Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

” நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு” - டக்ளஸ் தேவானந்தா

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
 
November 9, 2018
 •  

doucklas.jpg?resize=640%2C443

“நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என ரஜனி பாணியில் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளே வேலைத் திட்டங்களை விரைவு படுத்துங்கள் எனவும், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் இன்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட செயலகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

திரைப்படம் ஒன்றில் ஒரு நாள் முதலமைச்சர் காட்சியை பார்த்திருப்பீர்கள். அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் ஒரு வினாடி எனக்கு கிடைத்தாலும் அதனை எனது மக்களுடைய நலன்களுக்காகவும்,  அவர்களுடைய நன்மைகளுக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுத்துவேன். மாறாக எனது சுயநலன்களுக்காக பயன்படுத்தமாட்டேன். இந்த அரசாங்கம் தொடரும், எமது சேவை நீடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதியின் ஆசை விஞ்ஞான பூர்வமான அமைச்சரவை அல்லது அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பது. ஆனால் கடந்த ஆட்சியில் அவருடைய ஆசை நிறைவேற்றப்ப டவில்லை. ஆனால் தற்போது அமைந்திருக்கும் புதிய ஆட்சியில் அவருடைய ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் வடமாகாணத்தின் அபிவிருத்தி என்ற அமைச்சு துறையையும் எமக்கு வழங்கியுள்ளார். அந்த அமைச்சு துறையின் எல்லை என்பது வானமாக இருக்கும்.

நாம் மக்களுடைய நலன்களையும், இருப்புக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி செல்வதற்கான திட்டங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தங்களுடைய பூரணமான ஒத்துழைப்பினை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்கள்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியதில்லை அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டதாக. அவ்வாறான கருத்தை இனிமேலும் கூட கூறமாட்டேன். எமது மக்களுக்கு எது தேவையாக உள்ளதோ? அதனை நிச்சயமாக செய்வேன்.

கடந்த காலத்திலும், இப்போதும் எனக்கு அரசியல் பலம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் விரலுக்கு ஏற்ப வீக்கம் என்பதுபோல் முடிந்தவற்றை செய்தேன். ஆனால் அதனை மக்கள் இன்று உணர தொடங்கியுள்ளதாக நான் அறிகிறேன்.

வருங்காலத்தில் மக்கள் என்னை பலப்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன். அதனால் கூடியளவான விடயங்களை செய்யலாம். ஒரு மனிதனுக்கு உணவும் தேவை, சுவாசிக்க காற்றும் தேவை. உணவு தேவை என்பதற்காக சுவாசிக்கும் காற்றையோ, காற்று தேவை என்பதற்காக உணவையோ கைவிட முடியாது. அதேபோல் அரசியல் உரிமைகள் தேவை அதேபோல் அபிவிருத்தியும் தேவை. சூழலுக்கேற்ப நாங்கள் அதனை முன்னெடுத்து செல்வோம்.

இன்று வழங்கப்படும் நஸ்டஈட்டை பொறுத்தளவில் அதனை விரைவுபடுத்தி கொண்டுவருகிறோம். இதேபோல் நஸ்டஈடு தொடர்பான தேவைகள் அதிகம் உள்ளது. விண்ணப்பங்கள் அதிகம் உள்ளது. அவற்றையும் விரைவுபடுத்தி செய்வோம்.

மேலும் இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை எனவும், இலங்கையில் மற்றய இடங்களில் கொடுக்கப்பட்ட தொகைக்கும் இந்த தொகைக்கும் இடையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அது இன்று எனது காதுகளுக்கும் வந்தது. அதனை அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து அதிகரித்துக் கொள்ளலாம். இதேபோல் முன்னாள் போராளிகள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வீத வட்டியில் கடன் திட்டம் உள்ளது. அதேபோல் வீடு திருத்தம் செய்வதற்கும் அதேமாதிரியாக கடன் திட்டம் உள்ளது. அந்த கடன் திட்டங்களையும் விரிவு படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

http://globaltamilnews.net/2018/102692/

Edited by பிழம்பு
 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவருக்கு நம்பிக்கையில்லை.. மகிந்த அரசு நிலைக்கு முன்னு. அதுக்குள்ள.. சுருட்ட வேண்டியதை சுருட்டிடுவார். வெளில.. வரப் போகும் தேர்தலில் தனக்கான வாக்குகளை இப்படி ஏதாச்சும் செய்து உறுதி செய்து கொள்ள முனைகிறார். எனினும்.. சொறீலங்கா இராணுவம் உள்ளவரை.. இவருக்கு எம் பி பதவி இனாமாக வழங்க வாக்குப் போட ஆக்கள் இருக்கினம். ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சா.  கைக்கு வந்தது வாய்கு எட்டல்லையே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வந்தாலும் அவர் தான் காபந்து அமைச்சர்  அதுக்கிடையில்   வாக்கு சேகரிச்சிடுவார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திரும்ப.. போய் விடு  டக்ளஸ் 
முந்தி  நீ... செய்த கொலைகளின் .. ஈரம் காய முதல்,   ஏனப்பா.... திரும்ப, வந்தாய்.....
எங்களை நிம்மதியாக.. வாழ விடு.
நீ.. மட்டும், காணாமல் போனால்.. எமக்கு சந்தோசம்.
யாரும்... கூப்பிடாமல், திறந்த வீ ட்டிற்குள்...  நா#  வந்த மாதிரி  இருக்கு.

 • Like 2
Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

திரும்ப.. போய் விடு  டக்ளஸ் 
முந்தி  நீ... செய்த கொலைகளின் .. ஈரம் காய முதல்,   ஏனப்பா.... திரும்ப, வந்தாய்.....
எங்களை நிம்மதியாக.. வாழ விடு.
நீ.. மட்டும், காணாமல் போனால்.. எமக்கு சந்தோசம்.
யாரும்... கூப்பிடாமல், திறந்த வீ ட்டிற்குள்...  நா#  வந்த மாதிரி  இருக்கு.

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகையை விட டக்ளசால் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகை குறைவு 

கொல்லப்பட்ட அனைத்து போராளிகளும் தமிழருக்காக போராட உயிரை துறக்க தயாரானவர்கள்.

முடிந்தால் புள்ளி விபரத்துடன் பதியவும். 

இல்லாவிட்டால் இதுதான் எனது பதில்.

திரும்ப.. போய் விடு  பூனைகளே 
முந்தி  நீ... செய்த கொலைகளின் .. ஈரம் காய முதல்,   ஏனப்பா.... திரும்ப, வந்தாய்.....
எங்களை நிம்மதியாக.. வாழ விடு.
நீ.. மட்டும், காணாமல் போனால்.. எமக்கு சந்தோசம்.
யாரும்... கூப்பிடாமல், திறந்த வீ ட்டிற்குள்...  நா#  வந்த மாதிரி  இருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

திரும்ப.. போய் விடு  டக்ளஸ் 
முந்தி  நீ... செய்த கொலைகளின் .. ஈரம் காய முதல்,   ஏனப்பா.... திரும்ப, வந்தாய்.....
எங்களை நிம்மதியாக.. வாழ விடு.
நீ.. மட்டும், காணாமல் போனால்.. எமக்கு சந்தோசம்.
யாரும்... கூப்பிடாமல், திறந்த வீ ட்டிற்குள்...  நா#  வந்த மாதிரி  இருக்கு.

சிறி

புலிகளை சாடுவதற்காக

எவரையும் துதிபாடும் குரூப்  ஒன்று  வரும்

நேரம் பொன்னானது காண்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகையை விட டக்ளசால் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகை குறைவு 

கொல்லப்பட்ட அனைத்து போராளிகளும் தமிழருக்காக போராட உயிரை துறக்க தயாரானவர்கள்.

முடிந்தால் புள்ளி விபரத்துடன் பதியவும். 

இல்லாவிட்டால் இதுதான் எனது பதில்.

திரும்ப.. போய் விடு  பூனைகளே 
முந்தி  நீ... செய்த கொலைகளின் .. ஈரம் காய முதல்,   ஏனப்பா.... திரும்ப, வந்தாய்.....
எங்களை நிம்மதியாக.. வாழ விடு.
நீ.. மட்டும், காணாமல் போனால்.. எமக்கு சந்தோசம்.
யாரும்... கூப்பிடாமல், திறந்த வீ ட்டிற்குள்...  நா#  வந்த மாதிரி  இருக்கு.

தியேட்டரில் ரிக்கெட் எடுத்த மாதிரி உள்ளதே?

யார் ஊளையிட்டாலும் புலி புலி தான் பூனை பூனை தான்.

பக்கத்து வீட்டில் ஒரு பூனை உள்ளது, அது எப்ப பார்த்தாலும் நக்கிக் கொண்டே இருக்கும். 

Edited by MEERA
 • Like 3
Link to post
Share on other sites

இந்தாளை நீங்கள் வெளிநாட்டில்  இருந்து துரோகி என்கிறீர்கள், ஆனால் யாழில் உள்ளவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள்.

இவர் பின்னால் போபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று சொல்வீர்கள்  - அதை சொல்ல நீங்கள் யார்.

நீங்களும் ஒரு கொலைகாரர்தான் - அதுவும் ஒரு இனத்தின் நியாயமான போராட்டத்தையே துவக்குமுனையில் கொன்று குவித்த பூனைகள்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

https://www.tamilwin.com/politics/01/198153?ref=home-feed

Edited by ஜீவன் சிவா
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஜீவன் சிவா said:

இந்தாளை நீங்கள் வெளிநாட்டில்  இருந்து துரோகி என்கிறீர்கள், ஆனால் யாழில் உள்ளவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள்.

இவர் பின்னால் போபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று சொல்வீர்கள்  - அதை சொல்ல நீங்கள் யார்.

நீங்களும் ஒரு கொலைகாரர்தான் - அதுவும் ஒரு இனத்தின் போராட்டத்தையே கொன்று குவித்த பூனைகள்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

https://www.tamilwin.com/politics/01/198153?ref=home-feed

நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்றோம், நீங்கள் வெளிநாட்டு பாஸ்போட்டில் உங்கள் பிறந்த நாட்டில் இருக்கிறீர்கள்.

எல்லா அரசியல்வாதிகளுக்கும் தொண்டர்கள் உள்ளனர்.

2015 தேர்தலில் EPDP ற்கு கிடைத்த மொத்த வாக்குகள் 33,481 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(தமிழ் தேசிய முன்னணி) ற்கு கிடைத்த மொத்த வாக்குகள் 18,644.

அவர்கள் துரோகிகள் இல்லை என்று மறுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை அவர்களை துரோகிகள் என்று கூற உள்ளது.

Edited by MEERA
பிழையான விபரம் திருத்தப்பட்டது.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் போராட்டத்தில் அமெரிக்கர் இருவரை கடத்தியது யார்? 

Edited by MEERA
Link to post
Share on other sites

என்னைப்பற்றி எழுதாமல் எனது கருத்துக்கு பதில் எழுதுங்கள் 

முடியாவிட்டால் பேசாமல் இருங்கள் 

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகையை விட டக்ளசால் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகை குறைவு 

கொல்லப்பட்ட அனைத்து போராளிகளும் தமிழருக்காக போராட உயிரை துறக்க தயாரானவர்கள்.

முடிந்தால் புள்ளி விபரத்துடன் பதியவும். 

இந்தாளை நீங்கள் வெளிநாட்டில்  இருந்து துரோகி என்கிறீர்கள், ஆனால் யாழில் உள்ளவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள்.

இவர் பின்னால் போபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று சொல்வீர்கள்  - அதை சொல்ல நீங்கள் யார்.

நீங்களும் ஒரு கொலைகாரர்தான் - அதுவும் ஒரு இனத்தின் நியாயமான போராட்டத்தையே துவக்குமுனையில் கொன்று குவித்த பூனைகள்.

மேலுள்ள இரண்டும்தான் எனது  கேள்விகள் 

உங்களிடம் எனது பதிவுக்கு விடை இல்லை என எனக்கு தெரியும் / பதிலை தர முடியாவிட்டால் பேசாம இருங்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கான பதிலிற்கு  மேலே செல்லவும்...

Link to post
Share on other sites
1 minute ago, MEERA said:

ஒரு இனத்தின் போராட்டத்தில் அமெரிக்கர் இருவரை கடத்தியது யார்? 

 ஒரு இனத்தின் விடுதலைக்காக உணர்வுடன் உயிரையே கொடுக்க வந்த போராளிகளை துரோகிகள் என்று வீதிகளில் போட்டு கொளுத்தியவர்கள் யார். மிஞ்சி இருப்பவர்களையும் துரோகிகள் என்று இன்னமும் சொல்பவர்கள் யார் 

ஆனால் மக்கள் அவர்களைவிட புத்திசாலிகள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கிறார்களே 

அதையும் நம்ப மறுப்பவர்களை என்ன செய்யலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சும்மாஎடுத்ததற்கெல்லாம் வாந்தி எடுக்காமல், புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களின் தரவுகளை வையுங்கள் பார்க்கலாம்  

 • Like 1
Link to post
Share on other sites
3 minutes ago, MEERA said:

உங்களுக்கான பதிலிற்கு  மேலே செல்லவும்...

மேலேயும் பதில் இல்லையே 

முடிமந்தால் இப்போது இங்கேயே எழுதுங்கள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

 ஒரு இனத்தின் விடுதலைக்காக உணர்வுடன் உயிரையே கொடுக்க வந்த போராளிகளை துரோகிகள் என்று வீதிகளில் போட்டு கொளுத்தியவர்கள் யார். மிஞ்சி இருப்பவர்களையும் துரோகிகள் என்று இன்னமும் சொல்பவர்கள் யார் 

ஆனால் மக்கள் அவர்களைவிட புத்திசாலிகள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கிறார்களே 

அதையும் நம்ப மறுப்பவர்களை என்ன செய்யலாம்.

ஒரு இனத்தின் விடுதலைக்காக உணர்வுடன் உயிரையே கொடுக்க வந்த போராளிகளைசுழிபுரத்தில் புதைத்தவர்கள் யார்? 

மக்கள் புத்திசாலிகள் அது தான் 33,481 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

Link to post
Share on other sites
Just now, MEERA said:

மக்கள் புத்திசாலிகள் அது தான் 33,481 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அப்ப யாழில் இருக்கும் 33,481 பேர் உங்களை விட புத்திசாலிகள் இல்லை என்கிறீர்களா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் போராளிகள் மீதான தாக்குதல் நடாத்தப்பட்டதும் புளொட்டினால், அதே போல் உள்வீட்டு போட்டு தள்ளுதலை தொடங்கியதும் புளொட் தான்.

3 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப யாழில் இருக்கும் 33,481 பேர் உங்களை விட புத்திசாலிகள் இல்லை என்கிறீர்களா 

ல்லா அரசியல்வாதிகளுக்கும் கட்சியினருக்கும் தொண்டர்கள் உள்ளனர். 

ஏற்கனவே கூறியது தான். உங்களுக்கான பதிலிற்கு மேலே செல்லவும்....

 • Like 1
Link to post
Share on other sites

 இவ்வளவு கொலைகள் செய்தும், இத்தனை தோரோகிப்பட்டம் கொடுத்தும் - அப்புறமும் 33,481 பேர் வாக்களித்தார்கள் என்றால் அது என்ன என்று  ஜனநாயக நாட்டில் இத்தனை வருடமா வாழும் உங்களுக்கு புரியாதது எனக்கு ஆச்சரியமா உள்ளது.

இதுக்குத்தான் நான் அடிக்கடி சொல்வது 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

2002 ம் ம் ஆண்டு  விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும் போது  பல்லாயிரக்கணக்கான மக்கள்   முகமாலைக்கே வந்து புலிகளை வரவேற்றனர் விரைவாக வாங்கள் உங்களை வரவேற்க வந்த மக்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒரு இராணுவ அதிகாரி வந்து புலிப்போராளிகிளை நோக்கி  கூறுவது காணோளில் தெளிவாக பதிவாகி இருந்த‍து.  அதற்கு பெயர் தான் உண்மையான மக்கள்  வரவேற்ப்பு. மக்களின்  வரவேற்ப்பு  என்றால் என்ன வால்பிடிப்பு என்றால் என்ன என்று தெரியாத தற்குறி ஜீவன்கள்   எல்லாம் இப்போது எமக்கு வகுப்பு எடுக்க புறப்ப்பட்டு  விட்டார்கள். டக்லஸ் போன்ற அடிவடுடிகளுக்கு வால்பிடிக்கும் கூட்டம் பற்றி மக்களுக்கு தெரியும்.   யுத்த காலத்தில் தானே புலம் பெயர்ந்து இருந்து விட்டு இ்ன்று பெஞ்சன் கால‍த்தில் சொகுசாக வாழ அங்கு சென்ற் வாழும் சுயநல ஜீவன்கள் மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய புலிகளை திட்டித்தீர்க்கிறது.  புலிகளை திட்டி தனது வக்கிர மனப்பான்மையை தீர்ப்பதையே அந்த ஜவன்கள்  தனது முழு நேர தொழிலாக கொண்டுள்ளது.  வேலையிலாத வெட்டி ஜீவன்கள்  தானே.  மக்களுக்கு தெரியும் யார் புலிகள் யார் சுயநல விஷ ஜீவன்கள் என்று.

 • Like 3
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலி என்பார், பூனை என்பார்,  துரோகி என்பார் ஆனாலும் மாவீரர் தினத்திலும் உள் நுளைய உரிமை என்பார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 • Like 1
Link to post
Share on other sites
3 minutes ago, trinco said:

2002 ம் ம் ஆண்டு  விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும் போது  பல்லாயிரக்கணக்கான மக்கள்   முகமாலைக்கே வந்து புலிகளை வரவேற்றனர் விரைவாக வாங்கள் உங்களை வரவேற்க வந்த மக்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒரு இராணுவ அதிகாரி வந்து புலிப்போராளிகிளை நோக்கி  கூறுவது காணோளில் தெளிவாக பதிவாகி இருந்த‍து.  அதற்கு பெயர் தான் உண்மையான மக்கள்  வரவேற்ப்பு. மக்களின்  வரவேற்ப்பு  என்றால் என்ன வால்பிடிப்பு என்றால் என்ன என்று தெரியாத தற்குறி ஜீவன்கள்   எல்லாம் இப்போது எமக்கு வகுப்பு எடுக்க புறப்ப்பட்டு  விட்டார்கள். டக்லஸ் போன்ற அடிவடுடிகளுக்கு வால்பிடிக்கும் கூட்டம் பற்றி மக்களுக்கு தெரியும்.   யுத்த காலத்தில் தானே புலம் பெயர்ந்து இருந்து விட்டு இ்ன்று பெஞ்சன் கால‍த்தில் சொகுசாக வாழ அங்கு சென்ற் வாழும் சுயநல ஜீவன்கள் மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய புலிகளை திட்டித்தீர்க்கிறது.  புலிகளை திட்டி தனது வக்கிர மனப்பான்மையை தீர்ப்பதையே அந்த ஜவன்கள்  தனது முழு நேர தொழிலாக கொண்டுள்ளது.  வேலையிலாத வெட்டி ஜீவன்கள்  தானே.  மக்களுக்கு தெரியும் யார் புலிகள் யார் சுயநல விஷ ஜீவன்கள் என்று.

இது துவக்கின் மகிமையால் கொண்டுவரப்பட்டது 

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.