Jump to content

புத்த பிகுவின் ஆசனத்தில், வெள்ளைத்துண்டு இல்லாமையால் வேட்டியை கழட்டிக் கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, people sitting and text

 

இராணுவத்திற்கு விருதுவழங்கும் விழாவில் காற்சட்டையுடன் கலந்துகொண்டார் ஈழத்து சிவசேனை தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

புத்த பிட்சுவின் ஆசனத்தில்,   வெள்ளைத்துண்டு இல்லாமையால் தன் வேட்டியை கழட்டிக்கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம்.

ஆதாரம்: முக நூலில் இருந்து.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, text

இலங்கை சிவசேனை தலைவர்..மறவன்புலவு சச்சிதானந்தம்  அரைக் காற்சட்டையுடன் கலந்துகொண்டமை முகம்சுளிக்க வைத்துள்ளது.

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் இன்று குறித்த சர்வமத அமைப்புக்களின் ஏற்பாட்டில் பலாலியில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்விலேயே அரைக் காற்சட்டை மற்றும் ரீசேட்டுடன்.. சிவசேனை அமைப்பின் தலைவரான ஆன்மீகத்துறவி மறவன்புலவு சச்சிதானந்தம் கலந்து கொண்டிருந்தார்.


நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு அருகாமையில் நெருக்கமாக அமர்ந்திருந்து நீண்டநேரம் அளவளாவிக்கொண்டிருந்ததை காண முடிந்தது.

- வாகீசம் இணையம். - 
 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் பறிமுதல் – சரத் வீரசேகர தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து தகவல் பெறப்படுவதாகவும் கூறினார். பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த வாரம் அல்கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210246
    • ஜனாதிபதியால் அச்சுறுத்தப்பட்ட முதல் நபர் விஜயதாச அல்ல – அனுர கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார். எனவே மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார். நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2021/1210183
    • விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி: யாழில் அதிரடியாக நால்வர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. மேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் இத்தகையதொரு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210236
    • அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாதென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும்  உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள். நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1210219
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.