-
Topics
-
Posts
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணியாகவே சுவிட்ர்லாந்து தூதரகம் மற்றும் லண்டன் உயர் ஸ்தானிகர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் இலங்கை பிரஜை. அதனால் எமது பாதுகாப்பு பிரிவுக்கு அவரிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு அதிகாரம் இருக்கின்றது. இருந்தபோதும் குறித்த பெண்ணை தூதரகத்துக்குள் வைத்துக்கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக வாக்குமூலம் வழங்காமல் சாட்டு தெரிவித்து வந்தனர். என்றாலும் தற்போது அவர் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார். ஆனால் லண்டன் உயர் ஸ்தானிகர் காரியாளயத்தில் சேவையில் இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ ராஜதந்திர அதிகாரம் பெற்றவர். அவருக்கு எதிராக வழங்கு தொடர அந்நாட்டு அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இருந்தபோதும் நாங்கள் இரு நாடுகளின் உறவில் விரிசல்கள் ஏற்படாதவகையில் எமது நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/70747
-
2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பீபால உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது. எனவே டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70744
-
கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று (08.12) இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை 5மணியளவில் சேமமடு முதலாம் யூனிற் மற்றும் 2யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 சாதாரண பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசெல்லப்பட்டு காணாமலாக்கபட்டிருந்தனர். அவர்களின் 35வது நினைவுதினமே அன்னுஷ்டிக்கப்பட்டது. சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/70746
-
சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்களில் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும், தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. அதே போல உணவகங்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும் பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கும். எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் இந்த முறை முழுமையாக முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், உணவகங்கள் ஆண் பெண் அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா? என்பதை அந்தந்த உணவகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. அதே சமயம் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547336