Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ

பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

gamini.jpg

பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று முறை நிiவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாமலேயே இவ்வாறு அராஜகம் நடந்துகொண்ட இவர்கள், வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்நிலையில் எவ்வாறு சாதாரண தேர்தலை நாட்டில் நடத்த முடியும். 225 பேருக்கு மத்தியில் தேர்தலை நடத்திகொள்ள வாய்ப்பு தராத இவர்களிடம் நாடளாவிய ரீதியில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த தருணம் மிகப் பெரிய இருண்ட யுகமாகவும் கருப்பு புள்ளியாகவும் மாறியுள்ளது.

யாரிடம் பெரும்பான்மை இருக்கின்றது என நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று எமக்கு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இன்று பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றிக்கொள்ள மன்றுக்கு வருகைதந்தோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/44611

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

basic-french-omelet-930x550.jpg

மிளகாய் வற்றல் விற்கும் விலை என்ன ? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத செயல் .. கொஞ்சம் வெங்காயமும் , முட்டையும் இருந்தால் அங்கேயே ஒம்லேட் செய்யலாமே ! ?

 • Like 2
 • Haha 2
Link to post
Share on other sites

46494603_2089131711109162_27512742564604

 

முன்னாள் அமைச்சர் காமினி ( unp ) மீது மகிந்த அணியினரும் டக்கிளஸ்சும் இணைந்து மிளகாய் தூள் தண்ணி தாக்குதல் !! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

46494603_2089131711109162_27512742564604 mahinda-1.jpg

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள்.!

இப்போ ஆனைக்கும் பூனைக்கும் சேர்நதே காலம் வந்துவிட்டதே..!!

Edited by Paanch
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப  இது டக்லஸின்ர ஐடியாவாய் இருக்குமாே? பாராளுமன்றத்தில் மிளகாய்...... புதுவிதமான தாக்குதலாய் இருக்கிறபடியால் அப்பிடி ஒரு சந்தேகம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

gamini.jpg

அடியார் மடத்திலை  சாம்பார் வாளியாலை சாத்து வாங்கினமாதிரி  இரண்டு பேரும் நிக்கினம்...tw_tounge_xd:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

உடம்பெல்லாம்  எரியுதப்பா...   அதுக்குள்ளை,   மண்ணாங் கட்டி   "மைக்கை"   நீட்டிக் கொண்டு நிக்காதேங்கோ... ?
கொஞ்சம்  பொறுங்கோ.....    "குளிச்சிட்டு"   வந்து,  கதைக்கிறன். :grin: 

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மிளகாய் வற்றல் விற்கும் விலை என்ன ? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத செயல் .. கொஞ்சம் வெங்காயமும் , முட்டையும் இருந்தால் அங்கேயே ஒம்லேட் செய்யலாமே ! ?

Image may contain: 1 person, smiling

மலிவான விலையில்... மிளாகாய்த் தூள்.   வேணுமா....?
மகிந்த ராஜ பக்சவை.... அணுகவும். 

தொடர்புகளுக்கு.... 
ஸ்ரீலங்கா  பாராளுமன்றம்.
நாலாவது... மாடி.
கொழும்பு.
சொறி லங்கா.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்  நாறும்.... காணொளிகளை, திரும்பத்  திரும்ப  பார்ப்பதில்... ஒரு . அலாதி இன்பம்.
சிங்களவர்களே...  இடையில்... "பிரேக்"  விடாமல்,  தொடருங்கள்......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக எழுதும் தமிழரை ஜனநாயகம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடும், தமிழருக்கு மட்டும் ஜனநாயக பாடம் எடுக்கும் யாழ்கள சிங்கள அடிமைகள் சிலரை யா்ழ் களப்பக்கமே காணவில்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற தமது சிங்கள எஜமானருக்கு உதவ சென்று விட்டார்களோ.

Edited by trinco
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 11/16/2018 at 6:37 PM, nunavilan said:

46494603_2089131711109162_27512742564604

முன்னாள் அமைச்சர் காமினி ( unp ) மீது மகிந்த அணியினரும் டக்கிளஸ்சும் இணைந்து மிளகாய் தூள் தண்ணி தாக்குதல் !! 

நூலக எரிப்பை முன்னின்று நடத்தியவர், காமினி திசநாயக்க(மலையகம்). 
அதுக்கு ஆள் பிடிச்சு அனுப்பியவர்  காமினி ஜயவிக்கிரம பெரேரா( குருநாகல் தொகுதி)
அவருக்குத்தான்... மிளகாய்த் தூள் அபிஷேகம் செய்து, கண்ணில்  நீர் வர வைத்து விட்டார்கள். :grin:

 

46436804_453585211714396_1696034649060409344_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frx5-1.xx&oh=619b3380324674af006f1b74c37fb77d&oe=5C723E7B

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.