Jump to content

நெல் ஜெயராமன் காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

17474-720x450.png

இயற்கை விவசாயத்திற்காக பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார்

சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த விவசாயி நெல்ஜெயராமன் (வயது-60), சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார்.

பாரம்பரிய, இயற்கை விவசாயங்களை பேணிப்பாதுகாத்துவந்த நெல்ஜெயராமன், பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவந்ததோடு 160ற்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தவர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த அவர், இன்று காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

நெல்ஜெயராமன், திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேடு என்ற கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளுக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

மரபணுமாற்று விதை திட்டங்களுக்கு எதிராக போராடி வந்ததுடன் பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய,  மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இயற்கை-விவசாயி-நெல்ஜெயரா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல் ஜெயராமன்: நூறு ரக விதை நெல், ஆண்டுக்கொரு திருவிழா - சாமானியனின் பெருங்கனவு

மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ்
 
நெல் ஜெயராமன்படத்தின் காப்புரிமை Facebook

நாம் மறந்த, அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.

 

நம்மாழ்வார் நட்பு

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருமழை நாளில்தான் நானும், நண்பன் காசி வேம்பையனும் நெல் ஜெயராமனை சந்திக்க சென்றோம். அப்போது அவர் 'நெல்' ஜெயராமன் எல்லாம் இல்லை; கட்டிமேடு ஜெயராமன்தான். நுகர்வோர் உரிமைக்காக தனது கிராம அளவில் அப்போது தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது கவனம் மரபு நெல் ரகங்களின் மேல் குவிந்திருந்தது. அதற்கு நம்மாழ்வாருடன் ஏற்பட்ட நட்பும் ஒரு காரணம்.

 
நம்மாழ்வார்படத்தின் காப்புரிமை M Niyas Ahmed Image caption நம்மாழ்வார்

பயண நேர முழுவதும், வேம்பையன் நெல் ஜெயராமன் மீட்ட நெல் ரகங்கள் குறித்து விவரித்து கொண்டே வந்தான். காட்டு யானம், பூங்கார், குடவாலை என அவர் மீட்ட நெல் ரகங்கள் குறித்து விவரித்துக் கொண்டே வந்தான். இந்த பெயர்கள் எல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. புதியவை எப்போதும் சுவாரஸ்யமானவைதானே. அதனால் அந்த சந்திப்பும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

நெல் ரகம்

மரபு நெல்லை மீட்க அவர் மேற்கொண்ட நெடும் பயணம் அந்த நெடும் பயணத்தில் முடிவில் அவர் மீட்ட ஏழு வகை நெல் ரகங்கள் என அப்போது பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அது அவர் வாழ்க்கையின் திசை வழியையே மாற்றியதாக கூறினார். அதுவரை நுகர்வோர் உரிமைக்காக போராடியவர், அதன் பின் மரபு ரக நெல் வகைகளை மீட்கும், பரப்பும் பணிக்கு தம்மை அர்பணித்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

அந்த சமயத்தில் மகசூல் என்ற வார்த்தை எனக்கு புதிது. அதுமட்டுமல்ல, அனைத்து நெல் ரகங்களின் அறுவடை காலமும் ஒன்று என்றே நினைத்திருந்தேன். ஆனால், நெல் அறுவடை காலம் என்பது ரகத்திற்கு ஏற்றார் போல மாறுபடும். குறைந்தபட்சமாக பூங்கார் 70 நாளிலும், ஒட்டையான் 200 நாளிலும் அறுவடைக்கு வரும் என்றெல்லாம் கண்களில் ஒளியுடன் விவரித்தார்.

'ஒரு வரி பயணம் அல்ல'

ஒரு சொல்லோ, பொருளோ தொடர்ந்து நடைமுறை வழக்கத்தில் இருந்தால்தான், அவை உயிர்ப்புடன் இருக்கும். இது நெல்லிற்கும் பொருந்தும். ஒரு நெல்லை மீட்பது, காப்பது என்பது, அதனை தொடர்ந்து விதைப்பது. நெல் ஜெயராமன் விதைத்தால் மட்டும் போதாது. பல நெல் ஜெயராமன்கள் உருவாக வேண்டும். இதற்காகதான் அவர் நெல் திருவிழாவை ஒருங்கிணைத்தார்.

நம்மாழ்வார் ஜெயராமன்படத்தின் காப்புரிமை neljayaraman.com

திருத்துறைப்பூண்டி ஆதிரங்கத்தில் அவர் ஒருங்கிணைத்திருத்த நெல் திருவிழாவிற்கு சென்றேன். அப்போது அவர், "நெல்லை மீட்பதைவிட, அதை பாதுகாப்பது தான் சிரமமாக இருக்கிறது" என்றார்.

அதற்கு காரணம் அப்போது விவசாயிகள் மனதில் படிந்திருந்த எண்ணம். மரபு ரக நெல் வகைகள் விளைச்சல் தராது, நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் ஆழமாக நம்பினார்கள். இந்த அவநம்பிக்கை கலைப்பதுதான் கடினமாக இருந்தது என்றார்.

அவநம்பிக்கையிலுருந்து நம்பிக்கைக்கு

நம்பிக்கை தளராமல் பயணித்த நெல் ஜெயராமன், மரபு ரக நெல்லின் வணிகத்தையும் உறுதிபடுத்தினார்.

குறிப்பாக நாகபட்டினத்தில் நான் சந்தித்த விவசாயி சோமு கூறியவை நன்றாக நினைவிருக்கிறது. "நான் விவசாயத்திலிருந்து வெளியேற எண்ணினேன். சுனாமிக்கு பிறகு கடல் நீர் உட்புகுந்து நிலமெங்கும் உப்பு பூத்துவிட்டது. அந்த சமயத்தில் நெல் ஜெயராமன் கொடுத்த பூங்கார் நெல் ரகம்தான் நான் என் நிலத்தில் இன்னும் ஊன்றி நிற்க காரணம்" என்றார்.

பூங்கார்படத்தின் காப்புரிமை M Niyas Ahmed Image caption பூங்கார்

இப்படிதான் பலரை நம்பிக்கை திசையில் பயணிக்க வைத்திருக்கிறார் ஜெயராமன். புற்று நோய் வந்த பின்பு, அவர் கலந்து கொண்ட ஓர் கூட்டத்தில், எனக்கு புற்றுநோய். என் மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டிருப்பது மரபு நெல் ரகங்கள்தான் என்று இறப்பை நோக்கிய பயணத்தையும் மரபு நெல்லை பரப்பும் பிரசாரமாக மாற்றினார்.

பூவுலகு நண்பர்கள் தனது அஞ்சலி பகிர்வில் கூறி இருந்ததை கோடிட்டு இந்த கட்டுரையை முடிக்கிறேன், 'விதைநெல், நடுகல்லாக மாறிவிட்டது'.

https://www.bbc.com/tamil/india-46463806

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லின் செல்வன் நெல் ஜெயராமன் குறித்த காட்சி தொகுப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Local people are paying tribute to Nel Jayaramans body

நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் இன்று.. மக்கள் கண்ணீர் அஞ்சலி

நெல் ஜெயராமனின் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்தில் இன்று இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக பார்க்கப்பட்டவர். இதுவரை 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்த பெருமை நெல் ஜெயராமனை சாரும்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வருட காலமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்செய்தி அவரது சொந்த ஊரான கட்டிமேடு கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அரசியல்கட்சி தலைவர் , சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இன்று காலை வரை நெல் ஜெயராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் ஒரு மணி அளவில் நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/thiruvarur/local-people-are-paying-tribute-nel-jayaraman-s-body-335931.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"விதை நெல் நாடுகல்லாக மாறிவிட்டது"

ஆழ்ந்த அஞ்சலிகள்......! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.