• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
MEERA

பிரதமர் கிண்ணம்

Recommended Posts

"பிரதமர் கிண்ணம்"
சுற்றுப்போட்டியின்  முதலாவது 
இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…!

-----------------------------------------------------------

பிரதமர் கிண்ணத்துக்கான  சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை  
இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது.

14 நாட்கள் நடைபெற்று முடிந்த  
முதலாவது  போட்டியில்  மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார்.

ஸ்கோர் விபரம்!

நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட
113 என்ற இலக்கை  அடைய  இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர்.

போட்டியின் நேற்றைய   இறுதி நாளில் இறுதிப்பந்தில்  இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்ளார்கள். 

பந்து வீச்சு!

போட்டியில் மஹிந்த அணியால் வீசப்பட்ட தூஸ்ரா,வேகப்பந்து வீச்சுக்களுக்கு மொத்தமாக ரணில் அணியில் இருந்து 
ஆறு விக்கெட்டுக்கள் வீழ்தப்பட்டது.

மைத்திரி அணியின் தலைவராக மைதானத்தில்  மஹிந்தராஜபக்ஸ நியமிக்கப்பட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஸவின் கடுமையான துஸ்ரா, வேகப்பந்துகளை இறுதிவரை ரணில் அணியினர் மிகக் கவனமாக துடுப்படித்தாடினர்.

போட்டியில் மஹிந்த அணியினரால் வீசப்பட்டட "யோக்கர்" பந்துகளை மத்திய (துடுப்பாட்டவீரர்களாக SLMC,ACMC) வீரக்களுக்கு வீசினாலும் மிகக் 
கவனமாக பந்தை தட்டிவிட்டு விக்கெட்டுக்களை பறி கொடுக்காமல் இருந்தார்கள்.

இப்போட்டியில் கவலையான 
ஆட்டமிழப்பு ஒன்றாக, 
ஐந்தாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட வியாழநேந்திரன் (அமல்) TNA அவர்களின் ஆட்டமிழப்பு இருந்தது.

போட்டியில் சல துரையிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சிறப்பு  ஆட்டக்காரர் விருதை மஹிந்த ராஜபக்ஸ பெற்றுக்கொண்டார்.

போட்டியில் நடுவர்களாக இறுதிவரை கரு ஜெயசூரியா,பூஜித ஜெயசுந்தர ஆகியோர் சிறப்பாக  செயட்பட்டனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் நடைபெற்று   
முடிந்த 14 நாள் போட்டி 
நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

பிரதமர் கிண்ணத்துக்கான 
அடுத்த இரண்டாவது இணிக்ஸ் இன்று முதல் ஆரம்பமாக  உள்ளது,

இப்போட்டிக்கான  பயிற்சி போட்டிகள் நவம்பர் 19 - 26 வரை நடைபெற்று (வேட்புமனு) 2019 ஜனவரி 5 ம்திகதி இறுதி நாள் ஆட்டம் (தேர்தல்) நடைபெறவுள்ளது.

குறித்த திகதி அறிவிக்கப்பட்டாலும் சுற்றுப்போட்டியின் கட்டுப்பாட்டு சபை (தேர்தர்தல் ஆணைக்குழு) அறிவிக்கும் 
வரை திகதியை உறுதி செய்ய முடியாது.

போட்டிகள் மொத்தமாக மூன்று சுற்றுக்கள் நடைபெற்று பிரதமர் சவால் கிண்ணம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

முதலாவது இணிக்ஸ் இனிதே நடைபெற்று முடிந்ததுள்ளது.

இரண்டாவது இணிக்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனவரி 5ஆம் திகதி வரை இரண்டாவது இணிக்ஸ் நடைபெற்று முடிந்து மூன்றாவது இணிக்ஸ் ஜனவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது இணிக்ஸ் தொடர்பான  தகவலுடன் சந்திப்போம்.

இதே வேளை பார்வையாளராக மட்டுமே இருந்த அணி (TNA) தாம் நீதிமன்றை நாட உள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

நன்றி வாட்சப் குழுமம்.

Edited by MEERA

Share this post


Link to post
Share on other sites

இரண்டாவது இன்னிங்க்சையும் உன்னிப்பாக கவனிக்கின்றோம். அதையும் தருவீர்கள்தானே....!  tw_blush:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • "ஏரோ பிளெனை"  கிட்டத்தில் பார்க்க மலை உச்சியில் கட்டடத்தின் மீது நின்ற நினைவுகள் எல்லாம் வருகுது தோழர்..☺️
  • விளக்கத்துக்கு நன்றி  ராசா எனக்கு  ஈழம்  என்றாலும்  தமிழீழம்  என்றாலும்  ஒன்று  தான் அது எனது  தாயகம் நிலப்பரப்பு குறைந்திருக்கலாம் அல்லது  ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம் ஈழத்திலிருந்து  நான் சொல்கின்றேன்  என்ற  தம்பியின் எழுச்சி  போற்றுதற்குரியது ஆனால் இதே  சொல்லை  அவர்  தற்பொழுது  வாழும் இடத்தில்  பாவிக்கவே  முடியாது  என்பது  தான்  உண்மை ஆனால்  என்னால்   உங்களால்  முடியும் எனவே  ஒரு சிலர்  அதை  தமக்கே  உரித்தானது  என அரசியல் கால  நேர காரணங்க்காக உரிமை  கொண்டாடுவது  ஆபத்தானது என்பதற்கான  தார்மீக  கோபமே அந்த எழுத்து. மற்றும்படி  அவன்  என்  தம்பி புரிந்து கொள்வான்   விளக்கம் எவரும்   கொடுக்கலாம் தம்பி எமக்கு  விளக்கமும் புரிந்து கொள்ளலும்  தான் முக்கியமே  தவிர  முகங்கள்  அல்லவே  
  • அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை  சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன மேலும் தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.  இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தெரிவித்த இரா சம்பந்தன் எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும் எனவும் வலியுறுத்தினார். 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு தாம் சார்பாக செயற்பட முடியாதென்பதனையும் வலியுறுத்தி கூறினார். இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்த அதேவேளை, இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது,  இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார். அதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70511
  • மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர், “எனது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்கு அரசியல் நிலைமை ஸ்திரமாக உள்ளது. ஆளும் கூட்டணி பலமாக உள்ளதெனத் தெரிவித்தார்.” இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இருதரப்பு மற்றும் பிராந்திய கூட்டுறவு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதியும் தெரிவித்தார். இத்தகைய கூட்டுறவின் ஊடாகவே போதைப்பொருள் பிரச்சினை இளைஞர்கள் தீவிர சிந்தனையின்பால் செல்வதை முடியுமான அளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் திறந்தே உள்ளது. எனக் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டிற்காக இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதியும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சரும் உடன்பட்டனர்.  இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை இலங்கைதான் 70களின் ஆரம்பத்திலேயே முன்வைத்ததென ஜனாதிபதி குறிப்பிட்டார். மாலைத்தீவின் தூதுவர் ஒமர் அப்துல் ரசாக் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/70514