Jump to content

சற்றுமுன் யாழில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய மாணவர்கள்!


Recommended Posts

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்தநாள் நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந் நிலையிலேயே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.

இதே வேளை பிரபாகரனின் இன்றைய (26) பிறந்த நாளை முன்னிட்டு பிரபாரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

மேலும் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்கு பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலையே தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/109798?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

தமிழீழத் தேசிய தலைவரின் பிறந்தநாள் கரைச்சி பிரதேச சபையினால் முன்னெடுக்கும் நிகழ்வு

a274bd081d175ce20877d97833e854ee?s=48&d= pottu-300x225.jpg

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்  பிறந்தநாள் நாளைய தினம் உலகம் பூராகவும் வசிக்கும் தமிழ் மக்கள் நாளைய தினம் கொண்டாட உள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் நாளைய தினம் 4 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட பசுமை பூங்கா திறக்கப்படவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் திறக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு முன்பாக இந்த பசுமை பூங்காவிற்கு முன்பாக உள்ள சந்திரன் பூங்காவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு சின்னம் இருப்பதன் காரணமாக அதை பயன்படுத்த முடியாமல் உள்ளது இருந்த போதிலும் அந்த பசுமை பூங்காவை புனிதமான நாளில் ஆரம்பிப்பதாக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார் தமிழர்களுக்கு முகவரி தந்த தமிழர்களுக்கு அடையாளம் தந தமிழர்களின் தனிப்பெரும் தலைவனது பிறந்தநாளில் மக்களின் பாவனைக்காக அந்த பூங்காவை கையளிப்பது எமக்கு பெரும் மகிழ்வைத் தருவதாக பொதுமக்களும் தெரிவித்தனர். அவரது பிறந்த நாளில் மிக கையளிப்பது என்பது வரலாற்றுப் பதிவு எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினார்கள்

http://nakarvu.com/2018/11/25/தமிழீழ-தேசிய-தலைவரின்-பி/

Link to comment
Share on other sites

யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

 

prabhakaran-birthday-1-300x200.jpgதமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆங்காங்கே வே.பிரபாகரனின் கருத்துக்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அத்துடன் நள்ளிரவில் மாணவர்களால் பிரபாகரனின் பாரிய உருவப்படம், வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில், அவரது வீடு இருந்த இடத்துக்கு முன்பாக உள்ள வீதியை இன்று காலை துப்புரவு செய்த நான்கு இளைஞர்களின் அடையாள அட்டைகளை சிறிலங்கா காவல்துறையினர் பறித்துச் சென்றனர்.

அத்துடன், அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு வீதியால் சென்றவர்களும் சோதனையிடப்பட்டனர்.

இந்த நிலையில், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடத் தயாராக இருந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா உள்ளிட்ட 7 பேர்  வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள், வழக்குத் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.

prabhakaran-birthday-1.jpgprabhakaran-birthday-2.jpgprabhakaran-birthday-3.jpgprabhakaran-birthday-4.jpg

prabhakaran-birthday-5.jpg

Link to comment
Share on other sites

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள் கைதாகி விடுவிப்பு

_104485870_b6699754-6d7b-41cb-aa83-1d813

வேலுப்பிள்ளை பிரபாகன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64வது பிறந்த நாள் இன்றாகும்.

1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாளை தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் யாழ் பல்கலைக்கழக வாளகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதே வேளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபாகரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

_104485868_img-20181126-wa0006.jpg

 

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இன்றைய தினம் காலை வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட இருந்த நிலையில் அங்குவந்த போலீசார் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ததுடன் வல்வெட்டித்துறை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

_104485872_img-20181126-wa0010.jpg

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது சிவாஜிலிங்கமும் வல்வெட்டித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து கேக் உள்ளிட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரை விடுவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46340668

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.