sathiri 1,024 Report post Posted November 25, 2018 அருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் .. எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ... இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் .. இப்போ பெரிய பிரச்னை ... என்ன உன்னை போட்டு அடிச்சாளா .... அதெல்லாம் அப்பப்போ நடக்கிற சின்ன பிரச்னை ... அப்போ நீயே சொல்லு .... விஸ்கியை ஒரே மிடறில் இழுத்தவன் .. பாக்கெட்டிலிருந்து ஒரு என்வலப்பை எடுத்து நீட்டினான் .. அதை வாங்கி உள்ளே இருந்த கடிதத்தை எடுத்தேன் விவாக ரத்து கேட்டு அவனது மனைவி வக்கீல் மூலம் அனுப்பிய கடிதம் ..படிக்கலாமா என்றேன் .. உதட்டை பிதுக்கி.. படி.. என்று கைகளாலேயே சைகை செய்து சிவாஜி கணேசன் ரேஞ்சுக்கு போயிருந்தான் .. பல பக்க கடிதத்தை படித்ததன் சுருக்கம் என்னவெனில் அவன் சுத்தமாக சவரம் செய்வதில்லை அப்படி சவரம் செய்யாத காரணத்தால் ஒரே படுக்கையில் படுக்கவே அருவருப்பாக இருக்கின்றது .தாம்பத்திய உறவு பாதிக்கப் படுகிறது எனவே விவாக ரத்து வேண்டும் என்பதே .. படித்து முடித்து விட்டு சிரித்தபடியே அவனை நிமிர்ந்து பார்த்தேன் .. இப்போ சொல்லு எங்களுக்கு ஒரு பிள்ளையிருக்கு அப்போ வராத அருவருப்பு இப்போ வந்ததா ? அதுபற்றி எனக்கு தெரியாது ஆனால் சவரம் செய்வதெல்லாம் ஒரு பிரச்சனையா ? வேண்டுமென்றால் உனக்கு ஒரு சவரக்கத்தி வாங்கி கொடுக்கிறேன் .. கடிதத்தை வடிவா படிச்சியா இல்லையா ? அவள் ஒவ்வொரு நாளும் சவரம் செய்ய சொல்லியிருப்பது மேல இல்லை கீழ ..அங்கை ஒவ்வொரு நாளும் செய்ய இயலுமா ? நீயே சொல்லு ... சரி எனக்கு விளங்கிது ..உண்மையான பிரச்சனைஎன்ன நீயே சொல்லு .. இன்னொரு விஸ்கி என்று கிளாசை நீட்டினான் ..ஊற்றியதும் .. அவளுக்கும் அவளோட வேலை செய்யிற ஒரு கறுப்பனுக்கும் தொடர்பு ..ஓங்கி மேசையில் குத்தினான் ... ஓன்று சொன்னால் கோபிக்க மாட்டாயா ?? சொல்லு ... தன்பாட்டில் வாழ்ந்து கொண்டுருந்த ஆபிரிக்க மக்களை ஆட்சி செய்கிறோமென காலனித் துவப்படுத்தி உன் மூதையர் கறுப்பின பெண்கள் மீது செய்த கொடுமையை விட .....முடிக்கவில்லை .. கிளாசை வீசி எறிந்து விட்டு போய்க் கொண்டிருந்தான் .. Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 9,880 Report post Posted November 25, 2018 சாத்திரியார், உங்களது பிரெஞ்சு காரநண்பனிடம் .... கறுப்பன் ஒவ்வொரு நாளும், அங்கே சவரம் செய்பவனா என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை. 1 Share this post Link to post Share on other sites
sathiri 1,024 Report post Posted November 26, 2018 23 hours ago, தமிழ் சிறி said: சாத்திரியார், உங்களது பிரெஞ்சு காரநண்பனிடம் .... கறுப்பன் ஒவ்வொரு நாளும், அங்கே சவரம் செய்பவனா என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை. அவன் வழிக்க தேவையில்லையெண்டு நினைக்கிறன் 2 Share this post Link to post Share on other sites
தனிக்காட்டு ராஜா 1,462 Report post Posted November 27, 2018 On 11/25/2018 at 6:08 PM, தமிழ் சிறி said: சாத்திரியார், உங்களது பிரெஞ்சு காரநண்பனிடம் .... கறுப்பன் ஒவ்வொரு நாளும், அங்கே சவரம் செய்பவனா என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை. கேட்டிருப்பார் அவன் வேற பதில் சொல்லியிருப்பான் இந்தாள் மழுப்புகிறார் Share this post Link to post Share on other sites