Jump to content

மாவீரர்களைப் பணிந்து - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

 எங்கள் விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து அணிகளையும் சேர்ந்த ஈழத் தமிழ், மலையகத் தமிழ், தமிழ்நாட்டு தமிழ், மற்றும் முஸ்லிம் மாவீரர்களது நினைவாக
.
வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST.
.

பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 
. 
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் 
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில் 
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ 
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. 
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... 
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற 
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய் 
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் 
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை கவிஞர் ஐயா.
ஆழமான அழகான உங்கள் வரிகள் 
எங்கள் ஆத்மாவின் நிரந்தர 
வலி சொல்லி நிற்கிறது...:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதத்தின் ரணங்களை ஆற்றும் வரிகள்........நன்றி ஐயா.....!  ?

Link to comment
Share on other sites

 எங்கள் விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து அணிகளையும் சேர்ந்த ஈழத் தமிழ், மலையகத் தமிழ், தமிழ்நாட்டு தமிழ், மற்றும் முஸ்லிம் மாவீரர்களது நினைவுகளை பணிவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.