• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
வானவில்

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Recommended Posts

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

எச்.ஐ.வி / எய்ட்ஸ் அடிப்படைகள்

எய்ட்ஸ் என்றால் என்ன?

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.

எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.

அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

யாருக்கு எய்ட்ஸ் வரும்?

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்பதை அறிய எச்.ஐ.வி எண்ணி .)

இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். "நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை .)

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.

3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.

2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.

3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.

4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.

5.ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.

6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள் (தமிழக பள்ளி மாணவர்கள் அடிக்கடி எழுப்பிய கேள்விகளின் முதல் இன்டர்நெட் தொகுப்பை பார்க்க கிளிக் செய்க.)

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.

* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.

* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.

* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.

3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.

5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

http://aidsindia.blogspot.com/2005/06/blog-post_01.html

Share this post


Link to post
Share on other sites

காலத்திற்கு தேவையான் ஒரு ஆய்வுக்கட்டுறை. 40 வயதுக்குப்பின்னால பொதுவாக ஆணுக்கோ, பெண்ணுக்கோ உடலுறவுகளில் நாட்டம் இல்லாது போய் தம் பிள்ளைகளின் படிப்பு போன்றவை பெரிதாக தெரிவதால், 18- 40 வயதுக்கு இடையில் இது பொதுவாக சாத்தியப்படும்.

இந்த பாலியல் வேலைகள் செய்வதை பயங்கரவாத செயல்கள் பட்டியலில் போட்டு அதையும் மீறி பெண்ணுகளினை கொடுமைப்படுத்தினா மரண தண்டனை கொடுத்தா, அடுத்த 100 ஆண்டுகளில் இதுகளினை முற்றாக ஒழித்துவிடலாம். இல்லையா?

அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். :angry:

Share this post


Link to post
Share on other sites

உலக எய்ட்ஸ் நாள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2010

f_1m_44ed8b1.jpg

http://ta.wikipedia.org/

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கா உலகுக்கு வழங்கிய....

எய்ட்ஸ், ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா தந்த பரிசு?

ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ‘பிரபஞ்ச அழகி’யும், ‘உலக அழகி’யும் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரச்சார நடவடிக்கையாக உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்வதைப் பார்க்கையில் மனம் விம்மி கண்ணீர் வருகிறது. எப்பேர்பட்ட சேவை? அதுவும் வளர்ந்த, வல்லரசு நாடுகளுக்கு பிரச்சார பயணத்தை மேற்கொள்ளாமல் மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் மட்டுமே எய்ட்ஸ் விழிப்புணர்வு ‘சொற்பொழிவு’ ஆற்றும் அவர்களது கருணை பல கோடிகள் கொடுத்தாலும் ஈடாகாது!

உண்மையில் எய்ட்ஸ் நோய் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே ஏன் இருக்கிறது, அல்லது பரவுகிறது? அமெரிக்காவில் ஒரின காதலர்கள் தவிர வேறு யாரிடமும் எய்ட்ஸ் நோய் ஏன் தென்படவேயில்லை...?

Dr. Alan Cantwell, Jr எழுதிய Queer Blood: The secret AIDS Genocide plot புத்தகம் இதற்கான விடையைத் தருகிறது. எய்ட்ஸால் மரணமடைந்த பலரையும் பரிசோதனை செய்து டாக்டர் அலன் கான்ட்வெல் தனது முடிவை அந்தப் புத்தகத்தில் அறிவித்திருக்கிறார். ‘‘உண்மையில் எய்ட்ஸ் என்பது சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரம். இத்தகைய சோதனைகள் மூலம் வருங்கால தலைமுறையினருக்கு பேராபத்தை ஏற்படுத்த முடியும். அணு ஆயுதங்களுக்கு ஒப்பான பேரழிவை சோதனைச் சாலை உயிரியியல் கிருமிகளால் உண்டாக்க முடியும் என்பதற்கான ஆதாரமே எய்ட்ஸ்’’ என்கிறார் டாக்டர் அலன் கான்ட்வெல்.

இந்த எய்ட்ஸ் கிருமியின் உருவாக்கத்துக்கு பின்புலத்தில் இருந்தவர், அமெரிக்காவின் முன்னாள் State Secretery ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும், மூன்றாம் உலக நாடுகளில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவவும், காங்கிரஸ் பணத்திலிருந்து 10 மில்லியன் டாலர்கள் இந்த எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கியதையும் நாம் கவனத்தில் கொள்வதே இல்லை.

உண்மையில் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதாக நடந்த விபரீத சோதனைதான் இன்று பரிணாம வளர்ச்சியுடன் எய்ட்ஸ் நோயாக வளர்ந்திருக்கிறது என்று கூட சுருக்கமாக சொல்லலாம்.

1964ம் ஆண்டு அமெரிக்க அரசின் நிதி உதவியோடு ‘சிறப்பு வைரஸ் புற்று நோய் திட்டம்’ (SVCP) பெத்திஸ்டாவில் தொடங்கப்பட்டது. முதலில் ரத்தப் புற்று நோய், நிணநீர் சம்மந்தமான புற்று நோய்க்கான ஆய்வாக மட்டுமே இருந்த இந்த திட்டம், பின்னர் அனைத்து புற்று நோய்க்கான ஆய்வாக விரிவு படுத்தப்பட்டது.

பல வருடகாலமாக சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்திப் பார்க்கும் சோதனை நடந்து வந்தது. இதற்காக பூனை, சுண்டெலி, கோழி உட்பட பல விலங்குகள் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டன. இப்படி சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்படும் மருந்துகள் விலங்குகளில் வேலை செய்ய ஆரம்பித்ததும் அதை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்த முற்படுவார்கள். இதற்காக அவர்கள் எந்த மனிதனிடமும் ஒப்புதலோ, அவனிடமோ அல்லது அவளிடமோ சொல்லிவிட்டோ செய்வதில்லை. இப்படி செய்யப்பட்ட சோதனைகளில் விலங்குகளை பாதிக்கும் பல வைரஸ் கிருமிகள், மனிதனையும் சென்றடைந்தன, அடைகின்றன.

கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, 1994ல் மக்கள் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகள் அமெரிக்க மக்கள் மீது நடத்தப்பட்டதை விசாரிப்பதற்காக ‘அறிவுரைக் குழு’ ஒன்றை ஏற்படுத்தினார். 95ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் 1960 வரை நோயாளிகளின் அனுமதி இல்லாமலேயே மருத்துவர்கள் அவர்கள் மீது சோதனை நடத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அதிர்ந்துபோன அமெரிக்க மக்கள், எதிர்ப்பு தெரிவித்தப் பின்னர், இந்த ‘சோதனை முயற்சிகள்’ மூன்றாம் உலக நாடுகளின் மீது, மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். ஒவ்வொரு மூன்றாம் உலக குடிமகனும் தன்னையும் அறியாமல் பரிசோதனைக் கூடத்து விலங்காகத்தான் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்.

உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கு காரணமான Human Immuno Deficiency Virus கூடவே Herpes virus பாதிப்பு ஏற்படுத்தி வருவதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். இந்த Herpes Virus, இப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் Kaposis Sacoma க்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. மனிதர்களின் உடலமைப்பை பெருமளவில் கொண்டுள்ள விலங்கினங்களுக்கு, குறிப்பாக குரங்குகளுக்கு, நோய் உண்டாக்கக் கூடிய இந்த Kaposis Sacoma எப்படி மனிதர்களின் உடலுக்கு வந்தது? சோதனை மூலம் போடப்பட்ட தடுப்பூசிகளால்தானே?

கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஹெச். ஐ. வி வைரஸ் புற்று நோயை உண்டாக்கக் கூடிய கிருமியே. இதை எய்ட்ஸ் நோய் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ராபர்ட் காலோ, ‘‘எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாக வரும் ஒருவித புற்று நோயே’’ என்று கூறியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதே ராபர்ட் காலோ இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்.

‘‘எனக்கு தெரிந்து அமெரிக்காவில் ஆண், பெண் புணர்ச்சிக்கு பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை. அமெரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் நோய் என்றுமே ஒரு பிரச்னையாக வராது’’ என்று அடித்து கூறியிருக்கிறார்.

இந்த ராபர்ட் காலோ, மருத்துவத்தை முறையாக பயின்ற மருத்துவரல்ல. அவருடைய பயிற்சி உடல் வேதியியல் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. வைரஸ் கிருமி குறித்த போதிய அனுபவம் இல்லாததால் சோதனைச் சாலையில் நிகழ்ந்த பல கலப்படங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறார்... என்று வரும் செய்திகள் அதிர வைக்கின்றன.

ரத்தம் மூலமும், உபயோகிக்கப்பட்ட சிரிஞ் மூலமும், பாலியல் தொழிலாளர்களுடன் இணைவதாலும் எய்ட்ஸ் வரும்... என எல்லோருமே நம்புகிறோம். இப்படி நம்பவைத்தே ஆணுறைகளின் விற்பனையையும் அதிகரித்திருக்கிறோம். ஆனால் மேற்சொன்ன காரணங்களால் எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

வயிற்றில் புண் இருக்கிறதா என அறிய உதவும் என்டோஸ்கோபி மூலம் பரவும் எய்ட்ஸ் பற்றியோ, அறுவை சிகிச்சையினாலும், குழந்தை பிறப்பு & பெண்களின் உடல் சார்ந்த பிரத்யேக பிரச்னையினாலும், ரத்தக் குழாய் வழியாக பரிசோதனை மேற்கொள்வதில் பயன்படுத்தப்படும் உபகரணங்களால் பரவும் எய்ட்ஸ் பற்றியோ எத்தனை பேருக்கு தெரியும்? பெருமளவு எய்ட்ஸ் நோய் இவைகளால்தான் வருகின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

1970களில் அமெரிக்க ஒரின காதலர்களிடையே மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியில் இருந்த வைரஸ் கிருமியால்தான் அவர்களுக்கும், அவர்களுடன் இணைந்தவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் வந்தது, பரவியது என்பது கண் கூடான உண்மை. அதேபோல பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், ஆப்பிரிக்காவிலுள்ள பல கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகே ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவ ஆரம்பித்ததையும் கருத்தில் கொள்வது நல்லது. 1970களுக்கு முன் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் எய்ட்ஸ் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதை கருத்தில் கொண்டால் உண்மை புரியும்.

ஒருவேளை சோதனைச் சாலையில் வெற்றிகரமாக எய்ட்ஸீக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அடுத்ததாக வேறு ஏதேனும் ஒரு புதிய உயிர் கொல்லி நோய் உற்பத்தியாகி பரவ ஆரம்பிக்கும். இந்த புதிய நோயும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே மையம் கொள்ளும்.

ஆறறிவுள்ள விலங்குகள் மலிவாக வேறெங்கே கிடைக்கும்?

http://www.keetru.com/vizhippunarvu/nov06/priya_thambi.html

Share this post


Link to post
Share on other sites

எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் தூண்டுபொருள் கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் தூண்டுபொருள் (என்ஸம்) ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் உலகம் முழுவதும் 4 கோடி மக்கள் என மதிப்பிடப்பிடப்பட்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய கிழக்கு நாடுகளில்தான் இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குறைவு. இதுவரை இரண்டரைக்கோடி பேர் இந்த நோய்த்தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ஆள்கொல்லி நோயான இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நோய் தாக்குதலை தடுக்கும் தூண்டுபொருள் (என்ஸம்) ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரியல் ரசாயன இதழில் இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பில் ஒருவித தூண்டுபொருள் உள்ளது. அதற்கு ஏ.ஜி என பெயரிடப்பட்டுள்ளது. இது சிலரது உடலில் அதிமுக்கிய பங்காற்றுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் கிருமிகளால் தாக்கப்பட்ட சில நோயாளிகளுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடாமல் இந்த தூண்டுபொருள் பாதுகாக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நோய்க்கிருமி மீது இது படியும்போது அந்தக் கிருமி சிதைகிறது. முடிவில் அது இறந்துவிடுகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் கிருமியால் தாக்கப்பட்டவர்கள் படிப்படியாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மரணத்தைச் சந்திக்கிறார்கள் என்பதால் இந்த தூண்டுபொருள் எய்ட்ஸ் நோயை தடுக்க உதவும். காலப்போக்கில் செயற்கையாக இந்த தூண்டுபொருளை மறுஉற்பத்தி செய்யும்போது எய்ட்ஸ் நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படலாம் என சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Share this post


Link to post
Share on other sites

எய்ட்ஸ் தடுப்பு தூதர் முயற்சி

ஆப்பிரிக்காவில் ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோய்க்கு பலியாகின்றனர். மருத்துவமனையில் இந்நோய்க்காக சிகிச்சை பெறுகின்ற நோயாளிகள் படுக்கைப் பற்றாக்குறை காரணமாக இரண்டு அல்லது மூன்று பேர் ஒரு படுக்கையை பயன்படுகின்றனர். சில நோயாளிகள் தரையில் படுர்கின்றனநர். ஒவ்வொரு நஸூம் 80 முதல் 90 படுக்கைகளுக்கு பொறுப்பேற்கின்றார். குழந்கை நோயாளியறையில் தாய்மார்களின் எய்ட்ஸ் கிருமி நேரடியாக பச்சிங் குழந்தைகளைத் தொற்றியது. காரணம் 4 அமெரிக்க டாலர் கொடுத்து தேவைப்படும் தடுப்பு மருந்து வாங்காமல் இருப்பதாகும். இந்த நிலைமையை கண்டு ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா எய்ட்ஸ் தடுப்புத் தூதர் ஸ்டீபன லூயி வேதனையடைந்தார். உயிரைக் கொல்லும் எய்ட்ஸ் நோயை ஒரு நாள்பட்ட நோயாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். அவருடைய கூற்றை கேட்டதும் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிவசப்படனர். 2001ம் ஆண்டு எய்ட்ஸ் தடுப்பு தூதராக பணி புரிந்த பின் 60 வயதுக்கு மேற்பட்ட அவர் இந்த கனவுக்காக அயராது உழைத்து வருகின்றார். அவருடைய கண்களில் ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா எய்ட்ஸ் தடுப்பு தூதரின் அம்சம் ஒளிர்கின்றது. இந்தப் பணிக்கு விவேகம் மிகவும் தேவைப்படும், அயரா உழைப்பாற்றலும் தேவை. கடுமையான மோசமான பணி சூழ்நிலையில் அவருடைய 10 விரல்களின் நகங்களில் கிருமி தொற்றது. ஒவ்வொரு நாளும் பணி புரிவதற்கு முன் விரல்களில் அவர் பாதுகாப்பு கவசத்தை ஒட்ட வேண்டியுள்ளது. வசதிகள் இல்லாத போதும் 20 முறை அவர் எய்ட்ஸ் தடுப்பு பற்றி சொற்பொழிவு நிகழ்த்துகின்றார். எய்ட்ஸ் நோய் குணப்படுத்த முடியாதது என்பதை சரியான முறையில் மக்கள் அறிந்து கொள்ள செய்து வருகின்றார். வாரத்துக்கு அவர் 7 நாட்கள் வேலை செய்கிறார். நாளுக்கு 17 19 மணி நேரம் வேலையில் ஈடுபடுகின்றார். திரைப்படம், தொலை காட்சி ஆகியவை அவரை பொருத்தவரை ஆடம்பர வாழ்க்கையாகும். ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த 4 ஆண்டுகளில் லூயிஸ் தனது கையில் மரணமடைகின்ற நோயாளிகளுக்கு ஆறுதல் வழங்கினார். பல நூறு அநாதை எய்ட்ஸ் குழந்தைகளை தழுவிக் கொண்டார். 73 வயதான ஆப்பிரிக்க மூதாட்டியுடன் அவர் ஆடினார். இந்த மூதாட்டி எய்ட்ஸ் நோய்வாய்பட்டு மரணமடைந்த தமது குழந்தைகளை புதைத்தார். இப்போது 13 பேரக் குழந்தைகளை அவர் வளர்க்கின்றார். சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்தால் 2010ம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 2 கோடி எய்ட்ஸ் குழந்தைகள் உருவாகிவிடுவார்கள். இது பற்றி லூயி மிகவும் கவலைப்படுகின்றார். லூயி எனும் நிதியத்தை அவர் நிறுவினார். மரணமடைகின்ற பெண் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சமூக நிலையில் இலவச அன்பு காட்டி வாழ்க்கையின் கடைசி சில வாரங்களில் துன்பத்தை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு உதவியளித்து அவர்களின் பெருமையை பாதுகாப்பது, அநாதை எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் மற்ற கிருமி தொற்றிய குழந்தைகளுக்கும் கூடியளவில் உதவி வழங்கி அவர்கள் கல்வியும் உணவு பொருட்களும் பெறச் செய்வது, பரஸ்பரம் தொடர்பு கொள்வதிலும் மற்றவருடன் தொடர்பு கொள்வதிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளித்து மேலும் கூடுதலான வசிப்பிட மக்களிடையே எய்ட்ஸ் நோய் தடுப்பு தகவலை பிரச்சாரம் செய்வது என்பன இந்நிதியத்தின் முக்கிய வேலைகளாகும். தவிர சிறிய தொகை நிதியத்தை அவர் நிறுவி இதில் பங்கு ஆற்றியுள்ளார். அவருடைய உதவியுடன் இந்த நிதியத்திற்கு இதுவரை 30 லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடையாக கிடைத்துள்ளது. அதிகம் தொகை இல்லை. ஆனால் மனிதரின் உண்மையான உணர்வு இதில் நிறைந்துள்ளது. ஒரு சோபும், ஒரு துவாலை, ஒரு துணி ஆகியவை தாமதமின்றி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டால் அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்பட முடியாதது என்று லூயி கருதுகிறார்.

http://tamil.cri.cn/

Share this post


Link to post
Share on other sites

 

STOP AIDS

 


 

-மகேஸ்வரி

1986ம் வருடம் அது. பாலியல் தொழில் செய்யும் 6 பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்பது அப்போதுதான் வெளி உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தது. பல சோதனைகள், எதிர்ப்புகளுக்குப் பிறகு அது உறுதி செய்யப்பட்டது.
9.jpg
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் HIV கிருமி (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலைதான் அப்போது இருந்தது. தற்போது முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழகத்தில் எச்.ஐ.வி நிலை என்ன? அது தொடர்பான எண்ணற்ற கேள்விகளுடன், சென்னை தரமணியில் இயங்கிவரும் ஒய்.ஆர்.ஜி.கேர் (YRG CARE) நிறுவனத்தின் பயிற்சி மேலாளர் சதீஷ்குமாரை சந்தித்தபோது, எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி நோயின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விளக்கங்களை தந்தார்.

தமிழகத்தில் எய்ட்ஸின் தற்போதைய நிலை என்ன?

30 ஆண்டுகளில் மக்களிடம் நிறைய விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் எச்.ஐ.வி பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசிற்கு மூன்று நோக்கங்கள் உண்டு. அதாவது மூன்று ஜீரோ. முதல் ஜீரோ புதிதாக யாரும் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கக் கூடாது. இரண்டாவது, முக்கியமாக குழந்தைகள் இதில் பாதிப்படையவே கூடாது. மூன்றாவது, எச்.ஐ.வி தொற்றால் ஏற்படும் இறப்பு என்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே.

எல்லா கர்ப்பிணி  தாய்மார்களும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது சந்தேகப்பட்டு செய்யப்படும் பரிசோதனை அல்ல. எச்.ஐ.வி இருக்கிறது எனத் தெரியவந்தால் அதை வளரவிடாமல் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவத்தால் தற்போது இயலும். கர்ப்பிணியாக இருந்தால், வயிற்றில் வளரும் கருவிற்கு வராமல் உறுதியாக தடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட ஒரு தாய், பாதிப்பில்லாத குழந்தையினை பெற்றெடுக்க கண்டிப்பாக முடியும். இது பெண்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். நிறைய பெண்களுக்கு எச்.ஐ.வி  பாதிப்பு தனக்கு உள்ளது என்பதே முதல் பிரசவ பரிசோதனைக்கு வரும்போதுதான் தெரிய வருகிறது. தன்னார்வமாக எந்தப் பெண்ணும் எச்.ஐ.வி. தொற்று தனக்கு உள்ளதா எனத் தெரிந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை.

எச்.ஐ.வி உள்ளது எனத் தெரியவந்தால், பெண்ணிற்கு அது மிகப் பெரிய அதிர்ச்சி. அம்மாவுக்கு இருந்தால் மட்டுமே குழந்தைக்கு வருகிறது. அப்பாவுக்கு இருந்தால்  வராது. முன்பு பெண்களை மட்டும் டெஸ்ட் செய்து ஆண்களை விட்டுவிடுவார்கள். இதற்கு எம்.டி.சி.டி என்று பெயர். ‘மதர் டூ சைல்ட் டிரான்ஸ்ஃபர்’. இதனால் பெண்ணால்தான் குடும்பத்திற்கு எச்.ஐ.வி. வருகிறது என்ற பிரச்சனை வருகிறது. இப்போது பி.பி.டி.

சி.டி என மாற்றப்பட்டு, ‘பிரிவென்சன் ஆஃப் பேரண்ட் டூ சைல்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன்’ என அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தை எச்.ஐ.வி பாதிப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு அப்பா-அம்மா இருவருமே காரணமானவர்கள்.

எச்.ஐ.வி. பரிசோதனை முறைகள்
எச்.ஐ.வி. பரிசோதனை என்பது மிகவும் சாதாரணமான ரத்தப் பரிசோதனை மாதிரிதான். 15 நிமிடங்கள்தான் ஆகும். முன்பெல்லாம் இந்தப் பரிசோதனை 4 மணி நேரம் எடுக்கும். இப்போது ‘ஸ்பாட் டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களில் 150 முதல் 200 வரை நிர்ணயித்துள்ளார்கள்.

எச்.ஐ.விக்கான சிகிச்சை முறை
எச்.ஐ.வி என்பது கிருமி. எய்ட்ஸ் என்பது நிலை. ஒருவருக்கு எச்.ஐ.வி நோய் தொற்றுதான் வரும். நம் உடலுக்குள் அக்கிருமி வந்துவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியினை தரக்கூடிய வெள்ளை அணுக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் துவங்கும். அப்போது வேறு ஏதாவது நோய்த் தொற்று நம் உடலுக்குள் வந்தால், அதை எதிர்க்க முடியாத நிலை வரும்.

அந்த நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி வைரஸ் உடலில் பரவாமல் இருக்க மாத்திரைகள் வந்துவிட்டன. வெள்ளை அணுக்களை அழியாமல் தடுப்பவைதான் ஏ.ஆர்.டி மாத்திரைகள். சரியான முறையில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, எதிர்ப்பு சக்தியே உடலில் இல்லாத நிலையினை உடல் அடைய துவங்கும்.

சரியான மருத்துவ முறைகளைக் கையாளவில்லை என்றால், நோய் எதிர்ப்பு சக்தியினை முற்றிலும் குறைத்து, எய்ட்ஸ் என்ற இறுதி நிலையினை உடல் அடைய துவங்கும். முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை எச்.ஐ.விக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வராமல் தடுக்க முடியும். வந்தால் அதனுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

நீரிழிவு நோய், ஹைபர் டென்ஷன் மாதிரி இதுவும் ஒரு நோய். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் குணப்படுத்த முடியாது. ஏ.ஆர்.டி மாத்திரைகளை 12 மணி நேரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது.

எச்.ஐ.வி  கிருமி தொற்று உள்ளவர்களுக்கு எடை குறைவு ஏற்பட்டால் அது எச்.ஐ.வி கிருமியால் வராது, வேறு நோய்களால் ஏற்படும். உதாரணத்திற்கு எச்.ஐ.வியும்் காசநோயும் காதலர்கள் போல. எச்.ஐ.வி நோய் தொற்று உள்ளவர்களுக்கு காசநோய் எளிதில் வரும். காசநோயால்  உடல் எடை குறையும். உடல்நிலை குலையும். சில மாத்திரைகளாலும் உடல்நிலை குலைவு ஏற்படும். அது மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுதானே தவிர, எச்.ஐ.வியால் அல்ல.

எச்.ஐ.வி பரவும் வழிமுறைகள்
பாலியல் தொழிலாளர்கள், போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள் மூலமாக பரவலாம். இதில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகமான அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு தாய்க்கு எச்.ஐ.வி இருந்தால் தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு பரவ குறைந்தளவு வாய்ப்புகள் உண்டு. எச்.ஐ.வி நோய்த் தொற்று உள்ள ஒருவருடன்.

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டு, அதன் மூலம் உடலில் பரவ வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. பாதுகாப்பற்ற உடல் உறவு மூலம், எச்.ஐ.வி கிருமி நுழைந்த ஒருவரின் ரத்த மாதிரியில் மூன்று மாதங்கள் கழித்தே எச்.ஐ.வி இருப்பது தெரியவரும். அந்த இடைப்பட்ட மூன்று மாத கால இடைவெளியில். அவரிடமிருந்து ரத்தம் வேறொருவர் உடலில் ஏற்றப்பட்டால், அந்த ரத்தம் மூலமும் பரவலாம்.

எச்.ஐ.வி பற்றி நன்கு தெரிந்தவர்கள், தன்னார்வமாக ரத்தம் கொடுக்க முன்வரும்போது தான் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் இருந்தோமா, போதை ஊசி எதுவும் எடுத்தோமா, தானமாக ரத்தம் ஏற்றிக்கொண்டோமா என யோசித்துவிட்டு, பிறகு ரத்த தானம் செய்ய வேண்டும். பாதுகாப்பான உடலுறவு என்பது இருபாலருக்கும் மிகமிக முக்கியம்.

ஆணுறை பயன்படுத்துவது என்பது குழந்தைப் பேற்றை தடுப்பதற்கு என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைப் பேற்றை தடுப்பது மட்டுமின்றி, எச்.ஐ.வி நோய்த் தொற்று தடுப்பு, பால்வினை நோய் தடுப்பு என அனைத்துக்குமானதாக ஆணுறை இருக்கிறது. ஒவ்வொருமுறை உடலுறவுக்கும் ஆணுறையினை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

பதின்பருவத்தினருக்கு பாலியல் விழிப்புணர்வு
பாலியல் பற்றி மிகப் பெரிய தவறான கண்ணோட்டத்தை நாம் இளையவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். நமக்கு எப்படி பசிக்கிறதோ, தூக்கம் வருகிறதோ, கோபம் வருகிறதோ, அது மாதிரியான உணர்வுதான் செக்ஸ். மனித உடலில் அது ஓர் இயல்பு. நமக்குள் இருக்கும் பலவிதமான உணர்வுகளில் செக்ஸ் ஒரு முக்கியமான உணர்வு. அந்த உணர்வு வரவில்லை என்றால்தான் பிரச்சனை.

தற்போது குழந்தைகளிடத்தில் ஊடக பயன்பாடு மிகவும் அதிகம். எந்நேரமும் நம் குழந்தைகளை கண்காணித்துக்கொண்டே இருக்க முடியாது. ஊடகங்கள் பெரும்பாலும் குழந்தைகளின் பால் உணர்ச்சிகளை தூண்டும் நிகழ்ச்சிகளையே அதிகம் தருகின்றன. பாலியல் சார்ந்த செய்திகளை அறியும் ஆர்வத்தை ஊடகங்கள் வளரும் இளம் பருவத்தினரிடையே தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

பாலியல் பற்றி தெரிந்துகொள்ள மாணவர்களிடையே எப்போதும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. சரியான புரிதல் இன்றி, தவறான கருத்துக்களே மாணவர்களிடத்தில் பெரும்பாலும் இருக்கும். அரசல் புரசலாகத் தவறான சில தகவல்களை தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு பாலியல் பற்றி அறியும் ஆர்வம் அந்த வயதில் அதிகமாகவே இருக்கும். சரியான பார்வையில் அவர்களுக்கு அதை விளக்க வேண்டும்.

குழந்தை இப்படித்தான் பிறக்கும் என்பதைக்கூட நாம் பேசுவது கிடையாது. இதைப்பற்றி சொல்லிக்கொடுத்தால் குழந்தைகள் அதைத் தெரிந்துகொள்ள எங்காவது போய்விடுவார்களோ என்ற பயம் பொதுவாக உள்ளது. பிறப்புறுப்பு பற்றி, அதன் செயல்பாடு பற்றி, பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி விளக்க வேண்டும்.

தெளிவான பார்வை கிடைத்த பிறகு இவ்வளவுதானா என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது. அதன் பிறகு தன்னை எப்படி பாதுகாப்பது என்ற புரிதல் பதின்பருவத்தினரிடையே தானாக வருகிறது. சில நேரம், நம் குழந்தைகள் பாலியல் சார்ந்த கேள்விகளை நம்மிடத்தில் கேட்டால் அதைக் குற்றமாக நினைத்து அவர்களை குழப்பாமல், அவர்களின் வயதுக்கேற்ற சரியான பார்வையில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடத்தில் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். அவர்களது கேள்விகளை ஊக்கப்படுத்தி, சரியான கண்ணோட்டத்தில் விளக்க வேண்டும். பாலியல் சார்ந்த கேள்விகளை யாரிடம் எப்படிக் கேட்பது என அவர்களுக்குத் தெரியாது. எனவே சரியான முறையில் அவர்களை வழி நடத்துவதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது.

மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. குறித்து பேசுவதில் ஏன் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய மனத்தடை இருக்கிறது. பெற்றோருக்கும் உண்டு. மேல்நிலை கல்வி படிக்கும்போது வரும் பாலியல் பாடத்தை ஆசிரியர்கள் தவிர்த்துவிட்டுச் செல்கின்றனர். செக்ஸ் எஜுகேஷன் வகுப்பு இருக்கிறது என சொன்னாலே நிறைய பெற்றோர்கள் அதை நடத்த வேண்டாம் எனச் சொல்லும் நிலையே பெரும்பாலும் இங்கு இருக்கிறது.

பாலியல் கல்வி என்றால் உடல் உறவை எப்படி வைத்துக்கொள்வது என சொல்லிக்கொடுப்பதுதான் என்பது மாதிரி ஒரு தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருக்கிறது. யுனிசெஃப், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், டி.டி.ஆர்.டி. மூன்று அமைப்புகளும் சேர்ந்து, எல்லா் பள்ளி, கல்லூரிகளிலும் எச்.ஐ.வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்கின.

1996ல் எங்களுக்கு இதெல்லாம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை  நடத்தத் துவங்கினோம். மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி பரவும் முறைகளை மட்டும் பேசிவிட்டு வரமுடியாது. கட்டாயம் அவர்களுக்கு பாலியல் தொடர்பான செய்திகளைச் சொல்ல வேண்டும். எச்.ஐ.வி. நோய்த் தொற்று குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசும்போது பாலியல் பற்றிய நிறைய சந்தேகக் கேள்விகள் அவர்களிடமிருந்து எழத் தொடங்கின.

அவர்களின் சந்தேகங்களை மிகவும் இயல்பாக தெளிய வைத்துவிடுவோம். மனித உடலின் ஒவ்வொரு செயல்பாடும் அவர்களுக்கு புரியவைக்கப்படும். பெண் மற்றும் ஆண் உடல் இயக்கங்கள், விறைப்புத் தன்மை ஏன் வருகிறது, மாதவிடாய் தோன்றுவது, குழந்தைப் பிறப்பு பற்றிய அத்தனை விஷயங்களும் தெளிவுபடுத்தப்படும். உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் ஏன் நிகழ்கிறது எனவும் விளக்கப்படும்.

அதைத் தெரிந்துகொள்ளும்போது பாலியல் பற்றிய வக்கிரம் மாணவர்களிடையே கட்டாயம் உடையும். தவறான கருத்துகள் உடைந்து, தெளிவான பார்வை கிடைக்கும். அவர்கள் அதை வெளிப்படுத்தவும் செய்வார்கள். தாங்களாகவே முன்வந்து எச்.ஐ.வி. பரிசோதனை எடுக்கவும் தயாராகிவிடுவார்கள்.

மக்களுக்கு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வை தருவது, வராமல் பாதுகாப்பது, தனிமை மற்றும் புறக்கணிப்பு இல்லாமல் செய்வது போன்ற வேலைகளைச் செய்யவேண்டியது அவசியம். அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து் இவற்றை செய்கின்றன. இந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் நிறைய பணியாற்றியுள்ளன.

ஆனாலும் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்படுவது மற்றும் புறக்கணிக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான ஒரு குழந்தையிடமிருந்து தன் குழந்தைக்கு வந்துவிடுமோ என்கிற எண்ணம் மக்களிடம் இன்றும் இருக்கிறது. பள்ளி, வேலை செய்யும் இடங்களிலும் இது தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனை, பயன்படுத்தும் கழிவறையை பயன்படுத்துவீர்களா? என கேள்விகேட்டால் யோசிக்கும் நிலையே இப்போதும் இங்கு இருக்கிறது. சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியபின் அதே கேள்வியினைக் கேட்டால், தெளிவாக பதில் சொல்வார்கள். நூறு பெண்கள் மத்தியில் இதுகுறித்துப் பேசினால், அந்த நூறு பெண்களும் பாதிக்கப்படாமல் வாழ்நாள் முழுவதும் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வை இத்தகைய பயிற்சிகள் வழங்குகின்றன.

ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை தவிர்க்காமல் எப்படி கையாள்வது, பழகுவது என்றும் சொல்லித்தரப்படும். ஹெல்த் கேர் புரொபஷனல்ஸ் எனப்படும் டாக்டர், நர்ஸ், லேபில் வேலை செய்பவர்கள், கவுன்சிலர் என இவர்களுக்கும் இரண்டு நாள் எச்.டி.சி. எனப்படும் பயிற்சி உண்டு. எச்.ஐ.வி. பரிசோதனைக்கு வருபவர்களுக்கு என்ன மாதிரியான தகவல் தர வேண்டும்.

ப்ரீகவுன்சிலிங் முறைகள், எப்படி பரிசோதனை செய்வது என எல்லாம் இந்தப் பயிற்சியில் அவர்களுக்கு கற்றுத்தரப்படும். அனைவருக்கும் எச்.ஐ.வி கல்வி தேவை. அது மட்டுமே மனதில் இருக்கும் தடைகளை சரிசெய்யும். எச்.ஐ.வி பாதிப்பினால் மிகவும் முடியாத நிலையில் வருபவர்களைக் கூட தொடர்ந்து சிகிச்சை பெறவைத்து, நல்ல உடல் நிலையுடன் வாழவைக்க முடியும்.

மருத்துவரீதியான முன்னேற்றம் இறப்பைத் தடுத்திருக்கிறது. எங்கள் நிறுவனத்திற்கு வந்து் சிலர் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். வரத்தயங்குபவர்களுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவம் செய்கிறோம். இவர்களுக்கென திருமணத் தகவல் மையமும் எங்களிடம் உண்டு. பாதிக்கப்படாதவர், பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொண்டவர்களும் எங்களிடம் உண்டு.

121 புராஜக்ட்
YRG Care, 121 மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளார்கள். எச்.ஐ.வி, காசநோய், மஞ்சள் காமாலை, பால்வினை நோய் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன. ஆப் பயன்படுத்தும் வசதி இல்லாதவர்கள், 044-33125000 என்ற ஹெல்ப் லைனை பயன்படுத்தலாம். நிறைய தொண்டு நிறுவனங்களுடன் நெட்வொர்க் செய்து இந்த ஆப்பை இணைத்துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை எங்கே சேர்ப்பது என்ற தகவல் வேண்டுமா? கால் இழந்த நபருக்கு இலவசமாக செயற்கை கால் பெறவேண்டுமா? எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி வேண்டுமா?  இந்த ஹெல்ப் லைன் நம்பரை அல்லது ஆப்பை தொடர்பு கொண்டால், சந்தேகங்களுக்கு, எந்த நிறுவனத்தை எங்கே அணுகுவது என்ற தகவலைப் பெற்றுத் தருகிறார்கள். 24 மணி நேரமும் இது செயலில் இருக்கும்.

பாத்திமா, கேம்ப் ரெயின்போ கன்சல்டன்ட்
எங்கள் நிறுவனத்தில் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான 500 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். சாதாரண குழந்தைகள் மாதிரி விளையாட விடாமல், யாருடனும் கலந்து பழக விடாமல் தனிமைப்படுத்துவார்கள். தனியாக அமர வைப்பார்கள். அவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிதான் ‘கேம்ப் ரெயின்போ’. ரெயின்போ பார்த்ததும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் குதூகலமும் வரும்.

அதுமாதிரிதான் இந்த முகாமும். குழந்தைகளுக்கு நிறைய மகிழ்ச்சியைத் தரும். எங்கள் அமைப்பில் பதியப்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாமல் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டத்திலுள்ள குழந்தைகளையும் சேகரித்து முகாம் நடத்துகிறோம். அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகள், நேச்சுரல் அண்ட் டிஸ்கவரி. ஸ்டேஜ் நைட், கார்னிவல் மூலமாக திறமைகளை வெளிக்கொண்டு வருவோம்.

சில குழந்தைகள் நன்றாகப் பாடுவார்கள். அந்த திறமை அவர்களுக்கே தெரியாது. இந்த முகாம் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே தருகிறோம். இதன் மூலம் எச்.ஐ.வி பற்றி தெரிய வைப்பது, அதனுடன் எப்படி வாழ்வது போன்ற விஷயங்களைக் கற்றுத் தருகிறோம். முதலில் அவர்களுக்கு நட்பு வட்டம் இருக்காது.

ஆனால் இந்த முகாம் வந்த பிறகு நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் அளவிற்கு அவர்களின் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கும். 5 நாள் தங்கி இருந்து எச்.ஐ.வி குறித்து முழுமையாகப் புரிந்து, எனக்கு இந்த  நோய் தான் இருக்கு, இதுதான் என் பிரச்சனை, நான் இப்படித்தான் வாழனும், இந்த மாத்திரைகளை நான் தவறாமல் சாப்பிடனும், சாப்பிடலைன்னா என்ன நடக்கும், எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, அதை நான் முழுமையா வாழனும், வாழ முடியும். நான் நினைத்ததைப் படிக்கலாம்.

திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிக்கும் உரிமை எனக்கும் உண்டு போன்ற விஷயங்கள் எல்லாவற்றையும், வயதின் அடிப்படையில் 9 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம். எப்படி சேர்ந்து வேலை செய்வது என்ற ‘டீம் ஒர்க்கும்’ இங்கே கற்றுத் தரப்படும். அவர்களுக்கு மிகப் பெரிய தெளிவு கிடைக்கும். தொடர்ந்து அவர்களை நாங்கள் கண்காணிப்போம்.

டாக்டர் சுனிதி சாலமன்
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் எச்.ஐ.வி இருப்பதை உறுதி செய்த சோதனையில் தன் மாணவி நிர்மலா செல்லப்பனுடன் இணைந்து அதுகுறித்த ஆராய்ச்சிகளில் முக்கிய பங்காற்றியவர்.எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும் அதை ஒழிக்கவும் தீவிரமாக முயற்சிகளும் செய்தார்.

விருப்ப ஓய்வு பெற்று எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆலோசனை, பரிசோதனைக்காக ஒய்.ஆர்.ஜி தொண்டு நிறுவனத்தை சென்னை தரமணியில் தொடங்கி நடத்தி வந்தார். 74 வயதான அவர் கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் காலமானார். அவரது இறப்பிற்கு பிறகு, தன்னலமற்ற அவரின் சேவையினைப் பாராட்டி, மத்திய அரசு பத்ம விருதினை வழங்கி அவரை கவுரவித்தது.

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3904&id1=118&issue=20170501

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this