Jump to content

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி

December 10, 2018

india.jpg?zoom=3&resize=335%2C191

அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ஓட்டங்களும் அவுஸ்திரேலியா 235 ஓட்டங்களும் பெற்றிருந்த நிலையில் 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா, 307 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் 323 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று கடைசி நாள் போட்டி நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி 291 ஓட்டங்கள் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தநிலையில் 31 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி  4 போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி 14-ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2018/106192/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி வென்றதுபற்றி நான் சந்தோஷப்பட எதுவுமேயில்லை. அதுவும் குறிப்பாக கோலி எனும் தலைக்கணம் பிடித்த ஒரு அணிர்த்தலைவரின் வழிநடத்துதலில் பெறப்பட்ட வெற்றியென்பது என்னைப்பொறுத்தவரையில் கவலைக்குரியது.

அணியிலிருக்கும் தமிழக வீரர்களுக்கான தனிப்பட்ட வெற்றியாக மட்டுமே என்னால் இதனைப் பார்க்க முடிகிறது. முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

அவுஸ்த்திரேலிய அணியின் ஆரம்ப மற்றும் இடைநிலை துடுப்பாட்ட நட்சத்திரங்களான வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில்லாத அணி மிகவும் பலவீனமானது என்பதற்கு இந்தத் தோல்வியும் ஒரு சாட்சி. ஆனாலும், அகம்பாவமும், தலைக்கனமும் கொண்ட வோர்னர் போன்ற வீரர்களுடன் வெல்வதைக் காட்டிலும், அவரில்லாமல் தோற்பது எவ்வளவோ மேல்.

இறுதிவரை சளைக்காது போராடித் தோற்ற அவுஸ்த்திரேலியப் பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், நேதன் லயன், மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 31 ஒட்டங்கள் மட்டும்தான். அடுத்த போட்டியில் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ragunathan said:

இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 31 ஒட்டங்கள் மட்டும்தான். அடுத்த போட்டியில் பார்க்கலாம். 

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்கிறீர்கள்.
நல்லது நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.