suvy

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

Recommended Posts

இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்.......!  ?

HPIM0172.jpg

நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....!  tw_blush:

 • Like 7
 • Thanks 3

Share this post


Link to post
Share on other sites

20170704_203000_001_zpseo0jnvdm.jpg

பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு.... :love:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

IMG-20150822-185129.jpg

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.....!  ?

(பார்சிலோனா கடற்கரை).

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20171228-181222-001.jpg

வண்ணங்கள் பொங்க வலம் வரும் தீபாவளி.......!  ஒரு சீனக் கண்காட்சியில் எடுத்தது....!  

 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....!  ?

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, suvy said:

20171228-181222-001.jpg

வண்ணங்கள் பொங்க வலம் வரும் தீபாவளி.......!  ஒரு சீனக் கண்காட்சியில் எடுத்தது....!  

 அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....!  ?

இலங்கையில இப்ப சீன ஆதிக்கம் அதிகம் என்று பேச்சு. இங்கு சுவி ஐயா தீபவளிக்குள்ளும் சீன ஆதிக்கத்தை கொண்டு வந்திட்டீங்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20181023-095949.jpg

பனி விழும் மலர் வனம் 

"எழுந்து நடந்தால் கலைந்து போகுமோ"

Share this post


Link to post
Share on other sites


எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB  க்கு குறைவுதான்

Share this post


Link to post
Share on other sites

 நண்பரே நிர்வாகத்திடம் கேளுங்கள் உதவி செய்வார்கள்.......!

20171225-200017.jpg   20171225-195907.jpg

உன்னைக்கண்டு நானாட என்னை கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி......!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

DSCN1971.jpg

ஆகாயம் தழுவி அலையும் முகிலோடு விளையாடினேன் 

அன்றடித்த புயலில் ஆணிவேரும் அறுந்ததினால் வீழ்ந்தேன் 

ஆயினும் மீண்டு வருவேன் விறகாய்.....!

(சமீபத்தில் எடுத்தது) 

 

Share this post


Link to post
Share on other sites

DSC04360.JPG

எப்படி இருந்தாலும் வீடு கோவில்தான். செருப்பு வெளியில்தான். 

Edited by Paanch
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

HPIM0193.jpg

அழகிய வாத்துகள் ஆழமான குளத்திலே 

வின்னானம் பேசி விரால் மீன் தேடும்......!  ?

Share this post


Link to post
Share on other sites

20171228-181502.jpg  20171228-184316.jpg

மின்னொளியில் மலர்ந்த மின்சாரப் பூக்கள்......! ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

4.jpg

எங்களை ஏமாத்திப்புட்டீங்களே மைத்திரி மாமா! ☹️

Edited by Paanch
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20180714-185514.jpg  20170625-100647.jpg

உனைக்கண்டு மயங்காத மனமும் உண்டோ, வடிவழகிலும் குணமதிலும் சிறந்த......!  ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20180809-112243.jpg  20180809-114850.jpg

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். (நல்லூர் வடக்கு வீதி கோபுரம் மேலே).

 

Edited by suvy
எ .பிழை
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

20180809-112243.jpg  20180809-114850.jpg

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். (நல்லூர் வடக்கு வீதி கோபுரம் மேலே).

 

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.
இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.
அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.
இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.
சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 11/7/2018 at 11:20 AM, ஆதித்ய இளம்பிறையன் said:


எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB  க்கு குறைவுதான் imageproxy.php?img=&key=bf615403b0c24024imageproxy.php?img=&key=bf615403b0c24024

https://postimages.org/

ஆதி மேலே உள்ள சுட்டியை அழுத்தி முயன்று பாருங்கள்.இது முற்றிலும் இலவசம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

IMG-20180815-WA0000.jpg

IMG-20180815-WA0008.jpg

அழகிய கடலோரம் ஆலயம் கொண்டிருக்கும் 

அருளாளரே அந்தோணியாரே 

பாலகன் ஜேசுவின் பாதம் தாங்கி 

பாஷையூரில் கொலுவிருப்பவரே -- நின் 

திருவடி சரணம் தேவனே......!  ?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

DSCN1967.jpg

எழுந்தால் நானும் நிழலாவேன் விழுந்தாலும் நான் வாங்காவேன்......!  ?

Share this post


Link to post
Share on other sites

DSCN1676.jpg

அயல்நாடு வந்தும் அழகான தேரில் 

களமாடி வரும் கருணைக் கந்தன்.....!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

IMG-20160426-173427.jpg IMG-20160426-173415.jpg

செடியிலே கலை வண்ணம் கண்டான் -- சிறிது 

எட்டியே துளிர்த்தாலும் வெட்டியே கொன்றான்.....!  ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

IMG-20160426-173936.jpg IMG-20160426-174255.jpg

வாராதிருப்பானோ வண்ண நிற வாத்து அவன்.......!  ?

 

Share this post


Link to post
Share on other sites
On 11/16/2018 at 9:07 AM, suvy said:

DSCN1676.jpg

அயல்நாடு வந்தும் அழகான தேரில் 

களமாடி வரும் கருணைக் கந்தன்.....!

என்னப்பன் கந்தன்! இரண்டு பொண்டாட்டிக்காரன் எண்டு தெரிஞ்சும் உந்த தாய்க்குலம் அப்பிடி என்னத்தைத்தான் மனமுருகி  அவனிட்டை வேண்டுதல் வைக்கினமோ ஆருக்குத்தெரியும்? tw_blush:

Share this post


Link to post
Share on other sites
On 11/13/2018 at 11:48 PM, suvy said:

அழகிய கடலோரம் ஆலயம் கொண்டிருக்கும் 

அருளாளரே அந்தோணியாரே 

பாலகன் ஜேசுவின் பாதம் தாங்கி 

 பாஷையூரில் கொலுவிருப்பவரே -- நின் 

திருவடி சரணம் தேவனே......!  ?<span>

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

10 minutes ago, குமாரசாமி said:

என்னப்பன் கந்தன்! இரண்டு பொண்டாட்டிக்காரன் எண்டு தெரிஞ்சும் உந்த தாய்க்குலம் அப்பிடி என்னத்தைத்தான் மனமுருகி  அவனிட்டை வேண்டுதல் வைக்கினமோ ஆருக்குத்தெரியும்? tw_blush:

முருகா என்ரை புருசனையும் உன்னை மாதிரி இரண்டு பெண்டாட்டிக்காரன் ஆக்கிப் போடாதையப்பா?

வேணுமென்றால் பரிமளத்தைக் கேட்டுப் பாருங்கோ.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

முருகா என்ரை புருசனையும் உன்னை மாதிரி இரண்டு பெண்டாட்டிக்காரன் ஆக்கிப் போடாதையப்பா?

வேணுமென்றால் பரிமளத்தைக் கேட்டுப் பாருங்கோ.

குமாரசாமியன் இரண்டு வைச்சிருந்தாலும்..... கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாதவன் கண்டியளோ......:169_family_wwbb:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வாடா அம்பி வா என்னட்ட இல்லாத இஞ்சி உள்ளி முளகு மிளகாய்த்தூளா வா வா வந்த வழிய பாத்து  ஓட வைக்கிறன இல்லையா பார்.😉
  • உலகத்திலேயே கனிமூன் காலத்தை  சரியாக கழிக்க போவது இந்த தம்பதிகள்தான். கதவை பூட்டிட்டு இருந்தா பொறுப்புள்ள தம்பதி என்று வேற சொல்லுன்வாங்க 
  • கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும். இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6 மாதத்திற்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் தமிழர்கள் பங்கேற்குமாறு வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவை சமூகத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்கள். உடன் ஒரு யூடியூப் வீடியோ இணைப்பும் அனுப்பட்டு இருந்தது. அதில் ஹெச்1, மாணவர் விசாவில் அபார்ட்மெண்டில், மாணவர் விடுதியில் தங்கியிருப்பவர்களும் இந்த கணக்கெடுப்பில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்ற விளக்கத்துடன், Other Asian என்று தேர்வு செய்து அருகே உள்ள பெட்டிக்குள் Tamil என்று அடையாளப்படுத்துங்கள் என்று கூறப்பட்டிருந்தது. தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் என்னென்ன நன்மை என்று பட்டியலிட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம், இப்படி தமிழர் என்று அடையாளப் படுத்தக்கூடாது. இந்தியாவிலிருந்து வந்திருப்பவர்கள் ஏசியன் இந்தியன் என்று தான் அடையாளப்படுத்த முடியும். பெற்றோர்கள் வேறு வேறு ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றால் தான் Other Asian என்று பதிவிட முடியும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் Other Asian என்று பதிவிட்டால் அது குற்றமாகும். மேலும், இனவாரியான கணக்கெடுப்பு அடிப்படையில் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் 675 பில்லியன் டாலர்கள், சமுதாயத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கான செயல்திட்டங்களுக்கானது. இந்த தொகையில் பங்கு கேட்டால் தமிழர்கள் பேராசைக்காரர்கள் என்று கறுப்பின மற்றும் லத்தீன் இன மக்கள் கருதுவார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் ஒரு பதிவும் சுற்றி வந்தது. இது தொடர்பாக சென்சஸ் அலுவலர்களிடமே கேட்டு விடலாமே என்று,சென்சஸ் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 1-844-330-2020 என்ற எண்ணில் அழைத்துக் கேட்டபோது, இனம் (Race) என்பது, நீங்கள் உங்களை எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள் என்ற விருப்பத்தின் அடிப்படையிலானது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ளலாம் என்று மறுமுனையில் பேசிய அலுவலர் குறிப்பிட்டார். மேலும், நான் கருப்பின அமெரிக்கன் மற்றும் ஹிஸ்பானிக். எனவே இரண்டையும் குறிப்பிடுவேன். ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தை குறிப்பிடவும் படிவத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.   சென்செஸ் அலுவலர்கள் கிழக்கு நேரம் இரவு 2 மணி வரையிலும் 1-844-330-2020 என்ற தொலைபேசி எண்ணில், கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் அந்த அலுவலர். இன்று ஏப்ரல் 1ம் தேதி ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள். அமெரிக்காவில் வசிப்பவர்கள் கட்டாயம் இந்த கணக்கெடுப்பில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஆன்லைனில் பதிவு செய்யத் தவறினால், விடுபட்ட வீடுகளுக்கு விரைவில் நேரடியாக சென்செஸ் அலுவலர்கள் வர உள்ளனர். எல்லா சந்தேகங்களுக்கும் நேரிலேயே விளக்கம் கேட்டு, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். https://a1tamilnews.com/april-1-2020-us-census-day/    
  • இதில் ஒருவித மணம் வாறபடியால் வீட்டில் யாருக்கும் விருப்பம் கிடையாது. எப்போதாவது  பால்கறி தான்.