Jump to content
  • 0

நான், செய்தது... சரியா... பிழையா?


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chefsessel gif

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 
இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும்  என்று, தெரிந்து...
நீங்கள் சொல்வது  சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.
அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.   

ஆனால்... எனக்கு,  குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.
இவ்வளவிற்கும்...  நான், கடந்த வருடங்களில்  சேமித்த விடுமுறை நாட்கள்  நாற்பதுக்கு மேல்.
இரண்டு நாள்... லீவு  கேட்க, இவ்வளவு நடப்பு  அடிக்கும்  இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....

இன்று...  எனது  மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...
ஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து... 
அதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.

இரண்டு நாள்...  விடுமுறை கேட்ட எனக்கு, 
இப்போ... மருத்துவர் மூலம்  ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...
எனது  விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.

எந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும்  மதிக்கப் பழக வேண்டும்  என்ற படிப்பினையை.. அவருக்கு  கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • Answers 54
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 5:38 AM, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

பிள்ளைகளின் பட்டமளிப்புக்குப் போகாமல் வேலைக்குப் போகுமளவிற்கு ஒரு வாழ்வு தேவையில்லை. என்றாலும் சுகவீன லீவை விட முன்கூட்டியே சொல்லியிருந்தால் மேலாளர் வேறு ஏற்பாடுகள் செய்திருப்பார்.

மொழிப்பிரச்சினை காரணமாக பெற்றோரின் உதவிகூட வீட்டுப்பாடம் செய்ய கிடைக்காத புலம்பெயர்ந்து வாழும் இரண்டாம் தலைமுறை பல்கலைப் பட்டம் பெறுவது இலகுவான விடயம் அல்ல.

தமிழ் சிறி அண்ணாவின் பிள்ளைகள் இருவர் பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பை முடித்தது எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. அவர்கள் மென்மேலும் சிகரங்களைத் தொட மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு கட்டாயம் தேவை...... கேடடால், கிடைக்காது என்றால்.... நீங்கள் டாக்குத்தர் தந்த கடிதத்தினை மட்டுமே அனுப்பி இருக்கலாம். அல்லது.... ஐந்து.... ஆறாம் திகதிகளில்..... இருமி நடித்து..... உண்மையில் வருத்தம் தான் என நம்பிற அளவுக்கு buildup கொடுத்து இருக்கலாமே.

இப்போது.... உங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்திருக்கும்.... இதன் விளைவு..... நீண்ட காலமாக அதே உத்தியோக நிலையில் இருக்க நேரிடும்.

உத்தியோக உயர்வு என்பது... உடனடி முகாமையாளர் சிபாரிசில் தான்.... அவருக்கு பதவி உயர்வு கிடைத்தால்....நீங்கள் அவரின் இடத்துக்கு வருவதாயின்.... அவரது சிபாரிசு கருத்தில் எடுக்கப்படும் என்பதால், நீங்கள் செய்தது, தவறு மட்டுமில்ல.... முட்டாள் தனமானது.

முன்னர் ஒரு பதிவில்.... கண்டெடுத்த பேனாவினை... வீட்டில் காட்டிய போது.... உங்கள் தந்தையார்... எடுத்த இடத்தில போட்டு வருமாறு அனுப்பியதாக சொல்லி இருந்தீர்கள்.... தயவு செய்து... இந்த சிக் லீவு அடித்த விசயத்தினை உங்கள் பிள்ளைகளுக்கு பெருமையாக சொல்லி விடாதீர்கள்... தவறான முன்னுதாரணம் ஆகி விடும்.

பேசாமல் திங்கள் அன்று.... இருமிக்கொண்டே வேலை போய்..... உண்மையிலேயே வருத்தம்..... ஆனாலும் வந்தேன்....என்று காட்டிக் கொண்டே....நாலு மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் ... (வாங்கி பார்க்க மாட்டார் )அவராக....நீ போய் ...ஓய்வெடு என்று சொல்ல வையுங்கோ...  

முக்கியமான ஒரு விசயம்.... யேர்மன் சட்டம், இவ்விசயத்தில் பிரித்தானிய சட்டம் போலவே இருக்கும்..... சிக் லீவ் என்பது உங்களுக்கு உரிமை  அல்ல..... மனிதாபிமான சலுகை.... கம்பெனி உங்களுக்கு அந்த நாளிலும் பணம் தருவதால்..... நீங்கள் உண்மையிலேயே சுகவீனமாக  இருக்கிறீர்களா என முகாமையாளர் செக் பண்ண வீட்டுக்கு வரலாம்.

வீட்டில் இருந்தால் நடிக்கலாம். இல்லாமல் இருந்தால் சிக்கல்.....

வேலை விடயத்தில்.... நேர்முகத்தில் தோல்வி அடைபவர்களுக்கு சொல்வது.... 'இந்த மடம்.... இல்லையெண்டா சந்தை மடம்..... இவனை நம்பியா, நான் பிளேன் ஏறினேன்' என்று அடுத்த நேர்முகத்துக்கு தயாராகுங்கள் என்று...

இது வேலை தரும் முதலாளிக்கும் பொருந்தும்..... 'சிறியரை நம்பி அவன் கொம்பனி நடத்தவில்லை'. 

**************

அதை விடுங்கோ.... யாழ்ப்பாணத்து பகிடி ஒன்று.....

மானிப்பாய் ரோடு.... ஸ்டான்லி ரோடு சந்தியில் ஒரு அச்சகம்......

ஒருவர், நல்ல வேலையாள்.... பின்னேரம் எண்டால்.... தண்ணிக்காரர்.....

இரண்டு கிழமையா சம்பளம் வரேல்ல..... அடுத்த கிழமை சேர்த்து தரலாம்...... கதை.... மூன்றாம் கிழமை...... 'உன்ர வேலை அவ்வளவு சரியில்ல...... அதுதான் விட்டுப் பிடிச்சனான்..... ஒரு மாத்தமும்.... இல்லை.... உதுக்குள காசு வேற கேட்க்கிறாய்'..... கதை விட்டார்... 'முனா'...

நம்மாளு வேகமா வெளிய போனார்..... கப்பு..... கப்பென்று ஏத்திப் போட்டு வந்தார்...

'காலைப் ***யில் இருந்து மாலை **** வரை, வேலைப் *****
சம்பளப் ****யைக் கேடடால், நடப்புப் *****' என்றார் சத்தமாக.....

அதிர்ந்து போன 'முனா'.... பாக்கெட்டினுள் கையை விட்டார்... 

சம்பளம் கிடைத்தது.  ( உண்மை சம்பவம் )

குறிப்பு: உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை * இக்கு பதிலா போட்டு சொல்லிப் பாருங்கோ...

*****

நீங்களும் சிரிச்சு சமாளிச்சு வந்திராம..... கப்புக்... கப்பென்று ஏத்திப்போட்டு...போய்..... நாலு கத்துக்.... கத்தி வெண்டிருக்கலாம்.... பிழை விட்டுப் போட்டியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பேசாமல் திங்கள் அன்று.... இருமிக்கொண்டே வேலை போய்..... உண்மையிலேயே வருத்தம்..... ஆனாலும் வந்தேன்....என்று காட்டிக் கொண்டே....நாலு மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் ... (வாங்கி பார்க்க மாட்டார் )அவராக....நீ போய் ...ஓய்வெடு என்று சொல்ல வையுங்கோ...  

சேவ் எடுக்காமல் நரைத்த தாடியுடன் போய் நின்றால் காணும் வேறு எதுவும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

நான், செய்தது... சரியா... பிழையா?

சகோ சில பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

* பாதை வகுத்த பின்னே பயந்தென்ன        லாபம் பயணம் நடத்திவிடு                       மறைந்திடும் பாவம்.

*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

*காலம் போடும் வேலிகளைக் கால்கள் தாண்டிப் போவதில்லை.

*கடந்துபோகும் பாதையிலே நமது கையில் ஏதுமில்லை.

*இதுவும் கடந்துபோகும்.

*எதுவும் இங்கு சரியுமில்லை,தப்புமில்லை.

  முடிவாக முதலாளி அனுபவசாலியாக இருப்பவர் உங்களை நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டிருப்பார்.ஒரு சொக்லேட் பெட்டியை வாங்கிக்கொண்டுபோய் ஹப்பி கிருஸ்மஸ் சொல்லி நீட்டுங்கள்.இப்போது என்யோய் யுவ விடுமுறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

 நீங்கள் செய்தது, தவறு மட்டுமில்ல.... முட்டாள் தனமானது.

 

ஒரு வளர்ந்த/முதிர்ச்சியடந்த மனிதன் இப்ப‌டியான ஒரு காரியம் செய்து போட்டு, இதற்கு ஒரு திரியும் திறந்து அதற்கு வாசகர்களில் அபிப்பிராயமும் கேட்கப்படுகின்றது. என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நிழலி....   நீங்கள் என்னை... எவ்வளவு மட்டமாக நினைத் திருந்திருந்தாலும்,
அதனை... வெளிப்படையாக சொல்லுங்கள். சத்தியமாக நான்.. கோவிக்க  மாட்டேன். 
சொல்லா.. விட்டால்... என் மண்டை வெடித்து விடும் போல்.. உள்ளது ஐயா. :grin:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

என்னத்தை  செய்திருப்பியள் ...

புரட்டாதி மாசத்து விரதம் எல்லாம் இருந்து..... எதாவது புது முயற்சி பண்ணி இருப்பியல்...

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

அது சரி.... மேனேஜர் என்னவாம் சொல்லுறார்.
கணக்க கதைத்தால் சொல்ல்லுங்கோ...... வந்து நாலு தட்டு போடுறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

என்னத்தை  செய்திருப்பியள் ...

புரட்டாதி மாசத்து விரதம் எல்லாம் இருந்து..... எதாவது புது முயற்சி பண்ணி இருப்பியல்...

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

நிச்சயமாக... நான் இல்லை.  முனி அண்ணை.... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

இப்போ கருத்தோ திரியோ மூன்று மணி நேர அவகாசம் தான்.அதுக்குள்ள வெட்டி கொத்தி முடிச்சுடணும்.
இல்லாட்டி கதை கந்தல்.
கொஞ்ச நாட்களுக்கு முன் சுமே பட்ட பாட்டைப் பார்க்கலையோ?
சுடுதண்ணீ ஊத்தின நாய் மாதிரி ஓடித் திரிந்தா.

18 minutes ago, Nathamuni said:

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

உண்மையாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(சிற்று வேஷன் சாங்...   ஓகேயா... பாஸ்...)  👆 👆 :grin:      😜  🤑  :grin:

எமனாக... இருந்தாலும்,  கதற... விட வேண்டும்.  
-தமிழ் சிறி.-💎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா
நான் சொன்னது தான் சரி.

வாழ்த்துக்கள் சிறி.பிள்ளைகளின் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவென்று வரும் போதும் அதிஉச்ச சந்தோசமாக இருக்கிறோம்.
டாக்ரர் பொறியியலாளர் இதைவிட வேறு என்ன வேண்டும்.பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.

வாழ்த்துக்களுக்கு, நன்றி ஈழப்பிரியன். regular.png

13 hours ago, நிழலி said:

வேலை போனாலும் பரவாயில்லை என்று கட்டாயம் நானும் இதைத்தான் செய்து இருப்பேன். இதை விட சந்தோசம் ஒரு அப்பாவுக்கு வேறில்லை. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பாராட்டுக்களுக்கு,  நன்றி நிழலி. regular.png

10 hours ago, Nathamuni said:

மிக்க மகிழ்ச்சி. கல்வியை தவிர வேறு எந்த நிரந்தரமான, பறிக்க முடியாத, கொள்ளை போகாத, வரி விதிக்க முடியாத தேட்டமும், ஒரு தந்தையால் பிள்ளைகளுக்கு வழங்க முடியாது. பாராட்டுக்கள்.

இதுக்கு லீவு தர முடியாத பண்ணாடையா  இருக்காரே (னே) உங்கட மேனேஜர். 

எரிச்சல் போல கிடக்குது, அது சரி, உங்களுக்கு தேதிகள் முன்னமே தெரிந்திருக்குமே.... ஏன்  கடைசி வரை விட்டீர்கள்?
 

நான் வேலை செய்யும் பகுதியில்.... நானும், இன்னொருவர் மட்டுமே இருக்கின்றோம்.
மற்றவர் மிக நீண்ட நாட்களாக..  மருத்துவ விடுப்பில் இருப்பதால், நான் தனியத்தான் வேலைகளை செய்து வந்தேன். அந்த நிலையில்... என்னால் முற் கூட்டியே லீவுக்கு விண்ணப்பிக்க ஒரு மாதிரி இருந்ததால்... அவர் வந்த பின்பு, எனது விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்த போது... நாள் நெருங்கி விட்டது.

அத்துடன்...  நானும், கடைசிநாள் லீவுக்கு விண்ணப்பிக்கும் போது...
சரியான  காரணத்தை சொல்லாமல், தனிப்பட்ட விடயம் என்று  எழுதி விட்டேன்.
உண்மையான காரணத்தை... சொல்லியிருந்தால், லீவு கிடைத்திருக்கும் என்றே நம்புகின்றேன். என்னிலும்... பிழை உள்ளது.
பாராட்டுக்களுக்கு,  நன்றி  நாதமுனி.  regular.png

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு உங்களுக்கும்

வாழ்த்துக்களுக்கு, நன்றி  ராஜா.regular.png

8 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் பெற்றோரின் பொறுப்பான முயற்சிக்கும், பிள்ளைகளின் அக்கறையான படிப்புக்கும்......! 🌼

வாழ்த்துக்களுக்கு, நன்றி  சுவி.regular.png

7 hours ago, ரதி said:

உங்கள் பிள்ளைகளுக்கு எனது வாழ்த்தினையும் சொல்லி விடுங்கள்...உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 

வாழ்த்துக்களுக்கும்,   பாராட்டுக்களுக்கும்...  நன்றி  ரதி.regular.png

Link to comment
Share on other sites

தமிழ்சிறி ஒரு அனுபவ பழம் என்று பார்த்தால் இப்படி  வேலையிலே சொதப்பி இருக்கிறீர்கள். 

வெள்ளிக்கிழமை லீவு என்ற உடனேயே  மேலதிகாரிக்கு டக்கென்று  கிளிக் பண்ணி இருக்கும்.:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

சரி சரி ... இப்படி நாங்களும் பிழைகளை சரி என்டு நினச்சு செய்து இருக்கிறம் தானே.
தமிழ் சிறி ஒரு கடின உழைப்பாளி ..இந்த ஒரு சம்பவம் பெரிதாக எந்த கெடுதலையும் தொழில் இடத்தில 
ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறன்.
ஒரு மேலதிகாரியாக இருப்பவரும் யோசிக்க வேணும்... அடேய் நான் என்னுடைய நல்ல ஒரு தொழிலாளியை அனாவசியமாக பொய் பேச வைத்து அலைக்கழித்து விட்டேனே என்று.
இதுவும் கடந்து போகும் ... இவரை நம்பி அவங்களும் இல்லை... 
அவங்களை நம்பி நம்மவரும் இல்லை. 
ஒரு டீம் லீடாக இருக்கும் நான், நான் மேட்பார்வை பார்க்கும் சக தொழிலாளர்களின் இது போன்ற இக்கட்டான சம்பவங்களை கையாளும் முறையே வேறு.
- விட்டுப்பிடிப்பது 
- அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முக்கியத்தையும் , பெறுமதியையும் அடிக்கடி மெச்சுவது , நன்றியை தெரிவிப்பது .
- தேவை ஏற்பட்டால் அவர்களின் கடமைகளை சற்றேனும் பகிர்ந்து கொள்வது.
- திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடுவது. (அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும்)
- இவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அல்லது அவர்களையே நல்ல முடியை நோக்கி நகர்த்துவது.
** வின் வின் சிட்டுவேஷன் *** 😉

கொழும்பான் நீங்கள் திறந்து விடும் பல திரிகளை நான் இப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா பாருங்களேன். 😲

புதிய வருடம் வருகின்றது. மன்னிப்போம், மறப்போம், மாறுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஆட்கள் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என பழமொழி மட்டும் ரைமுக்கு ரைமிங்கா சொல்லுவாங்கள் ஏதும் பிழையொன்றை செய்து விட்டு சமாளித்து விடுவார்கள் அதையே இன்னொருத்தர் செய்தால் பிழையென்று வாதாடுவார்கள் இதில் தமிழர்கள் சளைத்தவர்கள்  அல்ல 

  ஒரு முதலாளி ஒரு தொழிலாளியின் விருப்பத்தை சரி செய்பவராக இருந்தால் மேலதிக விடுமுறை எத்தனை இருக்கு? எத்தனை இதுவரை காலம் எடுத்து இருக்கிறியள் என விசாரித்து விட்டு விடுமுறை வழங்கியிருக்க வேண்டும் அவர் தன் பக்க நியாயங்களை முன் வைத்தாலும் எதிரில் நிற்பவரும் ஓர் தொழிலாளியே  அவரின் நியாமான விருப்பங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் நியாயமான தீர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் 

 

இஞ்ச பொய் சொல்லி (சிக்) லீவு எடுக்காத ஆட்கள் எத்தனை பேரோ ?

தமிழ் சிறி அண்ண செய்தது சரிதான் அந்த முதலாளி விசாரித்து விடுமுறை வழங்கியிருக்க வேண்டும் 

இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு எத்தனை பேர் லீவு எடுக்கபோறாங்கள் போனவர்கள் ட்திரும்பி வர எத்தனை நாள் எடுக்கும் அவர்கள் வேலை யார் மீது கொடுக்கப்பட இருக்கிறதோ  :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..!

http://oi65.tinypic.com/1zoe0w5.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு எடுத்து ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றது குற்றமாடா லீவு எடுத்தால் முதாலாளி அவன் கோவிச்சுக்கிறான் கல்யாணத்துக்கு போகாட்டி சொந்தகாரர்கள் கோவித்து கொள்கிறார்கள் இது தெரியாமல் இந்த திரிய எழுதிப்போட்டுத்து யாழ் வாசிகளிடம் நான் படும் பாடு இருக்கே அப்பப்பப்பா :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2018 at 10:04 PM, ஈழப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் பிள்ளைகளின் அலுவலாக இருக்கலாம்.

சிறி ஏன் லீவு எடுத்திருப்பார் என்பதை சரியாக கணித்தவருக்கு பரிசில்கள் ஒன்றும் இல்லையோ?
ம் கேட்டுப் பெறவேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பிள்ளைகளூக்கு. எல்லோரும் கேட்டது போல் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவுக்கு ஓய்வு தராத முகாமையாளர்  உலகம் தெரியாதவர் போல  அல்லது பொறாமையோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 3:10 PM, தமிழ் சிறி said:

அட... இவங்களின்,  "லொள்ளு"  தாங்க முடியவில்லை.
ஜேர்மனியில் இருந்து... என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.. ஈழப்பிரியன்.
உடனே...  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்   "ஆப்கானிஸ்தான் எக்ஸ்பிரஸில்"   அனுப்பி வைக்கின்றோம். :grin:

உங்கள் அன்பளிப்பு கிடைத்தது .
மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..!

http://oi65.tinypic.com/1zoe0w5.jpg

ராஜ வன்னியன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. regular.png
நீங்கள்... இணைத்த, இணைப்பு.. எனக்கு தெரியவில்லை.
அதனை..  ஒருக்கால், மீண்டும் சரி பாருங்களேன்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி ஏன் லீவு எடுத்திருப்பார் என்பதை சரியாக கணித்தவருக்கு பரிசில்கள் ஒன்றும் இல்லையோ?
ம் கேட்டுப் பெறவேண்டி இருக்கு.

அட... இவங்களின்,  "லொள்ளு"  தாங்க முடியவில்லை.
ஜேர்மனியில் இருந்து... என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.. ஈழப்பிரியன்.
உடனே...  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்   "ஆப்கானிஸ்தான் எக்ஸ்பிரஸில்"   அனுப்பி வைக்கின்றோம். :grin:

3 hours ago, nunavilan said:

வாழ்த்துக்கள் பிள்ளைகளூக்கு. எல்லோரும் கேட்டது போல் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவுக்கு ஓய்வு தராத முகாமையாளர்  உலகம் தெரியாதவர் போல  அல்லது பொறாமையோ தெரியவில்லை.

எனது முதலாளி... பொறாமைக்காரர் அல்ல நுணாவிலான். மிக நல்ல மனிதர். 
பிள்ளைகளின்,  பட்டமளிப்பு விழாவுக்கு,  விடுமுறை தேவை என்று... கேட்டு இருந்தால்....
ஏதாவது... ஒரு ↪️மாற்று வழியை↩️, கண்டு பிடித்து.. லீவு தந்திருப்பார். 
நான்... செய்ததுதான்.... முட்டாள்  வேலை.. என்று, உணர்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..!

http://oi65.tinypic.com/1zoe0w5.jpg

1zoe0w5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 6:38 AM, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

அடப்பாவி மனுசா! இதை முதலே சொல்லியிருந்தால் நானும் அந்த முதலாளியை வாய்க்கு வந்தபடி திட்டியிருப்பனெல்லே?
சரி விடுவம்....:grin:

பிள்ளையளுக்கும்.....அவர்களை பெற்ற தாய் தந்தையருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாய்தகப்பன் செய்தபுண்ணியம் தான் பிள்ளைகளை வாழவைக்கும். 
வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி. பிள்ளைகளின் திறமைகள் உயர்வுகள் மகிழ்வுகளைத்தவிர வாழ்க்கையில் மிகச்சிறந்த சந்தோசம் வேறில்லை.  எங்களது மிகச் சிறந்த சொத்துக்களே எமது பிள்ளைகள்தான். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி தமிழ்சிறி அண்ணா. உங்கள் குடும்பத்தவர்களுக்கும்,  பிள்ளைகளின் படிப்புக்கு ஊக்கம் அளித்தவர்களுக்கும்  - உங்கள் கனவுகளை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கும் மனம்மார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

1zoe0w5.jpg

நன்றி...   குமாரசாமி அண்ணா  &  ராஜ வன்னியன்  அண்ணா.   bjr2.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.