-
Tell a friend
-
Similar Content
-
By கிருபன்
மாவீரர் கனவு நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டங்களை தடுக்க முடியாது...
தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர் துயிலுமில்லங்களை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவுகூரலை செய்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்கைளை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்பரவுசெய்து வருகின்றோம்.
கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் வேறு நிகழ்வுகளைத் தவிர்த்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி, அவர்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக எமது மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள்.
அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூருவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடையுத்தரவினால் தடுத்தும் வருகின்றார்கள்.
அந்தவகையில், நேற்று வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பாக அறிவதற்காக நான் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அவ்வேளையில் அத்துயிலுமில்லத்தைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.
இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக் கூடாது என்றவாறு கடுமையான தொனியில் விரட்டினார்கள். அதற்கான பதிலை அவர்களுக்குத் தெரிவித்தேன். பின்னர் சுமார் எட்டு மணியளவில் என்னை விடுவித்தார்கள்.
கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம். ஆனால், எம்மக்களின், எமது இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத்தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது.
எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை. எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடந்தோறும் எங்களுக்காக உயிர் நீர்த்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூருவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த நாட்டின் நீதித்துறை பெரும்பான்மை இனத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
எமது மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
https://www.thaarakam.com/news/2cc60352-8b65-43a3-a3d3-bd9243f8b2cc
-
By கிருபன்
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,
நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.
"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.
இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.
எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely
-
By கிருபன்
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27
தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக
மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம்.
இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.
போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள்
கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது மாவீரர் வாரம் வீரம் செறிந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் தெய்வீக பிறவிகளை நினைவிற்கொள்ளும் மாவீரர் வாரம் நவம்பர் 21.
https://www.thaarakam.com/news/21d1a2b6-e6eb-4851-9d47-2c5ead9ddf6e
-
By கிருபன்
எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா
November 20, 202012:21 pm
மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து பதினொரு ஆண்டுகளாகி விட்டன. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் அப்படியே இருக்க எமது பிள்ளைகளை நினைவுகூருவது புலிகளின் மீளுருவாக்கம் என்று கற்பிதம் பண்ண முயல்வது விஷமத்தனமான செயல்.
எங்கள் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று கண்ணீராலும் வாய்மொழியாலும், மனதாலும் பிள்ளைகளிடம் உறவாட நினைக்கிறோம். அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு வரும்போது இந்த ஒரு வருடமாக மனதில் சுமந்த சுமைகளை கேள்விகளை அங்கே இறக்கி விட்டு வருவது போன்ற உணர்வும் திருப்தியும் எமக்கு ஏற்படும். நிலைமாறுகால நீதியும் உறவுகளை நினைவுகூருவதை ஏற்றுக்கொள்கின்றது. சங்கிலித் தொடராக நிகழ்ந்து வரும் உணர்வுபூர்வமான நிகழ்வைக் கைவிட எமது மனம் துணிய மாட்டாது.
இந்த நிலையிலும் உலக ஒழுங்கிலிருந்து நாம் மாறுபட்டு நடக்க முடியாது. ஒரு கட்டுப்பாடான வழிநடத்தலில் தம்மை ஆகுதியாக்கிய பிள்ளைகளின் பெயரால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவறான முன்னுதாரணமாகி விடக்கூடாது. எல்லாத் துயிலும் இல்லங்களிலும் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடியவாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன். அவ்வாறான அறிவுறுத்தல்கள் சரியான முறையில் செய்யப்பட்டிருக்காவிடினும் முன்னுதாரணமான மக்கள் கூட்டமாக நாம் நடந்து கொள்வோம்.
அஞ்சலி செலுத்தும்போது மாவீரரின் பெற்றோர் பிள்ளைகள் உறவுகளில் யாரோ ஒருவர் மட்டும் விதைக்கப்பட்ட இடங்களில் நின்று அஞ்சலிக்கட்டும். ஏனையோர் நிகழ்விடத்துக்கு வெளியே தனிநபர் இடைவெளியையும் சுகாதார நடைமுறைகளையும் பேணியபடி தங்கள் சொந்தங்களுக்காக அஞ்சலிக்கட்டும். அங்கு நிற்கும்போது புதிய முகக் கவசத்தை அணிந்திருப்போம். எதற்கும் முன்னெச்சரிக்கையா இன்னொன்றை எமது உடைமையில் வைத்திருப்போம்.
கிருமி நீக்கும் திரவங்கள் மூலம் எமது கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு அடுத்தவரை நம்பியிராமல் வழமைபோல், பூக்கள், எண்ணெய், திரி ,சுட்டி, கற்பூரம் முதலானவற்றைக் கொண்டு செல்வதுபோல் அதனையும் கொண்டு செல்வோம். நினைவேந்தல் முடிந்த பின்னரும் தனிநபர் இடைவெளியைப் பேணிக் கொள்வோம். எமது நடத்தை முன்னுதாரணமாக அமையட்டும்.
ஆயுதம் ஏந்தி மடிந்த தமது பிள்ளைகளை நினைவுகூரத் தமக்குள்ள உரிமை எமக்கும் உள்ளது என்பதை இரு புரட்சியின்போதும் உயிரிநீத்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வர். அவர்கள் முழுநாட்டையுமே கைப்பற்ற நினைத்தவர்கள் எமது பிள்ளைகள் அவ்வாறில்லை. அப்படியிருந்தும் கண்ணீரில் வேறுபாடு காட்டச் சொல்லும் சட்டங்கள் பொருத்தப்பாடானவையல்ல. அந்தப் பெற்றோரின் வேதனைகள் உணர்வுகள் எம்மால் மதிக்கப்பட வேண்டியவை. அதுபோல எமது உணர்வுகளை தாங்கள் வாக்களித்த தெரிவு செய்த தரப்புகளுக்கு உணர்த்த ஜே.வி.பி. உறுப்பினர்களின் பெற்றோர் முயல்வர் என்று நம்புகிறோம்.
பல்லினங்கள் வாழும் நாட்டில் எந்தவொரு இனத்தவரின் கௌரவமும் பாதிக்காத வகையில் ஆட்சி நடத்திய சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூவின் வரலாற்றை தென்பகுதி மக்களுக்கு அங்குள்ள அறிஞர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். களத்தில் தன்னெதிரே போரிட்டு மடிந்த எல்லாள மன்னனின் நினைவிடத்தில் சகலரும் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவித்த துட்டகைமுனு மன்னனின் நோக்கத்தையும் வரலாற்றையும் சரியான முறையில் மக்களிடம் விளக்கத் தவறியதால்தான் இன்றைய பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எப்போது புரியப் போகிறார்கள்.
திரு. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்” என்ற பெயரில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு அனைவரினதும் அபிப்பிராயத்தைக் கோரியது. “எனது மகள் விதைக்கப்பட்ட இடத்தில் நின்று அழும் உரிமை எனக்கு வேண்டும்”, என நான் எழுத்துமூலம் தெரிவித்திருந்தேன். ஒவ்வொரு மாவீரரின் பெற்றோரின் எதிர்பார்ப்பும் அதுதான். இன்றைய ஜனாதிபதிக்கும் இதே விடயத்தையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நல்லது நடக்குமென எதிர்பார்ப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
புலம்பெயர் உறவுகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்தபடி நினைவேந்தலை மேற்கொள்ளுங்கள். எம்மைப் புரிந்து கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள், குழுக்களையும் பணிவாக வேண்டுகிறோம். எமது கண்ணீரில் தயவு செய்து அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்.
https://www.meenagam.com/எம்-செல்வங்களின்-தியாகத்/
-
By கிருபன்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா
இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும்
பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களும்; உங்கள் வீடுகளில் இருந்து இணைந்து மாவீர தெய்வங்களுக்கான வணக்கத்தினை செய்யும் புகைப் படத்தினை tccukinfo@gmail.com எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் நேரலையில் உங்களையும் இணைத்துக்கொண்டு நாம் என்றென்றும் அவர்கள் வழி நடப்போம் என்ற உறுதியையும் உலகிற்கு எடுத்துரைப்போம்.
அன்பான உறவுகளே வழமையாக நாங்கள் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்படும் அனைத்து மாவீரர் திருவுருவப் படங்களும் அன்றைய தினம் வைக்கப்படும். அத்துடன் உங்கள் உறவுகளின் படங்கள் இன்னும் வைக்கப்படாமல் இருப்பின் நீங்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு 21-11-20 முன்னர் மாவீரரின் திருவுருவப் படத்தினை அனுப்பி வைத்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
– நன்றி –
மாவீரர் பணிமனை – பிரித்தானியா
eelam27uk@gmail.com
020 3371 9313 / 0796882208
https://www.thaarakam.com/news/5388e808-e79d-4228-8bf2-d7747eeb986d
-
-
Topics
-
Posts
-
180 சுற்றுலாப் பயணிகளால் 42 மில்லியன்கள் அதாவது 4 கோடியே 20 இலட்சம் வருமானம் என்றால் 42,000,000/180= 233,333/= வருடாந்தம் 2 மில்லியன்கள் சுற்றிலாப்பயணிகளின் வருகையை கொண்ட சிறீலங்காவின் வருடாந்த வருமானம் எவ்வளவு??? இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது? 2,000,000 x 233,333= 466,666,666,666/=
-
By கிருபன் · பதியப்பட்டது
வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க பாராளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், ட்ரம்ப் தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணொளியில் தனது உரையை வெளியிட்ட மெலானியா மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, "தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் " நன்றி தெரிவித்தார். பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/98749 -
By கிருபன் · பதியப்பட்டது
வாக்குறுதி நிறைவேறுமா? -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் தூபிக்கான அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறது மாணவர்களின் போராட்டமும், சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும். மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டப்பட்டதன் மூலம், இந்தச் செயலுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் உருவான பேரெழுச்சியும், தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பும், தற்காலிகமாக தணிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்குத் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவிருந்த அதிகாலைப் பொழுதில், மாணவர்களைத் தேடிச் சென்று, மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை சட்டபூர்வமாக அமைப்பதற்கு அனுமதி வழங்கினார் துணைவேந்தர். அத்தோடு நிற்காமல், காலையிலேயே அடிக்கல்லையும் நாட்டி, தனது தவறைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எது எவ்வாறாயினும், புதிய நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கூறியுள்ள துணைவேந்தர், அது போர் நினைவுச் சின்னமாகவோ, அமைதிக்கான நினைவுச் சின்னமாகவோ இருக்காது, அவ்வாறான எதுவும் பொறிக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் பதிவுகளில் அது அமைதிக்கான நினைவுச் சின்னமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதேவேளை, முன்னதாக பல்கலைக்கழக நிர்வாகமே இந்த நினைவுச் சின்னத்தை அகற்றியதாக கூறிய மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, துணைவேந்தர் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்றும், அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான அமைதிச் சின்னம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான அனுமதி தான், மானியங்கள் ஆணைக்குழுவினால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை என்று கூறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கனவே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, வயம்ப, மொறட்டுவ போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே.வி.பி.யினரின் நினைவுச் சின்னங்களை மட்டும் ஏன் இவ்வளவு காலமும் அகற்றாமல் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரே, இப்போது பல்கலைக்கழகங்களில் போர்கால முரண்பாடுகளை மறந்து மாணவர்கள் இணக்கமாக கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின், எதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியை மாத்திரம் அகற்ற வேண்டும் என்று அவர் துணைவேந்தருக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டார்? போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? ஆனையிறவில், பலாலியில், கிளிநொச்சியில், முள்ளிவாய்க்காலில் என்று ஏராளமான நினைவுச் சின்னங்கள் தமிழ்ப் பகுதிகளில்- ஆக்கிரமிப்பின் சின்னமாக அடையாளப்படுத்தி நிற்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் எதுவும் சட்டபூர்வமாக உள்ளூராட்சி சபைகளின் அனுமதிகளுடன் கட்டப்பட்டவையல்ல. பல்கலைக்கழத்தில் அகற்றப்பட்டது போல, சட்டபூர்வமற்ற கட்டடங்களை அகற்றுவதாயின், உள்ளூராட்சி சபைகளும் இந்த நினைவுச் சின்னங்களை அகற்றியிருக்க முடியும். போர் நினைவுச் சின்னங்களை அழிப்பதும், வரலாற்றை அழிப்பதும் ஒன்று தான். இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அனைத்தையும் அழித்து நினைவுகூரல்களைத் தடுக்கும் அராஜகத்தையே அரங்கேற்றியது. இப்போதும் அதே விதமாகத் தான் முள்ளிவாய்க்கல் நினைவுத் தூபியை அழித்திருக்கிறது, இது இந்தளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விளைவுகள் விபரீதமாகும் என்ற அச்சத்தினால் தான், இடித்தவர்களே அதனை மீள அமைக்க இணங்கினார்கள். இந்தச் செயலுக்கு தமிழர்களிடம் இருந்து மட்டும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. முஸ்லிம்கள் எதிர்த்தார்கள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்த்தது, சில பௌத்த பிக்குகள், நியாயமாக சிந்திக்கும் சிங்கள மக்களும் கூட எதிர்த்தார்கள். பல வெளிநாடுகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பகையாளிகளாக நினைக்கும் அரசாங்கம் ஏன், போரில் கொல்லப்பட்ட மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும், சின்னத்தை அகற்ற முனைந்தது என்பது தான் கேள்வி. பெளத்த பிக்கு ஒருவர் தனது முகநூலில், இந்த நாட்டுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய வெளிநாட்டவர்களின் நினைவுச் சின்னங்களையே அகற்றாத போது, இதனை மட்டும் ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்தின் நியாயம், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையாளர்களுக்கு புரியவில்லை. நினைவுச் சின்னங்களை பேணுவது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு வழிமுறை என்பதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிபடக் கூறியிருக்கிறார்கள். “போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம். இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் குறிப்பிட்டிருந்தார். நினைவுச் சின்னத்தை அழிப்பது, ஐ.நா மனித உரிமைகள் கோட்பாட்டை மீறுகின்ற செயல் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். ஆனாலும் இலங்கை அரசுக்கு இதுபோன்ற விடயங்கள் எதுவுமே மீறல்களாகத் தெரிவதில்லை. அதனால் தான், திரும்பத் திரும்ப தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறது. இப்போது கூட, அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைப்பது என்பது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், அழிக்கப்பட்டதை கொண்டாடியவர்கள் இன்னும் தீவிரமாக அதனை எதிர்ப்பார்கள். இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு நினைவுத் தூபி இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தவர்கள் கூட இப்போது அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆக, இனவாதிகளும், பேரினவாத சிந்தனையாளர்களும், இன்னும் தீவிரமாகவே அதனை எதிர்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பையும், அமைதிச் சின்னத்தைக் கட்டியெழுப்பும் கனவுடன் உள்ள மானியங்கள் ஆணைக்குழுவினது நிலைப்பாட்டையும் மீறி துணைவேந்தர் எவ்வாறு தனது வாக்குறுதியை நிறைவேற்றப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி. எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்கு சூட்டோடு சூடாக தீர்வு காண்பது தான் பொருத்தமானது. இதனை ஆறப் போட்டால், அது நீர்த்துப் போகச் செய்யும் உத்திகளின் மூலம், அரசாங்கம் தனது காரியத்தை சாதித்து விடும் ஆபத்து உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே, பெயருடனும், வடிவத்துடனும், பல்கலைக்கழத்தில் நாட்டப்படுவது மட்டும் தான் இதற்கான பரிகார நீதி. அந்தப் பரிகார நீதியை துணைவேந்தர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதில் தான் வரலாறு அவரை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதை உறுதிப்படுத்தும். https://www.virakesari.lk/article/98748 -
By கிருபன் · பதியப்பட்டது
கிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியாவின் உதவியுடன் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனை துறைமுக தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன. அதுமட்டுமன்றி, கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக, அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள், தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றன. இது, கிழக்கு முனைய திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையக் கூடிய சாத்தியங்களையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அரசாங்கம் இன்னொரு புறத்தில், இந்தியாவின் கடுமையான அழுத்தங்கள் எதிர்கொண்டிருக்கிறது. கிழக்கு முனைய அபிவிருத்தியை, இந்தியா, ஜப்பானுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு, முன்னைய ஆட்சிக்காலத்தில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்பாட்டுக்கு அமைய, துறைமுக அதிகார சபை 51 வீத பங்குகளையும், இந்தியாவும், ஜப்பானும் எஞ்சிய 49 வீத பங்குகளையும் கொண்டிருக்கும் என்று இணங்கப்பட்டது. எனினும், கிழக்கு முனையத்தின் மீதான உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தான், இதனை ஊதிப் பெருப்பித்து, நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக பிரசாரம் செய்தது. தேர்தல் வெற்றியை மையப்படுத்தியும், சீனாவை திருப்திப்படுத்தும் வகையிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இப்போது, அரசாங்கம், மீண்டும், இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது. 49 வீதமான முதலீட்டை இந்தியா செய்யுமானால், முனையத்தின் மீதான நூறுசதவீத உரிமை இழக்கப்படும் என்பது, தொழிற்சங்கங்களின் வாதம். அரசாங்கமோ, 51 வீதமான உரிமை இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறது. இந்த இடத்தில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில், அல்லாடுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது இலங்கை அரசாங்கம். கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், இவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது. இந்த விடயத்தில் சீன புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக, இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதுகுறித்து அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசின் உயர்மட்டச் சந்திப்புகளின் போது சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் தலையீடுகள், கிழக்கு முனைய விவகாரம் என்பன தொடர்பாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய சூழல் எழுந்த நிலையில் தான், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்துக்கான முன்னறிவித்தல் கூட, 5 நாட்களுக்குள் தான், கொழும்புக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜெய்சங்கர் கொழும்பு வருவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, கொழும்பில் உள்ள சீன தூதுவர் கீ சென்ஹோங் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயுடன் அவசர சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதனை விட, சீன புலனாய்வு அமைப்பின் தலையீடு குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது சந்திப்புகளில் குறிப்பிட்டிருந்த அதேவேளை, இலங்கையின் இரண்டு பிரதான புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜெய்சங்கர் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடந்த 7ஆம் திகதி, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் மற்றும், துணை பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் புனீத் சுஷில் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதற்கு மறுநாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல், சுரேஸ் சாலேயுடனும் இவர்கள் இருவரும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகளுடன் இவ்வாறான சந்திப்புகள் நடப்பது வழக்கம். புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்டுள்ள சந்திப்புகள் வழமைக்கு மாறானவை. இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொழும்பின் மீதான இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே இவ்வாறான சூழல்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்சங்கரின் பயணத்தின் போது, கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, 13 ஆவது திருத்த விவகாரத்திலும் சரி, இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, துறைமுக நகரை சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போதும் சரி, இந்தியா அதனை எதிர்த்தாலும், அவற்றைத் தடுக்க முனையவில்லை. அதுபோன்றே, கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியாவின் தலையீட்டை சீனா தடுக்க முனைவதை புதுடெல்லியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கு முனைய விடயத்தில் இந்திய அரசின் நேரடித் தலையீடு வலியுறுத்தப்படவில்லை. மாறாக, இந்திய நிறுவனத்தின் தனியார் முதலீடு தான் வலியுறுத்தப்படுகிறது. அதானி குழுமத்தின் மூலம் இதனை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா உறுதியாகவே இருக்கிறது. அதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம், இந்த முனையத்தின் மூலமே இந்தியாவின், 70 சதவீதமான கொள்கலன்கள் கையாளப்படுகின்றன என்பது தான். இவ்வாறான முனையத்தை, விட்டுக்கொடுக்க இந்தியா தயாரில்லை. அதற்கு அப்பால், இதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவும் இந்தியா பார்க்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், அதாவது சர்வதேச கொள்கலன் முனையம், சீனாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இதன் உரிமையில் 85 சதவீதம் சீனாவிடம் கொடுக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை இப்போதும் சீனாவே முகாமைத்துவம் செய்து வருகிறது. இந்த முனையம் தான் கொழும்பு துறைமுகத்திலேயே ஆழம் கூடியது, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை நிறுத்தக் கூடியது, இலங்கைக்கு வரும், சீன கடற்படைக் கப்பல்கள் இங்கு தான் தரித்து நிற்கின்றன. அத்துடன், 2014ஆம் ஆண்டு இந்த இறங்குதுறையில் தான், சீன கடற்படையின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றன. அதற்குப் பின்னர் தான், இந்த முனையத்தின் ஆபத்தை இந்தியா புரிந்து கொண்டது. இந்த முனையத்தில் சீனாவின் பல்வேறு நகர்வுகள் குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த முனையத்தில் டாங்கிகளை தரையிறக்கக் கூடிய அதிக திறன்கொண்ட பாரம்தூக்கிகளை சீனா பொருத்தி வைத்திருக்கிறது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளை முன்வைத்து வருபவருமான மேஜர் மதன்குமார் கேசரிக்கு வழங்கியிருந்த செவ்வியில் கூட, குறிப்பிட்டிருந்தார். வழக்கமாக, வர்த்தக துறைமுகங்களில் கொள்கலன்களை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாரம் தூக்கிகளின் திறனை விட அதிக திறன் கொண்ட பாரம் தூக்கிகளை இங்கு பொருத்தியிருப்பது, இராணுவ நோக்கங்களுக்காகத் தான் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவின் வலுவான பிரசன்னமும், அங்கு இருந்தால் மட்டுமே, இலங்கை அரசை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் என்று புதுடெல்லி கருதுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தான் புதுடெல்லியின் அழுத்தங்கள் கொழும்புக்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கட்டத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்தின் மூலம் முதலீட்டு அபிவிருத்தியாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முயன்றாலும், தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசுக்கு தலைவலியைத் தரக் கூடும். இந்தக் கட்டத்தில் அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும், செயற்படுத்தினாலும், கடுமையான நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாமல் தான் இருக்கப் போகிறது. https://www.virakesari.lk/article/98746 -
By கிருபன் · பதியப்பட்டது
கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிருந்தது. பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான ‘Director General General Staff (DGGS)’ பதவி வழங்கப்பட்டுள்ளது. https://www.meenagam.com/கழுத்தை-அறுப்பேன்-என்று/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.