• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதற்காக.. சந்திக்கா அம்மையார்.. அனுரத்த ரத்வத்தைக்கு தங்க முலாம் பூசிய வாள் ஒன்றை பரிசளித்து.. அவரை ஒரு நவீன துட்டகைமுனு லெவலுக்கு காட்டினார். அதன் பின் மகிந்த.. தன்னைத் தானே.. முள்ளிவாய்க்கால் பெரும் இனவழிப்போடு.. நவீன துட்டகைமுனுவாக காட்டிக் கொண்டார். நவீன மகாவம்சத்தையும் வெளியிட்டார். இப்பொ.. கோத்தா.. ருவன்வெலி சயவில் போய் நின்று கொண்டு.. தன்னை அனுராதபுர ராட்சியதின் தொடர்ச்சி துட்டகைமுனுவின் வாரிசாகக் காட்ட முனைகிறார். பொலநறுவையாக இருக்கட்டும்.. அனுராதபுரமாக இருக்கட்டும்.. கண்டியாக இருக்கட்டும்.. யாழ்ப்பாணமாக இருக்கட்டும்.. வன்னியாக இருக்கட்டும்.. எல்லாத்தையும் தலைநகராக்கியதே தமிழ் மன்னர்கள் தான். சிங்களவர்கள் கிடையாது. அதுவும் சைவ மன்னர்கள். அதனால் தான் இங்கெல்லாம்... சைவக் கோவில்களை நிறுவி இருந்தனர். இப்போ அவற்றில் பல சேதமடைந்து விட்டன.  சிகிரியா ஓவியங்கள் கூட காசியப்பன் காலத்தினது.  அங்குள்ள குகை ஓவியப் பெண்கள்.. அழகிய பொட்டணிந்திருப்பதைவ். கூந்தலில் பூ மாலை அணிந்திருப்பதைக் காணலாம். மேலும் காதணி.. மற்றும் அந்தப் பெண்கள் அணிந்திருக்கும்.. அணி கலன்கள் தமிழர் நாகரிகத்துக்குரியவை. மிஸ்டர்.. கோத்தாவும்.. அவரது கும்பலும்.. இந்த ஓவியங்களையும் மாற்றி வரையலாம். அதற்காக வரலாற்றை இப்படியே தமக்கேற்ற வாறு தொடர்ந்து புனைய முடியாது.  இலங்கைத் தீவுக்குள் உள்ள மாதன முத்தாக்களை இனவாதத்தின் பெயரால்.. மயக்கி வைக்கலாம்.. ஆனால்.. நவீன உலகோடு தொடர்புடைய இளைய சமுதாயத்தை அதிக காலம் எனி ஏமாற்ற முடியாது. 
  • தமிழினத்துக்கு ஒரு தலமை என்பதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதும் கற்பனை நிலையில் கூட தற்போது சாத்தியமற்றது.  முரண்பாடுகள் நிறைந்து சாதி மத பிரதேசவாதமாக பல்வேறு தளங்களில்  ஐக்கியமின்றி சிதைந்துபோன நிலையில் உள்ள இனம் அதே நேரம்  பேரினவாதத்திடம் இருந்து விடுபடவும் வேண்டும்.  இரண்டுக்குமான ஒரு தலைமை எப்படி சாத்தியம் என்பதே  கற்பனைக்கு எட்டாத விசயம். புலிகள் காலத்தில் தமிழினம் விடுதலை அடைந்தால் சரி இல்லையேல் தமிழர்களுக்கென்று ஒரு அரசியலே இருக்காது என்ற நிலை இருந்ததின் காரணம் இதுதான். புலிகளின் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தளமே  கிடையாது. இன்றைய சுமந்திரன் சம்மந்தர் விக்கி சிவாஜிலிங்கம் யாரானுலும் சரி அவர்கள் தளமற்று அந்தரத்தில் நின்று எதையே செய்கின்றார்கள் தவிர அது இனத்துக்கான அரசியல் எல்லைக்குள் வரமாட்டாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அர்த்தமற்ற ஒன்றுதான்.   
  • MCC and the transition to economic growth W. A. Wijewardena http://www.dailymirror.lk/hard-talk/MCC-and-the-transition-to-economic-growth-W-A-Wijewardena/334-177764
  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இரஜனம-கடததத-அனபபனர-ரணல-மல-வசட-உர/150-241232
  • இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவில்லை என நிதியமைச்சும் பிறிமா நிறுவனமும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69313