Jump to content

"போர்க்களமான கூட்டமைப்பின் கூட்டம்!! சம்பந்தன் – சிறீதரன் இடையில் கடும் கருத்து மோதல்…"


Recommended Posts

2882-820x320.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி இரா.சம்பந்தன் விளக்கமளித்தார்.

ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் கையொப்பமிட வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார்.

அதற்கு “இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்.“ என்ற சத்தியக் கடதாசியிலேயே கையொப்பமிட கோரப்பட்டது.

மேலோட்டமான சில விவாதங்கள், கருத்து முரண்பாடுகளின் பின்னர் எம்.பிக்கள் கையெழுத்திட சம்மதித்தனர். அப்போது திடீரென சிறீதரன் எம்.பி, தான் கையெழுத்திட மாட்டேன் என்றார். கையெழுத்திட வேண்டுமென இரா.சம்பந்தன் வற்புறுத்தினார். இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, சிறிது நேரத்தில் உக்கிரமான வார்த்தை மோதல் ஆரம்பித்தது.

மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது என சிறீதரன் கேள்வியெழுப்பினார். இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்றார்.

ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்." ஏற்கனவே எங்களிடமிருந்து ஒருவர் போய்விட்டார். நீர் இரண்டாவது ஆளாகுவீர். தனியே உம்மை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் சேர்த்துத்தான் காசு வாங்கியதாக கதைப்பார்கள்.

"சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன் - நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என.“ என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தனிடமிருந்து இப்படியொரு கருத்து வருமென யாரும் எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக நிதானம் தவறாத இரா.சம்பந்தர் இன்று அப்படி கதைத்தது சிறிதரனை மேலும் சீண்டியிருக்க வேண்டும். சம்பந்தர் மீது அதிரடியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தினார் சிறிதரன்.

சம்பந்தரும் பதிலுக்கு குற்றம்சாட்ட, கடுமையான மோதலாகியது.

மோதலின் உச்சக்கட்டத்தில்- “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்“ என சிறீதரன் கிடுக்குப்பிடி பிடித்தார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வரவு செலவு திட்டங்களிற்கு ஆதரவளிப்பது தொடக்கம், அரசியலமைப்பு உருவாக்க பணிகளிற்காக வழங்கப்படும் நிபந்தனையற்ற ஆதரவு, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையெல்லாம் கடும்தொனியில் குறிப்பிட்டார் சிறீதரன்.

சம்பந்தரிற்கு ஆதரவாக எம்.ஏ.சுமந்திரனும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். “சர்வதேசமும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையை குழப்பக்கூடாது“ என கூட்டமைப்பு தலைமையால் கூறப்பட்டது.

“சர்வதேச சமூகம் எமக்காக நிற்பதாக கூறுகிறீர்கள். சரி, இப்போது நாம் கையொப்பமிடுவதால் எமக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என இரண்டு நாடாவது வாக்குறுதியளித்ததா?“ என சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

“அரசியலமைப்பு பணிகள் தொடர்பாக நாங்கள் சில விமர்சனங்களை வைத்தபோது, எங்களை முட்டாள்கள் என்பதை போல ஒருமுறை கூறியிருந்தீர்கள். அதற்கு நாம் ஊடகவயலாளர் சந்திப்பு வைத்து பதிலளித்தோமா?. அரசியலமைப்பின் ஒற்றையாட்சிதன்மை குறித்து நாம் பேசியபோது, சுமந்திரன் எமக்கு சமஷ்டியை பற்றி தெரியாதென்றார். நாம் பகிரங்கமாக பதில் சொன்னோமா?. ஒற்றுமைக்காகத்தான் நாம் பொறுமையாக இருந்தோம்“ என்றார் சிறீதரன்.

இடையிடையே மாவை சேனாதிராசா குறுக்கிட்ட போது, மாவை சேனாதிராசாவை கடும் தொனியில் பேசி, அடக்கினார் சிறீதரன்.

சிறீதரன் குற்றம்சாட்டியபோது, வாய்திறவாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த சுமந்திரன், பின்னர் மெதுவாக “இங்கே பாருங்கள் சிறி… இது ரணிலை ஆதரிப்பதில்லை நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் சத்தியக்கடதாசிதான்“ என நீண்ட விளக்கமளித்து, சமரசப்படுத்தினார்.

இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரும் மஹிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை. ஒருமுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பார்ப்போமே என்றும் கூறினார்.

பின்னர், பல எம்.பிக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர், “ஒற்றுமையென்று ஐயா சொல்கிறார். அதனால் கையொப்பமிடுகிறேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கை உயர்த்த மாட்டேன்“ என கூறி, அந்த சத்தியக் கடதாசியில் சிறீதரன் கையொப்பமிட்டார்.

http://nakarvu.com/2018/11/25/போர்க்களமான-கூட்டமைப்பி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

சர்வதேச சமூகம் எமக்காக நிற்பதாக கூறுகிறீர்கள். சரி, இப்போது நாம் கையொப்பமிடுவதால் எமக்கு தீர்வை பெற்றுத்தருவார்கள் என இரண்டு நாடாவது வாக்குறுதியளித்ததா?“ என சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

சிறிதரன் நீண்ட தூக்கத்தின் பின் எழுந்திருக்கிறார்.

இதுவே ரொம்ப பாராட்ட வேண்டியது.இருந்தும் அவரை வெளியே போட்டுவிடுவோம் என்று சொல்லி வெருட்டி வைத்துவிட்டார்கள் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

மோதலின் உச்சக்கட்டத்தில்- “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்“ என சிறீதரன் கிடுக்குப்பிடி பிடித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு இந்த வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் எப்படி நடைபெற்றது என்ற விபரம் தெரியாமல் பிரதேச வாதம் பேசுகின்றார் ,திருகோணமலையை சார்ந்த 50 இளைஞர்களுக்கு ஒரே தடவையில் பல் வேறு வைத்தியசாலைகளில் ஆகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

மோதலின் உச்சக்கட்டத்தில்- “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நீங்கள் சுகாதார அமைச்சரை பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா சொல்லுங்கள்“ன சிறீதரன் கிடுக்குப்பிடி பிடித்தார்.

அடபாவிகளா இதுவேறை நடக்குதா?

ஐயா தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எந்நேரமும் இருந்து கொண்டு உள்ளுக்குள்ளால் அலுவல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

35 minutes ago, Gari said:

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு இந்த வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் எப்படி நடைபெற்றது என்ற விபரம் தெரியாமல் பிரதேச வாதம் பேசுகின்றார் ,திருகோணமலையை சார்ந்த 50 இளைஞர்களுக்கு ஒரே தடவையில் பல் வேறு வைத்தியசாலைகளில் ஆகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது. 

சம்பந்தர் ஐயாவும் தனது வாக்கு வங்கியை பாதுகாக்க வேண்டும்  தானே.

Link to comment
Share on other sites

19 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா இதுவேறை நடக்குதா?

ஐயா தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி எந்நேரமும் இருந்து கொண்டு உள்ளுக்குள்ளால் அலுவல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார். 

ஐயா நீண்டகாலமாக இந்த வேலையைத்தானே கனகச்சிதமா செய்து வருகிறார். அதாவது தமிழர் உரிமையை அடமானம் வைச்சு சில்லறை வேளைகளைச் செய்வது தானே சம்பந்தனின் ஒரே ஒரு அரசியல் சாதனை.

21 hours ago, போல் said:

“நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்."

21 hours ago, போல் said:

"சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன் - நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என.“ என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

சம்பந்தர் ஐயாட தராதரம் இவ்வளவு கீழானதா இருக்குமென்டு நான் ஒருநாளும் நினைச்சதே இல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.