• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • முன்னர் பதவி ஏதும் இன்றி இருந்த போது எது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்???
    • யாழ்ப்பாணத்தில் நாளை “சிவபூமி”அரும்பொருள் காட்சியகம் திறப்பு யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் நாளை சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சிலை அமைப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமன்றி எமது முன்னோர்கள் பயன்படுத்திய வண்டிகள், கூடார வண்டில், திருக்கை வண்டில், சவாரி வண்டில் உட்பட எங்களுடைய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன்படி 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த 17 மோட்டார்க் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.அத்துடன், தட்டி வான் என்று சொல்லப்படுகின்ற 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய வாகனம் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், பாடசாலைகளை நிறுவிய நிறுவுனர்கள் மற்றும் எமது சமய, கலாசார நிகழ்வுகளான சூரன்போர், நல்லூர் கந்தசுவாமி ஆலய மிகப் பழமை வாய்ந்த தோற்றங்கள், நல்லூர் கந்தசுவாமி ஆலய வரலாற்றை வெளிப்படுத்துகின்ற பெயர்கள், கீரிமலை நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களின் ஆதி ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்களால் வரையப்பட்ட மரபு ரீதியான ஓவியங்கள் தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு ஒரு பிரமாண்டமான அரும்பொருள் காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது.அத்துடன் 1800ஆம் ஆண்டுகளிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் முதலாம் நாள் வெளிவந்த பத்திரிகைப் பிரதிகளின் முன்பக்கம் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஒளிப்படங்களைக் கொண்டு இரண்டாவது தள மாடியிலேயே வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும் தமிழர் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பாரம்பரியமான பொருள்கள், யாழ்ப்பாணத்தில் தமிழர் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.பித்தளைப் பாத்திரங்கள் தொடக்கம் ஆரம்ப காலத்தில் வெளிவந்த கடிகாரம், வானொலிப் பெட்டி, எம் முன்னோர் பயன்படுத்திய அருவிவெட்டும் கருவி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள், அதன்பின்னர் வெளிவந்த ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் உட்பட நாடுமுழுவதும் உள்ள பகுதிகளின் ஒளிப்படங்களும் காணப்படுகின்றது. சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(15)   http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-நாளை-சி/  
    • இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம். இதில் விமல் வீரவன்ச மோசமான இனவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அவர் மீண்டும் தனது சண்டித்தனத்தைக் காட்டியுள்ளார். மன்னாரில் அவர் செய்த வேலை படுகேவலமானது. எமது தாய் மொழியாம் தமிழை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.அவரின் மோசமான இந்த நடவடிக்கையைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சார்பில் நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ராஜபக்ச ஆட்சியில் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் அரங்கேற்றப்படும் அராஜக நடவடிக்கைகளை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களின் ஆட்சியில் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் எமது தமிழினம் சிக்குண்டுள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது அமைச்சர் விமல் வீரவன்சவின் அத்துமீறிய – கொடூர – அராஜக நடவடிக்கை என்று மேலும் தெரிவித்துள்ளார்.மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழிப் பெயர்ப்பலகையில் முதலிடத்தில் இருந்த தமிழ்மொழி எழுத்துக்களை இரண்டாம் நிலைக்குத் தரவிறக்கம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/இனவாத-மதவாத-பேரினவாத-சிந/