-
Tell a friend
-
Similar Content
-
By கிருபன்
மாவீரர் கனவு நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டங்களை தடுக்க முடியாது...
தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர் துயிலுமில்லங்களை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவுகூரலை செய்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்கைளை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்பரவுசெய்து வருகின்றோம்.
கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் வேறு நிகழ்வுகளைத் தவிர்த்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி, அவர்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக எமது மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள்.
அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூருவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடையுத்தரவினால் தடுத்தும் வருகின்றார்கள்.
அந்தவகையில், நேற்று வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பாக அறிவதற்காக நான் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அவ்வேளையில் அத்துயிலுமில்லத்தைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.
இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக் கூடாது என்றவாறு கடுமையான தொனியில் விரட்டினார்கள். அதற்கான பதிலை அவர்களுக்குத் தெரிவித்தேன். பின்னர் சுமார் எட்டு மணியளவில் என்னை விடுவித்தார்கள்.
கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம். ஆனால், எம்மக்களின், எமது இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத்தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது.
எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை. எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடந்தோறும் எங்களுக்காக உயிர் நீர்த்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூருவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த நாட்டின் நீதித்துறை பெரும்பான்மை இனத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
எமது மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
https://www.thaarakam.com/news/2cc60352-8b65-43a3-a3d3-bd9243f8b2cc
-
By கிருபன்
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,
நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.
"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.
இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.
எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely
-
By கிருபன்
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27
தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக
மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம்.
இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.
போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள்
கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21.
https://www.thaarakam.com/news/21d1a2b6-e6eb-4851-9d47-2c5ead9ddf6e
-
By கிருபன்
எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா
November 20, 202012:21 pm
மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து பதினொரு ஆண்டுகளாகி விட்டன. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் அப்படியே இருக்க எமது பிள்ளைகளை நினைவுகூருவது புலிகளின் மீளுருவாக்கம் என்று கற்பிதம் பண்ண முயல்வது விஷமத்தனமான செயல்.
எங்கள் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று கண்ணீராலும் வாய்மொழியாலும், மனதாலும் பிள்ளைகளிடம் உறவாட நினைக்கிறோம். அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு வரும்போது இந்த ஒரு வருடமாக மனதில் சுமந்த சுமைகளை கேள்விகளை அங்கே இறக்கி விட்டு வருவது போன்ற உணர்வும் திருப்தியும் எமக்கு ஏற்படும். நிலைமாறுகால நீதியும் உறவுகளை நினைவுகூருவதை ஏற்றுக்கொள்கின்றது. சங்கிலித் தொடராக நிகழ்ந்து வரும் உணர்வுபூர்வமான நிகழ்வைக் கைவிட எமது மனம் துணிய மாட்டாது.
இந்த நிலையிலும் உலக ஒழுங்கிலிருந்து நாம் மாறுபட்டு நடக்க முடியாது. ஒரு கட்டுப்பாடான வழிநடத்தலில் தம்மை ஆகுதியாக்கிய பிள்ளைகளின் பெயரால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணமாகி விடக்கூடாது. எல்லாத் துயிலும் இல்லங்களிலும் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடியவாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். அவ்வாறான அறிவுறுத்தல்கள் சரியான முறையில் செய்யப்பட்டிருக்காவிடினும் முன்னுதாரணமான மக்கள் கூட்டமாக நாம் நடந்து கொள்வோம்.
அஞ்சலி செலுத்தும்போது மாவீரரின் பெற்றோர் பிள்ளைகள் உறவுகளில் யாரோ ஒருவர் மட்டும் விதைக்கப்பட்ட இடங்களில் நின்று அஞ்சலிக்கட்டும். ஏனையோர் நிகழ்விடத்துக்கு வெளியே தனிநபர் இடைவெளியையும் சுகாதார நடைமுறைகளையும் பேணியபடி தங்கள் சொந்தங்களுக்காக அஞ்சலிக்கட்டும். அங்கு நிற்கும்போது புதிய முகக் கவசத்தை அணிந்திருப்போம். எதற்கும் முன்னெச்சரிக்கையா இன்னொன்றை எமது உடைமையில் வைத்திருப்போம்.
கிருமி நீக்கும் திரவங்கள் மூலம் எமது கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு அடுத்தவரை நம்பியிராமல் வழமைபோல், பூக்கள், எண்ணெய், திரி ,சுட்டி, கற்பூரம் முதலானவற்றைக் கொண்டு செல்வதுபோல் அதனையும் கொண்டு செல்வோம். நினைவேந்தல் முடிந்த பின்னரும் தனிநபர் இடைவெளியைப் பேணிக் கொள்வோம். எமது நடத்தை முன்னுதாரணமாக அமையட்டும்.
ஆயுதம் ஏந்தி மடிந்த தமது பிள்ளைகளை நினைவுகூரத் தமக்குள்ள உரிமை எமக்கும் உள்ளது என்பதை இரு புரட்சியின்போதும் உயிரிநீத்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வர். அவர்கள் முழுநாட்டையுமே கைப்பற்ற நினைத்தவர்கள் எமது பிள்ளைகள் அவ்வாறில்லை. அப்படியிருந்தும் கண்ணீரில் வேறுபாடு காட்டச் சொல்லும் சட்டங்கள் பொருத்தப்பாடானவையல்ல. அந்தப் பெற்றோரின் வேதனைகள் உணர்வுகள் எம்மால் மதிக்கப்பட வேண்டியவை. அதுபோல எமது உணர்வுகளை தாங்கள் வாக்களித்த தெரிவு செய்த தரப்புகளுக்கு உணர்த்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர் முயல்வர் என்று நம்புகிறோம்.
பல்லினங்கள் வாழும் நாட்டில் எந்தவொரு இனத்தவரின் கௌரவமும் பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திய சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூவின் வரலாற்றை தென்பகுதி மக்களுக்கு அங்குள்ள அறிஞர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். களத்தில் தன்னெதிரே போரிட்டு மடிந்த எல்லாள மன்னனின் நினைவிடத்தில் சகலரும் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவித்த துட்டகைமுனு மன்னனின் நோக்கத்தையும் வரலாற்றையும் சரியான முறையில் மக்களிடம் விளக்கத் தவறியதால்தான் இன்றைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எப்போது புரியப் போகிறார்கள்.
திரு. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்” என்ற பெயரில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு அனைவரினதும் அபிப்பிராயத்தைக் கோரியது. “எனது மகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்”, என நான் எழுத்துமூலம் தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு மாவீரரின் பெற்றோரின் எதிர்பார்ப்பும் அதுதான். இன்றைய ஜனாதிபதிக்கும் இதே விடயத்தையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நல்லது நடக்குமென எதிர்பார்ப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
புலம்பெயர் உறவுகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்தபடி நினைவேந்தலை மேற்கொள்ளுங்கள். எம்மைப் புரிந்து கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள், குழுக்களையும் பணிவாக வேண்டுகிறோம். எமது கண்ணீரில் தயவு செய்து அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்.
https://www.meenagam.com/எம்-செல்வங்களின்-தியாகத்/
-
By கிருபன்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா
இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும்
பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களும்; உங்கள் வீடுகளில் இருந்து இணைந்து மாவீர தெய்வங்களுக்கான வணக்கத்தினை செய்யும் புகைப் படத்தினை tccukinfo@gmail.com எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் நேரலையில் உங்களையும் இணைத்துக்கொண்டு நாம் என்றென்றும் அவர்கள் வழி நடப்போம் என்ற உறுதியையும் உலகிற்கு எடுத்துரைப்போம்.
அன்பான உறவுகளே வழமையாக நாங்கள் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்படும் அனைத்து மாவீரர் திருவுருவப் படங்களும் அன்றைய தினம் வைக்கப்படும். அத்துடன் உங்கள் உறவுகளின் படங்கள் இன்னும் வைக்கப்படாமல் இருப்பின் நீங்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு 21-11-20 முன்னர் மாவீரரின் திருவுருவப் படத்தினை அனுப்பி வைத்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
– நன்றி –
மாவீரர் பணிமனை – பிரித்தானியா
eelam27uk@gmail.com
020 3371 9313 / 0796882208
https://www.thaarakam.com/news/5388e808-e79d-4228-8bf2-d7747eeb986d
-
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும், இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நச்சுத்தாக்குதலால் கோமா நிலைக்குச் சென்று, ஜேர்மனியில் சிகிச்சைக்குப் பின்னர், அலெக்ஸி நவால்னி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா திரும்பியிருந்தார். மொஸ்கோ விமான நிலையம் வந்தடைந்த அவர், மோசடி வழக்கு ஒன்றில் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அலெக்ஸி-நவால்னியை-விடுதல/ -
By karikaalanivan · Posted
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பத்தி சொல்ல வில்லையே? 30 வருடங்களுக்கு மேலாக இந்தியன் போடும் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு அவன் நாட்டில் வாழும் பல லட்சம் இலங்கை தமிழர்கள் எல்லோரும் மானம் கெட்ட மனிதர்களா அய்யா?? -
1) நீரே கூறிவிட்டீர் 30 வருடங்களாக அகதியென்று.. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் ஒருவனை 30 வருடங்களாக வைத்திருப்பதில்லை.. ஆனால் இது இந்தியாவில் மடுமே நடப்பதற்குச் சாத்தியம். 😏 ஏற்கனவே கூறிவிட்டேனே புரியவில்லையா..உமக்கு.. நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நயவஞ்சகத் துரோகியென்று... 😁 2) உமது விருப்பப்படியே வைத்துக்கொள்வோமே. அப்படியே வைத்துக் கொண்டாலும் 2009ஐ ஏற்படுத்தியது நயவஞ்சக இந்தியாதானே.. அதனாற்தான் இந்தியா மீது எமக்கு இத்தனை வெறுப்பு... (உமது தாயின் கூற்றில் சந்தேகமோ என்று கேட்டிருந்தேனே ஏன் பதில் இன்னும் வரவில்லை..? 😁)
-
By தமிழ் சிறி · Posted
உடையார், முறுக்குக்கு... எள், ஓமம் போட்டு செய்யும் போது... வித்தியாசமான வாசனையும், பார்க்க அழகாகவும் இருக்கும். இவ்வளவு நாளும் பொறுத்தனாங்கள், அதையும் வாங்கி போட்டு செய்யலாம் என்று யோசிக்கின்றேன். -
By karikaalanivan · Posted
அப்படியென்றால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவே கதி என்று இந்தியாவில் அகதிகளாக இருக்கும் பல லட்சம் தமிழர்கள் எல்லாரும் மானம் கெட்ட சோத்துக்கு செத்த கூட்டம் என்று சொல்லுகிறீர்களா?? பாவம் அந்த இலங்கை தமிழர்கள் அப்படித் சொல்லாதீங்கோ 2009 பிறகு நாட்டையும் வீட்டையும் இனத்தையும் காட்டிக்கொடுத்து அகதி தஞ்சம் ஒன்றே குறியாக வாழும் எல்லோருமே ஈனத்தமிழர்கள் தான் ஈழத்தமிழர் லேயே வீரமரணம் எய்திவிட்டனர்😀
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.