Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

கொரியாவும் தமிழ் இளவரசியும்

Recommended Posts

கொறியா என்னும் நாடு இருபிரிவுகளாகப் பிரிந்திருக்க வட கொறியா சமீப காலமாக உலக நாடுகளுக்கு ஓரச்சுறுத்தலாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.  அவர்களது மொழியில் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவி, தமிழ் அறிஞர்கள் பலராலேயே கொறிய மொழி வளம்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு கற்கும் கொறிய மாணவர் ஒருவர் கூறியதாகக் கூறினார்.

எத்தனையாம் நூற்றாண்டில் என்று தெரியவில்லை. கொறிய மன்னன் ஒருவருடன் தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் நட்புப் பூண்டிருந்தான் என்றும், அவன் கனவில் அவர்களின் தெய்வம் வந்து "தமிழ் இளவரசி ஒருதத்தியை மணமுடித்து வைத்தால் உன் நாடு செழிப்புறும்" என்று கூறியதாகவும், அதை நம்பிய கொரிய மன்னன்  தன்னுடன் நட்புப்  பூண்டிருந்த கன்னியாகுமரி இளவரசியை தன்மகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததாகவும், திருமணத்தின் பின்னர் கொறிய மன்னன் தன் மனைவிக்கு கொடுத்த முழு சுதந்திரம் காரணமாக அவள் அந்நாட்டில் பல திருத்தங்களையும் நாட்டின் மேம்பாட்டுக்குப் பல புதிய உத்திகளையும் கையாண்டு நாட்டை வளம்படுத்தினாள்  என்றும், அவளின் சிறப்புக்கண்டு கொறிய மக்கள் அவளைப்  போற்றி அவளுக்கு மரியாதை செலுத்தினர் என்றும், தமது பெயர்களின் பின்னால் அந்த அரசியின் பெயரையும் சேர்த்துக்கொண்டனர் என்றும் இன்று கொரியாவில் இருக்கும் சனத்தொகையில் மூன்றில் ஒன்று அவளின் பரம்பரைதான் என்றும் கொறிய மக்களே கூறுகின்றனர்.

ஆனால் அந்தப் பெண்ணின் தமிழ்ப் பெயர் என்ன? அவளின் தந்தையின் பெயர் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாதுள்ளது.எனக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. யாராவது இந்த வரலாறு பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா???  
தெரிந்தால் வந்து எழுதுங்கள். தமிழின் பெருமை எங்கெல்லாம் பரவியிருந்தது என்று நாமும் அறிந்துகொள்ளலாம்.

Share this post

Link to post
Share on other sites

அட ஒருவருக்கு கூட இந்த விடயம் தெரியவில்லையே. ஆதித்த இளம்பிறையன் வாருங்கள். ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட ஒருவருக்கு கூட இந்த விடயம் தெரியவில்லையே. ஆதித்த இளம்பிறையன் வாருங்கள். ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

நன்று சுமேரியர்.

நான் இது பற்றி முதன்முதலில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் காணொளியில் கண்டேன். இவர் தமிழர்களின் கடலோடும் மாண்பு பற்றிக் குறிப்பிடும்போது பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஆய் நாட்டைச் சேர்ந்த இளவரசி கடல் கடந்து கொரியா சென்று அங்கு இருந்த இளவரசனை மணந்ததாக குறிப்பிட்டார்.

 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படிஇ கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். தன்னுடன் தங்கம்,  வெள்ளி,  செம்பவளம்,  மணிக்கற்கள் மூலம் செய்த ஆபரணங்கள், அரிசி, சரிகைப்பூ வேலைப்பாடு செய்த பட்டுத் துணி, மேசை விரிப்புகள், 12 நரம்புகள் கொண்ட இசைக் கருவி போன்ற பரிசுப் பொருட்களும்,  ‘மீன் சின்னம்’ மரக்கன்று மற்றும் சூலத்தையும் மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது. சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர்.

ஆனால் அவ்விளவரசி "மகாராணி ஹு ஹவாங் ஓக்" இந்தியாவில் உள்ள அயோத்தி நகரில் இருந்து சென்றதாக  அயோத்தியில் ஓர் நினைவிடம் கட்டப்பட இருக்கிறது.

அன்றாட பேச்சு மொழிகளில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்து இருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சில 
அம்மா... 
அப்பா...
அச்சச்சோ...
அப்பாடா...
புது... (புதியது)
நீ இங்கே பா...(நீ இங்கே வா)
புல் வேடா (புல் வெட்டு)
உரம் (உயரம்)
நாள் 
புல்
சோறு  
அம்மோ -வியப்பை சொல்வது .அம்மா 

Edited by ஆதித்ய இளம்பிறையன்
  • Like 3

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, மோகனா said:

மிக்க நன்றி மோகனா.உங்கள் வீடியோவை முழுதும் பார்த்துவிட்டு ஆறுதலாகக் கருத்து எழுதுகிறேன்.

14 hours ago, குமாரசாமி said:

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

வரலாறு இல்லையென்றால் எவருக்கும் ஓர் தனித்த்துவம் இல்லை குசா. ஆனால் தமிழர்களுக்கு தான் தான் முன்னேறினால் சரி. ஒரு குழுவாக எம்மையும் எம் மொழியையும் மேம்படுத்தவேண்டும் என்றோ அதைக் காக்க வேண்டும் என்ற நோக்கமோ இல்லை.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

நன்று சுமேரியர்.

நான் இது பற்றி முதன்முதலில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் காணொளியில் கண்டேன். இவர் தமிழர்களின் கடலோடும் மாண்பு பற்றிக் குறிப்பிடும்போது பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஆய் நாட்டைச் சேர்ந்த இளவரசி கடல் கடந்து கொரியா சென்று அங்கு இருந்த இளவரசனை மணந்ததாக குறிப்பிட்டார்.

 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படிஇ கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். தன்னுடன் தங்கம்,  வெள்ளி,  செம்பவளம்,  மணிக்கற்கள் மூலம் செய்த ஆபரணங்கள், அரிசி, சரிகைப்பூ வேலைப்பாடு செய்த பட்டுத் துணி, மேசை விரிப்புகள், 12 நரம்புகள் கொண்ட இசைக் கருவி போன்ற பரிசுப் பொருட்களும்,  ‘மீன் சின்னம்’ மரக்கன்று மற்றும் சூலத்தையும் மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது. சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர்.

ஆனால் அவ்விளவரசி "மகாராணி ஹு ஹவாங் ஓக்" இந்தியாவில் உள்ள அயோத்தி நகரில் இருந்து சென்றதாக  அயோத்தியில் ஓர் நினைவிடம் கட்டப்பட இருக்கிறது.

அன்றாட பேச்சு மொழிகளில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்து இருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சில 
அம்மா... 
அப்பா...
அச்சச்சோ...
அப்பாடா...
புது... (புதியது)
நீ இங்கே பா...(நீ இங்கே வா)
புல் வேடா (புல் வெட்டு)
உரம் (உயரம்)
நாள் 
புல்
சோறு  
அம்மோ -வியப்பை சொல்வது .அம்மா 

மிக்க நன்றி ஆதித்தியன் இத்தனை தரவுகளை எமக்குத் தந்தமைக்கு.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வும் அதன் நுட்பங்களும் எத்தனை அவசியமானது என்பது பற்றிய தெளிவு தமிழ் அறிஞர்கள் பலருக்கும் இல்லை. இருந்த ஒரு சிலரும் இறந்துவிட்டனர். இந்தியத் தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்தால் எத்தனை விதமாக எம் மொழிபற்றிய விடயங்களை முதன்மைப்படுத்தலாம். யாருக்கும் அதுபற்றியஅக்கறை இல்லை. எங்கள் தலைமுறையே பெரிதாக எடுக்காதபோது அடுத்த தலைமுறைக்கு இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க நேரம் இருக்குமா ???

Share this post

Link to post
Share on other sites

சிறப்பான ஒரு வரலாற்று விடயத்தை கையிலெடுத்திருக்கிறீர்கள் ......பாராட்டுக்கள் சகோதரி......!  😁

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

செவ்விந்தியர் வாழ்ந்த மண்ணில் அவர்களை  அழித்து விட்டு........அதில் குடியேறிய சமுதாயம் இது எமது நாடு மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில்.....மாண்பும் பண்பும் எவ்வளவு தூரம் செல்லும்?

அது வரைக்கும் தமிழினம் தாக்கு பிடிக்குமா?

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

இளம்பிறையன், ஒரிசா பாலு  பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். ஆய்வாளர் என்று தான் வருகிறது ஆனால் ஒரு செயற்பாட்டாளர் போலவே அவர் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாழ்.கொம் ஒரு உசாத்துணையாக இருக்கிறது, வேறு நூல்கள் எதையும் அவர் எழுதியதாகக் காணவில்லை. இதை நான் கேட்பதற்குக் காரணம் அவர் சீமான் ரைப்பாக இருந்தால், அவர் சொல்வதை நிறைய உப்புப் போட்டுத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

Share this post

Link to post
Share on other sites

நன்றி சண்டமாருதன். என்னுடைய அபிப்பிராயம், இவர் தமிழர்களை ஊக்குவிக்கும் நல்லெண்ணம் கொண்ட ஒரு செயற்பாட்டாளர். பைபிளில் ஊர் மட்டுமல்ல, ஈழம் என்று கூட இருக்கிறது ஆனால் அவை தமிழ் சொற்களாக அல்லாமல் அரமைக் மொழிச் சொற்களாக உள்ளன. தமிழோடு உறுதியான தொடர்புகள் காட்டப் படவில்லை. ஆய்வுகள் என்று இவர் குறிப்பிடும் செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்தப் பட்டால் மட்டுமே துறை சார் அறிஞர்கள்  குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுவர். மற்றபடி உற்சாகமூட்டும் pep talk ஆக மட்டுமே இவை அமையும்! 

Share this post

Link to post
Share on other sites

தமிழ் ,தமிழன் மொழி பரந்து விரிந்து காணப்படுகின்றது , வாழ்கின்றான் ஆனால் தமிழனுக்கு ஓர் நாடில்லை அதுதான் வேதனை 

Share this post

Link to post
Share on other sites

On 12/27/2018 at 6:57 AM, Justin said:

இளம்பிறையன், ஒரிசா பாலு  பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். ஆய்வாளர் என்று தான் வருகிறது ஆனால் ஒரு செயற்பாட்டாளர் போலவே அவர் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாழ்.கொம் ஒரு உசாத்துணையாக இருக்கிறது, வேறு நூல்கள் எதையும் அவர் எழுதியதாகக் காணவில்லை. இதை நான் கேட்பதற்குக் காரணம் அவர் சீமான் ரைப்பாக இருந்தால், அவர் சொல்வதை நிறைய உப்புப் போட்டுத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்.  தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. 

எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே !

இது தொடர்பான ஒரு செய்தி

Edited by ஆதித்ய இளம்பிறையன்

Share this post

Link to post
Share on other sites
On 12/28/2018 at 3:40 PM, ஆதித்ய இளம்பிறையன் said:

நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்.  தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. 

எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே !

இது தொடர்பான ஒரு செய்தி

நன்றி இளம்பிறையன். மேலே இரண்டு வீடியோக்களையும் பார்த்த பின்னர் என் கருத்தை இட்டிருக்கிறேன். புதிதாக கிடைக்கும் தகவல்கள் நம்பகரமானவையாகவும் இருக்க வேண்டும் என நான் கருதுவதால் தான் ஏன் மற்றைய ஆய்வாளர்கள் கருத்துரைக்கும் (peer review) வகையில் பிரசுரிக்கப் படவில்லை என வினவுகிறேன். பைபிளில் இருக்கும் ஊர் பற்றியும் இவர் குறிப்பிட்டதில் தான் இவரது ஆய்வுகள் பற்றிய நம்பிக்கை குறைகிறது. ஒரு மொழியின் பழமையை நிரூபிக்க கடினமாக உழைப்பது நல்லது, ஆனால் அது மேலோட்டமான ஆய்வுகள் மூலம் செய்யப் பட்டால் அந்தப் பழமை நிரூபிக்கப் படுவதற்குப் பதிலாக போலியென மற்றவர்கள் நம்ப ஏதுவாகி விடும். 

நன்றி. 

Share this post

Link to post
Share on other sites

இவர் தமிழ்..... தமிழர் ..... தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை 
பாவிக்கிறார் சீமான் மாதிரி இவரையும் நம்ப முடியாது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் 
இப்படி ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.
(2000 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து எகிப்து நாட்டில் இருக்கும் 
ப்யரமிட்டுக்களுக்கு நேராக ஆயிரம் ஆண்டுகள் முன்பே மெக்சிகோவில் பிரமிட்டுகள் 
கட்டி வாழ்ந்து இருக்கிறது  மாயன் இனமக்கள் கூட்டம்)  

pyramidsalignnorthernhemisphere.jpg

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Maruthankerny said:

இவர் தமிழ்..... தமிழர் ..... தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை 

பாவிக்கிறார் சீமான் மாதிரி இவரையும் நம்ப முடியாது.

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

4 hours ago, Maruthankerny said:

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் 
இப்படி ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

ஐயோ இளம்பிறையன், அவர் உங்களைச் சொல்லவில்லை! வேறு சில திரிகளில் இன்னொருவரோடு இருக்கும் "காண்டு" வை இங்கு முரண்நகையாகக் கொட்டியிருக்கிறார். நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சரியான தரவுகள், அடிப்படை அறிவு என்பன கொண்டு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போது இப்படி எல்லாத் திரிகளிலும் பின் தொடர்ந்து குரைத்துத் திரிவது அவரது பிரச்சினை! உங்களுக்கோ எனக்கோ இது பிரச்சினையில்லை! நோ வொறீஸ்! 😀

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

ஆதித்ய இளம்பிறையன்! மன்னித்து கொள்ளுங்கள் குழப்பத்துக்கு 

நான் அடைப்பு குறியினுள் எழுதியதை நீங்கள் வாசிக்க வில்லை 
அல்லது ஏன் எழுதினேன் என்று விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

எனது கருத்து எமது சில வெள்ளாந்தி மனநிலையில் இருப்பவர்களை 
குறித்தது. தமிழன் ஏதும் செய்தால் அதுக்குள் முட்டையில் மயிர் பிடுங்குவது 
வெள்ளைக்காரன் பச்ச பொய்யை சொன்னாலும் அப்படியே எதோ ஆண்டவர் 
சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் சிலர் அலைகிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பே அமெரிக்க கண்டத்துக்கும் ஆசிய ஐரோப்பிய கண்டத்துக்கும் 
மனிதர்கள் பயணித்து இருக்கிறார்கள். மாயன் என்ற இன மக்கள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளுக்கு 
நேர் கோட்டிலையே தமது பிரமிட்டுகளை கட்டி இருக்கிறார்கள் .... இதே கோட்டிலேயே இந்தோனேசியாவிலும் ஒரு பிரமிட்டு இருக்கிறது ..... இந்த மூன்று பிரமிட்டுகளிலும் 
மூன்று வாசல் இருக்கிறது... இது ஒன்றோடு ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டுதான் இருக்கிறது 

1500 வருடங்கள் முன்பே பிஜி தீவில் இருந்த மக்கள் கடல் வழியாக பயணித்து 
இப்போதைய அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் காவாய் தீவுகளில் குடியேறி இருக்கிறார்கள் 
இந்தோனேசியா ஊடாக பிஜி தீவுகளில் இருந்த சிவா  ஆலயங்கள் போல் பாழடைந்த நிலையில்  
இப்போதும் சில சிவ ஆலயங்கள் காவாய் தீவுகளில் இருக்கின்றது. 

இருண்ட ஐரோப்பாவில் கிடந்த வெள்ளையனுக்கு முன்பே 
உலகின் அனைத்து நாகரிகமும் வளர்ந்து இருக்கிறது பல முன்னோடி 
மொழிகள் இலக்கண வடிவம் பெற்று இருக்கிறது.
இதை பொறுக்கித்தனமான வெள்ளையன் ஏற்றுக்கொண்டு உறுதி படுத்த போவதில்லை 
இப்போ 1400 கடைசியில் 1500இல் இந்தியாவுக்கு போகிறேன் என்று போன திசையில் தவறுதலாக 
கப்பல் சென்று அடைந்த இடம்தான் அமெரிக்கா ....  அங்கு இருப்பவர்கள் வெள்ளையாக இருந்ததால் 
குழம்பிய கொலம்பஸ் குழு அவர்களை ரெட் இந்தியர்கள் என்று அழைத்தார்கள் அப்போதும் அவர்கள் 
தாம் இந்தியா அடைந்து விட்ட்டதாகவே எண்ணினார்கள். 
இந்த லட்ஷணத்தில்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்று ஒரு பொறுக்கி 
வரலாறை உலகில் புகுத்த தொடங்கினார்கள் .... அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வெள்ளாந்தி தமிழர்களுக்கு............ உலகிலேயே பெரிய ஆலயமான கம்போடியாவில் இருக்கும் சிவ ஆலயம் (பின்பு க்மேர் இன மன்னர்களின் ஆட்சியில் புத்த மதம் புகுத்த பட்டது) முழுக்க முழுக்க பல்லவர்களின் கட்டிட கலையை 
வைத்தே கட்ட பட்டு உள்ளது ...... அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது என்றால் 
அதுக்கு முடடையில் மயிர் புடுங்கவேணும். 

Share this post

Link to post
Share on other sites

ஒரிசா பாலு அவ்ர்களை ஆராய்ச்சி செய்ய சொல்லி 
ஒரு பில்லியன் டாலர் கொடுத்து விட்டு இருப்பவர்கள் போல் 
அதில் உண்மை இருக்குமா? ஆதாரம் இருக்குமா? என்றால் 
இவர்கள் என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்கிறார்கள்?

இவர்கள் போய் உண்மைகளை கண்டு அறிந்து ஒரிசா பாலு போல 
மக்களுக்கு சொல்லலாமே? அவர் தனது பொருளாதார நிலைமை 
பயணத்துக்கு ஆனா நாட்கள் போன்றவற்றை வைத்துதானே செயல்பட முடியும் 

இப்போதும் கன்னியா குமாரியில் இருந்து 25 மையில் தொலைவில் ஒரு கட்டிட பகுதி 
கடல் அடியில் கிடக்கிறது ..... யாரையும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய இந்திய அரசு 
தடை வித்தித்து இருக்கிறது. வட இந்தியாவில் மூழ்கி கிடக்கும் துவாரகை நகருக்கும் இதே கதிதான் 
கிந்தியர்கள் மூடி மறைக்கிறார்கள் என்றாலே யோசிக்க வேண்டும் எதோ அங்கே தமிழ் சார்ந்து கிடக்கிறது என்று  (ஒரு வேளை  இல்லாமலும் இருக்கலாம்) ஏன் தடை போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
இப்படி எல்லா இடங்களிலும் ஒரு தடை இருக்கிறது 
உண்மைகள் திட்டமிட்டு மறைக்க படுகின்றன.
அந்த அந்த அரசுகள் எந்த பொய்யில் கட்டமைக்க பட்டதோ அதே பொய்யில் மக்களை 
வைத்திருக்கவே அவர்கள் துடிக்கிறார்கள்.
சுய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரிசா பாலு போன்றவர்கள் .... பல வெள்ளைகாரகளும் தான் 
இப்படியான அரச கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தே எதையும் செய்ய வேண்டி இருக்கிறது. 

1000 வருடம் முன்பு உலகின் முதன் முதலாக கட்டப்பட்ட உயரமான கட்டிடமான 
தஞ்சை பெரிய  கோவிலை யுனெஸ்கோ பாதுகாத்து வருகிறபோதும். உலக அதிசயதில் ஒன்று என்ற 
பரிந்துரைக்கு அனுப்ப இந்திய அரசு தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இன்று வரையிலும் ஒரு இஞ்சி கூட 
அரங்கவோ சரியாவோ இல்லை ........... முற்று முழுதாக புவி ஈர்ப்பின் விசையையும் அழுத்தத்தையும் 
வைத்தே ஒவ்வரு கல்லும் கட்டி இருக்கிறார்கள். உலகில் முதன் முதலில் கிரைனெட்டு கற்களில் தமக்கு 
தேவையான விடடத்தில் துளை போட்டு இருக்கிறார்கள்.

இதுதான் முதலாவது உயரமான கட்டிடம் என்று ஆதார படுத்த சிலருக்கு ஒரு வெள்ளை காரனை 
கொண்டு வர வேண்டும் 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Justin said:

ஐயோ இளம்பிறையன், அவர் உங்களைச் சொல்லவில்லை! வேறு சில திரிகளில் இன்னொருவரோடு இருக்கும் "காண்டு" வை இங்கு முரண்நகையாகக் கொட்டியிருக்கிறார். நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சரியான தரவுகள், அடிப்படை அறிவு என்பன கொண்டு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போது இப்படி எல்லாத் திரிகளிலும் பின் தொடர்ந்து குரைத்துத் திரிவது அவரது பிரச்சினை! உங்களுக்கோ எனக்கோ இது பிரச்சினையில்லை! நோ வொறீஸ்! 😀

7 hours ago, Maruthankerny said:

ஆதித்ய இளம்பிறையன்! மன்னித்து கொள்ளுங்கள் குழப்பத்துக்கு 

நான் அடைப்பு குறியினுள் எழுதியதை நீங்கள் வாசிக்க வில்லை 
அல்லது ஏன் எழுதினேன் என்று விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

எனது கருத்து எமது சில வெள்ளாந்தி மனநிலையில் இருப்பவர்களை 
குறித்தது. தமிழன் ஏதும் செய்தால் அதுக்குள் முட்டையில் மயிர் பிடுங்குவது 
வெள்ளைக்காரன் பச்ச பொய்யை சொன்னாலும் அப்படியே எதோ ஆண்டவர் 
சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் சிலர் அலைகிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பே அமெரிக்க கண்டத்துக்கும் ஆசிய ஐரோப்பிய கண்டத்துக்கும் 
மனிதர்கள் பயணித்து இருக்கிறார்கள். மாயன் என்ற இன மக்கள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளுக்கு 
நேர் கோட்டிலையே தமது பிரமிட்டுகளை கட்டி இருக்கிறார்கள் .... இதே கோட்டிலேயே இந்தோனேசியாவிலும் ஒரு பிரமிட்டு இருக்கிறது ..... இந்த மூன்று பிரமிட்டுகளிலும் 
மூன்று வாசல் இருக்கிறது... இது ஒன்றோடு ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டுதான் இருக்கிறது 

1500 வருடங்கள் முன்பே பிஜி தீவில் இருந்த மக்கள் கடல் வழியாக பயணித்து 
இப்போதைய அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் காவாய் தீவுகளில் குடியேறி இருக்கிறார்கள் 
இந்தோனேசியா ஊடாக பிஜி தீவுகளில் இருந்த சிவா  ஆலயங்கள் போல் பாழடைந்த நிலையில்  
இப்போதும் சில சிவ ஆலயங்கள் காவாய் தீவுகளில் இருக்கின்றது. 

இருண்ட ஐரோப்பாவில் கிடந்த வெள்ளையனுக்கு முன்பே 
உலகின் அனைத்து நாகரிகமும் வளர்ந்து இருக்கிறது பல முன்னோடி 
மொழிகள் இலக்கண வடிவம் பெற்று இருக்கிறது.
இதை பொறுக்கித்தனமான வெள்ளையன் ஏற்றுக்கொண்டு உறுதி படுத்த போவதில்லை 
இப்போ 1400 கடைசியில் 1500இல் இந்தியாவுக்கு போகிறேன் என்று போன திசையில் தவறுதலாக 
கப்பல் சென்று அடைந்த இடம்தான் அமெரிக்கா ....  அங்கு இருப்பவர்கள் வெள்ளையாக இருந்ததால் 
குழம்பிய கொலம்பஸ் குழு அவர்களை ரெட் இந்தியர்கள் என்று அழைத்தார்கள் அப்போதும் அவர்கள் 
தாம் இந்தியா அடைந்து விட்ட்டதாகவே எண்ணினார்கள். 
இந்த லட்ஷணத்தில்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்று ஒரு பொறுக்கி 
வரலாறை உலகில் புகுத்த தொடங்கினார்கள் .... அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வெள்ளாந்தி தமிழர்களுக்கு............ உலகிலேயே பெரிய ஆலயமான கம்போடியாவில் இருக்கும் சிவ ஆலயம் (பின்பு க்மேர் இன மன்னர்களின் ஆட்சியில் புத்த மதம் புகுத்த பட்டது) முழுக்க முழுக்க பல்லவர்களின் கட்டிட கலையை 
வைத்தே கட்ட பட்டு உள்ளது ...... அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது என்றால் 
அதுக்கு முடடையில் மயிர் புடுங்கவேணும். 

இடம், சூழல் அதன் பின்னணி அறியாது எழுதி விட்டேன் என்று எண்ணுகிறேன். வருந்துகிறேன் :)

Share this post

Link to post
Share on other sites

இத்திரியில் இத்தனை விடயங்களை இணைத்த, எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்படியே விட்டுவிடாது புதிதாக ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள் உறவுகளே.

எத்தனையோ விடயங்களை இத்திரி மூலம் புதிதாய் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரிசா பாலு கூடநிறைய விடையங்களை செய்தாலும் அவருக்கு அகழ்வாய்விலோ மற்றும் அது சார்ந்த துறையிலோ புலமை பெரிதாக இல்லை என்று தெரிகிறது.
T . கண்ணன் என்பவரும் நிறைய அறிவு உள்ளவராக இருந்தாலும்  கொறிய மக்கள் பலருக்கு கொரிய- தமிழ் தொடர்பு தெரியவில்லை என்று தவறான தகவலைக் கூறினார். இங்கு லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியைக் கற்பிக்கும் போதே தமிழர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்புஉண்டு என்று கூறுகிறார்கள்.

எனது பிள்ளைகள் கொரியாவில் சந்திக்கும் பல கொறிய இனத்தவர்தான் அவர்களுக்கு இந்தக் கதையை கூறினார்கள் முதலில்.

இளம்பிறையன் கூறியதுபோல் ஒரு குழுவை இதற்காக உருவாக்கி முழுநேரமும் இதே பணியைச் செய்யவைத்தாலன்றி பல அறிவுஜீவிகளும் போகுமிடங்களில் மட்டும் இவற்றைப் பேசிக் கைதட்டை வாங்கிவிட்டு பின் எதுவும் ஆவண செய்யாது இருப்பதாகத்தான் இருக்கும்.

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fnews.lankasri.com%2Fothercountries%2F03%2F195682%3Fref%3Dhome-imp-flag%26fbclid%3DIwAR1RK59ENTsVEAuDeU7aAHOZnvhtzyTttzCm4mXCzlckXx_IKkd84kWLXP4&h=AT2XipKRcn1TjIjNzCSlv-dIxwZV9pXwnFxVmjxHddYDGWngkLA2f38gUoPNPqhgL1ZRdTJhkwIyTblD2xAvyFRzb4tj0ymSBDSnBmSjwaORS3nuoEUw7zwOGyY8bwPpQrY

Share this post

Link to post
Share on other sites

625.0.560.350.160.300.053.800.668.160.90

இப்பெண் தான் செம்பவளம் என்ற கன்னியாகுமரி இளவரசி என லங்கா சிறியில் இது பற்றிப் போட்டிருந்த லிங்கே மேலே இட்டுள்ளேன்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this