கிருபன் 2,829 Report post Posted November 17, 2018 சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி நம்மில் பலருக்கு அக்கறை இல்லை. கோழி பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. பின்னர், ஆட்டு பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் வரும் இறந்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல் ஆயிரம் கிலோ அளவிலான பழுதடைந்த ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் இன்று பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட குறித்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர பொலிஸார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். குறித்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் ஆட்டிறைச்சி பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.m http://www.virakesari.lk/article/44667 Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,175 Report post Posted November 17, 2018 பெயர் தான் வித்தியாசம் சட்டியில் போட்டா எல்லாமே சுவை தான். 2 Share this post Link to post Share on other sites
புரட்சிகர தமிழ்தேசியன் 538 Report post Posted November 18, 2018 12 hours ago, ஈழப்பிரியன் said: பெயர் தான் வித்தியாசம் சட்டியில் போட்டா எல்லாமே சுவை தான். காக்கா புரியாணி சாப்பிட்டா .. காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் ?.. ஒரே டமாஸ்தான் ? Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted November 18, 2018 (edited) 14 hours ago, ஈழப்பிரியன் said: பெயர் தான் வித்தியாசம் சட்டியில் போட்டா எல்லாமே சுவை தான். 2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said: காக்கா புரியாணி சாப்பிட்டா .. காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் ?.. ஒரே டமாஸ்தான் ? Edited November 18, 2018 by தமிழ் சிறி 1 Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted November 18, 2018 (edited) இனிமேல் சத்தியமா.... தமிழ்நாட்டில் பிரியாணி கடையில், பிரியாணி சாப்பிட மாட்டேன்டா. நான் இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கவே மாட்டேன்டா... Edited November 18, 2018 by தமிழ் சிறி Share this post Link to post Share on other sites
இசைக்கலைஞன் 2,963 Report post Posted November 18, 2018 1 Share this post Link to post Share on other sites
vanangaamudi 179 Report post Posted November 18, 2018 நாமல்லாம் தமிழேண்டா. ஒரு இந்தியன் சீனனாகிறான். Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted November 18, 2018 மாட்டுக்கறி சாப்பிட்டதினால் அடிச்சு கொல்லபட்ட மனிதர்கள் தேசத்தில் நாய்க்கறி சாப்பிட்டால் குற்றமல்ல.....! 1 Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,781 Report post Posted November 19, 2018 நாய்க்கறி ஏன் சாப்பிடக்கூடது? சாப்பிட்டால் குற்றமா அல்லது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இறைச்சியா? சிலோனில் வாழ்ந்த காலங்களில் பன்றியை பார்த்ததும் ஓங்காளித்த எம்மவர்கள் பலர் புலம் பெயர்ந்தபின் அதை தேசிய உணவாக உண்கின்றார்கள். எனவே இது காலத்தின் கட்டாயம். உலகின் ஒரு மூலையில் மண்ணை அரைத்து உண்ணும் மக்கள் இருக்கும் போது இப்படியான செயல்கள் எல்லாம் தூசுக்கு சமன். உலகம் இனிமேலும் விவசாயிகளை உதாசீனம் செய்தால் எலியைக்கூட கண்ணால் பார்க்க மாட்டீர்கள். விவசாயிகளை அவமதித்ததின் விளைவுதான் இன்று உங்கள் சாப்பாட்டு கோப்பைகளில் நாய் இறைச்சி குரைக்கின்றது. இது இப்படியே போனால் நாளை????????????????? Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,175 Report post Posted November 19, 2018 54 minutes ago, குமாரசாமி said: நாய்க்கறி ஏன் சாப்பிடக்கூடது? கப்பலில் வேலை செய்த காலங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் வேலை செய்தனர்.ஆட்டிறைச்சி நாளன்று ஆடு சாப்பிடமாட்டார்கள்.கேட்டால் ஆட்டின் வாய் மணக்கிறதாம்.நாய் இறைச்சி தான் நல்ல இறைச்சி நீ ஒருக்கா தின்று ருசிப்பட்டால் விடவே மாட்டாய் என்பார்கள். எத்தனை நாடுகளில் பாம்பு இறைச்சியை உண்ணுகிறார்கள். Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted November 19, 2018 (edited) அதுக்கு இருக்கிறதே... நாலு கால். வர்றவன் எல்லாரும், லெக் பீஸ் கேட்டா.... எங்கை போறது. Edited November 19, 2018 by தமிழ் சிறி Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,885 Report post Posted November 20, 2018 ராஜஸ்தான் ஆடுகளுக்கு, வால் நீளமாம். லஞ்சம் சரியாக கொடுக்காததால்... ஆடு, நாயாக மாறியதாக தகவல். Share this post Link to post Share on other sites
ரதி 2,306 Report post Posted November 20, 2018 அது நாய்க்கறி இல்லையாம்...உண்மையில் ஆடுதானாம்...பொலிசுக்கு லஞ்சம் கொடுக்காததால் ஆடு நாயாகி விட்டதாம்? Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,781 Report post Posted November 20, 2018 On 11/19/2018 at 3:06 AM, ஈழப்பிரியன் said: கப்பலில் வேலை செய்த காலங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் வேலை செய்தனர்.ஆட்டிறைச்சி நாளன்று ஆடு சாப்பிடமாட்டார்கள்.கேட்டால் ஆட்டின் வாய் மணக்கிறதாம்.நாய் இறைச்சி தான் நல்ல இறைச்சி நீ ஒருக்கா தின்று ருசிப்பட்டால் விடவே மாட்டாய் என்பார்கள். எத்தனை நாடுகளில் பாம்பு இறைச்சியை உண்ணுகிறார்கள். சிறு வயதிலிருந்து எதை சாப்பிட்டு வளர்ந்தமோ அந்த உணவு சாகும் வரைக்கும் சொர்க்கம். அது புலம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் சரி அல்லது பிறந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் சரி...... எனக்கு தெரிந்த கொரிய மாணவர் குழாம் ஒன்று இருக்கின்றது. ஜேர்மனியில் தடை செய்யப்பட்டாலும் கொரியாவிலிருந்து நாய் இறைச்சியை ஏதோ ஒரு விதமாக வரவழைத்து அவர்களின் முக்கிய விழாக்களில் உண்டு மகிழ்வார்கள். ஏன் ஆபிரிக்காவில் யானை இறைச்சியும் சாப்பிடுகின்றார்கள் தானே? அரேபியர்களுக்கு ஒட்டக இறைச்சி மிக மிக பிரபல்யமல்லோ? 1 Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,781 Report post Posted November 20, 2018 18 hours ago, தமிழ் சிறி said: ராஜஸ்தான் ஆடுகளுக்கு, வால் நீளமாம். லஞ்சம் சரியாக கொடுக்காததால்... ஆடு, நாயாக மாறியதாக தகவல். கழுதையைன்ரை இதையும் ஆட்டின்ரை அதையும் கலந்து படைச்சதுதான் உந்த மிருகமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள். மெய் எண்டுதான் நான் நினைக்கிறன்....... 1 Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted November 20, 2018 11 minutes ago, குமாரசாமி said: ஏன் ஆபிரிக்காவில் யானை இறைச்சியும் சாப்பிடுகின்றார்கள் தானே? அரேபியர்களுக்கு ஒட்டக இறைச்சி மிக மிக பிரபல்யமல்லோ? என்னமோ தெரியவில்லை மனிதன் இறந்தபின் இறந்த உடலை சாப்பிட வரும் சுறா ,நாய் ,நரி ,கழுகு போன்றவைகளை ஆரம்ப காலத்தில் இருந்தே அவைகளை உணவாக்குவதில் பெரும்பான்மையோருக்கு வெறுப்புத்தான் நாய் இறச்ச்சியில் வெறுப்பு கூட வருவதுக்கு காரணம் விசர் நாய் வியாதியாக இருக்கலாம் . ஆனாலும் சூரியனிடம் இருந்து நேரடியாக சக்தி பெறும் முதலாம் படி நுகரிகள் புல்லு ,இலை ,தாவரம்கள் பொன்றவற்றை உண்ணும் இரண்டாம்படி நுகரிகளை மனித இனம் விட்டு வைப்பதில்லை . Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,781 Report post Posted November 21, 2018 39 minutes ago, பெருமாள் said: என்னமோ தெரியவில்லை மனிதன் இறந்தபின் இறந்த உடலை சாப்பிட வரும் சுறா ,நாய் ,நரி ,கழுகு போன்றவைகளை ஆரம்ப காலத்தில் இருந்தே அவைகளை உணவாக்குவதில் பெரும்பான்மையோருக்கு வெறுப்புத்தான் நாய் இறச்ச்சியில் வெறுப்பு கூட வருவதுக்கு காரணம் விசர் நாய் வியாதியாக இருக்கலாம் . ஆனாலும் சூரியனிடம் இருந்து நேரடியாக சக்தி பெறும் முதலாம் படி நுகரிகள் புல்லு ,இலை ,தாவரம்கள் பொன்றவற்றை உண்ணும் இரண்டாம்படி நுகரிகளை மனித இனம் விட்டு வைப்பதில்லை . பாரம்பரியம் என்றால் உலகமே போற்றிப்பாடும் அகோரிகள் வாழும் இந்தியாவுக்கு அருகில் தான் நாமும் பிறந்தோம்.....வளர்ந்தோம். Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,175 Report post Posted November 21, 2018 5 hours ago, குமாரசாமி said: சிறு வயதிலிருந்து எதை சாப்பிட்டு வளர்ந்தமோ அந்த உணவு சாகும் வரைக்கும் சொர்க்கம். அது புலம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் சரி அல்லது பிறந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் சரி... இது பிழையான வாதம் என எண்ணுகிறேன். சிறு வயதாக இருக்கும் போது மாடு கடவுள் மாதிரி.எமது நெருங்கிய உறவினர் வேதத்தில் சேர்ந்திருந்தனர்.அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே என்று ஆதங்கத்தில் அவர்களுடன் பழகப் பேச கஸ்டமாக இருந்தது.மாடு வளர்த்து சாணி எடுத்து தட்டி காயவைத்து சுட்டு திருநீறாக்கி நாங்களும் பாவித்து உறவினர்களுக்கும் கொடுப்போம்.ஒரு வயதில் எனக்கு கடவுள் தான் மாடு. இதுவே காலங்கள் போய் வெளிநாடு வெளிக்கிட்டு கப்பலில் போனபின் மாட்டிறைச்சி ஆரம்பத்தில் அருவருத்தாலும் போகப்போகப் பழகிவிட்டது.கிழமையில் ஒருநாள் மாட்டு குடலில் சூப். கிரெக்கர்கள் செய்தால் சொல்லவா வேண்டும்.நாள் போக அதுவும் பழகிவிட்டது.கப்பலால் வந்தும் கொம்பனித்தெருவில் மலேகாரர் பச்சா என்ற பெயரில் அதே சூப் அந்த மாதிரி செய்வார்கள்.அமெரிக்கா வந்த புதிதில் என்னோடு இருந்த நண்பன் மாட்டு வாலில் சூப் செய்வான் அதையும் குடித்தது தான். ஆனபடியால் சிறுவயதில் அப்படி இருந்தேன் வாழ்நாள் பூராவும் இப்படியே தான் இருப்பேன் என்று எப்படி அடித்து சொல்வது. கனதூரம் வேண்டாம் விடுதலைப் போராளிகளாக இருந்தர்களை கேட்டுப் பாருங்கள்.சாப்பாட்டுக்காக எவ்வளவு கஸ்டப்பட்டு என்னவெல்லாம் சாப்பிட்டிருப்பார்கள்.காலச் சக்கரத்தில் எல்லாம் தொலைத்துவிட்டோம். Share this post Link to post Share on other sites
Nathamuni 1,745 Report post Posted November 21, 2018 18 hours ago, குமாரசாமி said: கழுதையைன்ரை இதையும் ஆட்டின்ரை அதையும் கலந்து படைச்சதுதான் உந்த மிருகமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள். மெய் எண்டுதான் நான் நினைக்கிறன்....... கழுதையைன்ரை அதையும் ஆட்டின்ரை இதையும் கலந்து படைச்சதுதான் உந்த மிருகமெண்டு கனபேர் கதைக்கிறாங்கள். Share this post Link to post Share on other sites
குமாரசாமி 5,781 Report post Posted November 21, 2018 14 hours ago, ஈழப்பிரியன் said: இது பிழையான வாதம் என எண்ணுகிறேன். சிறு வயதாக இருக்கும் போது மாடு கடவுள் மாதிரி.எமது நெருங்கிய உறவினர் வேதத்தில் சேர்ந்திருந்தனர்.அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களே என்று ஆதங்கத்தில் அவர்களுடன் பழகப் பேச கஸ்டமாக இருந்தது.மாடு வளர்த்து சாணி எடுத்து தட்டி காயவைத்து சுட்டு திருநீறாக்கி நாங்களும் பாவித்து உறவினர்களுக்கும் கொடுப்போம்.ஒரு வயதில் எனக்கு கடவுள் தான் மாடு. இதுவே காலங்கள் போய் வெளிநாடு வெளிக்கிட்டு கப்பலில் போனபின் மாட்டிறைச்சி ஆரம்பத்தில் அருவருத்தாலும் போகப்போகப் பழகிவிட்டது.கிழமையில் ஒருநாள் மாட்டு குடலில் சூப். கிரெக்கர்கள் செய்தால் சொல்லவா வேண்டும்.நாள் போக அதுவும் பழகிவிட்டது.கப்பலால் வந்தும் கொம்பனித்தெருவில் மலேகாரர் பச்சா என்ற பெயரில் அதே சூப் அந்த மாதிரி செய்வார்கள்.அமெரிக்கா வந்த புதிதில் என்னோடு இருந்த நண்பன் மாட்டு வாலில் சூப் செய்வான் அதையும் குடித்தது தான். ஆனபடியால் சிறுவயதில் அப்படி இருந்தேன் வாழ்நாள் பூராவும் இப்படியே தான் இருப்பேன் என்று எப்படி அடித்து சொல்வது. கனதூரம் வேண்டாம் விடுதலைப் போராளிகளாக இருந்தர்களை கேட்டுப் பாருங்கள்.சாப்பாட்டுக்காக எவ்வளவு கஸ்டப்பட்டு என்னவெல்லாம் சாப்பிட்டிருப்பார்கள்.காலச் சக்கரத்தில் எல்லாம் தொலைத்துவிட்டோம். நீங்கள் சொன்னது கட்டாயத்தின் நியதி. நான் சொன்னது வாழ்க்கையின் நியதி. Share this post Link to post Share on other sites
கிருபன் 2,829 Report post Posted November 23, 2018 சென்னையில் சிக்கியது நாய்க்கறி அல்ல ! சென்னை எழும்பூர் வந்த ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் கடந்த 17 ஆம் திகதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சியின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அந்த இறைச்சியை அனுப்பிய நபர் யார்?, சென்னையில் அவற்றை பெற வேண்டிய தரகர் யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். நாய்க்கறி பீதி காரணமாக பிரியாணி கடைகளில் விற்பனையும் சரிந்தது. இந்நிலையில் சென்னை கால்நடை வைத்தியக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கால்நடை வைத்தியக் கல்லூரி பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது http://www.virakesari.lk/article/44989 Share this post Link to post Share on other sites
கிருபன் 2,829 Report post Posted November 24, 2018 சென்னையில் இறைச்சி சர்ச்சையால் மக்கள் பீதி – அறிக்கை கேட்கும் நீதிபதி! சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்று வதந்தி பரப்பியதால் சர்ச்ரச ஏற்பட்டிருந்த நிலையில், இறைச்சி அழிக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜோத்பூரிலிருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் கடந்த 17ஆம் திகதி சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புதுறைக்க இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத்துறையினர், பொதிகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 5 இற்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000கிலோ இறைச்சியிருப்பது கண்டுபிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இறைச்சியின் வால் நீளமாக இருந்நதால் அது நாய்க்கறியாக இருக்குமென்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும், குறித்த சில பொதிகளை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின் கால்நடைமருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற ஆய்வில் கைப்பற்றப்பட்டது, ஆட்டு இறைச்சியே என்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சியின் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி, இந்திய காவல் நடைகளுக்கன மக்கள் அமைப்புசார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளதுது. இந்த வழக்கு விசாரணையின்போது அரசதரப்பு சட்டத்தரணி பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை ஆய்வுக்காக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அது ஆட்டிறைச்சி என்று தெரியவந்துள்ளதாகவும் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை ஆழமான இடத்தில் புதைத்து அழித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் புதைக்கப்பட்ட இறைச்சி எந்த விதியின் கீழ் புதைக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் சென்னை மாநகராட்சியையும் பிரதிநிதியாக சேர்த்து வழக்கு விசாரனை டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஒத்திவைத்தனர். http://athavannews.com/சென்னையில்-இறைச்சி-சர்ச்/ Share this post Link to post Share on other sites
nunavilan 2,572 Report post Posted November 29, 2018 Share this post Link to post Share on other sites
ஈழப்பிரியன் 1,175 Report post Posted November 29, 2018 ஆமா இப்ப வாலைப் பார்த்ததும் நம்பீட்டம். 1 Share this post Link to post Share on other sites