• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  

Recommended Posts

பல ஆண்டுகளின் முன் வீகன் என்றால் என்னவென்று பலருக்கும் தெரியாது.ஆனால் இன்று எந்தக் கடைக்குப் போனாலும் வீகன் சாமான்கள் வீகன் உணவுகள் வீகன் பீச்சா ஏன் வீகன் ஐஸ்கிறீம் கூட விற்கிறார்கள்.

வீகன் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இறைச்சி வகை கொழுப்பு பால் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.வீகனுக்கும் சைவத்திற்கும் என்ன வித்தியாசமென்றால் பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணையும்.சைவம் எறத்தாள அரை வீகன்.

இந்த வீகனைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னமே கேள்விப்பட்டிருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை சரியாக கணிக்க முடியவில்லை.ஆனாலும் கடந்த கோடை காலத்தில் ஒரு 6 மாதமாக வீகன் முறையை பின்பற்றும் ஒருவரை சந்தித்தேன்.அவரிடம் இது பற்றி பேசியதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அவருடைய சிறுநீரகம்(கிட்னி)கொஞ்சம் பழுதடைந்து கொண்டு போனதாகவும் பல வைத்தியங்கள் செய்தும் குணமடையவில்லை கடைசியில் வீகன் முறையைக் கேள்விப்பட்டு அந்த முறையை 6 மாதமாக பின்பற்றிய போது பெரிய மாற்றம் கண்டதாகவும் இரத்த பரிசோதனையின் பாரிய மாற்றம் கண்டதாகவும் சொன்னார்.

அத்தோடு Forks over knives(போக்ஸ் ஓவர் நைவ்) என்ற டொக்குமன்ரரியையும் பார்க்க சொன்னார்.அந்த டெக்குமனரரியைப் பார்த்த போது ரொம்பவும் அதிசயமாக இருந்தது.பல பிரச்சனை உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றி நல்ல குணமடைகிறார்கள்.இந்த டொக்குமன்ரரி Net Felix (நெற் பிளக்ஸ் )உள்ளவர்கள் பார்க்கலாம் அல்லது அமெசான் யுரியூப் இவற்றில் 3 டொலர் கொடுத்து பார்க்கலாம்.உங்களுக்கு பிரச்சனையில்லாவிட்டாலும் வீட்டில் வயது போனவர்களுக்கோ உறவினர் அயலவருக்கோ சிலவேளை இந்த முறை உதவலாம்.

மனைவியையும் என்னையும் இதைப் பின்பற்றுமாறு மகள் பல நாட்களாகவே கரைச்சல் தந்து கொண்டிருக்கிறா.ஏதாவது பிரச்சனை என்று சொன்னால் என்ன பிரச்சனை என்று கேட்பதற்கு முதலே எப்ப இருந்து சொல்லிக் கொண்டுவாறன் இருவரும் செகிடு மாதிரி இருந்துட்டு இப்ப பிரச்சனை என்றவுடன் முறைப்பாடு செய்யுங்கோ இனி போய் குளிசையை வாங்கி போடுங்கோ கொஞ்ச நாளில் கிட்னியும் பழுதாகிப் போய்விடும் என்று பேச்சு நடக்கும்.எனக்கும் சிறிது காலமென்றாலும் இந்த முறையை கடைப் பிடிக்க வேண்டுமென்று விருப்பம் தான்.ஆனாலும் அடிக்கடி அங்கும் இங்கும் திரிவதால் சரியான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது.

இதைப் பற்றி மேலும் தெரிந்தவர்கள் ஏன் நீங்கள் இதை பின்பற்றுபவராக கூட இருக்கலாம் தயங்காமல் கூடுதலான தகவல்களைத் தாருங்கள்.அத்துடன் மருத்துவத்துறையில் சம்பந்தப்பட்டிருக்கும் யூட் நெடுக்கு போன்றவர்கள் மேலதிகமான தகவல்களைத் தாருங்கள்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

முந்திய தலைமுறையினரை விட... பல இளைய தலைமுறையினர், 
வேகன்  உணவுப் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள், என்பது...  மிக ஆச்சரியமாக உள்ளது. 
நல்லதொரு பதிவு ஈழப் பிரியன்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நானும்..இப்போது அதிகமாக....சைவ உணவுக்கு மாறிக்கொண்டு வருகின்றேன்!

இதற்கான காரணங்கள்...பல உள்ளன! முக்கியமான காரணங்கள்...சந்தைப் படுத்தலுக்காக வளர்க்கப் படும்...விலங்குகள்...மிகவும் ...அருவருக்கத் தக்க விதத்தில் ...கொலை செய்யப்படுகின்றன!

உதாரணமாக...பயனில்லாத...சேவல் குஞ்சுகள்...பிறந்த உடனேயே...அழிக்கப் படுகின்றன!

அதே போல...மாட்டுக் கன்றுகளில்....ஆணாகப் பிறப்பவை....கண் திறக்க முன்னரே...பார ஊர்திகளில்...ஏற்றப்பட்டு...வளர்ப்புப் பிராணிகளின்..உணவுக்காக அனுப்பப் படுகின்றன!

இந்த அவலங்களுக்காக...எனது பங்களிப்பு...இருக்ககூடாது என்பதற்காகவே....நான்...இவற்றை விலக்குகின்றேன்!

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

நான் சைவ உணவுக்கு எப்போதோ மாறி விட்டேன்.....எனக்கு நோயே கிடையாது....உஸ் ....கொஞ்சம் டயபடிஸ் உண்டு. இனி எனக்கு மரணமே இல்லை. (ஆத்மாவுக்கு ஏது மரணம்).  tw_blush: 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

அண்மைய ஆய்வில், பிரிட்டனில் 8ல் ஒருவர் வேகனாக உள்ளார். மிக வேகமாக இந்த உணவு முறை மாறி வருகிறது.

அதுசரி..... மரக்கறி உணவுக்கு, சைவம் என்ற மத பெயர் எவ்வாறு வந்தது? சிங்களவர்கள் கூட சைவகடே என்பார்கள். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, தமிழ் சிறி said:

முந்திய தலைமுறையினரை விட... பல இளைய தலைமுறையினர், 
வேகன்  உணவுப் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள், என்பது...  மிக ஆச்சரியமாக உள்ளது. 
நல்லதொரு பதிவு ஈழப் பிரியன்.

சிறி இளம் தலைமுறையினரே பின்பற்றும் போது எம்மால் இன்னமும் முடியாமல் இருக்கிறதை நினைக்க மிகவும் வெட்கமாக இருக்கிறது.
கருத்துக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, புங்கையூரன் said:

நானும்..இப்போது அதிகமாக....சைவ உணவுக்கு மாறிக்கொண்டு வருகின்றேன்!

இந்த அவலங்களுக்காக...எனது பங்களிப்பு...இருக்ககூடாது என்பதற்காகவே....நான்...இவற்றை விலக்குகின்றேன்!

சைவத்திற்கும் வீகன் முறைக்கும் சில வித்தியாசங்கள் உண்டென்கிறார்கள்.

சைவக்காரர் பிராமணர்கள் எம்மைவிட திடகாத்திரமாக இருக்கிறார்களா?இதைப்பற்றி கொஞ்சம் ஆராய வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, suvy said:

நான் சைவ உணவுக்கு எப்போதோ மாறி விட்டேன்.....எனக்கு நோயே கிடையாது....உஸ் ....கொஞ்சம் டயபடிஸ் உண்டு. இனி எனக்கு மரணமே இல்லை. (ஆத்மாவுக்கு ஏது மரணம்).  tw_blush: 

சலரோகமென்பது இருதயநோயை விட மோசமானதென்கிறார்கள்.
எனக்கும் கடந்த 10 வருடங்களாக ஆறு ஆறுஒன்று என்று நிற்று வெருட்டிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு தடவையும் டாக்ரரிடம் போகும் போது என்னப்பா குளிசை எடுக்கிறியா என்று என்னை குளிசைக்காரனாக மாற்றப் பார்க்கிறார்கள்.தேநீரில் சீனி போடுவதில்லை.கூடுதலாக இனிப்பு சாப்பாட்டை தவிர்த்துக் கொண்டு தான் வருகிறேன்.
சாப்பாட்டு முறையை மாற்றினால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.ஆனாலும் சாக்குக்குள் புல்லடைந்த மாதிரி அடைந்து பழகி அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

7 hours ago, Nathamuni said:

அண்மைய ஆய்வில், பிரிட்டனில் 8ல் ஒருவர் வேகனாக உள்ளார். மிக வேகமாக இந்த உணவு முறை மாறி வருகிறது.

அதுசரி..... மரக்கறி உணவுக்கு, சைவம் என்ற மத பெயர் எவ்வாறு வந்தது? சிங்களவர்கள் கூட சைவகடே என்பார்கள். 

நாதம் கம்பேக்கர் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்றிருந்த கிளின்டன் வீகனாக மாறி இப்போது சுகமாகவே இருக்கிறார்.

சைவசமயத்தவர்கள் சைவமாக சாப்பிட்டபடியால் சைவகடை என்ற பெயர் வந்திருக்கலாம்.
கருத்துக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites

நான் இறைச்சி வகை உணவுகளை அதிகமாக விரும்புவதில்லை, சாப்பிடுவதும் இல்லை. அனேகமாக மீன் உணவுகளும் மரக்கறியும் தான் சாப்பிடுவது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒன்றில் மரக்கறி சலட் (கேல் இலை, அவகாடோ, டுனா மீன், தக்காளி, கரட் ...) அல்லது கின்வா எனும் உணவு. காலையில் மீன் துண்டு ஒன்று + முட்டை வெள்ளைக்கரு அல்லது ஓட்ஸ் (steel cut oats)

என்னவோ தெரியாது எனக்கு வீகன் முறையையும் ஆட்களையும் கண்ணிலும் காட்டுவதில்லை. ஆதிகால உணவு முறை என்று சொல்லி நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகளைக் கூட தவிர்க்க சொல்கின்றனர் (ஆதி கால மனிதனுக்கு விவசாயம் தெரியாது என்பதால் நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகள் தவிர்க்க வேண்டுமாம் - ஆனால் சமைத்து சாப்பிடுவதும் இல்லைதானே எனக் கேட்டால் அவர்கள் அதை ஏற்பதில்லை). மனிதன் மட்டும் தான் இன்னொரு விலங்கின் பாலை குடிக்கின்றனர் என்பதால் பால்வகைகளையும் தவிர்க்க வேண்டுமாம். இதுகளை கேட்கும் போது ஆரோ ஒருவர் என் கமக்கட்டுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிக்க தோன்றும்.

எதிர்காலத்தில்  சைவ உணவுகளை மட்டுமே உண்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக சனத்தொகை வளர்ச்சிக்கு ஈடாக பயிர்களை வளர்ப்பதும் பழ மரங்களின் உற்பத்தியை பெருக்குவதும் காய்கறிகளை பயிரிடுவதும் சாத்தியமில்லை. அவ்வாறு ஈடு செய்ய முற்பட்டால் காடுகள் எல்லாம் அழிக்கப்பட வேண்டி வரும். அல்லது அதிகமான விளைச்சலை தரும் இரசாயன உரவகைகளை பயன்படுத்த வேண்டி வரும். எனவே தான் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் முறையையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்த சொல்லி உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

வீகன் உணவு முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் வர்த்தக நலன்கள் அடங்கி இருக்கு. அதை ஒரு வர்த்தகமாக ஆக்கி அதற்கான உணவு வகைகளை சந்தைப்படுத்துகின்றனர்.  அத்துடன் வீகன் உணவு முறை வருத்தங்களை இல்லாமாக்கும் என்பது எல்லாம் கப்சா வகைக்குள் அடங்கும். கீற்றோ டயட் டும் இன்னொரு கப்சா. இன்றைய உலகில் நான் உண்ணும் மரக்கறிகளிலில் இருக்கும் நச்சுப் பொருட்களின் கலப்பும் மரபணு மாற்றங்களும் (GMO - genetically modified organism) லும் இன்னும் இன்னும் புதிய புதிய வருத்தங்களை உருவாக்க வல்லன.

நன்றாக ஓரளவுக்கு ஆரோக்கியமாக வாழ்வது என்பது வெறும் உணவில் மட்டும் தங்கியில்லையே.. உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை,ஓய்வு, உறக்கம், பாலுறவு, சக மனிசர்களிடம் காட்டும் அன்பும் பரிவும் என்று நிறைய இருக்கின்றனவே. மூன்று வேளை வேலை செய்து கொண்டு, மற்றவர்களை பார்த்து வாழ ஆசைப்பட்டுக் கொண்டு, சதா ஓடி ஓடி உழைத்துக் கொண்டு, எல்லார் மீதும் எரிச்சலும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டு வாழும் ஒரு தலைமுறைக்குள் நாம் ஊடாடிக் கொண்டு இருக்கின்றோம். இந்த வாழ்க்கை முறை கொண்டு வரும் வியாதிகள் தான் ஏராளம். கடந்த நான்கு நாட்களாக ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்து கொண்டு தான் இதை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்.

எம்  வாழ்க்கை முறை மாறாமல் எந்த உணவு முறையும் எம்மை வளப்படுத்தாது

டொட்

 • Like 4
 • Thanks 3

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, நிழலி said:

என்னவோ தெரியாது எனக்கு வீகன் முறையையும் ஆட்களையும் கண்ணிலும் காட்டுவதில்லை. ஆதிகால உணவு முறை என்று சொல்லி நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகளைக் கூட தவிர்க்க சொல்கின்றனர் (ஆதி கால மனிதனுக்கு விவசாயம் தெரியாது என்பதால் நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகள் தவிர்க்க வேண்டுமாம் - ஆனால் சமைத்து சாப்பிடுவதும் இல்லைதானே எனக் கேட்டால் அவர்கள் அதை ஏற்பதில்லை). மனிதன் மட்டும் தான் இன்னொரு விலங்கின் பாலை குடிக்கின்றனர் என்பதால் பால்வகைகளையும் தவிர்க்க வேண்டுமாம். இதுகளை கேட்கும் போது ஆரோ ஒருவர் என் கமக்கட்டுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிக்க தோன்றும்.

நான் எதை நோக்கி நகர விரும்புகிறேனோ அதற்கு மாறான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.நான் ஒரு இறைச்சிப்பிரியன்.இது தான் எனக்குள்ள பிரச்சனையே.
உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.
பச்சையில் நீங்கள் கஞ்சத்தனம் பண்ணுவதால் பச்சை கூட போட முடியவில்லை.

Share this post

Link to post
Share on other sites

நான் பார்த்த சில பேர் கொஞ்ச நாள் வீகன் இருப்பினம்...பிறகு மச்சம்  சாப்பிடுவினம்...கொஞ்ச நாளில் திரும்ப வீகனுக்கு மாறனும் என்டுவினம்...ஆனால் மாறினதை நான் காணேல்ல?...உடம்பை குறைக்க தாங்கள் வீகன் என்று சொல்லி, தொடங்கி உடம்பை குறைத்தவுடன் கை விட்டு விடுவினம் 

நானும் வீகனுக்கு எதிர்ப்பு....எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை..நான் மாமிச உணவு என்று சாப்பிடுவது கோழியும்,கடல் உணவுகளும் எப்பாவது இருந்திட்டு ஆட்டு இறைச்சசி சாப்பிடுவது ...ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் மச்சம் சாப்பிட்டால்  அளவோடு சாப்பிடுங்கள்...அத்தோடு நிறைய மரக்கறிகளையும் சாப்பிடுங்கள் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, ரதி said:

இதுவரை வீகன் என்று இருந்த ஒருவரைத் தான் சந்தித்திருக்கிறேன்.அவர் சொன்னதை வைத்து சிறிது நம்பிக்கை பிறந்துள்ளது.எனக்கும் தொடங்குவது பிரச்சனை இல்லை தொடருமா? முடியுமா ?என்பதே பிரச்சனை.

ஒரு நேரமாவது சோறு சாப்பிட வேண்டும் போல இருக்கும்.அத்தோடு கூடவும் சாப்பிட்டு பழகிப் போய்விட்டது.நீங்கள் சொன்னது போல இப்போ கொஞ்சம் குறையவே சாப்பிடுகிறேன்.இன்னொரு கெட்ட பழக்கம் ஏதோ போட்டிக்கு சாப்பிடுவது போல கோப்பை காலியாக்குவது.சாப்பிடும் போது நினைத்துக் கொண்டு தொடங்குவேன்.இடையில் மறந்துவிடுவேன்.சீனாக்காரன் மாதிரி தடியால சாப்பிடுங்கோ என்று மனைவி சொல்லுவா.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites

இவங்கடை வீகன் வேறை.
எங்கடை சைவம் வேறை.
அர்த்தங்களை புரிந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்..
சைவம் வியாபார நோக்கு கொண்டதல்ல என்பது யாவருக்கும் புரிய வேண்டும். 
வெள்ளைக்காரன் சொன்னால் எதுவும் சரி எண்ட கருத்துப்பாடு இங்கேயும் இருக்கின்றது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

இவங்கடை வீகன் வேறை.
எங்கடை சைவம் வேறை.

சைவம் பால் தயிர் சீஸ் சாப்பிடுகிறார்கள்.வீகனில் மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் எதையும் தவிர்க்கிறார்கள்.முடிந்தால் மேலே இணைத்துள்ள காணெளியைப் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, ஈழப்பிரியன் said:

சைவம் பால் தயிர் சீஸ் சாப்பிடுகிறார்கள்.வீகனில் மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் எதையும் தவிர்க்கிறார்கள்.முடிந்தால் மேலே இணைத்துள்ள காணெளியைப் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.

நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 
Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, குமாரசாமி said:

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.

நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 
மனசாலும் சைவம் என்டால் என்ன அர்த்தம் அண்ணா? 
 
Share this post

Link to post
Share on other sites
35 minutes ago, ரதி said:

மனசாலும் சைவம் என்டால் என்ன அர்த்தம் அண்ணா? 
 
கொலை , கொள்ளை ,  சூதுவாது ,  மற்றவர்களை பார்த்து எரிச்சல் படுறது , வட்டி வாங்கிறது .............இப்படி கனக்க சொல்லிக்கொண்டு போகலாம் தங்க்கச்சி!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

à®à®±à¯à®à®©à®µà¯ நà®à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯

வேகன் அரசியலும் அம்பலமான வதந்தியும்.. பொய்யானது நாய்கறி பிரச்சாரம்.. பின்னணி என்ன?

சென்னையில் கைப்பற்றப்பட்ட 2100 கிலோ இறைச்சி முழுக்க ஆட்டுக்கறிதான் என்று உறுதியாகி உள்ளது. இதற்கு எதிராக பரப்பப்பட்ட பல வதந்திகள் தற்போது பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சிதான் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கிறது. இது நாய்கறி கிடையாது என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே இந்த கறி அழுகி உள்ளது. மற்றபடி இதில் எந்த தவறும் கிடையாது என்று சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையின் பின்புலத்திலும், நாய்கறி வதந்தியிலும் நிறைய அரசியல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. முக்கியமாக வேகனிசம் எனப்படும் புதிய கலாச்சாரமும் பின்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு

Bildergebnis für vegan

வேகன் அரசியல்:  உலகம் முழுக்க வேகன் வாழ்வியல் முறை பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வேகன் வாழ்வியலில் எந்த விதமான தவறும் கிடையாது. முழுக்க முழுக்க வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே உண்பதைதான் வேகன் வாழ்வியல் என்கிறார்கள். ஆனால், இந்த வேகன் வாழ்வியல் தற்போது பெரிய அரசியலாக, வியாபாரமாக மாறி இருக்கிறது. உலகம் முழுக்க வேகன் மார்கெட்டிற்கு பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால், இதை பெரிதுபடுத்த பலர் வேலை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடந்துள்ளது:  உலகம் முழுக்க இந்த வேகன் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இது உலகின் மிகப்பெரிய உணவு சந்தையான அசைவ உணவு சந்தையை பெரிய அளவில் காலி செய்துள்ளது. வேகன் குறித்து வீடியோ, கருத்தரங்கு, கட்டுரைகள் என்று நிறைய எழுதி எழுதி பல கோடி மக்கள் நம்பி இருக்கும் அசைவ மார்க்கெட் படுத்தது. இதனால் பல நாடுகள் பெரிய இழப்பை சந்தித்தது. முக்கியமாக இந்தியாவின் அசைவ ஏற்றுமதியும் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அமெரிக்காவில் வேகனிசம் பெரிய சந்தையாகி உள்ளது.

Bildergebnis für vegan

பிரச்சாரம் செய்தனர்:  அதேபோல்தான் தமிழகத்தில், நாய்கறி என்று சின்ன வதந்தி வந்தவுடன், பலர் இந்த வேகன் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். அசைவ உணவுகளே இப்படித்தான், அதில் சுத்தம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று தொடர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் சென்னையின் அடையாளமாக இருந்த பல பிரியாணி கடைகள், அசைவ ஹோட்டல்கள் ஒரே வாரத்தில் பெரிய பாதிப்பை சந்தித்தது.

ஏன் இது தவறு:  சைவ உணவு சாப்பிடுவதிலும், அதை வேகன் என்று பிரச்சாரம் செய்வதிலும் எந்த தவறும் கிடையாது, ஆனால் அசைவ உணவை பற்றி போலியான பிரச்சாரம் செய்யும் பழக்கம்தான் மிகவும் ஆபத்தானது. முக்கியமாக இந்தியாவில் பிரியாணியின் அடையாளமாக சென்னை திகழ்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த வியாபாரத்தை நம்பித்தான் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் இந்த தவறான வதந்தியால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

அச்சத்தை உண்டாக்கியது:  இந்த பொய் பிரச்சாரமும், வதந்தியும் பெரிய அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இது இறைச்சி விற்பனையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த நாய்கறி வதந்தி முழுக்க முழுக்க பொய், அது ஆட்டுக்கறிதான் என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இறைச்சி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப வரும் என்று நம்பலாம்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vegan-politics-dog-meat-rumor-finally-the-truth-has-came-out-334797.html

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

வேகன் உணவு முறைக்கும், இந்த வீடியோ இல் சொல்லப்போடும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும்  தொடர்பு உள்ளது.

இந்த விஞ்ஞான ஆராய்ச்சி உண்மையானது.

ஆனால், எனது தனிப்பட்வழங்க கூடிய ட பார்வையில், உணவு என்பதே முதல் மருந்தாகும். அதனால், அசைவமும் உண்ணப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதை தாரக கூடிய பால், cheese, buttermilk போன்றவற்றால் மாற்றீடு செய்யப்பட வேண்டும்.

மேலும், எந்த உணவு பழக்கத்வீடியோ வில் தையும் திடீரென்று மாற்றுவது, கைவிடுவதோ அல்லது மாற்றீடு செய்வதோ உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

இந்த வீடியோ வில் சொல்லப்ப்டும் பாக்டீரியா பற்றி ஏற்கனவே சொல்லியுளேன். இந்த பாக்டீரியா, வாயில் இருந்து இயற்றகை அழைப்பிற்கு பதிலளிக்கும் வாசல்கள் வரை ஒவ்வொரு தனி நபரிடற்கும் தனித்துவமானது. ஓரே வீட்டில் வசிக்கும் பலரில் ஒருவரிற்கு   ஓர் குறிப்பிட்ட உணவு ஒவ்வாமைக்கு இந்த பாக்டீரியாயாவும் ஓர் காரணம். அது மட்டுமல்ல, இந்த பாக்டீரியாவின் health, உங்கள் உளநலத்தை பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதை பற்றி இன்னும் விரிவாக நீங்கள் இணையத்தில் தேடிப்பாருங்கள்.

அதனால், எந்த உணவு முறையை புதிதாக அல்லது மாற்றுவதாயின், படிப்படியாக செய்யுங்கள்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இயற்கையாகவே மனிதரில் சமிபாட்டுத்துகுதியால் தாவர உணவுகளைக் கொழுப்பாக மாற்றும் தன்மை கிடையாது. ஏனைய விலங்குகள் போலவே மனிதர்களுக்கும் இயற்கையாகவே இரைப்பையில் சுரக்கப்படும் அமிலங்கள் விலங்கு உணவைச் சமிப்பாடடையத்தக்கவாறே இயற்கையால் பல்லாயிரம் வருட கூர்ப்பிசை மாற்றங்கங்களுக்கூடாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடு மாடு போன்ற விலங்குகள் வேறோரு கூர்ப்பிசைவுக்கேற்றவாறு புல்லையும் இலைகளையும் புரதமாகவும் கொழுப்பாகவும் மாற்றம் செய்யக் கூடியவாறு இயற்கை அமைத்துள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் மாற வேண்டுமானால் எமது இயற்கையான உடல் அமைப்பு பரிமாணம் அடைய இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

பல வகையான தவரங்களிலிருந்தும் கொழுப்பையும் புரதங்களையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதனுக்குத் தேவையான எல்லாவிதமான புரத அமில மூலக் கூறுகளையும் தாவர உணவினால் வழங்குவது கடினம். இந்தியாவில் சைவ உணவை உண்பவர்கள் பசுப்பால் நெய் பொன்றவற்றால் இந்த விலங்குணவை ஓரளவு பெற்றுக் கொள்கின்றனர். 

இன்று நாம் உட்கொள்ளும் இறைச்சி மீன் வகைகள் எமது தேவைக்கு மிதமிஞ்சியது. இவற்றை ஓரளவு குறைத்து அதனைத் தாவரப் புரதத்தாலும் தாவரக் கொமுப்பாலும் சமப்படுத்துவதே சிறந்த ஆரோக்கியத்தைத் தரும்.

அதிகரித்துவரும் சனத்தொகையாலும் குறுகிவரும் விலங்கு கடல் வளங்களாலும் நாம் தாவர உணவுகளைப் பெரிதும் நாடவேண்டிய தேவை உள்ளது. எமது உடலுக்குத் தேவையான விலங்குப் புரதத்தைப் பூர்த்திசெய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக ஆடு மாடு போன்ற விலங்குகளை விட வெட்டுக்கிளி போன்ற உயிரினங்கள் மிகக் குறைந்த அளவான தாவரங்களை உட்கொண்டு அதிகமான புரத்திதினை உற்பத்தி செய்யக் கூடியன. எதிர்காலத்தில் இவ்வாறான உணவுகளைத் தேடி உண்ணப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும். 

 • Like 3
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இணையவனை நான் சந்தித்திருக்கின்றேன், நிழலியை நான் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்  நிழலிக்கு குத்த முடியுது. இணையவனுக்கு குத்த முடியவில்லை. ஒருவேளை இணையவனுடன் சேர்ந்து நான் தேநீர் அருந்திய விசுவாசமோ என்னமோ தொல்லை பண்ணுது இந்தப் பச்சை......!  ☺️

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, Kadancha said:

அதனால், எந்த உணவு முறையை புதிதாக அல்லது மாற்றுவதாயின், படிப்படியாக செய்யுங்கள்.

கடன்சா உங்கள் விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

எனக்கு 5 6 வருடங்களாக மூட்டுவலி உள்ளது.எனது மகளொருத்தி மருத்துவதுறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வீகன் முறை முயற்சி செய்யுங்கள் என்று நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார்.கடந்த மூன்று வருடங்கள் பிள்ளைகள் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று அவர்களிடம் மாறி மாறி திரிவதால் போற இடங்களில் எனக்காக ஒரு சமையல் சாப்பாடு என்று பல பிரச்சனை அத்துடன் மாமிசம் இருந்தால் ஒரு கறியுடனே சாப்பிடலாம் வாய்க்கு ருசியும் தானே.இதுகளை எண்ணி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.

இதைப்பற்றி கூடுதலான தகவல்கள் எடுப்போம் என்று தான் இங்கு பதிந்தேன்.

இப்போதும் மதில்மேல்பூனை மாதிரி தான்.

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, இணையவன் said:

இயற்கையாகவே மனிதரில் சமிபாட்டுத்துகுதியால் தாவர உணவுகளைக் கொழுப்பாக மாற்றும் தன்மை கிடையாது. ஏனைய விலங்குகள் போலவே மனிதர்களுக்கும் இயற்கையாகவே இரைப்பையில் சுரக்கப்படும் அமிலங்கள் விலங்கு உணவைச் சமிப்பாடடையத்தக்கவாறே இயற்கையால் பல்லாயிரம் வருட கூர்ப்பிசை மாற்றங்கங்களுக்கூடாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடு மாடு போன்ற விலங்குகள் வேறோரு கூர்ப்பிசைவுக்கேற்றவாறு புல்லையும் இலைகளையும் புரதமாகவும் கொழுப்பாகவும் மாற்றம் செய்யக் கூடியவாறு இயற்கை அமைத்துள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் மாற வேண்டுமானால் எமது இயற்கையான உடல் அமைப்பு பரிமாணம் 

அதிகரித்துவரும் சனத்தொகையாலும் குறுகிவரும் விலங்கு கடல் வளங்களாலும் நாம் தாவர உணவுகளைப் பெரிதும் நாடவேண்டிய தேவை உள்ளது. எமது உடலுக்குத் தேவையான விலங்குப் புரதத்தைப் பூர்த்திசெய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக ஆடு மாடு போன்ற விலங்குகளை விட வெட்டுக்கிளி போன்ற உயிரினங்கள் மிகக் குறைந்த அளவான தாவரங்களை உட்கொண்டு அதிகமான புரத்திதினை உற்பத்தி செய்யக் கூடியன. எதிர்காலத்தில் இவ்வாறான உணவுகளைத் தேடி உண்ணப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும். 

இணையவன் வீகனைப் பற்றி நிறையவே அறிந்து வைத்துள்ளீர்கள்.

எனது உண்மையான இலக்கு இந்த முறையை பின்பற்றும் யாருடனாவது நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதே.
இதை வியாபாரம் என்கிறார்கள் விஞ்ஞானம் என்கிறார்கள் ஒருசில கட்டுரைகள் வியாபாரம் மாதிரி தெரியும்.
நான் முற்றிலும் எதிர்பார்ப்பது விஞ்ஞான ரீதியானதே.
உங்கள் தகவல்களுக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, suvy said:

இணையவனை நான் சந்தித்திருக்கின்றேன், நிழலியை நான் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்  நிழலிக்கு குத்த முடியுது. இணையவனுக்கு குத்த முடியவில்லை. ஒருவேளை இணையவனுடன் சேர்ந்து நான் தேநீர் அருந்திய விசுவாசமோ என்னமோ தொல்லை பண்ணுது இந்தப் பச்சை......!  ☺️

சுவி தேவையான நேரத்தில் பச்சை இல்லாமல் போகும் போது மிகவும் எரிச்சலாக இருக்கும்.
பசிக்கும் போது பாக்கெற்றில் பணமில்லாமல் சாப்பாட்டுக் கடை முன் நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
புது வருடத்துடன் பச்சையை கொஞ்சம் கூட்டச் சொல்லி எல்லோரும் சேர்ந்து கேட்டுப் பார்க்கலாம்.

தமிழ்சிறி செய்வது போல் காலையில் எழும்பிய உடனேயே அம்பிடுற 5 பேருக்கு விறுவிறென்று குத்திப் போட்டு பேசாமல் இருந்துடனும்.

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ஈழப்பிரியன் said:

கடன்சா உங்கள் விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

எனக்கு 5 6 வருடங்களாக மூட்டுவலி உள்ளது.எனது மகளொருத்தி மருத்துவதுறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வீகன் முறை முயற்சி செய்யுங்கள் என்று நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார்.கடந்த மூன்று வருடங்கள் பிள்ளைகள் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று அவர்களிடம் மாறி மாறி திரிவதால் போற இடங்களில் எனக்காக ஒரு சமையல் சாப்பாடு என்று பல பிரச்சனை அத்துடன் மாமிசம் இருந்தால் ஒரு கறியுடனே சாப்பிடலாம் வாய்க்கு ருசியும் தானே.இதுகளை எண்ணி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.

இதைப்பற்றி கூடுதலான தகவல்கள் எடுப்போம் என்று தான் இங்கு பதிந்தேன்.

இப்போதும் மதில்மேல்பூனை மாதிரி தான். 

சடுதியனா மாற்றம் இருக்கும் சமநிலையைக் குழப்புவதோடு, புதிய சிக்கல்களை தோற்றுவிப்பதற்கும் அல்லது இருக்கும் பிரச்சனைகளை மேலும் சிக்கலக்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.  

ஆயினும், நீங்கள் இயல்பாகவே புலால், மாமிச  உணவை விரும்புவராயின், அது சிலவேளைகளில் உங்கள் மரபணு கூட காரணமாக  அமைவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.   

https://www.fromthegrapevine.com/health/diet-dna-vegetarian-gene-study

மேலே உள்ள ஆய்வு பரந்துபட்ட அங்கீகாரம் பெற்றதல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இத ஆய்வின் படி, தாவர அடிப்படையிலான  உணவுப் பழக்கத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளை தாவர அடிப்படையிலான உணவையே  விரும்புமவதற்கு அதிக  சாத்தியக்கூறுகள் உள்ளது.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this