• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • அவன் ஏற்கெனவே எங்கே எப்படி கட்டவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்துள்ளான். உடனே செய்து முடித்து உரிமையும் கொண்டாடுறான். எங்கடையலும் இருக்குதுகள் ஆற அமர்ந்து, குலாவி முடிவெடுக்கிறதுக்கிடையில் அவன் அடுத்த விகாரைக்கு அடிக்கல் போட்டுவிடுவான்.
    • பாட்டியிட்டை எடுத்த வடையை நரியிட்ட பறிகொடுத்த காகம் மாதிரி, சிங்களவனும் ஒரு நாள்  ஏமாறலாம். தமிழரின் உரிமைகளை கொடுத்து சேர்ந்து வாழ விரும்பாமல், பேராசைப்பட்டு வெளிநாடுகளுக்கு பிரிச்சு குடுத்திட்டு, அப்புறம்  குடையேக்கை தெரியும் தங்கள் முட்டாள் தனமான தந்திரம். சிங்களவரின் வாக்கு  நாட்டை, கேட்டு கேள்வி இல்லாமல்  அந்நிய தேசத்துக்கு இப்போ குத்தகை. பின்னாளில் விற்பனைக்கே வழிவகுக்கும். தமிழரை அடிமைப்படுத்துற குஷியில் இப்போ ஒன்றும் புரியாது. புரியேக்கை எல்லாம் கைமாறிப் போய்விடும்.  சிங்களவன் எவ்வளவு முட்டாள் என்பதை புரிந்துள்ள ஒவ்வொரு நாடும் இனப்பிரச்சனைக்கு தீனி போட்டு நன்றாக எல்லாப் பக்கமும் வளைத்து மூச்சு விடமுடியாத படி இறுக்கப் படுகிறது. 
    • கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென விமான நிலைய சுகாதார பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். இவர்களில் 47 வயதான இந்திய பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அந்த பயணி விமான சேவை ஊழியர் ஒருவரை அழைத்து தான் கடுமையான குளிரை உணர்வதாகவும் அதேபோல் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விமானத்தின் பிரதான விமானிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்புகொண்டு அறிவித்துள்ளார். அதன் பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டு குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நிலையில், அவரின் உடலில் 101 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார். இதேவேளை, அதே விமானத்தில் பயணித்த 37 வயதான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கருவிகளின் ஊடாக இனம் காணப்பட்டுள்ளார். அவரின் உடலில் 102 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டதை அடுத்து அவரும் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் நால்வர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லையென வைத்தியர்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்றுக்கு/
    • யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுத்துள்ளனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாற நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 கிலோ பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றத்திற்காக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனுமதிபத்திரம் இன்றி கடத்தப்பட்ட தளபாடங்கள் செய்ய பயன்படும் மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கேரள கஞ்சா மற்றும் மரக் குற்றிகள் கடத்தப்பட்ட மூன்று பேருந்துகளையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழில்-இருந்து-கொழும்பு-2/