Jump to content

மட்டக்களப்பில்... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dead-2-2.png

மட்டக்களப்பில்.... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுணத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/மட்டக்களப்பில்-பொலிஸார-2/

Link to comment
Share on other sites

19 minutes ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பில்.... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

திருநெல்வேலிக்கே அல்வாவா என்பது அனைவரும் அறிந்த நகைப்புமொழி. திருநெல்வேலிக்கும் அல்வா கொடுத்து அசத்துபவர்களும் நம்நாட்டில் இருக்கிறார்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவற்துறை உத்தியோகத்தர்கள், தினேஸ், பிரசன்னா, வவுணத்தீவில்சடலங்களாக மீட்பு…

November 30, 2018

a-2.jpg?resize=800%2C600

மட்டக்களப்பு  வவுணத்தீவில், காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவரின்  சடலங்களை, வவுணத்தீவு காவற்துறையினர், இன்று (30.11.18) காலை  மீட்டுள்ளனர். இந்த  இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுணத்தீவு காவற்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த தினேஸ், பிரசன்னா ஆகிய இருவரே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். வவுணத்தீவு சோதணைச் சாவடியில், நேற்று (29.11.30) இரவு நேர  கடமையில் இருந்தவேளை, மேற்படி இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சோதனைச் சாவடிக்கு, காலை நேர கடமையைப் பொறுப்பேற்தற்காகச் சென்ற காவற்துறை உத்தியோகத்தர், இருவரின் சடலங்களை  கண்டு காவற்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சடலங்களை மீட்ட காவற்துறையினர்  மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக    பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக தெரிவித்துள்ளனர்

இதேவேளை இந்த  சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவற்துறை  அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது. காவற்துறை  மா அதிபரின் பணிப்புரையின் படி இந்தக் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பாறுக் ஷிஹான்

a-1.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2018/105121/

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை

 

batti-police-shot-dead-1-300x200.jpgமட்டக்களப்பு- வவுணதீவில்  இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வவுணதீவு சோதனைச்சாவடியில், இரவுக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினரே இன்று காலை 6 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவர்கள் இறந்து கிடந்தனர். தினேஸ், பிரசன்னா ஆகிய இரண்டு காவலர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

batti-police-shot-dead-1.jpgbatti-police-shot-dead-2.jpghttp://www.puthinappalakai.net/2018/11/30/news/35000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரதும் பெயர்களைப் பார்க்கும்பொழுது தமிழர்கள் போல்த் தெரிகிறது. இவர்களுக்கு எதிரிகள் யார் இருக்கப் போகிறார்கள்.

 

கும்மாணின் விளையாட்டாக இருக்குமோ? அண்மையில்க் கூட 2004 க்கு முதல் தான் யாரென்று தெரியுமோ எண்டும் கேட்டவர். சிலநேரங்களில் அவருக்கே தான் யாரென்று தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, ragunathan said:

இருவரதும் பெயர்களைப் பார்க்கும்பொழுது தமிழர்கள் போல்த் தெரிகிறது. இவர்களுக்கு எதிரிகள் யார் இருக்கப் போகிறார்கள்.

 

தமிழற்கு தமிழரே எதிரி. இது உலகறிந்தது. கல்விக்கு நாதனாக விளங்கும் உங்களுக்கே விளங்காதிருப்பது அதிசயம்தான்.....!!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு விரைகிறார், ஜஜிபி பூஜித

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ragunathan said:

இருவரதும் பெயர்களைப் பார்க்கும்பொழுது தமிழர்கள் போல்த் தெரிகிறது. இவர்களுக்கு எதிரிகள் யார் இருக்கப் போகிறார்கள்.

கும்மாணின் விளையாட்டாக இருக்குமோ? அண்மையில்க் கூட 2004 க்கு முதல் தான் யாரென்று தெரியுமோ எண்டும் கேட்டவர். சிலநேரங்களில் அவருக்கே தான் யாரென்று தெரிவதில்லை.

ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் பல தமிழ் இளைஞர்கள் தொழில் இல்லாத காரணத்தால் பொலிசில் இணைகிறார்கள் எல்லாம் அரசியல் விளையாட்டுத்தான் அரசில் சேர்ந்து  அமைச்சை பெற்றால் தொழில் வாய்ப்பாவது பெற்றுக்கொடுக்கலாம் இளைஞர்களுக்கு  ஆனால் நம்ப டம்ளர் கட்சி அதை செய்யாது அவர்களுக்கு அரசியல் முக்கியம்.

 

ஆழ்ந்த அனுதாபங்கள் நிலாவணையை சேர்ந்தவர் தினேஸ் 

அது அவரது டுவிட்டர் இல்லையாம் அவுஸில் இருந்து ஆரோ இயக்குதாம் என்று சொல்லிகொண்டார் அண்மையில்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைகள் கட்டப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட காவற்துறையினரின் துப்பாக்கிகள் களவாடப்பட்டன

வவுண தீவில் இரு காவற்துறை உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இரு துப்பாக்கிகளையும் கொலையாளிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது

மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த காவற்துறையினர் இருவரையும் இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு காவற்துறையினர் தெரிவித்தனர். கல்முனை நீலாவணையைச் சேர்ந்த காவற்துறை கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

a-2.jpg?zoom=1.2100000262260437&resize=7

காவற்துறை உத்தியோகத்தர்கள், தினேஸ், பிரசன்னா, வவுணத்தீவில்சடலங்களாக மீட்பு…

Nov 30, 2018 @ 03:02

மட்டக்களப்பு  வவுணத்தீவில், காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவரின்  சடலங்களை, வவுணத்தீவு காவற்துறையினர், இன்று (30.11.18) காலை  மீட்டுள்ளனர். இந்த  இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுணத்தீவு காவற்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த தினேஸ், பிரசன்னா ஆகிய இருவரே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். வவுணத்தீவு சோதணைச் சாவடியில், நேற்று (29.11.30) இரவு நேர  கடமையில் இருந்தவேளை, மேற்படி இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சோதனைச் சாவடிக்கு, காலை நேர கடமையைப் பொறுப்பேற்தற்காகச் சென்ற காவற்துறை உத்தியோகத்தர், இருவரின் சடலங்களை  கண்டு காவற்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சடலங்களை மீட்ட காவற்துறையினர்  மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக    பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக தெரிவித்துள்ளனர்

இதேவேளை இந்த  சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவற்துறை  அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது. காவற்துறை  மா அதிபரின் பணிப்புரையின் படி இந்தக் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பாறுக் ஷிஹான்

http://globaltamilnews.net/2018/105121/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பொலிஸார் சுட்டுக்கொலை ; ஒருவர்  பொலிஸ் நிலையத்தில் சரண்

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார் 

DSC05335.JPG

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிஸார் இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது .

நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

 இவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாரியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில்  அவர் இன்று காலை  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் 

DSC05333.JPG

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது வாக்குமூலங்கள்  எடுக்கப்பட்டதன்  பின்னர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம்  ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

 

http://www.virakesari.lk/article/45543

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மட்டக்களப்பு சோதனைச் சாவடியில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு பதவி உயர்வுகள்!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் அலுவலர்கள் இருவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன,

குறித்த இருவருக்கும் கான்ஸ்டபிள் தரத்தில் இருந்து பொலிஸ் சார்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று (வௌ்ளிக்கிழமை) மட்டக்களப்புக்கு சென்றிருந்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன மற்றும் தினேஸ் என்னும் இரண்டு பொலிஸ் அலுவலர்கள் உயிரிழந்தனர்.

http://athavannews.com/மட்டக்களப்பு-சோதனைச்-சாவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு அப்பாவி மாட்டுபட்டு விட்டது .

Link to comment
Share on other sites

இனியும் வேண்டாம். ஏற்கனவே கண்ட அழிவுகள் போதும். மக்கள் நிம்மதியாக வாழட்டும். ஒரு சிலர் குளிர் காய்வதற்காக மக்களை பலிக்கடா ஆக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கலைஞன் said:

இனியும் வேண்டாம். ஏற்கனவே கண்ட அழிவுகள் போதும். மக்கள் நிம்மதியாக வாழட்டும். ஒரு சிலர் குளிர் காய்வதற்காக மக்களை பலிக்கடா ஆக்கக்கூடாது.

உண்மை கலைஞன் ......ஆனால் மீண்டும் இது உருவாக என்ன காரணம் என்றதையும் கண்டறிய வேண்டும்.....கூட்டமைப்பு  தேசிய ஒற்றுமையை காட்டுவதறகாக உழைக்கின்றார்கள் இருந்தும் இது ஏன் தலைதூக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

உண்மை கலைஞன் ......ஆனால் மீண்டும் இது உருவாக என்ன காரணம் என்றதையும் கண்டறிய வேண்டும்.....கூட்டமைப்பு  தேசிய ஒற்றுமையை காட்டுவதறகாக உழைக்கின்றார்கள் இருந்தும் இது ஏன் தலைதூக்கின்றது

மேலும் திடீர் சோதனைகள் தொடங்கியச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

மேலும் திடீர் சோதனைகள் தொடங்கியச்சு 

அதாவது நாடு கொந்தளிப்பு நிலையில் இருக்க வேண்டும் ...சம்பாதிக்கிறவன் சம்பாதிக்க வேணும்,.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

அதாவது நாடு கொந்தளிப்பு நிலையில் இருக்க வேண்டும் ...சம்பாதிக்கிறவன் சம்பாதிக்க வேணும்,.....

அது பல பேரின் ஆசையும் கூட இனி பாதுகாப்பை பலப்படுத்துகிறோம் என சொல்லி  வீதீ சோதனைகள் கெடு பிடிகள் தொடரும் போல் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2018 at 12:31 AM, தமிழ் சிறி said:

இந்த துப்பாக்கி சூட்டில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன மற்றும் தினேஸ் என்னும் இரண்டு பொலிஸ் அலுவலர்கள் உயிரிழந்தனர்.

புலிகள் வந்துவிட்டார்கள் என்று சிங்கள மக்களுக்கு காட்டி அவர்களின் ஆதரவைப் பெற மகிந்த ஆடிய நாடகத்தில் அநியாயமாக இரு பொலிசாரும் கஸ்டத்திலிருக்கும் இரு தமிழர்களும் பலிக்கடாவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

அவசர அவசரமாக பொலிசாரைச் சுட்டு சுட்டவர்களைப் பிடித்துவிட்டோம் இது புலிகள் மீள்கிறார்கள் எனும் போது எந்தச் சிங்களவனும் மகிந்த தான் இதற்கு சரியான ஆள் என்று அவர் பக்கமே சாய்வதற்கான சந்தர்ப்பமே உள்ளது.

எனக்கு எனது மக்களை அழித்துவிட்டார்களே என்று சிங்களம் மீது கோபம் இல்லை.சூழ்ச்சி மூலம் கூட்டுச் சேர்ந்து தமிழர்களின் காவலனாக இருந்தவர்களை அழித்து கிளியைப் பிடித்து பூனையின் கையில் கொடுப்பது போல் கொடுத்துவிட்டார்கள்.

அன்றொரு நாள் பிரிட்டன்காரன் தமிழர்களின் அரசுகளையெல்லாம் எடுத்து சிங்களவர்களின் கையில் கொடுத்த மாதிரி மீண்டும் அதே வேலையை வல்லரசு என்று தம்மைத் தானே கூறுபவர்கள் தமிழர்களை அடிமையாக்கி அதிகாரத்தை சிங்களத்தின் கையில் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு தமிழர் தான் ஒரே ஒரு பாதுகாப்பு என்று தீர்க்கதரசியான எமது தேசியத் தலைவர் எத்தனையோ முறை சொன்னார்.கேட்கவே இல்லை.அதன் பலாபலனை இந்தியா அனுபவித்தே தீரவேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுணதீவு பொலிஸார் கொலை- வெளியாகின புதிய தகவல்கள்

வவுணதீவில் பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை  சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவர் மாவீர்தின நிகழ்வுகளிற்காக மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்ஃ

மட்டக்களப்பில் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜநாயகம் சர்வானந்தம்  என்ற 48 வயது முன்னாள் போரளியொருவர் இந்த சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி விசாரணைகளிற்காக மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவர் பிரபாகரன் அஜந்தன் என பெயர்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் பிரபாகரன் அம்பாறை தம்புலுவிலை சேர்ந்தவர்; என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாண்டியடியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றன என காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கிய தாண்டியடி என்ற பகுதியில் விசேட அதிரடி படையினரின் முகாம் அமைந்திருந்ததால் பொது மக்கள் மாவீரர் நாளை கொண்டாட முடியாத நிலைகாணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு இந்த வருட மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தது என தெரிவித்துள்ள காவல்துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் இந்த அமைப்பின் தலைவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

police_vavuna.jpg

புலம்பெயர் தமிழர்கள் மாவீரர் நாள் நினைவுகளிற்கான நிதியை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் மாவீரர் தின நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் காவல்துறையினருக்கும்  நிகழ்வை ஏற்பாடு செய்த சிலரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

இதேவேளை வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் நவம்பர் 26 ம் திகதி தாண்டியடிக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் தங்கியிருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

 

http://www.virakesari.lk/article/45612

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bati-720x450.png

வவுணதீவு பொலிஸார் படுகொலை – முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினரான அஜந்தன் என்பவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மற்றுமொறுவரை கைது செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினரான அஜந்தன் என்பவரையே கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கு அடுத்த தலைவராக செயற்பட்டிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராஜநாயகம் சர்வானந்தம் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த அவர், மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக மட்டக்களப்புக்கு சென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, 6.00 மணியளவில் மட்டக்களப்பு – வவுணதீவு வீதியில் வவுணதீவிற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணில் வைத்து குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளின் சடலங்களும் கண்டெஐக்கப்ட்டிருந்தது.

இதேநேரம், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/வவுணதீவு-பொலிஸார்-படுகொல/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Senanayaka-720x450.png

வவுணதீவு பொலிஸார் கொலை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இராணுவ தளபதி

மட்டக்களப்பு- வவுணதீவில் பகுதியில்  பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் ஏதும் இல்லையென இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து  ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தவறான செயற்பாடுகளுக்கு எதிராக பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் பிரிவினரும் சி.ஐ.டியினரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றரெனவும் மகேஸ் சேனநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஆகையால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்களெனவும் முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து தகவல்களும் படையினரிடம் உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/வவுணதீவு-பொலிஸார்-கொலை-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் காலத்தில் தமிழ் மக்களை இராணுவ ரீதியில் தொடர் அச்சுறுத்தலின் கீழ் வைச்சிருக்கவும்... மாவீரர் தினம் போன்ற கடந்த காலத்தை நினைக்க வைத்து..  இன எழுச்சி கொள்ள நினைக்கும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்.. சிங்கள.. பேரினவாதிகளும்.. அவர்களின் தமிழ், முஸ்லீம் கைக்கூலிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கையே இதுவாகும்.

மீண்டும்.. முன்னாள் போராளிகள் பலிக்கடா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுணதீவு பொலிஸார் படுகொலையின் பின்னணியில் ‘தேசத்தின் வேர்கள்’ அமைப்பு

அதன் தலைவரை தேடி வேட்டை; மாவீரர் தின அலங்காரங்களை அகற்றிமைக்கு பழிவாங்கவே தாக்குதல்?

 

F-1.jpg

  • எம்.எப்.எம். பஸீர்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு அம்மாள் வீதியைச் சேர்ந்த ‘தேசத்தின் வேர்கள்’ எனும் அமைப்பின் தலைவர் என கருதப்படும் கணேசன் பிரபாகரன் எனும் நபரை தேடி சீ.ஐ.டி.யினரும் உளவுத்துறையினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட புலிகளின் அஜந்தன் படைப்பிரிவின் புலனாய்வு உத்தியோகத்தரான ஜயந்தன் என்பவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதான இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் என்பவர் சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையிலேயே, கணேசன் பிரபாகரனைத் தேடி கூட்டு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பகுதியில் தேசத்தின் வேர்கள் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் தின அலங்கரிப்புக்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கொண்டாட்டத்துக்கு முதல் அவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியிருந்த நிலையில், அதற்கு பழிதீர்க்கும் வகையில், பொலிஸார் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு சந்தேகிக்கும் நிலையிலேயே அவரை தேடி இந்த விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கிளிநொச்சயில் வைத்து கைதுசெய்யப்பட்ட இமையன் எனப்படும் ராசலிங்கம் சர்வானந்தன் கொலைகளுக்கு முந்தைய தினம் அதாவது நவம்பர் 29 ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து கணேசன் பிரபாகரனின் வீட்டுக்கு வந்துள்ளமையும் அவரை ஜயந்தனே அழைத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையிலேயே இந்த கூட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்குட்பட்டு சேவையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து இது குறித்த விசாரணைகளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவில் முதலில் கிழக்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகரவின் நேரடி மேற்பார்வையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பொலிஸ்மா அதிபர் சி.ஐ.டியின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், தேசிய உளவுத்துறை பிரதானிகள் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று நேரடி மேற்பார்வைகளை மேற்கொண்ட நிலையில் அந்த விசாரணைகளை சிஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

அதனையடுத்து சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் நேரடி கட்டுப்பாட்டில் அதன் பிரதி பொலிஸ்மா அதிபர் சுகத் நாகஹமுல்லவின் நேரடி மேற்பார்வையில், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொலைகள் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸாரினால் ஜயந்தன் எனும் சந்தேக நபர் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதன்படியே, பல தகவல்களை வெளிப்படுத்திக்கொண்ட சி.ஐ.டி. குழு கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த ராசலிங்கம் சர்வானந்தனை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தது.

அதன் பலனாக கிளிநொச்சி பொலிஸார் ஊடாக அவர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளின்படி பாதுகாப்பு உயர்மட்டத்திலிருந்து கிடைக்கும் தகவல் பிரகாரம் வவுணதீவில் மாவீரர் தின அலங்காரங்களில் பொலிஸார் அகற்றும் சீ.சி.டீ.வி. காணொலிகளை முன்னாள் போராளிகள் சிலர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலொன்றிலிருந்து பெற்று பார்வையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அதனால் ஏற்பட்ட கோபம் மற்றும் பழிதீர்க்கும் எண்ணத்தின் அடிப்படையில் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களது கைத்துப்பாக்கிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதன் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள கணேசன் பிரபாகரன் என்பவரைத் தேடி பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் சார்ஜன்ட்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

http://www.vidivelli.lk/2018/12/03/வவுணதீவு-பொலிஸார்-படுகொல/

Link to comment
Share on other sites

16 hours ago, கிருபன் said:

வவுணதீவு பொலிஸார் கொலை- வெளியாகின புதிய தகவல்கள்

இதேவேளை தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு இந்த வருட மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தது என தெரிவித்துள்ள காவல்துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் இந்த அமைப்பின் தலைவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/45612

 

40 minutes ago, colomban said:

வவுணதீவு பொலிஸார் படுகொலையின் பின்னணியில் ‘தேசத்தின் வேர்கள்’ அமைப்பு.

அதன் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள கணேசன் பிரபாகரன் என்பவரைத் தேடி பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

http://www.vidivelli.lk/2018/12/03/வவுணதீவு-பொலிஸார்-படுகொல/

முரண்பாடான இணையங்களின் செய்திகள் அவற்றின் நம்பகத் தன்மையைச் சிதைக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை

Editorial / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, பி.ப. 08:14 Comments - 0

image_9752c35c34.jpg

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்ற படைப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்களை நடத்தியதுடன், விசாரிப்பிலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.

அந்த சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் இருவர், கடந்த வௌ்ளிக்கிழமை (30) குத்தியும், வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களது ஆயுதங்கள் இரண்டும் அபகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.

அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியான விசாரணைகளில் ஒன்றாகவே இன்றைய (03) தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.   

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், அதற்கு முந்திய காலத்தில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்களின் வீடுகளுக்கு, விசேட அதிரடிப்படையினர் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போது புலனாய்வுப் பிரிவினரும் உடனிருந்துள்ளனர்.

முன்னாள் போராளிகளின் பட்டியலிலுள்ள பெயர்களைக் கொண்டவர்கள், வீட்டிலிருக்கின்றார்களா அவ்வாறில்லையெனில் அவர்கள் தற்போது வதியும் அல்லது தொழில் புரியும் இடங்களின் சரியான விவரங்களையும் தருமாறு வீட்டிலிருப்போரிடம் அதிரடிப்படையினர் விவரங்களைத் திரட்டினர் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனினும், இந்தத் தேடுதலும் விசாரிப்பு நடவடிக்கைகளும் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் ஏதுமில்லாத வகையில், சுமுகமாகவே இடம்பெற்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/வவுணதீவு-சம்பவம்-முன்னாள்-போராளிகள்-உட்பட-20-பேரிடம்-விசாரணை/73-226081

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.