-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
0
By nunavilan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By ராசவன்னியன் · Posted
"மேதகு" முழு திரைப்படமும் இப்பொழுது யூடுயூபில் காணக் கிடைக்கிறது. 😌 FHD (1080p) துல்லிய தரத்தில் காணொளி உள்ளது. -
சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SHIPINFO சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை சனிக்கிழமை அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டிய நிலையில், நிபந்தனைகளுக்கு உள்பட்டு சீன கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 2007ஆம் ஆண்டில் இந்த யுவான் வாங் 5 கப்பல் சேவையை தொடங்கியபோது, அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எடை 11 ஆயிரம் டன் எடையாகும். எரிபொருள் நிறுத்தவும், பராமரிப்புக்காகவும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் தேதி வரை 'யுவான் வாங் - 5' கப்பல் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீன கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை, பாதுகாப்புப்படை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சீனாவின் செயற்கைக்கோள் கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவலாம் என்ற தங்களுடைய கவலையை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும்வரை தங்களுடைய கடல் பகுதிக்குள் வர வேண்டாம் என்று சீன கப்பலை இலங்கை கேட்டுக் கொண்டது. ஆனால், இந்தியாவின் அழுத்தத்தை அர்த்தமற்றது என்று கூறி சீன வெளியுறவுத்துறை எதிர்வினையாற்றியது. மேலும், யுவான் வாங் 5 கப்பலின் பயணத்தை தொடர்ந்து இலங்கை நோக்கிச் செல்லவும் சீனா நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், திட்டமிட்ட வருகை அட்டவணையை விட ஐந்து நாட்கள் தாமதமாக, ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று யுவான் வாங் சீன கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? இதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை வெளியுறவுத்துறை சீன கப்பல் வருகைக்கு நிபந்தனைகளுக்கு உள்பட்ட அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன் விவரம்: சீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலுக்கு வழக்கமாக அமலில் உள்ள நடைமுறைப்படியே ராஜீய அனுமதி வழங்கும் கோரிக்கை ஏற்கப்பட்டது. அது தொடர்பாக பாதுகாப்புத்துறை, கடற்படை, இலங்கை தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவற்றின் ஒப்புதல் கேட்கப்பட்டது. பாதுகாப்புத்துறை போட்ட நிபந்தனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கழுகுப்பார்வையில் யுவான் வாங் 5 கப்பல் குறிப்பிட்ட நாட்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயன்பாட்டுக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக பாதுகாப்புத்துறையிடம் இருந்தும் அலைவரிசை இடைமறிப்பற்ற மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் அல்லாத தேவைக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புத்துறை ஆணையத்திடம் இருந்தும் பதில்கள் பெறப்பட்டன. அவை குறித்து சீன தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், சீன கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும்போது அதற்கு சில நிபந்தனைகளை விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத்துறை கூறியது. அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்; இலங்கை கடல் பகுதிக்குள் எவ்வித அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளும் செய்யக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த விவகாரத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை எழுப்பிய சில கவலைகள், சீன தூதரகத்திடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை வெளியுறவுத்துறை அனுப்பிய குறிப்புரை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மறுஆலோசனை செய்யப்படும்வரை சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திட்டத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. "ஹம்பாந்தோட்டை துறைமுகம் போர் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாது" இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா? அதன் பிறகு மிக உயரிய ராஜீய அளவில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் நடத்தியது. நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை, உறுதியான பேச்சுவார்த்தை, சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரின் நலன்கள், நாடுகளின் சமமான இறையாண்மை கோட்பாடு என அனைத்து அம்சங்களின்படியும் பிரச்னையை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சீன தரப்பிடம் கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி சீன தூதரகம் அளித்த பதிலில், யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி வர திட்டமிட்டுள்ளதாகவும், புதிய தேதியில் அதாவது ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதிவரை எரிபொருள் நிரப்பும் தேவைக்காக அந்த கப்பல் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொண்டு, சீன கப்பல் ஆகஸ்ட் 16 முதல் 22வரை ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு வெளியுறவுத்துறை ஆகஸ்ட் 13ஆம் தேதி அனுமதி வழங்கியிருக்கிறது. அனைத்து நாடுகளுடன் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்த இலங்கை வெளியுறவுத்துறை விரும்புகிறது. அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமது சர்வதேச கடமைகளுக்கு ஏதுவாக அனைத்து நாடுகளின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பது இலங்கையின் நோக்கமாகும். குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் நாடு கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், இலங்கை மக்களின் நலனை உறுதிப்படுத்தும் பல உள்நாட்டு செயல்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் அனைத்து நாடுகளின் ஆதரவு, ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை இலங்கை அரசாங்கம் ஆழமாகப் பாராட்டுகிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியா நிலை என்ன? பட மூலாதாரம்,MEA INDIA படக்குறிப்பு, அரிந்தம் பக்ஷி, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முன்னதாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு யுவான் வாங் 5 கப்பலின் திட்டமிட்ட பயணத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டியது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இதுபோன்ற விஷயங்களில் பாதுகாப்பு கவலைகளின் அடிப்படையிலேயே இந்தியா முடிவுகளை எடுக்கும்," என்று வலியுறுத்தினார். "இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அது தமது சொந்த முடிவுகளை சுயமாக எடுக்கும். அந்நாட்டுக்கு இந்தியா அழுத்தம் தருவதாக வெளிவரும் கூற்றை நிராகரிக்கிறோம். இலங்கைக்கு அசாதாரமான வகையில் 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக நிதியுதவி செய்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய உரிமைகள் உண்டு. பரஸ்பர மரியாதை, நலன்கள், உணர்வுகள், எல்லை பாதுகாப்பு போன்றவை மீது அந்தந்த நாடுகள் அவற்றின் வளர்ச்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கும். அவற்றை உள்ளடக்கிய நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களுக்கென பிரத்யேகமாக கொண்டிருக்கும். அந்த வகையில் இந்தியாவும் இந்த விஷயத்தில் ஒரு நிலையைக் கடைப்பிடிக்கிறது," என்றும் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62534384
-
By nunavilan · பதியப்பட்டது
புலம்பெயர் அமைப்புகள் – தனி நபர்கள் சிலர் மீதான தடை நீக்கம்! ஒரு குழல் துப்பாக்கியுடன் நாடாளுமன்றில் நுழைந்து பல்குழல் துப்பாக்கியாக வெடித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் எப்படி தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என என்பதிவுகள், சுட்டிக்காட்டியிருந்தன. அவர் ஜனாதிபதியாவதை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும், அவரை வீட்டுக்கு அனுப்பும் கிளர்ச்சியும் சாத்தியமா என்பது சந்தேகமே எனவும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துகள் ரணிலுக்கு வக்காளத்து வாங்குவதாக அமைவதாகவும், அவரை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இன்னும் சிலர் இந்த பதிவுகள் நகைச்சுவையானவை எனவும் விமர்சித்திருந்தனர். கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று ரணிலும் அனுப்பப்படுவார் என சவால்களை விடுத்திருந்தனர். ஓகஸ்ட் 9 வரை பொறுத்திருங்கள் நடப்பவற்றை பாருங்கள் என்றனர். ஆனால் ஓகஸ்ட் 9 ஐ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எப்படி புஸ்வானமாக மாற்றியிருந்தார் என்பதை கண்முன்னே பார்த்தோம். இப்போ அடுத்த டெஸ்ட் தொடரை ஆரம்பித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள், தனிநபர்கள் சிலர் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் அமைப்புகளான GTF என்ற உலகத்தமிழர் பேரவை, BTF என்ற பிரித்தானிய தமிழர் பேரவை கனடாவை தளமாகக் கொண்ட CTC என்ற கனேடிய தமிழ் காங்கிரஸ், ATC என்ற அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் ஆகியனவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் பட்டியல் நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கா, ஜனாதிபதி பொதுமன்னில் விரைவில் விடுவிக்கப்படவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் புணர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டு, விரைவில் விடுவிக்கப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அவசரகாலச்சட்டம் ஒரு மாதத்தில் நிறைவடையும் போது அதனை மிண்டும் நீடிப்பதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை என கூறப்படுகிறது. மேலைத்தேய முறைமைகளுக்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளன. ஐநா மனித உரிமைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலையிடி கொடுக்கும் 3 அமைப்புகளையும் திருப்திப்படுத்தும் வேலைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடக்கி விட்டிருக்கிறார். எரிபொருட் கப்பல்கள் – எரிவாயுக் கப்பல்கள், உரக் கப்பல்கள், அத்தியாவசிய உணவுப்பொருட் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட ஆரம்பித்துள்ளன. சீன – பாகிஸ்த்தான் கப்பல்களுக்கு அனுமதி – இந்தியாவின் இலங்கை முதலீடுகளுக்கும், வடக்கு கிழக்கில் தங்கு தடையின்றிய பிரசன்னத்திற்கும் அனுமதி. என பிராந்திய வல்லரசுகளை சமகாலத்தில் மதி நுப்பமாக கையாளும் ராஜதந்திரம் தொடர்கிறது. அமெரிக்கா, பிரி்தானியா, ஐரோப்பிய நாடுகள் – மத்தியகிழக்கு நாடுகள் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது அமைச்சர்களையும் வட்டமிட ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் மக்கள் – தொழிற்சங்க போராட்டங்கள் வலுவிழக்கத் தொடங்கியுள்ளன. நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குறுகிய காலத்திற்கு வெளிநாடுகளிலேயே அலையவிடும் சாணக்கியம் நுட்பமாக கையாளப்படுகிறது. ஆக, பொதுஜன பெரமுனவால் தான் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதான மாயைக்குள் பலரை தவிக்க விட்டு, பொதுஜன பெரமுனவை தனது சிறைக்குள் வைத்திருக்கும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 வரை பதவியை விட்டு அகற்ற முடியுமா? #நடராஜா_குருரன்
-
Recommended Posts