Jump to content

கடாரம் கடந்த இராஜேந்திர சோழன்


Recommended Posts


இந்திய துணைக்கண்டத்தில் இராஜேந்திர சோழன் போன்று ஒரு மிகப் பெரிய வீரனை இதுவரை கண்டதில்லை. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் இந்துமாக்கடல் முழுவதும் புலிக்கொடிதான் பறந்து கொண்டிருந்தது.  திரை கடந்து மன்னர்கள் இவன் கால்களில் திறை செலுத்தினார்கள்.  அவன் செய்த கடாரம் படையெடுப்பை பற்றி ஒரு சிறு குறிப்புதான் இந்தக் கட்டுரை....

ஒரு நாட்டின் வளத்திற்கும் பலத்திற்கும் வணிகமே அச்சாணி. சோழப் பேரரசு செழிப்புற்றிருக்க வேண்டுமெனில் இந்திய பெருங்கடலில் வல்லாதிக்கம் செலுத்த வேண்டும். இதற்கு இக்கடல் பாதையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ராஜேந்திரன் ஆண்ட காலத்தில் தமிழர் கடல் வணிகம் என்பது தமிழகத்தில் இருந்து இந்தோனேசியத் தீவுகளின் வழியாக சீனா வரைக்கும் மற்றும் தமிழகத்தில் இருந்து பாரசீக வளைகுடா வழியாக அரேபிய நாடுகளுக்குமாக நடந்தது. சில வணிகர் குழு ஆப்பிரிக்க மற்றும் ரோமாபுரி வரை சென்று வணிகம் செய்தது. தமிழகத்தில் நெய்த பருத்தி ஆடைகள், வாசனைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை சீனாவிற்கு விற்பனை செய்து அங்கு கிடைக்கும் பட்டுப் பொருட்களை வாங்கி வந்தனர். இவை அனைத்தையும் மேற்கு மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.  அரேபிய வணிகர்களும் இவற்றை வாங்கி மேற்குலக நாடுகளுக்கு விநியோகித்தனர்.
 1200px-Silk_route.jpg

சோழர் துறைமுகமான நாகப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு கிழக்கு முகமாகப் போகும் தமிழ் நாட்டு வணிகர்கள், முதலில் காணக் கூடிய நிலம் கெடா சிகரமாகும். மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்குதான் , தமிழ் வரலாற்றில் கூறப்படும் கடாரம் . இந்தக் கெடா சிகரம் (அ) கடாரம்  (1217 மீட்டர் உயரம்) கடலில் 100 மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து பார்க்கக் கூடியது. இந்தக் கப்பல்களுக்கு வழிகாட்ட சிகரத்தில் நெருப்பு மூட்டப்படும். இந்த சிகரத்தின் வழிகாட்டலில் கப்பல்கள் மெர்போக் முகத்துவாரத்தை அடையும். இதுவே கடல் பயணிகளுக்கு ஓர் அடைக்கலம். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாக்கா நீரிணைக்குள் நுழைய ஒரு வசதியான இடத்தில் அமைந்திருந்தது.

மற்றொரு பக்கம் இந்தோனீசிய தீவுகளை மையமாக கொண்டு  ஸ்ரீவிஜய பேரரசு இயங்கி வந்தது. .எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்க, ஸ்ரீவிஜய பேரரசு மலாக்கா நீரிணைக்கு (இந்தோனீசிய தீவுகளுக்கு) வரும் சோழ நாட்டு வணிகர்களுக்கு அதிகமாக வரிவிதிக்க ஆரம்பித்தது. இவ்வரிவிதிப்பின் மூலம் கீழைக்கடலில் ஸ்ரீவிஜய பேரரசு தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைந்தது 

தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டு லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் பகுதிகளை உள்ளடக்கி கெமர் பேரரசு ஆண்டு கொண்டிருந்தது. இவற்றை முதலாம் சூர்ய வர்மன் ஆண்டு கொண்டிருந்தான். இவன் சைவ மத்தை தழுவி ஆண்டுகொண்டிருந்தான். உலகப் பிரசித்தப் பெற்ற அங்கோர்வாட் கோவிலை காட்டியது இவ்வரசைச் சார்ந்தவர்களே (கெமர் பேரரசைச் சார்ந்த இரண்டாம் சூரியவர்மன்).  மலாய் தீபகற்பத்தை மையமாகக் கொண்டு தாம்ரலிங்கா பேரரசு ஆண்டு கொண்டிருந்தது. இவர்கள் புத்த மதத்தை சார்ந்தவர்கள். கெமர்களுக்கும் தாம்ரலிங்கா மன்னர்களுக்கும் பகை வேர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் முதலாம் சூர்ய வர்மன் தனக்கு உதவுமாறு ராஜேந்திர சோழனுக்கு தூது அனுப்புகிறான். தாம்ரலிங்கா மன்னர்கள் ஸ்ரீவிஜய அரசிடம் உதவி கோருகிறார்கள். சைவம் தழுவியர்கள் ஒரு அணியாகவும், புத்தம் தழுவியவர்கள் மற்றொரு அணியாகவும் சேருகின்றனர். புலி பாய நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

கி.பி. 1025இல் கிட்டத்தட்ட 1500  படகுகளுடன் இந்திய பெருங்கடலில் சோழப்படை கடாரம் நோக்கிச் சென்றது. சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட கடாரத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. இந்தப் போர் கடற்போராக  மட்டுமல்லாமல் நிலத்திலும் நடைபெற்றது. ஏற்கனவே வணிகர்கள் வேடத்தில் சென்ற சோழ வீரர்கள் ஆள் அரவமற்ற தீவுகளில் படை வீடு அமைத்து தங்கினார். ஒருபுறம் கடாரமார்க்கமாக இன்னொருபுறம் நிலமார்க்கமாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. போரில் வெற்றி பெற்று கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும்,  அவனுடைய படையில் இருந்த யானைகளையும் , அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊரை வென்றது. அடுத்து சோழப்படை  மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் என்ற பகுதியை கைப்பற்றியது. மாயிருடிங்கம், மாபப்பாளம், மானக்கவாரம், இலாமுரி தேசம் மற்றும் சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே சோழப்படை வெற்றி கொண்டது.
 
சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தனர். அங்கு சோழக் குடியிருப்புகளையோ, படைகளையோ நிறுத்தவில்லை. பழைய மன்னர்களே நியமிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன்  ஆட்சி  திரும்பக் கொடுக்கப் பட்டது.

தெற்காசியாவில் சோழர்கள் வென்ற இடங்கள்

Rajendra_map_new.svg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.