாரே 

4 hours ago, Nathamuni said:

எல்லா விசயமும் கையில வைத்து ஆச்சரியப்பட வைக்கிறீர்கள், தலை!?

அங்கே படித்த மண்ணின் மைந்தர்கள் ஆள இங்கே, மழைக்கும் பள்ளிக்குடம் ஒதுங்காத டீ ஆத்தினவர், சக்கரை ஆலை வைத்திருந்தவர்,  இறைச்சிக் கடை வைத்து இருந்தவர் என்று, முட்டாள்கள் ஆள்கிறார்கள்.

அப்பாடா 

பொய்களை நிறுத்துங்கள் 

5 hours ago, பெருமாள் said:

இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

எனது கேள்வி இதுக்கு மூலம் எது என்பது மட்டும்தான்.

3 hours ago, பெருமாள் said:

நீங்கள் சென்றது வெள்ள பிரச்சனை பெரிதாகும்முன் இங்கு பிலிம் காட்டுவதுக்கு டிக்கெட்டை பொதுவெளியில் போட்டு உள்ளீர்கள் அப்படி செய்வது யாழ் அனுமதி இல்லை என்று நினைக்கிறன் .

அடப்பாவி 

எப்ப வெள்ளம் வந்தது எப்ப வடிந்தது என்றே தெரியாமல் ஒரு புளுகு - அதுக்கு வேற ஒரு டாக்டர் பட்டம் 

3 hours ago, பெருமாள் said:

இங்கு பிலிம் காட்டுவதுக்கு டிக்கெட்டை பொதுவெளியில் போட்டு உள்ளீர்கள் அப்படி செய்வது யாழ் அனுமதி இல்லை என்று நினைக்கிறன் .

நான் உண்மையா இருந்து ஒரு பொய்யை வெளிப்படுத்தியத்துக்காக இப்படி செய்தது தவறென்று நிர்வாகம் நினைத்தால் நான் என்ன செய்வது.

ஆனால் எனக்கு மூலம் தெரிஞ்சாகணும் சாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பாரு பழம், காய்  என்றாலே சண்டைதான். ஞானப்பழத்துக்கு கோச்சுக்கொண்டு போனார் முருகன் இங்க வாழைக்காய்க்கு  கொச்சின்லயா இறங்கினாய்  திருவனந்த புரத்தில் இறங்கினாயா என்ற சண்டை போகுது :grin::grin::27_sunglasses:

பேசாம கோலமாவு கோகிலா படம் பார்க்க போறன் HD பிறின்ட்:) 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எப்ப பாரு பழம், காய்  என்றாலே சண்டைதான். ஞானப்பழத்துக்கு கோச்சுக்கொண்டு போனார் முருகன் இங்க வாழைக்காய்க்கு  கொச்சின்லயா இறங்கினாய்  திருவனந்த புரத்தில் இறங்கினாயா என்ற சண்டை போகுது :grin::grin::27_sunglasses:

பேசாம கோலமாவு கோகிலா படம் பார்க்க போறன் HD பிறின்ட்:) 

இல்லை தயவு செய்து பொய்களை பரப்பாதீர்கள் என்ற கோலம்தான் போடுகின்றேன்.

இதுவரை மூலம் தராமல் குளுசையை மறந்திட்டன் என்பவர்கள் 

முடிந்தால் எழுதியதிற்கான ஆதாரத்தை தரட்டும் 

முடியாது - ஏனென்றால் அது பொய் 

இனியும் பொய்களை பரப்பி என்ன செய்யலாம் என்பது அவர்களுக்கே வெளிச்சம் 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சும்மா எழுதிப்பாத்தன்.......சரி வந்துட்டுது....tw_tounge_xd:

Document 603-2110371199:    Colombo - Colombo    Kutthiyan Kumarasamy
  your flight selection
 
                                                Colombo to Kochi
           
Flight 1    Sunday, September 09, 2018
 confirmed    Departure:    09:00    Colombo, Sri Lanka - Bandaranaike International
                       Arrival:    10:15    Kochi, India - Kochi International, terminal 3
 
                       Airline    SriLankan Airlines UL 165    
                                                                                             Duration    1:15
                                                                                                              Airbus

                                                                                          Aircraft:   Industrie

                                                                                                          A330-200
      
                        Fare type:    ECO VALUE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இல்லை தயவு செய்து பொய்களை பரப்பாதீர்கள் என்ற கோலம்தான் போடுகின்றேன்.

இதுவரை மூலம் தராமல் குளுசையை மறந்திட்டன் என்பவர்கள் 

முடிந்தால் எழுதியதிற்கான ஆதாரத்தை தரட்டும் 

முடியாது - ஏனென்றால் அது பொய் 

இனியும் பொய்களை பரப்பி என்ன செய்யலாம் என்பது அவர்களுக்கே வெளிச்சம் 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

இன்னும் இடைவேளை வரல வந்த பிறகு தான் ( நான்) கருத்து தெரிவிக்கப்படும் பாவாடை தாவணியில் நயன்தாரா சூப்பரு :27_sunglasses:

Link to comment
Share on other sites

Just now, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் இடைவேளை வரல வந்த பிறகு தான் ( நான்) கருத்து தெரிவிக்கப்படும் பாவாடை தாவணியில் நயன்தாரா சூப்பரு :27_sunglasses:

ஆமா பொய்யை எழுதினவரும் எஸ்கேப் 

அதுக்கு டாக்ட்டர் பட்டம் கொடுத்தவரும் எஸ்கேப் 

நீங்கள் இதுக்குள்ள எதுக்கு 

உங்களுக்கு நயன்தாரா வேணும் ஆனா எனக்கு உண்மை வேணும்.

மூலம்  எங்கே + ஆதாரம் எங்கே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் இடைவேளை வரல வந்த பிறகு தான் ( நான்) கருத்து தெரிவிக்கப்படும் பாவாடை தாவணியில் நயன்தாரா சூப்பரு :27_sunglasses:

ராசன் ஓகேயா?:grin:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

நானும் சும்மா எழுதிப்பாத்தன்.......சரி வந்துட்டுது....tw_tounge_xd:

Document 603-2110371199:    Colombo - Colombo    Kutthiyan Kumarasamy
  your flight selection
 
                                                Colombo to Kochi
           
Flight 1    Sunday, September 09, 2018
 confirmed    Departure:    09:00    Colombo, Sri Lanka - Bandaranaike International
                       Arrival:    10:15    Kochi, India - Kochi International, terminal 3
 
                       Airline    SriLankan Airlines UL 165    
                                                                                             Duration    1:15
                                                                                                              Airbus

                                                                                          Aircraft:   Industrie

                                                                                                          A330-200
      
                        Fare type:    ECO VALUE

உங்களுக்கு பொய் சொல்லவும் களவா ஒரு ஆவணத்தை மாற்றவும் சொல்லியா தரணும் 

தெரியாதமாதிரி பொய் சொல்லிறீங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.