Jump to content

ஈழத்தில் இலக்கியம் என ஒன்று இருக்கிறதா?


Recommended Posts

ஈழத்தில் இலக்கியமே இல்லை. இரண்டு மூன்றுபேர் போர்க் கதைகளையும் அதைச் சுற்றிய வலி அனுபவங்களையும் டெம்லேட் மெட்டீரியலாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் சண்டையென்றால் சிரிப்பு வருகிறது. 

தமிழ்நாட்டில் இலக்கியச் சண்டை நடப்பதற்கு வலுவான பல காரணங்கள் உண்டு. புதுமைப்பித்தன் எழுதிய முதல் கதையிலிருந்து இலக்கியத்திற்கான தரம் குறித்த சண்டை சர்ச்சைகளில் இறங்கலாம். பிறகு எழுதிய ஒவ்வொருவரும் உலகத்தரமான கதைசொல்லிகள். மாஸ்டர்கள். 

ஆதவன் கதைகளை ஆராய்ந்தால் ஒரு பொதுப்புத்தி தமிழன் எழுதிய கதைகள்போல இருக்காது. ஆதவன் எண்பதுகளில் வாழ்ந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்காரன். 
பா. சிங்காரம் போர்க் கதைகளை பயணக் கட்டுரை சுவாரஸியத்தோடு எழுதினான். தஞ்சை ப்ரகாஷ் முற்போக்கு எழுத்திலிருக்கும் கோபத்தை அகற்றிவிட்டு அதற்குக் கலைவடிவம் கொடுத்தான். இதுமாதிரி ஐம்பது மாஸ்டர்களை கை காட்டலாம். இளம் எழுத்தாளரான லஷ்மி சரவணக்குமார் வரைக்கும் தனித்துவமான எழுத்தாளர்கள் நிறைந்த நிலம் இது. இங்கு நடக்கும் சண்டைகளுக்கு வளர்ச்சி என்ற மாற்று அர்த்தமுண்டு. சின்ன விவாதம் முதல் அடிதடி வரைக்கும் போவதற்கு தமிழ் இலக்கியம் தகுதியானது. இலக்கியம் வளர்ந்து குலைதள்ளி பக்கக்கன்களை உருவாக்கிய நிலத்தில் சண்டைகளை கொண்டாடலாம்.

ஈழத்தில் நடக்கும் இலக்கியச் சண்டைகளை ஆண்டி மடம் கட்டிய கதையாகப் பார்க்கிறேன். ஈழத்து மண்ணில் உலகம் ரசிக்கும் கொண்டாடும் இலக்கியம் இருக்கிறதென்ற கற்பனையில் சண்டை போடுகிறார்கள். ஈழத்துச் சண்டைகளை சலம்பல்கள் என்ற அளவில் புரிந்துகொள்கிறேன். 

இலக்கிய அடையாளமில்லாமல் பேஸ்புக்கில் எழுதும் ஈழத்து மக்கள் படு சுதந்திரமாக எழுதுகிறார்கள். போர் நிலம் என்ற கடிவாளமில்லாமல் எழுதுகிறார்கள். எல்லாவற்றை குறித்தும் பரந்த பார்வையிருக்கிறது. இவர்கள் குவிந்து இலக்கியம் எழுதவேண்டும்.

இலக்கிய உலகில் சண்டை வேண்டுமென்றால் சண்டைக்கான சரக்கு பிரதி வடிவில் இருப்பது முக்கியம். ஈழ இலக்கியத்தில் சரக்கு குறைவு. வாய் ஜாலம் அதிகம். 

குழப்பாமல் சொல்கிறேன். அமெரிக்கா அல்லது அண்டார்டிக்க தமிழ் எழுத்தாளர்களுக்குள் தள்ளு முள்ளு. அடிதடி கலவரமென தலைப்புச் செய்தி வந்தால் எப்படி வினையாற்றுவோம்! நான் **தால் சிரிப்பேன். அதே கதைதான் ஈழத்துக்கும்.

 

சாம் நாதன் ( முகநூல்)

அகர முதல்வன மற்றும் குணா கவியழகன் இடையேயான முறுகல் ஜெயமோகன குணா கவியழகன் எழுத்துகளை இலக்கியமே இல்லை என எழுதியதன் பின்னனியில் இக்கட்டுரை எழுதபட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சாம் நாதன் யார்?...ஈழத்தவரோ

இரண்டு புலிகள் அல்லது புலிகளில் இருந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் தங்கட நூல்களை விற்பதற்காக சண்டை பிடிக்கிறார்கள் என நினைக்கிறேன்...இதில் ஜெய மோகனுக்கும் ,சாமுக்கும் ஏன் தேவையில்லாத வேலை

Link to comment
Share on other sites

கேள்வியில் தவறு இல்லை எனத்தான் நானும் நினைக்கின்றேன். தமிழர் போராட்டத்தின் தோல்வியின் பின் வெளி வந்த புலிகளுக்கு எதிரான ஒற்றைப் பார்வையைக் கொண்ட ஒரு சில படைப்புகளும் போரின் வலியை சொல்லும் சில படைப்புகளும் மட்டுமே ஈழத்து இலக்கியம் ஆகிவிடாது. எமக்கு என்று ஒரு பரந்துபட்ட இலக்கிய போக்கோ படைப்புகளோ எதுவுமில்லை.

 

Link to comment
Share on other sites

 

 

சில எழுத்தளர்கள் மத்தியல் நடக்கும் அடயாளம் அங்கீகாரம் தேடும் போட்டிகள் அபத்தமான கருத்துக்களை தோற்றுவிக்கின்றது. 

இலக்கியம் என்பது பல்வேறு வடிவங்களால் புரிந்துகொள்ளப்படுவது. இலக்கியத்திற்கு ஒரு கவிஞ்ஞனோ அல்லது கதை எழுதுபவரோ தலைவனாக முடியாது. அல்லது இலக்கியத்திற்குள் நான் பெரிது நீ பெரிது என்று சண்டை போட முடியாது. 

இலக்கியம் ஒரு காலத்தை பதிவு செய்வது , கலாச்சாரத்தை, மொழியை பதிவு செய்வது மேலும் இவைகளுக்கு இடையேயான மாற்றத்தையும் கடந்த காலங்களில் இருக்கும் நல்ல விசயங்களை நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நகர்த்தும் செயலை செய்வது என்பது போன்ற பல்வேறு நிலைகளில் புரிந்துகொள்ளப்படவேண்டியது. இனி இவற்றை எழுத்து மூலமாக என்னும் போது கதையாக கவிதையாக விமர்சனமாக குறிப்புகளாக வரலாற்று பதிவுகளாகவும், இசை நாடகம் ஓவியம் ஒளிப்பதிவுகள் என பல வடிவங்களில் இலக்கியம் பதிவுசெய்யப்படுகின்றது. 

ஒரு தேசீய இனத்துக்கான இலக்கியம் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கான இலக்கியம் என்ற அணுகுமுறையும் பரந்துபட்ட மனப்பாங்கும் தான் ஆரோக்கியமானது. ஈழத்து இலக்கியம் தமிழகத்து இலக்கிம் என்ற அணுகுமுறை ஆரோக்கியமானதாக இருக்கமுடியாது. 

ஒரு இருப்பத்தைந்து வருட யாழ்க்ளத்தை அப்படியே பதிவுசெய்து பாதுகாத்து 100 வருடங்களின் பின்னர் வருபவர்கள் படித்தால் அவர்களுக்கு எந்த எழுத்தாளனும் கவிஞனும் கொடுக்க முடியாத ஒரு காலத்தின் புரிதலை  இக்களம் கொடுக்கும் . இலக்கியம் சார்ந்த எனது புரிதல் இவ்வாறானதுதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎25‎/‎2018 at 5:22 PM, நிழலி said:

கேள்வியில் தவறு இல்லை எனத்தான் நானும் நினைக்கின்றேன். தமிழர் போராட்டத்தின் தோல்வியின் பின் வெளி வந்த புலிகளுக்கு எதிரான ஒற்றைப் பார்வையைக் கொண்ட ஒரு சில படைப்புகளும் போரின் வலியை சொல்லும் சில படைப்புகளும் மட்டுமே ஈழத்து இலக்கியம் ஆகிவிடாது. எமக்கு என்று ஒரு பரந்துபட்ட இலக்கிய போக்கோ படைப்புகளோ எதுவுமில்லை.

 

ஈழத்தில் இலக்கியம் இருக்கிறதா/இல்லையா என்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் வரேல்ல...அ.முதல்வனுக்கும்,குணாவுக்கும் நடக்கும் சண்டையில் அடுத்தவர்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை

Link to comment
Share on other sites

அக்கா,அகர முதல்வனுக்கும் குணா கவியழகனுக்கும் நேரடி சண்டை எதும் இல்லை, ஜெயமோகன் சயந்தனை குணா கவியழகனுக்கு எதிராக நிலை நிறுத்துகிறார்,அதே நேரம் தமிழகதில் இப்போது இருக்கும ஈழமுகம் அகர முதல்வன்,ஆனால் அகரமுதல்வனோ தனது கூட்டங்களில் பி ஜெ பி காரர்களை விருந்தினர்களக அழைக்கிறார், தமிழ் திரைப்படங்களில் சில பங்களிப்புக்களயும் அகர முதல்வன செய்கிறார்.. ஈழபடைப்பாளர்களின் முகமாக அகரமுதல்வன் முன்னிலைபடுத்த படுவது பிடிக்காமல் கூட இருக்கலாம்.. இலக்கியம் என்றாலே பிடுங்கு பாடு தானே எப்போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அபராஜிதன் said:

அக்கா,அகர முதல்வனுக்கும் குணா கவியழகனுக்கும் நேரடி சண்டை எதும் இல்லை, ஜெயமோகன் சயந்தனை குணா கவியழகனுக்கு எதிராக நிலை நிறுத்துகிறார்,அதே நேரம் தமிழகதில் இப்போது இருக்கும ஈழமுகம் அகர முதல்வன்,ஆனால் அகரமுதல்வனோ தனது கூட்டங்களில் பி ஜெ பி காரர்களை விருந்தினர்களக அழைக்கிறார், தமிழ் திரைப்படங்களில் சில பங்களிப்புக்களயும் அகர முதல்வன செய்கிறார்.. ஈழபடைப்பாளர்களின் முகமாக அகரமுதல்வன் முன்னிலைபடுத்த படுவது பிடிக்காமல் கூட இருக்கலாம்.. இலக்கியம் என்றாலே பிடுங்கு பாடு தானே எப்போதும்

விளக்கத்திற்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியச் சண்டைகள் எப்போதும் இருக்கும். முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று குழுவாகப் பிரிந்து சிற்றிதழ்களில் வாதம் செய்தார்கள். ஆதரவு முகாம், எதிர்ப்பு முகாம் என்று எழுத்தாளர்கள் அடிபடுவது சில நேரம் எரிச்சலைத் தரும்.

தஞ்சை பிரகாஷின் ஒரு நாவலைப் படித்தேன். முற்போக்கில் இருக்கும் கோபத்தை அகற்றி கலைவடிவம் கொடுத்தமாதிரித் தெரியவில்லை. வெறும் பிதற்றல் மாதிரி இருந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியம் என்பது இலக்கு நோக்கியது மட்டுமன்றி ஒரு மொழி பேசும் மக்களின் உணர்வுகளை, செய்திகளை மற்றவர்க்கு எடுத்துக் கூற முயல்வது. அக்காலத்தில் கூட புலவர்களிடையே போட்டிகளும் பொறாமைகளும் நிலவின என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால் அவர்கள் காலம் போலல்லாது இப்போதுள்ள ஈழத்து எழுத்தாளர்களிடமோ அல்லது கவிஞர்களிடமோ ஆழ்ந்த தமிழ்ப் புலமையோ ஆக்குதிறனோ இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் இருக்கும் சிலரையும் கூட பலர் அறிந்துகொள்ளவில்லை என்பதுமட்டுமல்ல ஆழ்ந்த வாசிப்புத்திறன் கூட இணையத்தின் பயன்பாட்டில் சிதறிவிட்டதும் ஒரு காரணம். மற்றுமொன்று தமக்குப் பிடித்த சிலரை மட்டும் போற்றுவதும் மற்றவரைத் தூற்றுவதுமாக ஈழத்து இலக்கியவாதிகள் தம் இலக்கை எதுவென்று தெரியாது கடக்கின்றனர்.  

சண்டமாருதன் நீங்கள் கூறுவதுபோல் இலங்கை இந்தியத் தமிழர்களை ஒரு வட்டத்துள் கொண்டுவர முடியாது. ஈழத்து இலக்கியம் வேறு தமிழகத்து இலக்கியம் வேறு. எங்கள் இழப்புக்களை வலிகளை எந்த யெயமோகனாலோ அல்லது வேறு எந்த இந்திய எழுத்தாளராலும் எழுதவே முடியாது. இலக்கியம் எழுதும் காலத்தில் யாராலும் போற்றப்படுவதில்லை. எமது அடுத்தடுத்த தலைமுறையால் அது புரிந்துகொள்ளப்படுமானால் அதுவே இலக்கியத்தின் வெற்றி.
ஆனாலும் எழுதப்படாத இலக்கியங்களான நாட்டார் பாடல்கள், விழாக்கள்,கட்டடங்கள் என எதுவுமே புதிதாக ஆக்கப்படாது பாரிய ஒரு இடைவெளியை எம் தேசத்தில் ஏற்படுத்தியிருக்க, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் நூல்களும், பாடல்களும் எதோ ஒருவகையில் ஈழத்தவர் வாழ்வியலைச் சொல்ல, சங்க இலக்கிய நூல்களும், கோயில்களும் கோபுரங்களும் அச்சில் கோர்க்கப்படட பழமொழிகளும் நாட்டுப்புறப் பாடல்களும் மட்டுமே தொடர்ந்தும்  தமிழுக்காய் எஞ்சியிருக்கப் போகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.